வீடியோ லிங்க் : https://youtu.be/BwwYU63Na_Q?si=Au8YEo4c5P86YV6Z
அனைவருக்கும் வணக்கம். 
அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் ஒரு
நட்சத்திர பாதம் அல்லது ஒரு கிரகங்களுடைய தன்மைகள் அது எங்க இருக்கு? கேள்வி நிறைய
பேர் கேக்குறாங்க. அதை பத்தியான விஷயங்கள் இன்னைக்கு பேசுவோம். 
ரிஷப லக்னம் :
உதாரணமா என்னோட நண்பரோடு ஜாதகத்துல
பாத்தீங்கன்னா ரிஷப லக்னம்.  ALP லக்னம் ரிஷப
லக்னம். உதாரணமா கார்த்திகை நட்சத்திரத்தில் நட்சத்திர புள்ளி  3
வருஷம் 4 மாதம்.
இந்த சூரியன் எங்க இருக்கு? 
ALPக்கு 11 ல். 
உங்களுக்கு பங்குனி மாதம் பிறந்தவர்க்கு
ரிஷப லக்னம் போகும்போது இதனுடைய நடக்கக்கூடிய நிகழ்வுகள் இவருடைய வாங்கி வந்த
வினைகள் என்ன? இந்த காலகட்டத்தில் என்ன நடக்கும்? அப்படிங்கிறதுக்கு ஒரு பொதுவான
நிகழ்வு எப்படி இருக்கும்?
சூரிய பகவான் :
உதாரணமா சூரியன் வந்து மீன ராசியில்
இருக்கும்போது அது ரிஷப லக்னம் குறிப்பா பயணிக்கும் போது இந்த  3 வருஷம் 4 மாத காலங்கள் அந்த
ஜாதகருக்கு கரைத்தல் அப்படிங்கிற ஒரு வார்த்தை பயன்படுத்தணும். 
எப்படின்னா கொஞ்சம் கொஞ்சமா கரைக்கிறது. நீங்க எப்படின்னா எனக்கு மாதம் ஒரு லட்ச ரூபாய் வரும். ஆனா 1.5 லட்சம் செலவாகும். ஆனா தெரியாது பாருங்க. எனக்கு நல்லா பணம் வந்துச்சுன்னு நான் சொல்லுவேன். ஆனா அந்த பணம் என்ன பண்ணும்? என்னை அறியாமல் எனக்கு தெரியாமலே ஒரு பக்கம் கரைஞ்சுகிட்டே இருக்கும்.
உங்களுடைய லக்னம் ரிஷப லக்னமாய் இருந்து சூரியன் மீனத்துல இருந்துச்சுன்னா இந்த காலம் கவனமா இருக்கணும். பணம் வரும் அந்த பணத்தை நீங்கள் சேமிக்க முடியாது. அந்த சேமித்த பணமும் உங்க கைக்கு முழுமையா இருக்காது. அந்த பணம் கரைஞ்சு போயிடும்.
எத்தனை பேருக்கு இருக்கு? உங்க ஜாதகத்தை ஆய்வு பண்ணி பாருங்க. ஒருத்தர் வர்றார் இதுதான் நிகழ்வு. இத தாண்டி அவருக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்ல.
ரோகிணி நட்சத்திரம் :
இல்ல சார் ரோகிணி நட்சத்திரம் போகுது
அப்படின்னு ஒருத்தர் வர்றார். 
சந்திரன் எங்க இருக்கு? 
உதாரணமா ரிஷபத்துக்கு ஏழாம் வீடு
விருச்சிகத்துல நீசம் பெற்ற சந்திரன் அப்படின்னு நாம சொல்வோம். 
