லக்னம் நகரும் பொழுது யாரை வழிபட வேண்டும் - ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார். - ALP ஜோதிடர்.
வீடியோ லிங்க் :
அனைவருக்கும் வணக்கம்
ALP அஸ்ட்ராலஜர் சாந்திதேவி ராஜேஷ்குமார்.
இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். வழிபாடுகள் அல்லது பரிகாரங்கள்
இன்னிக்கு அத பத்தி தான் நாம பேசப்போறோம். பொதுவா நிறைய பேருக்கு ஒரு கேள்வி வந்து
வழிபாடுகள் ஒவ்வொரு ராசிகளுக்கும் வேற வேறயா இருக்கு. வெவ்வேற
தெய்வங்களை வழிபாடு பண்ண வேண்டியதாக இருக்கு அப்படிங்கற ஒரு கேள்விகள் அதிகமாக
இருக்கு. 
இரண்டு விதமான வழிபாடு :
பொதுவா நம்மளுடைய வழிபாடுகளில் இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒன்னு பர்மனன்ட்டா நமக்கு இந்த காலகட்டங்கள்
இத்தனை வருஷத்துக்கு இந்த தெய்வத்தை கும்பிட்டா நமக்கு நல்ல பலன்களை கிடைக்கும்
அப்படிங்கறது ஒன்னு. 
இன்னொன்னு பர்டிகுலரா எனக்கு இந்த நேரத்துல இந்த பிரச்சனைகள் மட்டும் தான் இருக்கு. இந்த பிரச்சனைகளுக்கான தீர்வு என்ன அப்படிங்கறதை ரெண்டு.
இந்த ரெண்டு விதத்திற்கும் உள்ள முறைகள்
வெவ்வேறாக இருக்கும். 
அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தில் ஒவ்வொரு லக்னங்கள் மாறும்போதும், ஒவ்வொரு லக்னங்களுக்கும் பத்து வருடங்கள் கால அளவு. அப்ப அந்த பத்து வருடத்திற்கும் வழிபட வேண்டிய தெய்வம் என்ன? நம்மளுடைய ஒவ்வொரு பிரச்சனைகளையும் சரி செய்வதற்கும் நம்ம வழிபட வேண்டிய தெய்வம் என்ன? அப்படிங்கற ஒரு நிகழ்வு இருக்கு.
மிதுன லக்னம் :
இப்போ உதாரணத்துக்கு எடுத்துக்கிட்டோம்னா
மிதுன லக்னம். இந்த மிதுன லக்னத்திற்கு  நிரந்தரமாக வழிபடக்கூடிய தெய்வமும் இருக்கு. 
அதே இது அந்த மிதுன லக்னத்திற்கு நம்மளுடைய தேவைகளுக்கு படிப்பு வரணும்னா அதுக்கு ஒரு தெய்வம். அவங்களுடைய முயற்சி வெற்றி அடையனும்னா அதுக்கு ஒரு தேவதை. அவங்களுக்கு வீடு அமையனும்னா அதுக்கு ஒரு தேவதை. அவங்களுடைய மனசு ஒரு தொய்வு இல்லாமல் நல்லபடியாக வேலை செய்யணும் அல்லது குழந்தைகள் வேணும் அப்படின்னா அதுக்கு ஒரு தெய்வம். அவங்களுடைய கடன் தீருவதற்கு ஒரு தெய்வம். அவங்களுடைய திருமணம் நடப்பதற்கு அப்படின்னு வழிபடக்கூடிய தெய்வம்.
இப்படி ஒவ்வொரு நிகழ்வுகளுக்குமே ஒவ்வொரு தேவதைகள் இருக்காங்க. ஆனா ஒரு லக்னம் அப்படின்னு எடுத்துக்கிட்டோம்னா அந்த லக்னத்திற்கு முழுக்க முழுக்க நம்மளுக்கு பலன்களை தரக்கூடியவர்கள் யாரு? அந்த பலன்கள் நமக்கு எப்போதுமே நமக்கு பலன்கள் தரனும் அப்படிங்கற ஒரு விஷயம் இருக்கு இல்லையா.
