வரலட்சுமி விரத முறைகளும் விளக்கங்களும் | ALP ASTROLOGY

வீடியோ லிங்க் :  https://youtu.be/4C1A5SnjZYs?si=SB5ciJfnkoExHq68

அனைவருக்கும் வணக்கம்.

இந்த ஆடி மாதம் அப்படின்னு சொன்னாலே முதல்ல இந்த ஒரு மங்களகரமான மாதம் அப்படின்னு முதல்ல நினைவுக்கு வரும்.

அம்மனுக்கே உரிய சிறப்பான மாதம் :

அது என்ன அப்படின்னா மங்கலங்களை அள்ளி தர்றவங்க யாரு அப்படின்னு பார்த்தோம்னா அது வந்து இந்த அம்மன்தான். அப்படிப்பட்ட அம்மனுக்கே உரிய சிறப்பான மாதம் அப்படின்னு பார்த்தோம்னா அது இந்த ஆடி மாதம். பொதுவாவே வந்து நம்ம என்ன வரம் கேட்டாலும் கொடுப்பாங்க. அம்மா எப்படி இல்லைன்னு சொல்ல மாட்டாங்க. இல்லையா அதனால பக்தர்களான நம்ம என்ன வரம் கேட்டாலும் அந்த அம்மா அப்படியே வாரி வழங்குவாங்களாம் இந்த மாசத்துல. அதனால இந்த மாசத்துல இந்த பண்டிகைக்கும் கொண்டாட்டத்துக்கும் குறைவில்லாமல் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு பண்டிகையை ரொம்ப முக்கியமா பெண்கள் எதிர்பார்க்கிற ஒரு நாள் வர பண்டிகை வர நாள் வந்து இந்த ஆடி மாசத்தில இருக்கும். அது என்ன அப்படின்னு பார்த்தோம்னா அதான் இந்த வரலட்சுமி விரதம். இந்த வரலட்சுமி விரதம் யார் வேணாலும் இருக்கலாம்.

 

 சின்ன குழந்தையில இருந்து பெரியவங்க வரைக்கும் இல்ல நான் வந்து தனிமையில இருக்கேன். நான் வந்து நானும் என்னோட பசங்களும் மட்டும்தான் இருக்கோம் அப்படின்னு நினைக்கிற பெண்கள் கூட தன்னோட பெண் பையங்களோட குடும்ப வாழ்க்கை நல்லா இருக்கணும் மருமகள் நல்லா இருக்கணும் பேர பசங்க நல்லா இருக்கணும் அப்படின்னு சொல்லி அவங்க கூட இந்த விரதம் இருக்கலாம்.

வேறுபாடு எல்லாம் கிடையாது :

 அப்படிப்பட்ட ஒரு சிறப்பு இந்த வரலட்சுமி விரதத்துக்கு உண்டு. இந்த வந்து ஆண்கள் பெண்கள் வேறுபாடு எல்லாம் கிடையாது ஏன்னா பெண்கள் வந்து எப்படி தனக்கு ஒரு நல்ல திருமண வாழ்க்கை நல்ல வாழ்க்கை துணை வேணும் அப்படின்னு நினைச்சிருக்காங்களோ ஆண்களுமே அதே மாதிரியே இருக்கலாம். தனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை வேணும். தன்னோட குடும்ப வாழ்க்கை நல்ல விதமா அமையணும் அப்படின்னு சொல்லி ஆண்களுமே தாராளமா இருக்கலாம்.