நீசம் பெற்ற சந்திர பகவானாய்
இருந்தாலும் இந்த காலத்துல இதனுடைய அமைப்பு இந்த சந்திரன் எப்ப எல்லாம்
விருச்சிகத்தில் இருக்கோ அதுக்கு முழுங்குதல் அப்படின்னு பெயர். இது என்ன
பண்ணும் ஒரு பூமியோட நிலப்பரப்பு எப்படி காணாமல் போகுது? பண்டைய காலத்துல
சொல்லுவோம்ல. அது மாதிரி, ஒரு நிகழ்வு முழுங்குதல். அப்படின்னா ஒரு இடம் நமக்கு
மறைதல். 
அப்போ இடம் விக்கணும் இடம் விட்டு இடம் மாறணும் இடத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்துட்டு இருக்கும். அந்த சொத்து, வீடு, வண்டி , வாகனம், சொத்து சுகம் எல்லாத்தையும் எப்படின்னா அது மூழ்கடித்துவிடும். கடனே என்ன பண்ணும் தனக்கு தன்னை அறியாமல், அது எப்படி தான் நடந்துச்சுன்னே தெரியாது.
நல்ல கணக்கு வழக்கு, நல்ல திட்டமிடல், நல்ல செயல்கள், நல்ல உழைப்பு, நல்ல ஹார்ட்ஒர்க், நல்ல தன்னம்பிக்கை இருக்கு. முயற்சி இருக்கு. எல்லாமே இருக்கு. ஆனாலும் விருச்சிக ராசியில இந்த ரோகினி நட்சத்திரம் 1,2, 3,4 பாதம் செல்லும் போது தன்னிடம் இருக்கிற பொருளை முழுங்கணும். விட்டுட்டு வெளியே வரணும். அந்த இடத்தை விட்டு வெளியே வரணும். இதுதான் விதி. இத மாத்த முடியாது. இது என்னன்னு தெரிஞ்சுகிட்டா அதுக்கு தகுந்தார் போல் ஏதாவது ஒரு இடத்தை வித்துட்டு அந்த கடன கட்டிட்டு பேசாம வெளியில வருவது தான் புத்திசாலித்தனம்.
மிருகசீரிஷம் நட்சத்திரம் :
இல்ல சார் எனக்கு மிருகசீரிஷம் நட்சத்திரம்.
இப்ப செவ்வாய் வந்து உதாரணமா எங்க இருக்குன்னா ரிஷபத்தில் இருக்குன்னு
வச்சுக்கோங்க. சூப்பர் அப்போ நீங்க வித்த நிலத்தை நீங்க வாங்க முடியும்.
எப்படி வாங்க முடியும்? பணம் இல்லை. எனக்கு பணமே வராது. நான் உழைக்கவே இல்ல.
எனக்கு வந்து அவ்வளவு வாங்குறதுக்கு பணம் இல்லை அப்படியெல்லாம் கிடையாது. 
நீங்க என்ன சொத்து வித்தீங்களோ உதாரணமா நான் ஒரு கிரவுண்ட் இடம் வித்தேன்னு வச்சுக்கோங்களேன். ரெண்டு கிரவுண்ட் இடம் வாங்குவதற்கான சக்தி எனக்கு வரும். எப்போ மிருகசீரிஷம் நட்சத்திரம்.
அப்போ ஒரு நட்சத்திர புள்ளி வச்சுட்டு இவ்வளவு சொல்ல முடியும். இதுதான் இந்த வினைப்பயன். இந்த பத்து வருட காலம் இதுதான் நடக்கும்.
இதாண்டி நடக்கவே நடக்காது. உங்க ஜாதகம் ரிஷப லக்னம் போகுதான்னு பாருங்க. எப்படி இருக்குன்னு பாருங்க? கண்டிப்பா உங்களுடைய வாழ்க்கையில இப்பவே சொல்றேன், முழுக்க முழுக்க இந்த நிகழ்வுகள் உங்க வினைப்பயன் எப்படி இருக்கு? வினைப்பயன் அப்படின்னா போன ஜென்மத்துல நான் என்ன செஞ்சேன். இல்ல நான் கடந்த காலத்துல என்ன செஞ்சேன். நான் 40 வயசு ஆகுதுனா 40 வயசு வரைக்கும் நல்லது கெட்டது செஞ்சிருப்பேன்ல.
