full video link: https://youtu.be/TMfRD0sFePM?si=PdtDCSQHRyKAA8dV
தொகுப்பாளர் :
அம்மா இப்போ பணம் வரவு இன்னைக்கு வந்து எல்லாருக்குமே செல்வம் அப்படிங்கறது வந்து ஒரு மிக முக்கியமான விஷயம். எந்த வகையிலாவது நம்ம வந்து பணத்தை தக்க வச்சுக்கணும். இன்னைக்கு சம்பாதிக்கணும் அப்படிங்கறது தாண்டி, பணத்தை தக்க வைக்கிறது பெரும் போராட்டமாக இருக்கிறது. அப்போ நம்ம உழைப்பு அப்படிங்கறது ஒன்னு. அதே நேரத்துல உழைப்பு இருக்கிற அதே வீட்ல கொஞ்சம் ஐஸ்வர்யமும் இருக்கணும் அப்படின்னா நம்ம இந்த வீட்ல என்ன என்ன பண்ணனும்.
உமாவெங்கட் மேம் :
இரண்டாம் இடம் :
வீட்ல என்ன என்ன பண்ணனும், அப்படின்னா முதல்ல வீடு வந்து சுத்தமாக வச்சுக்கணும். நீங்க வந்து வாஸ்துபடி பார்த்தாலுமே ஜாதகம் அமைப்பின்படி இரண்டாம் இடம் நம்முடைய ஜாதகத்துல நல்லா இருந்தா பணம் அப்படிங்கறது நல்லா இருக்கும்.
இரண்டாவது இடம் அப்படின்னு சொல்லக்கூடிய எந்த லக்னத்திற்கு மே இரண்டாமிடம் தன வரவிற்கு உண்டான இடம். அந்த தனஸ்தானாதிபதி அப்படின்னு சொல்லக்கூடிய கிரகம் நல்ல நிலையில் இருந்ததுன்னா பணம் நன்றாக இருக்கும். அவர்கள் பணம் பத்தியோ, வருமானத்தை பத்தியோ, குடும்பத்தை பத்தியோ கேள்வியே இருக்காது.
அப்போ எனக்கு பணத்தை பத்தி கேட்கிறேன் அப்படின்னு சொன்னா முதல்ல என்னுடைய இரண்டாம் இடம் என்னோட லக்னத்திற்கு நல்ல நிலையில் இல்லை. அப்படிங்கறது ஜாதகர் முதலில் எல்லாருக்குமே தெரிஞ்சது. ஜாதகம் பார்க்காதவங்க யாருமே கிடையாது. ஜாதகம் தெரியாதவங்க யாரும் இருந்தா கண்டிப்பாக அந்த இரண்டாவது இடம் பாதிக்கப்பட்டு இருக்கு. அதனால ஜாதகருக்கு பிரச்சனை.
நீங்க சொல்ற மாதிரி பணம் வந்து செலவாயிட்டு. இஷ்டம் போல செலவாயிட்டு இருக்கு. அப்போ இரண்டாம் அதிபதின்னு சொல்லக்கூடிய கிரகம் பன்னிரண்டாம் இடத்தில் இருக்கும் போது குடும்பத்துக்காக செலவழிக்கிறேன். என்னுடைய தேவைக்காக செலவழிக்கிறேன். லக்சரிக்காக செலவழிக்கிறேன். பணம் தான் விரயம் அப்படிங்கறது நடந்திருக்கும்.
எல்லா லக்னக்காரங்களுக்கும் இரண்டாம் இடம் தனஸ்தானம். அந்த தனஸ்தான அதிபதின்னு சொல்லக்கூடிய கிரகம் நல்லா இருந்தா பணம் நல்லாவே இருக்கும். இல்ல அப்படிங்கற பட்சத்தில் மட்டும்தான் இந்த பிரச்சனைகள் அப்படிங்கறது வந்துட்டே இருக்கும்.
சில லக்கனங்கள் பார்த்தீர்களா கண்டிப்பாக இவங்க பணம் செலவழிப்பாங்க. செலவழிக்காத நாளே அவங்களுக்கு இருக்காதுன்னு சொல்லலாம்.
ரிஷப லக்னம் :
இந்த ரிஷப லக்னம்
பாத்தீங்கன்னா பணம் வந்து தண்ணியா செலவாகும். எந்த ஒரு மாற்றமும் இருக்காது.
