அனைவருக்கும் வணக்கம். ALP ஜோதிடர் சாந்திதேவி ராஜேஷ்குமார். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். இன்னைக்கு நம்ம ஒரு காரணத்தினுடைய ஒரு ஜாதகத்துல யாருக்கு என்ன தேவைகளோ அந்த தேவைகளுடைய டாப்பிக்கை மட்டும் எடுத்து பேசுறோம்.
இப்போ இன்னைக்கு நிறைய பேர் எதிர்பார்க்கக் கூடிய ஒரு விஷயம் படிக்கக்கூடிய ஒரு குழந்தைகளுக்கு படிப்பு சம்பந்தமான கேள்விகள் நிறைய இருக்கு. என் பையன் நல்ல மார்க் எடுப்பானா? படிப்பு எப்படி இருக்கும்? அடுத்து என்ன படிக்க வைக்கலாம்? எது சார்ந்த துறைக்கு போவாரு? அப்படிங்கிற மாதிரி கேள்விகள் நிறைய பேருக்கு இருக்கு.
அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் :
இந்த படிப்பு அப்படிங்கிற ஒரு நிகழ்வு பத்தி நம்ம தெரிஞ்சுக்கணும் அப்படின்னா எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்குமா அப்படின்னா நிச்சயமா கிடையாது. நம்மளுடைய அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்துல ஒவ்வொரு வயதுக்குரிய லக்னத்தையும் எடுத்து பலன் பார்க்கும் போது அந்த படிப்பு அப்படிங்கிற பாவகத்தோடு அடுத்த லக்னம் பெயர்ச்சையாகுது சேஞ் ஆகுது அப்படின்னா அந்த நிலையில சில மாற்றங்கள் அப்படிங்கிறது ஏற்படும்.
நல்லா படிச்சிட்டு இருக்கக்கூடிய ஒரு குழந்தை திடீர்னு மந்தமாகுது அப்படின்னா அதற்கு காரணம் என்ன?
ஒன்னு நட்சத்திர மாற்றமாக இருக்கும் அல்லது லக்னம் மாற்றமாக இருக்கும்.
படிக்காமல் ரொம்ப சுமாரா இருக்க பிள்ளை நல்லா படிக்க ஆரம்பிச்சுட்டான் அப்படின்னு சொல்லியும் நம்ம கேள்விப்பட்டிருப்போம். அதற்கும் காரணம் என்ன? அந்த லக்னம் அவங்களுக்கு நல்ல ஆக்டிவேட் தர மாதிரி மாறியிருக்கும் அப்படின்னு சொல்லலாம்.
இப்படி ஒவ்வொரு லக்னமும் மாற்றங்களால படிப்புங்கிற நிலை மாறும் அப்படிங்கிறது அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தில் தெளிவாகவே நம்மளால புரிஞ்சுக்க முடியுது.
அந்த அளவுக்கு ஒரு துல்லியமான ஜோதிட முறையை நமக்கு கொடுத்த திரு பொதுவுடைமூர்த்தி சார் அவர்களுக்கு நன்றிகளை தெரிவிச்சுக்குவோம்.
வாக்கு ஸ்தானம் :
இப்ப பொதுவா வாக்கு ஸ்தானம் அப்படின்னு சொல்றது நம்ம ஜாதகத்துல இரண்டாம் பாவகம் தான். அந்த இரண்டாம் பாவகத்துடைய நிலை நல்லா இருக்கு அப்படின்னா கண்டிப்பா அவங்க வாழ்க்கையில மேலும் மேலும் நிறைய படிப்பு அப்படிங்கிறது படிச்சுக்கிட்டே இருப்பாங்கன்னு வச்சுக்கோங்களேன்.
வேலைக்கு போனாலும் அவங்களுடைய படிப்பு அப்படிங்கிறது வந்து கண்டினியூ ஆயிட்டே இருக்கும். அடுத்தடுத்து அடுத்து படிச்சிட்டே இருப்பாங்க. ஒரு சிலருக்கு அந்த படிப்புங்கிறது எட்டிக்காயா கசக்கும். படிக்கவே மாட்டாங்க.