கர்மா :
அப்புறம் இன்னொரு நிகழ்வு இதிலேயே வந்து
இந்த கர்மா மாறும் மாறாது. மாறும். மாறக்கூடிய கர்மானு ஒன்னு இருக்கு. மாறாத கர்மா
னு ஒன்னு இருக்கு. இதுல ரெண்டு விஷயம் இருக்கு. 
எதெல்லாம் மாறும்? 
எது எல்லாம் மாறாது ? 
அப்படிங்கிறதுக்கு அட்சய லக்ன பத்ததி
உயர்நிலை படித்தவர்களுக்கு தெரியும்.
மாறக்கூடிய நிகழ்வு எது மாறாத நிகழ்வு எதுன்னு தெரியும். 
அப்போ சில நிகழ்வுகள் நீங்க மாத்தவே முடியாது. அனுபவிச்சு தான் தீர்க்கணும். சில நிகழ்வுகள் மாத்திக்கலாம். இப்ப எதற்கு தானம் தர்மங்கள், எதற்கு புண்ணியங்கள், எதற்கு கோவில்கள், எதற்கு வழிபாடுகள், எதற்கு ஏதோ ஒரு நம்பிக்கையில் தானே செய்கிறோம்.
அட்லீஸ்ட் ஒரு நாலு பேர்க்கு சாப்பாடு வாங்கி போடுறோம். நீங்க நல்லா இருக்கணும் சாப்பாடு இல்லைனாலும் ஒரு ஆளுக்கு சாப்பாடு கொடுக்கணும். அது ஒரு புண்ணியமா போகும்.
இல்ல நாலு பேருக்கு கல்வி அறிவு இல்ல கல்வி சொல்லிக் கொடுக்கிறோம். கல்வி வந்து நாலு பேருக்கு படிக்கிறதுக்கு உதவி செய்றோம். அப்போ இந்த மாதிரி நிகழ்வுகள் செய்யும்போது அந்த நிகழ்வுகள் ஏதோ ஒரு புண்ணியமா உங்க வாழ்க்கையில மாறும் போது இந்த கர்மாக்கள் குறையுமானா? குறையும்.
அதுக்காக நம்ம பெரிய லெவல்ல சம்பாதிச்சு இப்ப வந்து ஒருத்தர் இன்னைக்கு ஒரு நண்பர் கேட்டார், ஒருத்தர் திருடிட்டு நாலு பேருக்கு சாப்பாடு போட்டா சரியா ஆகுமா? அப்படின்னு கேட்டா சரியாகாது. நம்மளால உழைச்சு எவ்வளவு சம்பாதிச்ச பணத்தை ஏதோ ஒரு அளவுக்கு கொடுத்து நாலு பேருக்கு உதவி செஞ்சோம்னா நாலு பேருக்கு நல்ல வழி காமிச்சோம்னா அந்த கர்மா குறையுமே தவிர, இல்லேன்னா அந்த கர்ம கூடிக்கிட்டே தான் போகும்.
கர்மாங்கிற வார்த்தையே சுமைங்கிற பகுதி தாங்க. சுமைங்கிறது என்னன்னா நம்ம எவ்வளவு தூரம் தூக்குறோம்? எவ்வளவு வெயிட் தூக்குறோம்? உதாரணத்துக்கு பணமா இருக்கலாம், பேரா இருக்கலாம், புகழா இருக்கலாம், அதிகாரமா இருக்கலாம், ஆளுமையா இருக்கலாம், இது எல்லாமே சுமைங்க.