கடக லக்னம் :
இப்போ கடக லக்னம் அட்சய லக்னமாக போகும்போது
பத்து வருட காலங்கள் ஜாதகர் அவங்களுக்கு யாருடைய பலம் அவங்களுக்கு அதிகமாக
தேவைப்படும் அப்படின்னா அம்பாளுடைய அனுகிரகம் தான் அவங்களுக்கு அதிகமாக சக்தி
வழிபாடு தான் அவங்களுக்கு அதிகமாக தேவைப்படும். 
அதிலும் குறிப்பா முத்து மாரியம்மன் வழிபாடு அப்படிங்கறது அவர்களுக்கு பத்து வருட காலகட்டங்களும் அவங்களுக்கு வாழ்க்கையில் அவங்களுக்கு தேவையான அத்தனை நிகழ்வுகளையும் தரக்கூடிய தெய்வமாக அவங்க வழிபடலாம்.
ஆனா அதுவே இந்த கடக லக்னத்திற்கு பணம் வரனும் அப்படின்னா அவங்க அம்பாளோடு சிவனும் சேர்ந்து இருக்கக்கூடிய ஆனா பேர் வந்து அம்பாளுக்கு உள்ள பெயராக இருக்கணும். அந்த அம்பாள் சொன்னால் அங்க அது பேசணும் அந்த மாதிரி.
உதாரணமா சொன்னோம்னா திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ரொம்ப விசேஷம். ஆனா அகிலாண்டேஸ்வரி அவங்க அதைவிட விசேஷம். அப்ப கடக லக்னக்காரர்கள் பொருளாதாரத்தில் மேன்மை அடையும் அப்படினா அவங்களுக்கு வருமானம் சிறப்பாக இருக்கணும். அவங்களுக்கு நல்லா படிக்கணும் அப்படின்னா படிப்புக்கு வேற தெய்வம். வருமானத்திற்கு வேற தெய்வம். இப்படி ஒவ்வொரு தேவைகளுக்குமே ஒவ்வொரு தெய்வங்களை வழிபட முடியும்.
அப்போ பெர்மெனண்டா வழிபடக்கூடிய தெய்வம் யாரு?
இப்போ நம்மளுடைய தற்போது நிகழ்வுகளுக்கு வழிபடக்கூடிய தெய்வம் யாருனு நாம பிரிச்சு வழிபடும் போது தான் அதனால தான் உங்களுக்கு வழிபாடு தெய்வங்கள் மாறி மாறி வருவதற்கு காரணம் அதுதான்.
அப்போ இந்த பணம் வருவதற்கு அவங்க அகிலாண்டேஸ்வரி தாயாரை வழிபாடு செய்றாங்க அப்படின்னா அவங்களுக்கு விசேஷமான பலன்களை ஏற்படுத்தும்.
ரிஷப லக்னம் :
இப்போ திருமணம் நடக்கணும் திருமணத்திற்கான தெய்வம் யாரு?
உதாரணமா ரிஷப லக்னம் அட்சய லக்னமாக போகுது.
அவங்களுக்கு திருமண வாழ்க்கையில் வெற்றி பெறனும். திருமணம் நடக்கணும் அப்படின்னா
இந்த பத்து வருட காலகட்டங்களில் நீங்க ரிஷபம் ALP லக்னம் எதுவாக இருக்கட்டுமே இந்த
பத்து வருட காலகட்டங்கள் நீங்க யார பலமா பிடிக்கணும்? உங்களுக்கு திருமணம் சார்ந்த
நிகழ்வுகளை தடை இல்லாமல் உங்களுக்கு தரக்கூடிய தெய்வம் யாரு? அப்படின்னா முருகப்பெருமான்தான்.