ஒரு சப்ஜெக்டை எடுத்தாலே அவங்களுக்கு பிரச்சனைதான். அது படிக்கிறேன்னு போக்கு காட்டிட்டு நிறைய தூங்குற குழந்தைகள் நிறையவே இருக்காங்க. எப்படி தனியா இருந்தாதான் படிப்பு வரும்னு சொல்லிட்டு, பரீட்சை நோட்டு புக்கை எடுத்து படிச்சிட்டு தூங்குறவங்களையும் நிறைய பார்த்திருக்கோம்.
அப்போ அந்த மாதிரி படிப்புங்கிற ஒரு நிகழ்வு யாருக்கெல்லாம் பிரச்சனைகளை தரக்கூடியதாக இருக்கும்?
பொதுவாவே லக்ன மாற்றங்கள் நமக்குள்ள படிப்பு அப்படிங்கிற சூழ்நிலைகளை மாற்றி கொடுக்கும் அப்படின்னு சொல்லலாம். பொதுவா சொல்லணும்னா ஒரு சில உதாரணத்துக்கு மட்டும் சில லக்னத்தை நான் குறிப்பிடுகிறேன்.
ரிஷப லக்னத்திற்கு :
இந்த படிப்பு சார்ந்த நிகழ்வுகள் யாருக்கெல்லாம் யோகமா இருக்குது அப்படினா இந்த ரிஷப லக்னத்திற்கு அவங்க ஆசைப்பட்ட மாதிரி படிப்பை படிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். அவர்கள் என்ன நினைக்கிறாங்களோ அவங்க ஆசைப்பட்ட மாதிரியான கல்வி நிலை அப்படிங்கிறது அவங்களுக்கு நிச்சயமாக இருக்கும்.
சரி அந்த ஆசைப்பட்ட கல்வியவே பாதியிலேயே டிஸ்கன்டினியூ பண்ணவங்களும் இருக்காங்க. விருப்பப்பட்டு சேர்ந்தோம் ஆனா இப்போ படிக்க மாட்டான் சொல்றான். வேற சப்ஜெக்ட் மாத்தறேன்னு சொல்றான். இது எப்படி சாத்தியமாகும்?
அப்போ அவங்க காலேஜுக்குள்ள போகும்போது அந்த 2, 5 சம்பந்தப்பட்டிருக்கும். அவங்க ஆசைப்பட்ட கல்வி அவங்க படிச்சிருப்பாங்க. ஆனா அதுவே லக்னம் ரிஷபத்தில் இருந்து மிதுனமா மாறுது அப்படின்னா அந்த கல்வியினுடைய தன்மை அவங்களுக்கு வேறு ஒரு நிகழ்வை பிடிக்க வைக்கும் அப்படின்னு சொல்லலாம்.
அப்போ இந்த மாதிரி அவங்களுக்கு லக்னம் மாற்றம் அப்படிங்கிறது அவங்களுடைய கல்வி நிலையை மாற்றிக் கொடுக்கும்.
மேஷம் லக்னம் :
இப்போ மேஷம்னு எடுத்துக்கிட்டோம்னா அவங்களுக்கு தொழிற்கல்விகள் தான் ரொம்ப சிறப்பா இருக்கும். டிப்ளமோ சம்பந்தப்பட்ட கல்விகள் அவங்களுக்கு நல்லா இருக்குமா? நல்லா இருக்கும்னு சொல்லலாம்.
அதுல ஜாதகத்துல கிரகங்கள் அமர்ந்த நிலைனு ஒன்னு இருக்கு. அத வச்சி தான் அதனுடைய தன்மையை நம்ம இன்னும் துல்லிதமாக தெரிஞ்சுக்க முடியும். அதேபோல மிதுனம் அப்படின்னு எடுத்துக்கிட்டோம்னா அவங்களுக்கு அந்த கல்வியின் உடைய நிலை ஏற்ற இறக்கங்களோடு இருக்கும். நல்ல ஆக்டிவா படிச்சிட்டு இருப்பாங்க திடீர்னு டல்லாயிருவாங்க. ரொம்ப சோர்வா இருப்பாங்க.
அதுக்கப்புறம் மறுபடியும் நல்லா பீக்ல போயிட்டு இருக்கும். இந்த மாதிரி ஏற்ற இறக்க நிலைகளை அவங்களுக்கு அந்த கல்வி நிலை அவங்களுக்கு ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.
