மாந்தி எந்த லக்னத்தில் இருந்தால் என்ன பலன் கிடைக்கும். ~ ALP ஸ்ரீ குரு. Dr. உமா வெங்கட், ALP Teacher.
மாந்தியைப் பற்றி:
மாந்தி என்பவர் சனி பகவானின் புத்திரன்
ஆவார். மாந்திக்கு தனியாக பலன் என்பது கிடையாது. மாந்திக்கு சிறப்பான இடம் என்பது
10 மற்றும் 11 ஆம் பாவகங்கள் ஆகும். ALP ஜோதிட முறையில் ALP லக்னத்திற்கு 10 மற்றும்
11 ஆம் பாவகங்களில் சிறப்பான பலன்களை செய்வார். அடுத்ததாக ALP லக்னத்திற்கு எந்த பாவகத்திலிருந்தால்
என்ன பலன்களைச் செய்வார் என்று பார்ப்போம்.
ALP லக்னத்தில் மாந்தி
உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தில்
ALP லக்னம் தனுசு என்றால் 1-ஆம் பாவகத்திலேயே மாந்தி நின்றால் அந்த ஜாதகர் பிறக்கும்
முன்பே கர்மாவுடன் பிறந்திருப்பார் என்று சொல்லலாம். அதாவது ஜாதகர் பிறப்பதற்கு 6 மாதங்கள்
முன் அல்லது பின் பெரியவர்கள் யாரேனும் காலம் எய்தியிருக்கக்கூடிய தன்மை இருக்கும்.
மாந்தி பகவான் ஒரு அழிவைக் கொடுக்கக் கூடியவர் ஆவார். லக்னத்தில் மாந்தி இருந்தால்
ஜாதகர் பிறக்குன் முன் ஒரு கரு உருவாகி அழிவை சந்தித்திருக்கும் அல்லது முன்னோர்களில்
ஒருவர் காலம் எய்தியிருப்பார் என்பது மாந்தியின் தத்துவம்.
ALP லக்னத்திற்கு 2-ஆம்  இடத்தில் மாந்தி
ALP லக்னத்திற்கு 2-ஆம் இடத்தில்
மாந்தி இருந்தால் ஜாதகர் பிறந்த ஊரிலிருந்து வெளியூர் சென்று பிழைக்கக் கூடிய தன்மைகள்
இருக்கும். அதாவது ஜாதகர் பிறந்த பின் பூர்வீகம் சாதகமில்லாத தன்மையானதாகியிருக்கும்.
ALP லக்னத்திற்கு 3-ஆம்  இடத்தில் மாந்தி
ALP லக்னத்திற்கு 3-ஆம் இடத்தில்
மாந்தி இருந்தால் ஜாதகருக்கு சகோதர வழி உறவு இல்லாத தன்மை அல்லது அழிவு என்று சொல்லலாம்.
ALP லக்னத்திற்கு 4-ஆம்  இடத்தில் மாந்தி
ALP லக்னத்திற்கு 4-ஆம் இடத்தில்
மாந்தி இருந்தால் ஜாதகரின் நிலத்தில் வாஸ்து சம்பந்தப்பட்ட பிரச்சனை, பிரேதம் சம்பந்தப்பட்ட
பிரச்சனை என்று சொல்லலாம். அதாவது அந்த நிலத்தில் யாரையாவது உடலுடன் எரித்தது அல்லது
புதைத்திருக்கக்கூடிய நிகழ்வுகள் நடந்திருக்கும். அது வாஸ்து தோஷம் / சல்லிய தோஷம்
நிறைந்த பூமி ஆகும்.
ALP லக்னத்திற்கு 5-ஆம்  இடத்தில் மாந்தி
ALP லக்னத்திற்கு 5-ஆம் இடத்தில்
மாந்தி இருந்தால் பூர்வ புண்ணிய வழிபாடு செய்வது சிறப்பு. முன்னோர்களில் காலம் எய்தியவர்களை
குலதெய்வமாக வழிபடுவதைக் குறிகாட்டும்.
ALP லக்னத்திற்கு 6-ஆம்  இடத்தில் மாந்தி
ALP லக்னத்திற்கு 6-ஆம் இடத்தில்
மாந்தி இருந்தால் பெரிய பிரச்சனை ஏதுமிருக்காது.
ALP லக்னத்திற்கு 7-ஆம்  இடத்தில் மாந்தி
ALP லக்னத்திற்கு 7-ஆம் இடத்தில்
மாந்தி இருந்தால், ஜாதகரின் 2-வது குழந்தை உருவாகி கருச்சிதைவு / மறைவு சம்பந்தப்பட்ட
நிகழ்வு இருக்கும். மனைவி / கணவன் இல்லாத தன்மையையும் குறிகாட்டும். திருமணம் சம்பந்தப்பட்ட
உறவுகளில் பிரச்சனை இருக்கும். அதற்காக 7-ஆம் இடத்தில் மாந்தி இருப்பவர்கள் பயப்பட
தேவையில்லை. 
இதற்கு பரிகாரம் உண்டு!