அஷ்டலட்சுமிகளை வணங்கணும் :

ஏன்னா ஒரு காலத்துல வந்து விக்ரமாதித்திய ராஜாவே இந்த விரதம் இருந்துதான் ஒரு பெரிய புகழ் பெற்றார் அப்படின்னு புராணங்கள்ல் சொல்லப்பட்டிருக்கு.  அதனால அப்படிப்பட்ட ஒரு பெரிய சக்தி வந்து இந்த வரலட்சுமி விரதத்துக்கும் உண்டு. ஏன்னா நம்ம சொல்றோம் அஷ்டலட்சுமிகளை வணங்கணும் அப்படின்னு சொல்றோம். அவங்களுக்கெல்லாம் முதன்மை மாதிரி இருக்கறவங்க தான் இந்த வரலட்சுமி எல்லாருக்கும் சேர்த்து ஒரு அமைப்பை கொடுக்கறவங்க தான் இந்த வரலட்சுமி. அதனால இந்த விரதம் கட்டாயம் யார் வேணுனாலும் இருக்கலாம். இல்ல சரி விரதம்னு சொல்லிட்டீங்க. அப்ப நாங்க விரதமாதான் இருக்கணுமா அப்படின்னு அடுத்த கேள்வி வரும். உங்க உங்க உடல் நிலையை பொறுத்து முழுநேரம் உபவாசமாவும் இருக்கலாம். இல்ல எங்களால முடியாது அப்படின்னா தாராளமா ஒருவேளை உணவோ இல்ல பால் , பழம் சாப்பிட்டு நீங்க விரதம் இருக்கலாம். கர்ப்பிணி பெண்கள் இருக்கலாமா அப்படின்னா இருக்கலாம். நீங்க உணவு உட்கொண்டுட்டு இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். முழு உபவாசம் இருக்கணும் அப்படிங்கிற அவசியம் இல்லை. சரி இப்ப வரலட்சுமி விரதம் அப்படின்னு சொல்லிட்டோம்.

இந்த வரலட்சுமி விரதம் எப்படி இருக்கணும் :

என்னைக்கு வருது இதற்குன்னு நடைமுறை இருக்கு இதை இப்படிதான் பண்ணனும் அப்படிங்கிற ஒரு அமைப்பும் இருக்கு. முதல்ல இந்த வரலட்சுமி விரதம் என்னைக்கு வருது அப்படின்னு பார்த்தோம்னா இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 8 ம் தேதி வெள்ளிக்கிழமை அன்னைக்கு இந்த வரலட்சுமி விரதம் வருது. இந்த வரலட்சுமி விரதம் இதை வந்து நம்ம எப்படி மேற்கொள்ளணும் அப்படின்னா மூன்று நாட்கள் வந்து இதை கொண்டாடணும். முதல் நாள் வெள்ளிக்கிழமை இப்ப வரலட்சுமி விரதம் முதல் நாள் வியாழக்கிழமை முதல்ல அம்மனை வீட்டுக்கு வரவழைக்கணும். அடுத்ததா வெள்ளிக்கிழமைதான் வரலட்சுமி விரதம் பூஜை பண்ணனும். அடுத்ததா சனிக்கிழமை புனர்பூஜை இப்படி மூன்று நாட்கள் இந்த வரலட்சுமி விரதத்தை கொண்டாடணும்.

இப்ப இல்ல சில பேருக்கு வேற பழக்கம் இருக்கு எப்படின்னா வெள்ளிக்கிழமையே அம்மனை வீட்டு கழிச்சு வெள்ளிக்கிழமையே வரலட்சுமி பூஜையும் பண்ணி சனிக்கிழமை ஒரு நாள் விட்டுட்டு ஞாயிற்றுக்கிழமை புனர்பூஜை செய்றது அப்படிங்கிறது வழக்கம் இருக்கு. இல்ல நாங்க இந்த வருஷம்தான் முதல் முதலா இந்த வரலட்சுமி விரதம் பூஜையை தொடங்க போறோம்.

மனநிறைவு :

தாராளமா நீங்க தொடங்கலாம். நீங்க முதல்ல தொடங்குறீங்க அப்படின்னா எளிமையா அம்மன் படத்தோட லட்சுமி புகைப்படத்தோட ஆரம்பிக்கலாம். நீங்க வந்து இந்த வருடம் செய்து பார்த்துட்டு உங்களுக்கு எந்த அளவுக்கு அந்த ஒரு முழு மனநிறைவு கிடைக்குது இல்ல முழு உங்களுக்கு ஒரு தெரியும். நீங்க அந்த பூஜை செஞ்சு பார்க்கும்போதே உங்க மனசுல ஒரு மன திருப்தி மன அமைதி எல்லாமே தெரியும். நீங்க அதை பொறுத்து அடுத்தடுத்த வருடங்கள் கூட கலசம் வச்சுக்கலாம். இல்ல நான் இந்த வருடமே கலசம் வச்சுதான் கொண்டாட ஆரம்பிக்க போறேன். தாராளமா செய்யலாம். இப்போ எந்தெந்த நேரத்துல எல்லாம் இதை செய்யலாம் அப்படின்னு நம்மளுக்கு முதல்ல தெரியணும்.