கும்ப லக்னம் :
அதே மாதிரி கும்ப
லக்னம் அவங்களுக்கும் பணம் அப்படிங்கறது தண்ணியா தான் செலவாகும் அப்படின்னு
சொல்லலாம்.
சிம்ம லக்னம் :
சிம்ம லக்னம் வந்து
பணம் வரும் போகும் பணம் வரும் போகும். வரும் வந்துகிட்டே இருக்கும்.
சேமிப்பு அப்படிங்கறது இந்த ஜாதகருக்கு இருக்காது.
விருச்சிக லக்னம் :
விருச்சிக
லக்னம் பாத்தீங்கன்னா தனம் செலவழிஞ்சுட்டே
இருக்கணும்னு சொல்லலாம். சில காலங்கள் மட்டும்தான் அந்த பணத்தை வந்து அவங்க
சேமித்து வைக்கக்கூடிய தன்மை. இல்லையென்றால் சேர்த்து வைத்து பணத்தை மொத்தமாகவே
ஏதாவது ஒரு இடத்தில் இன்வெஸ்ட்மென்ட் பண்ணியோ, ஏதாவது தகவல் தொடர்பு மூலமாக தானே
இழக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பம் இந்த காலகட்டத்தில் நடக்கலாம்.
முன்னாடி என்ன பண்ணுவாங்க அப்படின்னா பேங்க்ல கொண்டு போய் போடுவாங்க. அதை லாஸ் ஆயிடும். பிரைவேட் பேங்க்ல இன்வெஸ்ட்மென்ட் சீட்டு கட்டுறேன்னு. இப்ப என்ன பண்றாங்க ஆன்லைன்ல மோசடி அப்படிங்கறது வந்து ஒரு லிங்க் டச் பண்ணா போதும் இவங்களோட பணம் தொலைந்து போய்விடும். இந்த லக்னக்காரங்களுக்கு நடக்குமான்னா கண்டிப்பா இருக்கும்.
ஒவ்வொரு லக்னத்துக்கும் ஒரு பரிகாரம் :
தொகுப்பாளர் :
இந்த மாதிரியான பண
விரயம் ஏற்படுகிறது இல்லையா இதை தடுப்பதற்கு ஏதாவது பரிகாரங்கள் அந்த மாதிரி
ஏதாவது இருக்குதா?
உமாவெங்கட் மேம் :
கண்டிப்பா ஒவ்வொரு
லக்னத்துக்கும் ஒரு பரிகாரம் அப்படிங்கறது இருக்கும்.
மேஷ லக்னம் :
இப்போ என்ன
செய்யலாம் அப்படின்னா மேஷ லக்னம் போகுது எனக்கு பணம் சம்பந்தப்பட்டது நான் கையில
பணம் வச்சுக்கலாமா? அப்படிகிற கேள்வி எல்லாருக்குமே இருக்கும்.
இப்ப இந்த மேஷ லக்னக்காரங்க என்னோட சேவிங்ஸ் அப்படிங்கறத விட என் மனைவியின் பெயர்ல சேமிப்பு அப்படிங்கறது இவங்களுக்கு நல்லா இருக்கும். அது லாபமாகவும் இருக்கும். அது செய்யலாமான்னா கண்டிப்பா பண்ணலாம்.
என்னுடைய நம்பிக்கையான ஒரு நபர் மனைவியோ அல்லது அம்மாவோ யார் பேர்லையாவது பணம் அப்படிங்கறது சேமிச்சாங்கன்னா இவங்களுக்கு நல்லா இருக்கும்.
இந்த நிலம் வாங்குவது இவங்க அம்மா பேர்ல வாங்கினார்கள் என்றால் இவங்களுக்கு நீடித்திருக்கும். ஏன்னா தன் பேர்ல நிலம் வாங்குறப்போ அவங்களுக்கு டாக்குமெண்ட் இஷ்யூஸ் வரும்.
அதிகமான பணம் கொடுத்து வாங்கக்கூடிய சந்தர்ப்பம் அப்படிங்கறது ஏற்படும். நிலம் தாய் பெயர்ல இருந்ததுன்னா இரட்டை லாபத்தை இந்த மேஷ லக்னக்காரங்களுக்கு கொடுக்குமா அப்படின்னா கண்டிப்பாக கொடுக்கணும்னு சொல்லலாம்.