கடக லக்னம் :
அதுவே கடக லக்னம் அட்சய லக்னம் போகுதுன்னு வச்சுக்கோங்களேன், ரொம்ப ஃபாஸ்ட்டா படிக்கக்கூடியவங்களாகவும் அது அவங்களுக்கு ரொம்ப பிடித்ததை ஆணித்தனமாக உறுதியாக இதைத்தான் நான் படிப்பேன் அப்படின்னு சவால் விட்டு படிக்கக்கூடிய வாய்ப்புகள் அவங்களுக்கு உண்டு அப்படின்னு சொல்லலாம். அப்போ அந்த படிப்புங்கிற ஒரு நிலை அவங்களுக்கு நல்ல ஒரு அரசு சார்புடைய IAS, IPS அதிகாரத்துக்கு உண்டான கல்விகளுக்குண்டான வாய்ப்புகளை அவர்களுக்கு கொடுக்கும்.
ஒன்னும் இல்லங்க. இன்னைக்கு ஒரு ஜாதகம் வருது. அந்த ஜாதகத்தை நம்ம பார்க்கிறோம். 11 வயது குழந்தை ஜாதகம். அவங்க வந்து படிப்பு ஃபியூச்சர்ல என்ன படிக்க வைக்கலாம் அப்படின்னு கேக்குறாங்க. ஏன்னா அந்த பையனையும் அழைச்சிட்டு வந்ததுனால மத்தவங்களுக்கு ஜாதகம் பார்க்கிறப்போ அவரும் கேட்டுக்கிட்டே இருக்கார்.
அப்ப கேட்டுட்டு இருக்கும்போது அவருக்கு நல்லதா ரெண்டு வார்த்தை சொல்லுங்க. அவர் அவங்க ஜாதகத்தை பார்க்கலைன்னு பீல் பண்றாங்க அப்படின்னு சொன்னதும் அவங்க ஜாதகத்தை நம்ம வாங்கி பார்த்தோம்.
மிதுன லக்னம் :
அவருக்கு இப்போ தற்சமயம் மிதுன லக்னம் போய்கிட்டு இருக்கு. அதுக்கு அப்புறம் மிதுன லக்னத்திற்கு இரண்டாம் அதிபதி சந்திரன் பலமாக இருக்காரு. இரண்டாம் இடத்திலேயே இருக்காரு. அடுத்த லக்னம் கடக லக்னம். கடக லக்னத்திற்கு இரண்டாம் இடத்திலேயே சூரியன் இருக்காரு.
+1, +2 வகுப்பு போகும்போது :
அடுத்த லக்னம் கடக லக்னம் மாறும் போது அந்த புதனும் நல்ல ஒரு பலமான அமைப்புல இருக்காரு. இப்படி அடுத்தடுத்து வாக்குஸ்தானம் அப்படிங்கிறது அவருக்கு ரொம்ப பலமாக இருக்கு. அப்ப நான் சொல்றேன், இந்த மிதுன லக்னம் முடிஞ்சு அவர் காலேஜ் அல்லது +1, +2 போகும்போது அவருக்கு வந்து கடக லக்னம் ஸ்டார்ட் ஆகுது. அப்போ படிப்பு ஸ்தானம் அப்படிங்கிறது சிம்ம லக்னமா வந்துரும். அப்போ அங்க சூரியன் பலமா இருக்கு அதனால நான் சொல்றேன், வேற எந்த கல்வியும் சொல்லல. IAS படிக்கக்கூடிய அளவுக்கு வாய்ப்புகள் இருக்கு அப்படின்னு சொல்றேன்.
அடுத்த வார்த்தை அவங்க என்ன சொல்றாங்க இந்த பையனுக்கு IAS படிக்கணும் தாங்க ஆசை. நாங்களும் டாக்டர் எல்லாம் படி அப்படின்னு சொல்லி பாத்துட்டோம். என்னென்னமோ சொல்லி பாத்துட்டோம். இல்ல நான் IAS தான் பண்ணுவேன்னு உறுதியா இருக்காப்ல அப்படின்னு சொல்றாங்க. அப்போ அந்த அளவுக்கு அந்த கல்வி நிலை அப்படிங்கிறது அந்த லக்னம் மாற்றம் அப்படிங்கிறத அழகா காட்டிக் கொடுக்கணும்னு வெச்சுக்கோங்களேன்.