இப்ப வியாழக்கிழமை மாலை நேரத்துல அம்மனை வீட்டுக்கு அழைக்கணும். அதற்கு உகந்த நேரமா நம்ம மாலை 6ு மணியல இருந்து 7:30 மணி வரைக்குமான நேரத்தை நம்ம பயன்படுத்திக்கலாம். அடுத்தது வெள்ளிக்கிழமை அழைக்கணும் அப்படின்னு நினைக்கிறவங்க காலையில 6ு மணியல இருந்து 720க்குள்ள நீங்க அம்மனை வீட்டுக்கு அழைச்சுக்கலாம். இப்போ அடுத்ததா வெள்ளிக்கிழமை பூஜை நேரம். நீங்க வியாழக்கிழமை அம்மன அழைச்சாலும் சரி வெள்ளிக்கிழமை அழைச்சாலும் சரி இந்த வெள்ளிக்கிழமை பூஜை நேரம் அப்படிங்கறது எல்லாருக்கும் ஒன்னுதான்.

பூஜை நேரம் :

இந்த வெள்ளிக்கிழமை பூஜை நேரம் எப்பவும் எப்படி இருக்கும் அப்படின்னு பார்த்தோம்னா காலையில 9ன் மணியல இருந்து 10:30 மணிக்குள்ள நீங்க பூஜை செஞ்சுக்கலாம். இல்ல எங்களுக்கு காலை நேரம் ஒத்து வராது அப்படின்னு நினைக்கிறவங்க மாலை 6ு மணிக்கு மேல எந்த நேரத்தில வேணாலும் நீங்க வரலட்சுமி பூஜையை செஞ்சுக்கலாம். அடுத்ததா இந்த புனர்பூஜை சனிக்கிழமை புனர்பூஜை அப்படிங்கறது காலையில நீங்க 10:30 மணிக்கு மேல செஞ்சுக்கலாம். இல்ல நாங்க ஞாயிற்றுக்கிழமை தான் செய்யறோம் அப்படின்னா ஞாயிற்றுக்கிழமையும் 10 மணி 10:30 மணிக்கு மேல நீங்க இத புணர்பூஜையை செஞ்சுக்கலாம். சரி இப்ப முதல் நாள் அம்மனை அழைக்கணும்  அப்படின்னு சொல்லிட்டோம்.

அப்ப எப்படி அம்மனை அழைக்கிறது?

இப்ப நீங்க வந்து புகைப்படம் தான் வச்சு கும்பிட போறீங்க அப்படின்னா உங்களுக்கு எந்தவிதமான தடையும் கிடையாது. நீங்க புகைப்படத்தை சுத்தப்படுத்திட்டு ஒரு மணப்பலகை வச்சு அந்த மணப்பலகையில மாக்கோலம் போட்டு வாழை இலை போட்டு வாழை இலை மேல நெல் இல்லன்னா பச்சரிசி பரப்பி இல்ல எங்கள்ட்ட வாழை இலை கிடைக்கல அப்படின்னு சொன்னீங்கன்னா ஒரு தாம்பலம் வச்சு தாம்பளத்துல நெல்லோ இல்ல பச்சரிசியோ பரப்பி அந்த அம்மன் புகைப்படத்தை வச்சு நீங்க அம்மனுக்கு மலரால அலங்காரம் பண்ணி , தீப தூபம் எல்லாம் காமிச்சு நெய்வேத்தியம் எல்லாம் ரெடி பண்ணி வச்சு நீங்க வழிபாடு பண்ணலாம்.