வினைப்பயன்
: 
எனக்கு இந்த கர்மாங்கிற வார்த்தைய விட
வினைப்பயன். என்னுடைய வினைக்கு என்னுடைய செயலுக்கு நான் என்ன செயல் செஞ்சேன்
இன்னைக்கு என்ன அனுபவிக்க போறேன் அவ்ளோதான். 
எல்லாமே அட்சய லக்ன பத்ததில அதிகமா வினைப்பயன் அப்படிங்கிற வார்த்தை பயன்படுத்துவோம். எது எல்லாம் மாத்த முடியும்? எது எல்லாம் மாற்ற முடியாது? எது எல்லாம் நீங்களா செஞ்சது? எது எல்லாம் நீங்க ஆப்போசிட்டா செய்றது? அப்படின்னு நிறைய விஷயங்கள் நம்ம பதிவு பண்ணியிருக்கோம். அட்சய லக்ன பத்ததி உயர்நிலைப் படித்தவர்களுக்கு அதை பத்தி தெரியும்.
விதின்னா என்ன? மதினா என்ன?
விதி என்றால் எதெல்லாம் செய்ய முடியும்? எது எல்லாம் அப்படியே அனுபவிக்கணும். எதெல்லாம் மதி நம்மளால எதெல்லாம் மாத்திக்க முடியும். இப்ப இதைத்தான் நம்ம சொல்றோம். வினைப்பயன்னு சொல்றோம் அத. கர்மா ன்னு சொல்றோம். செயல்னு சொல்றோம். நிகழ்வுன்னு சொல்றோம். நிகழ்வு அப்படின்னாலும் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு கர்மா உண்டுங்க. வினைப் பயன் உண்டுங்க.
நல்லது செஞ்சா நல்ல வினைப்பயன் உண்டு. கெட்டது செஞ்சா கெட்ட வினைப்பயன். இதுதானே விஷயம்.
மேஷ லக்னம் :
அப்ப கடந்த மேஷ லக்னம் போகும்போது ஒழுங்கா
ஒரு நண்பர அழகா பார்த்திருந்தா, உதாரணத்துக்கு மேஷ லக்னம் போகும்போது நேத்து ஒரு
வீடியோல பதிவு பண்ண விஷயம் என்னன்னா உதாரணமா மேஷ லக்னம் ALP போகும்போது இந்த கர்மா
எப்படி செயல்படும்? என்பதற்கு இது மிகப்பெரிய அமைப்புங்க. 
மேஷ லக்னம் ஏழாம் வீட்டில் குரு பகவான். மேஷ லக்னம் வரும்போது 9,12க்கு உரிய குரு பகவான் வந்து துலாம் வீட்ல குரு பகவான் இருக்காரு. சூப்பரா இருக்காரு.
அப்ப என்ன பண்றாரு இந்த மேஷ லக்னக்காரர் நல்லா வந்து வேலை வாங்கிட்டே இருப்பார். எப்படி நல்லா வேலை வாங்கிட்டே இருப்பார். அடுத்த லக்னம் வரும் பாருங்க. அதே ஆளு அப்படியே ரிஷப லக்னம் வரும்போது அதே குரு பகவான் அட்டமாதிபதியா போயி எப்படி பாக்கியாதிபதியா இருந்த குரு பகவான், மேஷத்திற்கு அட்டமாதிபதியா போய் அப்படியே ஆறாம் வீட்டில் உட்கார்ந்து கடன், வம்பு, வழக்கு, நோயை கொடுப்பாரானா கொடுப்பார். நண்பர் எதிரியா மாறுறார் எதிரியா மாறுறார் சொல்லுவோம்ல. அப்பாவே எதிரியா மாறுவார்.