அந்த படிப்புங்கிற ஸ்தானம் பலமாக இருந்தால் அந்த படிப்பு அவங்க வாழ்க்கையை தீர்மானிக்கும். அந்த படிப்புபே அவங்களுக்கு நல்ல மாற்றங்களையும் கொடுக்கும் அப்படின்னு சொல்லலாம்.
சிம்ம லக்னம் :
இப்போ அதுவே சிம்ம லக்னம் வருதுன்னு வச்சுக்கோங்களேன். சிம்ம லக்னம் என்கிறபோது படிப்புங்கிறது இரண்டு விதமான மனநிலை இருக்கும். ஆனா அதுவே கணிதம் சம்பந்தப்பட்ட துறையில் அவர்கள் பிரகாசிக்கக்கூடிய ஒரு வாய்ப்புகளை ஏற்படுத்தும் சொல்லலாம் என அந்த அளவுக்கு அவங்க வாக்கு சாதுரியம் மிக்கவர்களாக இருப்பார்கள் அப்படின்னு சொல்லலாம்.
ஏன்னா எந்த அளவுக்கு அவர்கள் கல்வியில் கணிதப்புலமை அப்படிங்கிறது அவர்களுக்கு இருக்குன்னு சொல்லப்படுது. இந்த மாதிரி ஒவ்வொரு லக்னங்களுக்கும் அவர்களுடைய அதிபதிகள் எந்த இடத்துல இருக்காங்க அப்படிங்கிற நிலைய பொறுத்து அவர்களுடைய கல்வியின் திறன் எப்படி இருக்கும் அப்படிங்கிறத நம்மளால சுலபமாக தெரிஞ்சுக்க முடியும்.
அதேபோல இந்த இரண்டாம் இடத்தின் அதிபதி நல்ல அமைப்புகள்ல இல்லை. அப்படின்னா அவங்க என்ன பண்ணுவாங்க.
துலாம் லக்னம் :
இப்போ உதாரணத்துக்கு துலாம் லக்னம் இந்த துலாம் லக்னத்தில் சுக்கிரன் போய் எட்டாம் இடத்தில் இருக்காருன்னு வச்சுக்கோங்களேன், அவங்க இந்த பிரச்சனை அப்படிங்கிறதையே தொழிலாக கொண்ட கல்விகளை பயில்வது நல்லது.
சாதகமான பலன்கள் உண்டு :
மருத்துவத்துறை, வக்கீல் துறை. அதேபோல போலீஸ் துறை, ராணுவத்துறை, IT பில்டு, செக்யூரிட்டி ஃபீல்டு, இன்சூரன்ஸ் பீல்டு அந்த மாதிரி சம்பந்தப்பட்ட துறைகள்ல அவங்க படிப்பை தேர்ந்தெடுக்குறாங்க அப்படின்னா அவர்களுக்கு சாதகமான பலன்கள் நிறையவே உண்டு அப்படின்னு சொல்லலாம்.
இந்த மாதிரி ஒவ்வொரு லக்னங்களுக்கும் அந்த கிரகங்களுடைய பலம், பலவீனம் அறிந்து அந்த குழந்தை நல்லா படிக்குமா அல்லது படிப்பில் பிரச்சனைகள் இருக்குமா இல்ல இடையிலேயே ஸ்கூல் மாற வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்குதா? வீட்டுல தங்கி படிக்க வைக்கலாமா வெளியூர்ல அனுப்பி படிக்க வைக்கலாமா வெளியில போனா அது கெட்டுப்போயிருமா வெளியில போனா அது சாதகமாக இருக்குமா அப்படிங்கிற பல சூழ்நிலைகளை அதுல நம்ம புரிஞ்சுக்க முடியும். அந்த மாதிரி உதாரணங்களை உங்களுக்கு விளக்கம் போட்டு சொல்லும் போது இன்னும் தெளிவாகவே புரியும்.
படிப்புங்கிற ஒரு சூழ்நிலை ஒருத்தருக்கு சாதகமா அமையல அப்படின்னா அவர்கள் வாழ்க்கையில ரொம்ப ரொம்ப சிக்கல்களையும் பொருளாதார சிரமங்களையும் சந்திக்கக்கூடிய சூழ்நிலை இருக்கும்.