கனகதாரா ஸ்தோஸ்திரம் :

உங்களுக்கு தெரிஞ்ச கனகதாரா ஸ்தோஸ்திரம் இல்ல லலிதா சகஸ்திரநாமம் எதுவுமே தெரியலன்னா அம்பிகை பாடல்கள் இல்ல அபிராமி அந்தாதி இதை சொன்னாலே போதுமானது. இல்ல நான் கலசம் வச்சுதான் வழிபாடு பண்றேன். கலசம் வச்சுதான் பண்ண போறேன். கலசம் வைக்கறதுக்குன்னு அவங்க அவங்களுக்குன்னு ஒரு குடும்ப பாரம்பரியம்னு ஒரு முறை இருக்கும். அதை பின்பற்றுறவங்க தாராளமா அதையே பின்பற்றலாம். இல்ல நான் புதுசாதான் கலசம் வைக்க போறேன் இந்த வருடம் அப்படின்னா கலசம் வைக்கிறதுக்கு அப்படின்னு ஒரு முறை இருக்கு. அது என்ன பண்ணனும் கலசம் வைக்கிறதுல ரெண்டு இருக்கு. ஒன்னு கலசம் முழுவதும் நீர் நிரப்பி வைக்கிறது இல்ல கலசம் முழுவதும் பச்சரிசி நிரப்பி வைக்கிறது. பெரும்பாலும் கலசத்துல இந்த அரிசி நிரப்பி வைக்கிறதுதான் வழிபாடுதான் பழக்கமா இருக்கு. இப்போ அதே மாதிரி நீங்களும் மணப்பலகை ஒன்னு ரெடி பண்ணிக்கணும். மணப்பலகை சுத்தப்படுத்தி அதுல மாக்கோலம் போட்டு எந்த இடத்துல நம்ம பெரும்பாலும் எந்த எப்படி வைக்கலாம் அம்மனன்னா கிழக்கு நோக்கி வைக்கலாம். இல்லன்னா வடக்கு நோக்கி வைக்கலாம். இல்ல