இதுல இப்போ இந்த பத்து வருட காலகட்டங்கள்ல இந்தந்த நேரத்துல இந்த தெய்வத்தை நம்ம கும்பிடணும். ஏன்னா கிரகங்கள் அப்படிங்கிறது மாறிக்கிட்டே இருக்கு. அந்த மாற்றங்கள் கோச்சார ரீதியாக இப்ப செவ்வாய் பகவான் ஒருத்தருக்கு உடனடியாக திருமணம் பேசி முடிக்கிறாங்க. திருமணத்துல தடை இருக்கு. ஆனா ஒரு பெண் ஜாதகம் வந்திருச்சு. இந்த 45 நாள்ல பேசி முடிக்கணும். அப்படிங்கிற பட்சத்தில் அந்த செவ்வாய் எங்கே எந்த பாவகத்தில் இருக்கிறாரோ?
உதாரணத்துக்கு இந்த செவ்வாய் கன்னில இருக்காருன்னு வச்சுக்குவோம். எப்படி ரிஷப லக்னம் அட்சய லக்னமாக போகும்போது அவங்க திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்காக அவங்க பாக்குறாங்க. அவங்களுக்கு செவ்வாய் வந்து கன்னில இருக்கு. அப்படின்னா அவங்க எந்த தெய்வத்தை வணங்கணும்?
பிரசன்னா வெங்கடேச பெருமாள் அல்லது
கல்யாண வெங்கடேச பெருமாள். இவங்களை வழிபாடு செய்தால் இந்த 45 நாளுக்குள்ள
அவங்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. 
இப்படி ஒவ்வொரு தேவைகளுக்கும் தகுந்த மாதிரி வழிபாடு அப்படிங்கிறது வேற வேற இருக்கும். அதனால ஒரு ராசிக்கு இவங்க இந்த தெய்வத்தை கும்பிடறதா சொல்லி இருக்காங்க. இந்த ராசிக்கு இந்த தெய்வத்தை கும்பிட சொல்லி இருக்காங்க. நாங்க எந்த தெய்வத்தை தான் கும்பிடணும் அப்படிங்கிறது எல்லாம் வேண்டாம்.
எல்லா தேவதைகளும் நமக்கு எந்தெந்த நேரத்துல என்னென்ன பலனுக்காக நாம கும்பிடுகிறோமோ அந்த நேரத்துல அந்த பலனுக்காக வழிபடலாம் அப்படிங்கிறது தான் நாம புரிந்து கொள்ளக்கூடிய ஒரு விஷயம்.
அதனால உங்களுடைய லக்னம் உங்களுடைய ராசி அந்த
லக்னம் ராசிகளுக்கு உங்களுக்கு இப்ப என்ன தேவை. நமக்கு ஒவ்வொரு வயதுக்கு உள்ள
தேவைகள் வேற வேறயா இருக்கும். அப்போ அந்த தேவைகளுக்கு தகுந்த மாதிரி நம்ம அந்த
தேவதைகளை வழிபடும் போது அந்த பலன் நமக்கு சடுதியில உடனே கிடைப்பதற்கான வாய்ப்புகள்
இருக்கு.
ஆனா இந்த உடனே கிடைக்கணும்னாலும் கூட அதற்கான பிரார்த்தமும் உங்க ஜாதகத்தில் இருக்க வேண்டும். அதையும் நீங்க தெரிஞ்சு வழிபடும் போது தான் உங்களுக்கு 100% அந்த பிரார்த்தனைக்கு உண்டான பலன்கள் கிடைக்கும் அப்படிங்கிறத இதுல நீங்க தெரிஞ்சுக்கணும்.
அதனால வழிபடு முறைகள் அப்படிங்கிறது நமக்கு ஆத்மார்த்தமா கும்பிடக் கூடிய தெய்வங்கள் அப்படிங்கிறது வேற. நம்மளுடைய அவசியத்திற்காக வழிபடக்கூடிய தெய்வங்கள் அப்படிங்கிறது வேற.
கும்ப லக்னம் :
இப்ப சனீஸ்வரர் தாக்கம் அதிகமா
இருக்கு. கும்ப லக்னக்காரங்க கும்ப லக்ன காரங்க வழிபடக்கூடிய தெய்வம் யாரு
அப்படின்னா அவங்க மகாலட்சுமி வழிபட்டாலே அவங்களுக்கு எல்லா செல்வங்களும்
நிறைவாக இருக்கும் அப்படின்னு நம்ம சொல்லலாம். 