சிம்ம லக்னம் :
அதே மாதிரி இந்த
சிம்ம லக்னம் இவங்க பார்த்தீங்கன்னா பணம் அப்படிங்கறது மனைவி பேர்ல போடுறத விட குழந்தைகள்
பேரில் சேமிப்பு பண்ணலாம் அவர்கள் பெயரில் ஒரு டாக்குமெண்ட் மாதிரி
போட்டுட்டு இன்வெஸ்ட்மெண்ட் பண்ணி பேங்க்ல வச்சுட்டாங்கனா நல்லா இருக்கும்.
எதிர்காலத்தில்
கண்டிப்பாக அது நல்லா இருக்கும். சிலர் அப்படி வந்து பண்ண மாட்டாங்க.
கும்ப லக்னம் :
அதே இது இந்த கும்ப
லக்னம் பாத்தீங்கன்னா இவங்க வந்து பணத்தை கோல்டுல இன்வெஸ்ட் பண்ணலாம்.
அது இவங்களுக்கு ரொம்ப நாள் நல்லா இருக்குமான்னா நல்லா இருக்கும். வருமானம்
இருக்கும். ஆனால் சேர்த்து வைக்க முடியாத தன்மை இந்த கும்பல லக்னத்திற்கு
இருக்குது.
ஏன்னா நம்ம என்ன பண்றோம் ஏது பண்றோம் அப்படிங்கிறது இவங்களுக்கு தெரியாது. இவங்க வந்து கோல்டுல இன்வெஸ்ட்மென்ட் பண்றது இவங்களுக்கு லாபமாக இருக்கும் என்று சொல்லலாம்.
சிம்ம லக்னதுக்கும் கோல்டுல இன்வெஸ்ட்மெண்ட் பண்ணலாமா? பண்ணலாம். மறைமுகமாக தங்கம் வாங்கியோ தங்கம் கட்டிகள் வாங்கியோ சேர்த்து வைக்கலாமா வைக்கலாம்.
ரிஷப லக்னம் :
அதே மாதிரி இந்த
ரிஷப லக்னம். ரிஷப லக்னத்திற்கும் இதே மாதிரி தான். நிலமா வாங்கி போடலாம். ரிஷப
லக்னம் வாங்கும் போது இவங்க நிலமா வாங்கி சேர்த்தாங்கன்னா அந்த பணம்
அப்படிங்கறது இவங்களுக்கு கண்டிப்பாக தங்கும் அப்படிங்கறது சொல்லலாம்.
ஒவ்வொரு லக்னத்திற்கும் பணம் அப்படிங்கறது சேமிப்பு முறை அப்படிங்கறது கண்டிப்பாக இருக்குது. இப்போ எல்லாருக்குமே பொதுவான ஒன்னு அப்படின்னு பாத்தீங்கன்னா எனக்கு நிறைய பணம் செலவழிது.
உதாரணம் சொல்லப்போனால் இந்த காலகட்டத்தில் கடந்த ஒரு வருடமாக மேஷ லக்னம் யாருக்கெல்லாம் அட்சய லக்னம் போகுதோ, உங்களுக்கு இந்த பண விரயம் இருக்குதானா கண்டிப்பா இருக்குன்னு சொல்லலாம்.
தேவையில்லாமல் பணம் செலவு. இந்த மேஷ லக்னமும், ரிஷப லக்னமும் கடந்த ஒரு வருடமாக செஞ்சி இருக்குமானா செஞ்சிருக்கும்.
எனக்காக நான்
சேமிச்சு வச்சிருப்பேன். பிற்காலத்துக்காக சேமிச்சு வச்ச பணம் கூட செலவு
பண்ணக்கூடிய தன்மை இந்த ரிஷப லக்னத்திற்கு அதிகமாவே இருக்கிறது கடந்த ஒரு வருடமாக.
அட்சய லக்னம்
யாருக்கு ரிஷப லக்னமாக இருக்குதோ அவங்களுடைய தன்மை இந்த மாதிரி தான் இருக்கும்.
எந்த ஒரு மாற்றமும் இல்லை.
சேமிப்பு முறை :
இதை எப்படி
சேமிச்சு வைக்கலாம்னு பார்த்தீங்கன்னா இவங்க வந்து ஒரு உண்டியல் வாங்கி தினமும்
அந்த உண்டியல்ல பணம் போடலாம். அது எல்லாருக்குமா அப்படின்னா
கண்டிப்பாக கிடையாது. இந்த காலகட்டத்தில் அந்த உண்டியல் சேமிப்பு அப்படிங்கறது
ஜாதகருக்கு ஒரு விரயத்தை செய்யக்கூடிய தன்மை தானே செய்யக்கூடிய தன்மை அப்படிங்கறது
ஏற்படும்.