நாங்க வாடகை வீட்டில இருக்கோம். எங்க வீட்டோட அமைப்பு இருக்கு கிழக்கு முகமா பார்த்து வைக்க முடியல அப்படின்னு நினைக்கிறவங்க மட்டும் வடக்கு பக்கமா வைக்கலாம். இல்லன்னா பெரும்பாலும் கிழக்கு முகம் பார்த்து அம்மனை வைக்கிறதுதான் பழக்கம். இப்ப நம்ம அடுத்ததா இந்த மணப்பலகைய ரெடி பண்ணியாச்சு. இப்ப இந்த மணப்பலகையில மாக்கோலம் போட்டு அது மேல ஒரு பெரிய வாழை இலை பரப்பி வாழை இலை மேல அரிசி இல்லன்னா நெல் ஏதாவது ஒன்னு வச்சு நீங்க இந்த கலசத்தை முதல்ல அது மேல வைக்கணும். இல்ல இலை கிடைக்கல வாழை இலை கிடைக்கல அப்படின்னு நினைச்சீங்கன்னா ஒரு பெரிய தாம்பலம் வச்சு அந்த தாம்பலத்து மேல அரிசியோ இல்ல நெல்லோ பரப்பி நீங்க இந்த கலசத்தை வச்சுக்கலாம். இப்ப அடுத்ததா கலசத்துக்குள்ள சேர்க்க வேண்டிய பொருட்கள் அப்படின்னு சில விஷயங்கள் இருக்கு. அதுக்கு முன்னாடி இந்த கலசத்துக்கு ஒரு மஞ்சள் கலர் நூல் சின்னதா ஒரு மஞ்சள் கலர் நூல் கட்டிட்டு அந்த கலசத்துல மஞ்சள், சந்தனம், குங்குமம் எல்லாம் வச்சுக்கோங்க கலசத்துக்கு. வச்சுக்கிட்டு இந்த கலசத்துல அரிசி நிரப்பி அது உள்ள இந்த காதோல கருகமணி அப்படின்னு எல்லாம் இருக்கும். கடைகள்ல கிடைக்கும் உங்களுக்கு. அந்த காதோல கருகமணி, எலுமிச்சம் பழம், ஏலக்காய் இந்த மாதிரி வாசனை திரவியம் எல்லாம் போட்டு, நாணயம், நீங்க வெள்ளி நாணயம் இருக்கு போடலாம். தங்க நாணயம் போடுறேன் போடலாம். இல்ல எங்ககிட்ட இந்த காயின் தான் இருக்கு அஞ ரூபா ரடு ரூபா ஒரூபா காயின் தான் இருக்கு தாராளமா போடலாம். இதை எல்லாம் போட்டு கொஞ்சம் பூவும் வச்சு அதன் மேல மாவிலையை வைக்கணும். மா இலையை வச்சிட்டு தேங்காய் ஒரு நல்ல தேங்காய் எடுத்து முழு தேங்காய் எடுத்துக்கிட்டு தேங்காவுக்கு மஞ்சள் தடவி அதுல குங்குமம் வச்சு இந்த மா இலையை அந்த கலசத்தோட வாய் பகுதியில வச்சு இந்த தேங்காவை அதன் மேல வைக்கணும். பெரும்பாலும் முகம் வழிபாடு இருக்கு அம்மனோட முகத்தை வச்சு நாங்க வழிபடுறோம் வழிபாடு இருக்குன்னா அடுத்ததா அம்மனோட முகத்தையும் அதுல வச்சு நீங்க புடவை கட்டுறதுனா புடவை கட்டலாம் இல்ல அம்மனுக்குன்னு அந்த கலசத்துக்குன்னு ஒரு பாவாடை எல்லாம் இருக்கும் அந்த அதைதான் வைக்கிறீங்க அப்படின்னா அதையும் வாங்கி அலங்காரம் பண்ணலாம். உங்க கிட்ட இருக்கற நகைகள் எல்லாம் போட்டு அலங்காரம் பண்ணி அம்மனுக்கு அழகா ஜடை வச்சு இப்ப நம்மளோட அம்மா அவங்க என்னென்னல்லாம் போட்டு அலங்காரம் பண்ணனும் அப்படின்னு நினைக்கிறீங்களோ எல்லாத்தையும் போட்டு அலங்காரம் பண்ணி அவங்களை ரெடி பண்ணிரலாம்.

சில பேருக்கு பலகை இல்லாம சில பேருக்கு இருக்கும். மேடை மாதிரி இருக்கும். சில பேர் அலங்காரத்துக்குன்னு வச்சிருப்பாங்க. அம்மனை வைக்கிறதுக்குனே காலம் காலமா இருக்கும். உங்களுக்கு எப்படி எதுல வச்சுக்க முடியுமோ நீங்க அப்படி வச்சுக்கலாம். இப்ப அதுலெல்லாம் வைக்கறதுக்கு வச்சிட்டு இப்ப அவங்கள என்ன பண்ணனும்னா இந்த மாலை நேரம் சொன்னோம் இல்லையா வியாழக்கிழமை அந்த மாலை நேரத்துல இந்த அலங்காரம் பண்ண அம்மனை அப்படியே நம்ம வீட்டு வாசலுக்கு கூட்டிட்டு போணும். கூட்டிட்டு போயி அவங்களை எப்படி வைக்கணும்.

 வீட்டுக்கு அமைதியும் நிம்மதியும் :


 அப்படின்னா நம்ம வீட்ட பார்த்து அவங்களோட முகத்தை வச்சு வாசல்ல வச்சு அவங்களுக்கு தீப தூபம் எல்லாம் காமிச்சு அம்மா மகாலட்சுமி தாயே உன்னை நான் இந்த கலசத்துல எழுந்தருள பண்ணி இருக்கேன். நீயே இப்ப என்னோட வீட்டுக்குள்ள வாசம் பண்ணி வாமா என்னோட வீட்டுக்குள்ள வந்து எல்லாவிதமான செல்வங்களையும் வீட்டுக்கு அமைதியும் நிம்மதியும் ஒரு நல்ல வாழ்க்கையும் கொடுமா அப்படின்னு சொல்லி மகாலட்சுமி தாயே வாமா அப்படின்னு சொல்லி அவங்களை வீட்டுக்குள்ள கூட்டிட்டு வரணும். இதுலயும் சில பழக்கம் இருக்கு அக்கம் பக்கத்து பெண்களை கூப்பிட்டு பாட்டெல்லாம் பாடி கூட்டிட்டு வர பழக்கமும் இருக்கு. அப்படி பழக்கம்