எப்படி நீங்க மேஷ லக்னத்திற்கு குரு ஏழுல இருக்கா பாருங்க. மேஷ லக்னம் செல்லும் போது அப்பாவ சந்தோஷமா கொண்டாடுவாங்க. அப்படியே ரிஷப லக்னம் வந்ததும் அவர் அட்டமாதிபதியா போனவுடனே அதே ஆறுக்கு வந்த உடனே பார்த்தீங்கன்னா ஒன்பதாம் இடத்தில் சனி, சுக்கிரன். கரெக்டா பாத்தீங்கன்னா ரிஷபத்துக்கு ஒன்பதாம் இடத்துக்குறியவர் பார்த்தீங்கன்னா சனி பகவான். கரெக்டா 6 ல இருக்காரு குரு வச்சி செய்வாரு பத்து வருஷத்துக்கு அப்பாவாலையே.
நீ அதெல்லாம் போக கூடாது, நீ அதெல்லாம் செய்யக்கூடாது, நீ அதெல்லாம் செய்யக்கூடாது அதெல்லாம் நீ வாங்க கூடாது. அப்படின்னு சொல்லி யதார்த்தமா ஒரு நல்ல விஷயம் அனுபவமா சொல்லும்போது, பையன் நான் படிச்சிட்டேன் எனக்கு தெரியும். நான் சம்பாதிக்கிறேன் அப்படின்னு ஏதாவது ஒரு விஷயத்தை பண்ணி கண்டிப்பா பத்து வருஷம் காலங்கள் அப்பாவுடைய நிகழ்வுகளை தட்டி கழித்து. அவருடைய கர்மாவை10 வருஷ காலம் சுமப்பார். அப்ப குழந்தை பிறக்கும் பாருங்க. அதான் பெரிய பிரச்சனையா இருக்கும்.
ஏன்னா நிறைய நிகழ்வுகள் பார்க்கிறோம் அப்படின்னா மேஷத்துக்கும் ரிஷபத்துக்கும் நம்ம கணக்கெடுக்கிறோம் 10, 10 வருஷம். யாருக்கு மேஷ லக்னம் ஏழுல குரு இருக்கு பாருங்க. அப்பா சொல்றது வேத மந்திரம். அப்பா சொல்றது மந்திரம். அப்பா சொல்றது தான் உபதேசம். அப்பா சொல்றதுதான் அறிவுரை. நீங்க இந்த மேஷ லக்னம் அப்படி எடுத்துக்கிட்டீங்கன்னா ஜெயிச்சிடலாம். ரிஷப லக்னம் வரும்போது ஒன்னும் பண்ணாது.
இல்ல இல்ல எங்க அப்பாக்கு ஒண்ணுமே தெரியாது நீங்க நினைச்சுக்கிட்டீங்கன்னா, எப்படி இருக்கும்? இந்த ரிஷப லக்னம் போகக்கூடிய 10 வருஷம் காலம் உங்க வாழ்க்கையில நீங்க உங்களுக்கு அறிவை சொல்றவங்க எப்படி தெரியுமா சொல்லுவாங்க? நீங்க வந்து இரும்பு பிசினஸ் எல்லாம் பண்ண வேண்டாம் இரும்பு பிசினஸ் பண்ணுங்க சூப்பரா இருக்குன்னு சொல்லிப்புட்டு.
அங்க பாத்தீங்கன்னா, இவர் என்ன பண்ணுவாரு இரும்பு பிசினஸ் பண்ண போற இடத்துல பாத்தீங்கன்னா பக்கத்துல பெரிய ஒரு பைபாஸ் ரோடு வந்துரும். இல்ல ஏதாவது ஒரு கால்வாய் வந்துரும். கம்பெனிக்கு போக முடியாது. இல்ல கம்பெனி என்ன பண்ணும் இழுத்து மூடுற மாதிரி இருக்கும். இப்ப என்ன நடக்கும் ஆரம்பிச்ச இரும்பு கம்பெனி கடை அங்கதான் இருக்கும். இவர் என்ன பண்ணுவாரு இடையில ஒரு வாய்க்கால் தோண்டி போட்டுருவாங்க. ஆறு மாதம் ஒரு வருஷம், ரெண்டு வருஷம் பிசினஸ் இல்லாம போயிடும். கண்கூட பார்த்தது.