இந்த மேஷ லக்னம் கண்டிப்பாக பண்ணாங்கன்னா இந்த காலகட்டத்துல அவங்களுக்கு தனம் சம்பந்தப்பட்டது, பாக்கியம் சம்பந்தப்பட்டது அனாவசிய செலவுகள் சொல்லுவோம் டக்குனு கௌரவத்துக்காக செலவு பண்றதுன்னு சொல்லுவோம். அந்த மாதிரியான செலவுகள் இவங்க வாழ்க்கைல இருக்கும்.
அவன் போய் ஒரு கார் வாங்கினானா நம்மளும் போய் கார் வாங்குவோம். பிக் பட்ஜெட் அதுவும், அது என்ன பண்ணுவாங்க லக்சுரியா வாங்கணும் அப்படிங்கறது, நடக்குமா அதான் நடக்கும். எந்த மாற்றமும் கிடையாது
அவங்களுடைய லக்னம் மேஷ லக்னமாக இருந்தது என்றால் சில கிரகங்கள் அமர்ந்த நிலைகளை அனுசரிச்சு அவங்களோட தன்மைகள் இந்த மாதிரி தான் இருக்கும். அப்ப இவங்க இத சேர்க்கலாமானா கண்டிப்பாக இந்த உண்டியல் சேமிப்பு அப்படிங்கறது இவங்களுக்கு ரொம்ப முக்கியம்.
அதே மாதிரி இந்த கும்ப லக்னம் இவங்களும் அந்த உண்டியல் சேமிப்பு ரொம்ப ரொம்ப அவசியம். கண்டிப்பாக செய்யணும்.
தொகுப்பாளர் :
இந்த உண்டியல் சேமிப்பு அப்படிங்கறதோட அர்த்தம் என்ன? எதனால அது நம்ம பண்ணனும்.
உமாவெங்கட் மேம் :
நம்ம விரய செலவுகளை தாமே கட்டுப்படுத்த அதில் ஒரு மகத்துவம் இருக்கு. சேர்த்து பார்த்தவங்க நிறைய இந்த உண்டியல் நெறஞ்சதுக்கு அப்புறம் தனக்கு இஷ்டப்பட்ட அதாவது சில பேர் வந்து குலதெய்வ கோயில்ல போய் போடுவாங்க.
சிலர் அருகில் உள்ள கோயில போய் போடுவாங்க. அவங்களோட இஷ்ட தெய்வம்னு சொல்வோம். சிலருக்கு சாய்பாபா ரொம்ப பிடிக்கும். இந்த கும்ப லக்னக்காரர்களுக்கு பாத்தீங்கன்னா சாய்பாபா, சித்தர் வழிபாடு அதெல்லாம் நல்லா இருக்கும்.
வழிபாடு :
மிதுன
லக்னத்திற்கும் இதே மாதிரி சாமி ஜி வழிபாடு அதாவது சித்தர் ராகவேந்திரர்
இவங்களோட வழிபாடு இவங்களுக்கு நல்லா இருக்கும். இதற்காக இந்த கோயிலுக்கு
போவதற்காகவே இவங்க சேமிப்பாங்க. இதெல்லாம் இவங்களுக்கு லாபமானா? லாபமா தான்
இருக்கும்.
துலாம் லக்னம் :
துலா லக்னம்
போறவங்க கடந்த ஒரு வருஷமாக இந்த உண்டியல் சேமிப்பு அப்படிங்கறது அதிகமாகவே
இருந்திருக்கும். இவங்க தனக்கு தேவையானது இந்த கோயிலுக்கு தேவையானது அதிகமாவே
பண்ணி இருப்பாங்க. கடன் வாங்கியாவது இந்த கோயிலுக்கு செய்யணும் அப்படிங்கற தன்மை
இந்த துலா லக்னத்துக்காரங்களுக்கு கண்டிப்பாக இருக்கும். இதை செய்ய செய்ய உங்க
வாழ்க்கையில் மாற்றம் இருக்குமானால் கண்டிப்பாக மாற்றம் இருக்கும். கிரகங்கள் அதை
செய்ய வைக்கும் கண்டிப்பாக செய்வாங்க.
நன்றி.
ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656
Comments
Post a Comment