இருக்கவங்க பண்ணுங்க இல்ல இதெல்லாம் இல்ல நாங்க தனியாதான் இருக்கோம் யாரை போய் கூப்பிடுறது அப்படின்னா ஒன்னும் கவலைப்படாதீங்க. நீங்களே தனியாவே எல்லாமே செய்யலாம். நீங்களே உங்களுக்கு பாட்டு தெரியுதா? பாடி கூட்டிட்டு வரலாம். இல்ல அம்மன் பாட்டு ஏதாவது ஸ்தோத்திரம் தெரியுதா இல்ல அபிராமி அந்தாதியை சொல்லி கூட நீங்க அவங்களை மெதுவா வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்து அந்த மணப்பலகை தயாரா எல்லாம் வச்சிருக்கோம் இல்லையா அதுல இந்த கலசத்தோட அம்மனை நம்ம உட்கார வச்சிரலாம். சரி இப்ப வச்சாச்சு. இப்ப இவங்க யாருன்னா நம்ம வீட்டுக்கு விருந்தாளியா வந்துருக்காங்க. நம்ம எப்படி வீட்டுக்கு விருந்தாளி வந்தா என்ன வேணும் என்ன வேணும்னு கேட்டு கொடுப்போம் இல்லையா அதே மாதிரி இப்ப இவங்களுக்கு ஒரு நெய்வேத்தியம் கொடுக்கணும். நம்ம நெய்வேத்தியமா ஒன்னு இந்த மிளகு பொங்கல் கொடுக்கலாம். இல்ல பருப்பு பாயசம் பண்ணலாம். இப்ப நெய்வேத்தியம் வச்சு திரும்பவும் தீப தூபம் எல்லாம் காமிச்சு அம்மா தாயே எங்க வீட்டுக்கு வந்துருக்கீங்க. உங்களை நான் இந்த கலசத்துல எழுந்தருள பண்ணி வீட்டுக்கு கொண்டு வந்துட்டேன். நீங்க என்னோட வீட்டில இருந்து மகாலட்சுமியா இருந்து லட்சுமி கடாக்சம் எப்பவுமே என் வீட்ல இருக்கணுமா அப்படின்னு சொல்லி அந்த பிரசாதம் நெய்வேத்தியம் எல்லாம் வச்சு நீங்க தீபதூபம் காட்டி வழிபாடு பண்ணலாம். இப்ப இந்த வியாழக்கிழமை வழிபாடு முடிஞ்சிருச்சு.

வெள்ளிக்கிழமை காலை :

 வெள்ளிக்கிழமை காலையில இந்த பூஜை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி இந்த நோன்பு கயறு  , நோன்பு சரடை அப்படின்னு ஒன்னு கட்டுவோம். மஞ்சள் நூல்ல ஒரு பூவை வச்சு கட்டுறதுதான் இந்த நோன்பு சரடை. இதை நீங்க இந்த நோன்பு சரடை ரெடி பண்ணி வச்சுக்கோங்க. உங்க வீட்ல எத்தனை பெண்கள் இருக்கீங்களோ அத்தனை பேரு இல்ல நான் வரவங்களுக்கு எல்லாம் கொடுப்பேன்