அதே நேரத்துல அவங்களுக்கு இப்போது தற்சமயம் வழிபடக்கூடிய தெய்வம் யாராக இருக்க வேண்டும். ஏன்னா சனீஸ்வரர் அவர்களுக்கு லக்னத்திலேயே இருக்காரு. சனீஸ்வரர் தாக்கத்தை நம்ம குறைக்கணும் அப்படின்னா, நம்ம பைரவர் வழிபாடு பண்றதுனால அந்த தாக்கத்தை குறைக்க முடியும்.
ஏன்னா சனீஸ்வரர் உடைய குரு யாரு?
பைரவர் பிடிக்கும் போது சனி பகவான்
தாக்கத்தை கண்டிப்பாக குறைப்பாரா அப்படின்னா நிச்சயமாக குறைப்பார். 
அப்ப இந்த மாதிரி வழிபாடு முறைகள் வெவ்வேறாக இருக்கும் போது நம்ம இதை இவங்க இதைச் சொல்லி இருக்காங்க இவங்க இத சொல்லி இருக்காங்க அப்படிங்கிற பாராபட்சமே நமக்கு தேவையில்லை. நமக்கு இந்த நேரத்துல நம்ம செயல்படனும். காரியம் ஆகணும்னா நம்ம எந்த தெய்வத்தை வணங்கி வந்தால் நமக்கு இந்த நேரம் நமக்கு வேலை செய்யும் அப்படிங்கிறது உண்டு.
அதனால அந்த வழிபாட்டு முறைகள் அப்படிங்கிறது நம்ம தெய்வங்கள் நம்மல பரிபூரணமா நம்பி ஒரு செயல்களை செய்யும் போது, வழிபடும்போது தெய்வங்கள் நமக்கு நிறைய நன்மைகளை ஏற்படுத்தும்.
அதேசமயம் நம்ம ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள் சரியில்லாத ஒரு சூழ்நிலையில் இருக்கும் போது, அந்த தெய்வங்கள் அதை தடுக்க தான் முடியும். நமக்கு உடனே நற்பலன்களை மாத்தி கொடுத்துற முடியாது.
அப்ப நம்ம செய்யக்கூடிய பலன்களுக்கு தகுந்த வழிபாட்டு முறைகள் தான் பலன்களைத் தரும். இன்னைக்கு குமிட்ட நாளைக்கே ஒரு விஷயம் நடந்துருமா? நடக்கும்கிற அமைப்பு உங்க ஜாதகத்தில் இருக்கணும். அதுக்கு கிரகங்களோட தெய்வங்களோட ஒத்துழைப்புகளும் அங்க இருக்கும்போது கண்டிப்பா அந்த செயல் நிச்சயம் வெற்றி பெறும். அதுக்கு உண்மையான பக்தி வேண்டும்.
உண்மையான பக்தி :
இப்போ திடீர்னு ஒருத்தருக்கு நிறைய ஒரு கடையில கூட நம்ம கேள்வி பட்டு இருப்போம். ஒருத்தர் வந்து ஒரு ஜாதக கிட்ட போறாரு. ஒரு ரொம்ப ஏழ்மையான ஒரு விவசாயி அவர் அந்த ஜாதகத்தை பார்த்த உடனே அவருக்கு ஆயுள் பங்கம் இருக்குன்னு அந்த ஜோதிடருக்கு தெரியுது. அப்ப அவர் என்ன பண்றாரு இன்னைக்கு போயிட்டு நாளைக்கு வாங்கயா நான் குறிச்சி வைக்கிறேன்னு சொல்லி அவருக்கு பதில் சொல்லி அனுப்பிடுறார்.
போற வழியில கடுமையான மழை, புயல் அவர் ஒரு இடிந்த பாலடைந்த மண்டபத்துல ஒரு பழைய சிவாலயம் அது அங்க போய் அவர் மழைக்கு ஒதுங்குறார். அப்ப அந்த சிவாலயத்தில் உள்ள சிவனை அவர் பாக்குறாரு. அந்த சிவனை பார்த்ததும் அவருக்கு மனசு பதபதக்குது.