அதே மாதிரி நான் அடிக்கடி சொல்ற விஷயம் முன்னாடி ரொம்ப நாளைக்கு முன்னாடி இந்த வீடியோ பதிவு பண்ணி இருப்பேன். உதாரணமா ALP லக்னம் அட்சய லக்ன பத்ததி படித்த நண்பர்களுக்கு இது புரியும். ஏன்னா லக்னம் எப்படி வளருதுங்கிறதுக்கு ஒரு கிரகத்தை மட்டும் வச்சிட்டு பலன் சொல்லுவேன் பாருங்க.
மீன லக்னம் :
லக்னம் வந்து மீன லக்னம் ஏழாம் அதிபதி யார்
அப்படின்னு பாத்தீங்கன்னா புதன். அவர் என்ன பண்றாரு மகரத்துல புதன் இருக்காரு. இது
மட்டும் தான் கணக்கு. இது மட்டும் ஞாபகம் வச்சுக்கோங்க. இது ஒரு கட்டமா நீங்க
போட்டுக்கோங்க. எப்படி ALP லக்னம் மீனம். மகரத்துல புதன். இத நீங்க ஜோதிடம்
படிப்பவர்கள் இல்ல ஆய்வு பண்ணக்கூடிய மாணவர்கள் இதை எடுத்து போட்டு பாருங்க. 
இப்ப என்ன பண்ணுது இவருக்கு இப்ப வந்து ABனு வச்சுக்குவோம். A கிறது யாருன்னா மீனம் B கிறது கன்னி. இப்ப இப்படி வச்சுக்குவோம் 10, 10 வருஷத்துக்கு. இது ரொம்ப சுருக்கமா சொல்லிடுறேன். இதை வகுப்பில் அடிக்கடி இந்த நிகழ்வு பற்றி பேசுவேன். இது உண்மையா நடந்த சம்பவம். இது உண்மையா நடந்த ஒரு ஜாதகருடைய நிகழ்வு.
இப்ப என்ன நடக்குது அப்படின்னா கன்னி லக்னத்திற்கு 10ஆம் வீடு யாருன்னு பாத்தீங்கன்னா, புதன் தான் வருவார். அது A கிற ஜாதகத்துக்கு அது சுகமா போயிரும். எப்படி A கிற ஜாதகத்துக்கு சுகமா போய்டுமா. மிதுனம் சுகமா. இவங்க ரெண்டு பேருமே சந்தோஷமா இருக்காங்க. A B யும் சுகமா இருந்து அந்த A கிற ஜாதகத்துக்கு B கிற ஜாதகம் லாபத்தை கொடுத்திருக்காரு.
ஆனால் B கிற ஜாதகம் கன்னி லக்னத்திற்கு பத்தாம் வீட்டிற்கு அட்டமத்துல புதன் இருப்பதுட்டு. இந்த பத்து வருஷத்துக்குள்ள B கிற நண்பருடைய தொழில் செய்யக்கூடிய இடம் ஒரு மில் ஃபேக்டரி என்ன பண்றாரு எழுதி வாங்கிறார். யாரு மீன லக்னக்காரர். இப்படி காலங்கள் உருண்ட ஓடுது. எப்படி இப்படியே காலங்கள் உருண்ட ஓடுது.
