வாழ்க்கையில் எல்லாத்தையும் இழந்துட்டீங்களா? அப்போ இந்த முருகனை பிடிங்க - - ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார். ALP ஜோதிடர்
வல்லக் கோட்டம்தனை மறந்தனையோ:
நம்மளுடைய அருணகிரிநாதர் பற்றி எல்லாருக்குமே தெரியும். முருகன்னாலே திருப்புகழ் தான் நமக்கு ரொம்ப காதுல இனிமையாக ஒலிக்க கூடியது. அந்த திருப்புகழை பாடிய அருணகிரிநாதர் என்ன பண்றாரு திருப்பூர் முருகப்பெருமானை தரிசனம் பண்ணிட்டு அங்க இரவு தங்கிட்டு மறுநாள் திருத்தணி முருகனை போய் பார்க்கணும்னு தூங்குறார்.
அவர் கனவில் வந்து,  வல்லகோட்டங்தனை
மறந்தனையோ அப்படின்னு சொல்லி கனவுல வந்து அந்த
முருகன் கேட்கிறார். உடனே திடுக்கிட்டு எந்திரிக்கிறாரு. இது எங்க இருக்கு
பார்த்துட்டு, இந்த வல்லக்கோட்டை முருகனை தரிசனம் பண்ணிட்டு,
அங்க ஏழு திருப்புகழ் பாடல்களை பாடுறார். அப்படிங்கிறது தான் இந்த
ஆலயத்தினுடைய வரலாறு. 
அசுரனை வதம் செய்து கொடுத்த வரம்:
இந்த வல்லக்கோட்டை அப்படிங்கிற அசுரன் வாழ்ந்து வந்தான். அவனை வதம் செய்வதற்கு இந்த முருகப்பெருமான் அவனை வதம் செய்து அவருக்கு ஒரு வரத்தை கொடுக்கிறார். அவருடைய பெயரிலேயே இந்த வல்லக் கோட்டை ஊர் திகழ வேண்டும் அப்படின்னு சொல்லி அந்த வல்லக்கோட்டை அப்படிங்கிறது நாளடைவில் மருவி வந்துருச்சு.
நம் வாழ்வில் எல்லா செல்வங்களும் திரும்பி கிடைக்க செய்ய வேண்டிய வழிபாடு:
அதனால இதுல இருந்து நாம தெரிஞ்சுக்க வேண்டியது என்ன அப்படின்னா நாம முருகனைப் பற்றிக் கொண்டால் நம்முடைய வாழ்க்கையில எல்லா விதமான செல்வங்களும் நமக்கு திரும்ப கிடைக்கும் அப்படிங்கிறது தான்.
எப்படி முருகன் வழிபாடு செய்வது:
அப்படிப்பட்ட அந்த வல்லக்கோட்டை முருகனை நாம தரிசனம் பண்ணனும். நம்ம வாழ்க்கையில எதெல்லாம் இழந்துட்டோம்னு அப்படின்னு வருத்தப்படுறோமோ நீங்க கவலைப்படாதீங்க. ஒரு ஏழு வெள்ளிக்கிழமை விரதம் இருந்து முருகப்பெருமானை போய் தரிசனம் பண்ணுங்க. கண்டிப்பா அந்த முருகப்பெருமானுடைய பேரருள் பெருங்கருணை உங்களுக்கு கிடைக்கும்.
முருகப்பெருமானின் திருக்கோலம் அமைப்பு:
ஏழடி உயரத்தில் வள்ளி தெய்வானை சமேதராக இந்த முருகப்பெருமான் காட்சி கொடுக்கிறார். நமக்கு அபயம் அளித்த திருக்கோலத்தில். அதனால கண்டிப்பா உங்களுக்கும் அந்த முருகப்பெருமானுடைய அனுகிரகம் கிடைக்கும். கண்டிப்பா முருகன் திருப்பாதங்களை பற்றி எல்லாருக்கும் எல்லாமும் நிறைவாக கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை பண்ணிக்குவோம்.
நன்றி.
full video link: https://youtube.com/shorts/G2I_marxKjQ?si=_fZ1PsXW0B5W27yk
ALP ASTROLOGY OFFICE: +91 9363035656 | +91 9786556156


Comments
Post a Comment