இறைவா என்கிட்ட பணம் இருந்திருந்தால் உன்னுடைய ஆலயத்தை நான் இப்படி எல்லாம் எடுத்து கட்டியிருப்பேனே அப்படின்னு சொல்லி மனசுக்குள்ள பூசலா ஆலயம் கட்டின மாதிரி அந்த ஆலயத்தை அவர் உருவாக்கி அவர் மனசுக்குள்ளேயே கும்பாபிஷேகம் பண்ணி அழகு பார்க்கிறார்.
மறுநாள் விடிஞ்சிடுது. விடிஞ்சதுக்கு அப்புறம் அவர் போயி அந்த ஜோசியரை பார்க்கிறார். அந்த ஜோதிடருக்கு ஒரே ஆச்சரியம் எப்படி இவருக்கு ஆபத்து வந்து இருக்கனுமே எப்படி இவர் இருக்காரு அப்படின்னு சொல்லி அவர் என்ன நடந்தது அப்படின்னு சொல்லி கேட்கும் போது, இவர் போனப்போ இருந்த நிலையை விளக்கி சொல்றார்.
அப்போ அந்த ஜோசியர் சொல்றார். இவருக்கு இந்த ஆயுள் பங்கத்தில் இருந்து அவருக்கு சரி செய்யணும்னா அவர் இந்த ஆலயம் கட்டி ஒரு கும்பாபிஷேகம் செய்திருக்க வேண்டும். ஆனால் அது அந்த ஒரு நாள் இரவுக்குள்ள அவரால பன்னிருக்க முடியாது. இவர் எப்படி இப்படி உயிரோடு இருக்கிறார் அப்படிங்கிற கேள்வி அவருக்குள் இருந்தது. அப்ப இது எப்படி சாத்தியம் என்று சொல்லி அவர்கிட்ட கேட்கிறாரு. அந்த விவசாயி மனதுக்குள்ள கோயிலக்கட்டி கும்பாபிஷேகம் பண்ண நிகழ்வு விவரிக்கும் போது, அவருக்கு புரியுது.
உண்மையான பக்தி இருந்தா நிச்சயமாக அந்த இறைவனே நமக்கு அனுகிரகம் செய்வார்கள். அதனால நம்ம வந்து வழிபாடு அப்படிங்கிறது நம்ம ஆத்மார்த்தமா நம்ம ஒவ்வொரு விடாப்பிடியாக உடும்பு பிடின்னு சொல்லுவாங்க இல்லையா? அந்த மாதிரி. விடாப்படியாக அந்த தெய்வத்தைப் பற்றிக் கொண்டால் கண்டிப்பாக ஓங்கி அடிப்பது அப்படிங்கிறது தாங்கி அடிப்பதாக மாறும்.
அதை சமாளிக்கக்கூடிய வழிவகைகள் நமக்கு கிடைக்கும் அப்படிங்கிறது தான். அதனால வழிபாட்டு முறைகள் நீங்க என்ன முறைகள்ள பார்த்தாலும் சரி உங்களுக்குன்னு ஒரு தேவதைய வழிபடுறீங்க அப்படின்னா அது ஆத்மார்த்தமாக உங்ககிட்ட இருக்கு இல்ல.
இதெல்லாம் பண்ணா தான் அந்த தெய்வம் நமக்கு அனுகிரகம் கொடுக்கும் அப்படிங்கிறது எல்லாம் கிடையாது.
மனதார தவறை உணர்ந்து திருத்திக்கிட்டு நம்ம அந்த வழிபாடுகளை செய்கிறோம் அப்படினா கண்டிப்பாக அதற்கான பலன்களும் நமக்கு கிடைக்கும். மீண்டும் இனிது ஒரு நிகழ்வில் சந்திப்போம்.
 நன்றி. வணக்கம்.
ALP ASTROLOGY OFFICE:
+91 9363035656 | +91 9786556156

Comments
Post a Comment