உருண்டு ஓடியே பார்த்தீங்கன்னா, நடந்த நிகழ்வுகளை நம்ம பின்னாடி போய் ஆய்வு பண்ணி முன்னாடி போ சொல்றோம். இப்போ வந்து பாத்தீங்கன்னா லக்னம் மிதுன லக்னம். A கிற ஜாதகம் அப்போ B கிற ஜாதகம் யாரு நண்பர்னா தனுஷ் எடுத்துக்கலாமா, இப்போ லக்னாதிபதி எங்க வந்து மாட்றார் அப்படின்னா மிதுன லக்னத்திற்கு அதிபதி புதன் வந்து எட்டுல வந்து மாட்றாரு. அதுவே நண்பருக்கு B கிற ஜாதகத்திற்கு அவர் எங்க இருக்காருன்னா, இரண்டாம் வீட்டுல. யாருக்கு அவருக்கு மறைவு. இவருக்கு வருமானமா போயி இவர் எந்த ஃபேக்டரிய மறைமுகமா சுகத்தை கொடுத்து தண்ணியை வாங்கி கொடுத்து ஏமாற்றி எழுதி வாங்கினாரோ, அதே மில் ஃபேக்டரிய கடைசியா அந்த தனுசு லக்கனக்காரருக்கு வித்துட்டு போயிட்டார். 40 வருஷத்துக்குள்ள நடந்த நிகழ்வு இது.
இத உங்க இடம்தானே எங்கிட்ட ஒருத்தர் மில் வாங்கறதுக்கு வந்து கேட்கும்போது, இது உங்க இடம் தானே இது உங்களுக்கு சொந்தமான இடம் தானே. அது எதுக்கு நீங்க வாங்க போறீங்க அப்படின்னு எதார்த்தமா கேட்க போய், இந்த கதையை சொல்றார். ஆமா எனக்கு வேண்டிய இடம்தான். இது ஒரு சூழ்நிலையில எங்களை விட்டு போய்ட்டு.
இப்ப மறுபடியும் எங்களுக்கே வந்து இருக்கு. இதை வாங்கலாமான்னு உங்க கிட்ட கேட்கிறேன். உங்க இடம்தான் நீங்க வாங்கி தான் ஆகணும்னு அப்படின்னு சொன்னேன் வாங்கிட்டாங்க. இது நடந்த நிகழ்வு.
எப்படி தனுசு லக்னக்காரர் அதே இடத்தை வாங்கிட்டார். கன்னி லக்னம் போகும்போது அந்த இடம் இவர் கையை விட்டு போகுது. கன்னி லக்னத்தில் இருந்து தனுசு லக்னம் வரும்போது எப்படி அதே நண்பருடைய இடம் மறுபடி எங்க வந்து இவர்கிட்டயே கொண்டு வந்து கொடுத்து நீங்களே எழுதிக்கோங்க. உங்க இடம் உங்ககிட்ட இருக்கட்டும் அப்படின்னு சொல்லி கொடுத்துட்டு போறார். இந்த கர்மா எப்படி வேலை செய்து பாருங்க. எங்க எடுக்கப்பட்டதோ அங்கேயே கொடுக்கப்பட்டது. அதுதான் நீதி. அதுட்டு அட்சய லக்ன பத்ததி அதுதான்.
நீங்க செய்யக்கூடிய செயல்கள் உங்கள் வாழ்க்கையில் நல்லதும் கெட்டதும் எவ்வளவு தூரம் இருக்கோ அவ்வளவு தூரம் உங்க வாழ்க்கையே மாற்றும் அப்படிங்கிறது தான். அதே மாதிரி ஒவ்வொரு வயதிற்கும் லக்னம் நகரும் வயது வளர வளர வாழ்க்கை மாறுவது போல் எண்ணங்கள் மாறுவது போல் நல்லவர்கள் கெட்டவர்களாகவும் கெட்டவர்கள் நல்லவர்களாக மாறுவது போல் இயற்கைகள் மாறுவது போல் நம்முடைய வாழ்க்கை மாறும். அப்படிங்கிறது தான் அட்சய லக்ன பத்ததி.
அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் சார்ந்த நிகழ்வு கண்டிப்பா உங்க வாழ்க்கையை மாற்றும் என்ற நிகழ்வோடு நன்றி கூறி விடைபெறுகிறேன்.
நன்றி.
ALP ASTROLOGY OFFICE: +91 9363035656 | +91 9786556156

Comments
Post a Comment