மாந்தீஸ்வரர் கோவிலுக்குச் சென்று
பரிகாரம் செய்து வருவது சிறப்பு. 
மாந்தீஸ்வரருக்கு
●       
சென்னையில் திருவாலங்காடு
●       
ஈரோடு
●       
திருச்சி, அம்மா மண்டபம் 
ஆகிய இடங்களிலுள்ள கோவிலுக்குச்
சென்று பரிகாரம் செய்வது நல்லது. இங்கு சில இடங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
மாந்தீஸ்வரருக்கு எந்த கோவில்களில் பரிகாரம் செய்கிறார்களோ அங்கு சென்று பரிகாரம் செய்வது
நல்லது / சிறப்பு.
7-ஆம் இடம் இடத்தில் மாந்தி இருப்பது
நண்பரின் மறைவு மறக்க முடியாததாக இருப்பதைக் குறிக்கும்.
ALP லக்னத்திற்கு 8-ஆம்  இடத்தில் மாந்தி
ALP லக்னத்திற்கு 8-ஆம் இடத்தில்
மாந்தி இருந்தால் சிறப்பு. ஆயுள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மட்டும் இருந்து கொண்டே
இருக்கும். அதாவது விபத்து / நோய் / மருத்துவச் செலவுகள் போன்ற நிகழ்வுகள் இருக்கும்.
இதற்காகவும் மாந்தீஸ்வரருக்கு பரிகாரம் செய்ய வேண்டும். மேலும், வருமானம் சார்ந்த தடை
இருக்கும். 
ALP லக்னத்திற்கு 9-ஆம்  இடத்தில் மாந்தி
ALP லக்னத்திற்கு 9-ஆம் இடத்தில்
மாந்தி இருந்தால் பெரிய பிரச்சனைகள் கிடையாது. அதாவது தந்தை / குரு ஸ்தானத்தில் மாந்தி
என்பது ஜீவ சமாதி கோவில்களுக்கு அதிமாகப் போகக் கூடிய தன்மை இருக்கும். இந்த காலத்தில்
சித்தர்களின் வழிபாடு இருக்கும்.
ALP லக்னத்திற்கு 10 அல்லது 11-ஆம்  இடத்தில் மாந்தி
ALP லக்னத்திற்கு 10 அல்லது 11-ஆம்  இடத்தில் மாந்தி இருப்பது சிறப்பு.
ALP லக்னத்திற்கு 12-ஆம்  இடத்தில் மாந்தி
ALP லக்னத்திற்கு 12-ஆம்  இடத்தில் மாந்தி இருந்தால் தாத்தா /  பாட்டி சொத்தை தற்போது எழுதி வாங்குவது சிறப்பு
கிடையாது. ஏனெனில் அது உங்களுக்கு பயனளிக்காமல் உங்களின் எதிர்கால சந்ததிக்கு பலன்
தருவதாகத் தான் அமையும். இப்போது அந்த சொத்து உங்களுக்கு கிடைத்தால் நீங்கள் அதை அழித்துவிடுவீர்கள்
என்பதால் உங்கள் பெயருக்கு மாற்றாமல் இருப்பது சிறப்பு.
பொதுவாக மாந்தி பகவான் எந்த பாவகத்திலிருந்தாலும்
பாதிப்பு பெரிதாக இருக்காது. ஆனால் 
●       
2-ஆம் பாவகத்தில் இருந்தால்  கல்வித்
தடையையும்
●       
8-ஆம் பாவகத்தில் இருந்தால் நோய் ஏற்படுத்துவதையும்
●       
7-ஆம் பாவகத்தில் இருந்தால் களத்திரத் தடையையும்
●       
4-ஆம் பாவகத்தில் இருந்தால் சல்லிய தோஷம் , அதாவது முன்னோர்களை அந்த இடத்தில்
புதைத்தனால் எலும்புகள் போன்றவற்றை எடுத்து அப்புறப்படுத்தாமல் விட்டிருப்பார்கள்.
அவற்றை எடுத்து கடலில் விடாமலும், முன்னோர்களுக்கு பரிகாரம் செய்யாமலும் நிலத்தை கொடுத்திருப்பார்கள்,
அதனாலும் தாக்கம் இருக்கும். எனவே, அவற்றை அப்புறப்படுத்திவிட்டு பூமி பூஜை செய்து,
பின் கட்டடம் எழுப்புவது சிறப்பாகும். இதற்காகத் தான் வாஸ்து பூஜை செய்கிறோம் என்றாலும்
மாந்தி என்பது தன்னுடைய அடையாளத்தை எந்த பாவகத்தில் உள்ளதோ அதன் மூலம் குறிகாட்டும்
அட்சய லக்ன
பத்ததி எனும் ALP ஜோதிடத்தை கண்டுபிடித்த Dr. சி. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு,
நன்றி. 
உங்கள் அனைவருக்கும் நன்றி.
full video link: https://youtu.be/s75RkJH37G8?si=IP2hAytWlg1w965o
Website: www.alpastrology.com
Contact: 9786556156 / 9363035656

Comments
Post a Comment