பரிகாரம் :
அப்போ இந்த படிப்பு என்கிற ஒரு நிகழ்வு நமக்கு நல்ல கை கூடணும் அப்படின்னா அதுக்கு என்னங்க பரிகாரம்? எந்த கோயிலுக்கு நம்ம போகலாம்? அப்படின்னா வித்துக்கு அதிபதி புதன் பகவான். புதனுடைய அதிதேவதை யாரு அப்படின்னா அது ஹயக்ரீவர் பெருமாளை கும்பிடுவது ரொம்ப ரொம்ப சிறப்பு அப்படின்னு சொல்லலாம்.
ஹயக்ரீவர் எங்கெல்லாம் இருக்காரோ அங்கெல்லாம் நீங்க போய் வழிபாடு பண்ணலாம். முக்கியமா அந்த ஹயக்ரீவருக்கு நம்ம எல்லாரும் கேள்விப்பட்ட ஒரு ஸ்தலம் அப்படினா திருவந்திபுரத்தில் இருக்கக்கூடிய ஹயக்ரீவர். கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் இருக்கக்கூடிய ஹயக்ரீவர் சொல்லலாம். இந்த மாதிரி சில சிறப்புமிக்க ஆலயங்கள்ல இந்த ஹயக்ரீவர் சன்னதி அப்படிங்கிறது இருக்கு.
நீங்க அந்த ஹயக்ரீவர் சன்னதி முன்னால போய் புது பேனா வாங்கி வச்சு அந்த புதுசா ஒரு நோட்டு வச்சி அதுல அந்த ஹயக்ரீவர் உடைய ஸ்லோகத்தை நீங்கள் 108 தடவை எழுதினீங்கன்னா கட்டாயம் உங்களுக்கு கல்வியில் இருக்கக்கூடிய பலவீனம் என்பது குறையும்.
அதேபோல அந்த ஹயக்ரீவர் ஸ்லோகத்தை தினமுமே அவங்க சொல்லணும் எப்படி சொல்லணும் ஹயக்ரீவர் படம் இருந்தா போதும்.
அந்த படத்தை முன்னாடி வச்சுட்டு. அந்த படத்துக்கு முன்னாடி தோப்புக்கரணம் போட்டுட்டு. எத்தனை முறை தோப்புக்காரணம் போடணும். 21 முறை தோப்புக்கரணம் போட வேண்டும்.
தோப்புக்காரணம் போட்டுட்டு, அந்த ஹயக்ரீவர் உடைய ஸ்லோகத்தை.
‘ஓம் ஜ்ஞானானந்தமயம் தேவம்
நிர்மலஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வவித்யானம்
ஹயக்ரீவர் உபாஸ்மஹே’
இந்த மந்திரத்தை 108 தடவை சொல்லி படிக்கிறாங்கன்னா நல்லா இருக்கும். 108 தடவை சொல்ல முடியல அப்படிங்கிறவங்க, 54 முறை சொல்லலாம் 27 முறை சொல்லலாம் 11 முறை சொல்லலாம் 9 முறை சொல்லலாம். இதை சொல்லிட்டு படிக்க ஆரம்பிங்க. கட்டாயம் கல்வியில் ஏற்படக்கூடிய அந்த நிலை அப்படிங்கிறது குறையும்.
உங்களுக்கு எந்த லக்னம்னு தெரிஞ்சு என்ன கிழமையில் சொல்ல வேண்டும் என்பதை பார்த்து அதையும் இன்னும் கூடுதலாக ஆரம்பிச்சீங்க சொன்னீங்க அப்படின்னா ரொம்பவுமே சாதகமான பலன்கள் நிச்சயமாக உண்டு. அதனால எல்லாரும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். அந்த ஹயக்ரீவரை பிரார்த்தனை செய்து கொள்வோம். மீண்டும் இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி.
வணக்கம்.
வீடியோலிங்க் : https://youtu.be/Zzq5axUZWlk?si=bjOD_k7zsvg4J9Wh
ALP Astrology office:
+91 9363035656 | +91 9786556156
Comments
Post a Comment