அப்படின்னா நீங்க அஞ்சு ஏழு ஒன்பது இல்ல மூணு இந்த ஒற்றைப்படை எண்ணிக்கையில இந்த சரடை ரெடி பண்ணி வச்சுக்கோங்க. எத்தனை பேரு கொடுக்குறீங்கங்கறத பொறுத்து பண்ணி வச்சுக்கலாம். அதையும் வச்சிட்டு இப்போ நம்ம எப்பவுமே எந்த பூஜை ஆரம்பிச்சாலும் முதல்ல யாரை கூப்பிடுவோம் அந்த விநாயக பெருமானை கூப்பிடுவோம். அப்ப முதல்ல பிள்ளையார் பூஜை பண்ணனும். அப்போ என்ன பண்ணனும்னா நம்ம மஞ்சள் தூள் பிடிச்சு மஞ்சள்ல பிள்ளையார் பிடிச்சு வச்சு அவருக்கு வெத்தலை பாக்கு பூ பழம் எல்லாம் வச்சு நாணயம் எல்லாம் வச்சு அருகம்புல் வச்சு முதல்ல அப்பா விநாயக பெருமானே நான் இந்த மாதிரி வரலட்சுமி விரதம் பூஜை ஆரம்பிக்கிறேன்ப்பா இது எந்த தங்கு தடையும் இல்லாமல் தொடர்ந்து நடக்க உன்னோட அருளும் எங்களுக்கு வேணும்ப்பா அப்படின்னு சொல்லி இப்ப விநாயகருக்கு பூஜை பண்ணி நம்ம அவரையும் வழிபட்டு நம்மளோட பூஜையை ஆரம்பிக்கலாம். இந்த பூஜைக்கு குறிப்பா வெள்ளை கலர் மலர் கிடைக்குது. என்ன தாமரைப்பூ கிடைச்சா இன்னும் ரொம்ப விசேஷம். இல்ல தாமரைப்பூ எங்களுக்கு கிடைக்கல அப்படின்னு சொன்னீங்கன்னா வெள்ளை நிறத்தில இருக்கற மலரை இந்த அம்மனோட பூஜைக்கு நீங்க தாராளமா பயன்படுத்திக்கலாம். நீங்க பயன்படுத்துறப்ப பூவால அர்ச்சனை அருகம் கிடைக்குது இல்ல வில்வம் கிடைக்குது அப்படின்னா ரொம்ப நல்லது. வில்வமால பூஜை பண்ணலாம் மஞ்சள் பூஜை பண்ணலாம் குங்கும அர்ச்சனை பண்ணலாம் அச்சதையால பண்ணலாம். உங்களோட விருப்பம் உங்களோட வசதிக்குப்ப என்ன கிடைக்குதோ பண்ணலாம். நீங்க இப்படி பூஜை பண்றப்ப லலிதா சகஸ்திரநாமம் இல்ல கனகதாரா சோஸ்திரம் இல்ல எதுவுமே எனக்கு தெரியல அப்படின்னா அம்மன் பாடல் எந்த பாடலா இருந்தாலும் பாடல் இல்ல எதுவுமே எங்களுக்கு தெரியல அப்படின்னா அபிராமி அந்தாதி இதை சொல்லிக்கிட்டே நீங்க உங்களோட இந்த கலசத்துல நீங்க கொண்டு வந்திருக்கிற இந்த லட்சுமிக்கு வரலட்சுமிக்கு நீங்க

பூஜை பண்ணிக்கிட்டே இருக்கலாம் தொடர்ந்து இப்போ நீங்க இந்த பூஜை எல்லாம் முடியற நேரம் வந்துருச்சு அப்படின்னா பூஜையை முடிச்சிட்டு நெய்வேத்தியத்துக்கு நீங்க உங்களுக்கு என்னெல்லாம் தோணுதோ எல்லாமே செய்யலாம் எல்லாமே செய்யலாமா அப்படின்னு அப்படின்னு கேட்டீங்கன்னா சர்க்கரை பொங்கல், கொழுக்கட்டை, இட்லி, வடை, சுண்டல், பாயாசம் கட்டாயம் இனிப்பு இருக்கணும். இல்ல நான் அஞ்சு வகையா செய்றேன். பாயாசம், சுண்டல், வடை, இட்லி கூட நீங்க தாராளமா வைக்கலாம். ஏன்னா வெண்மை நிறத்தில என்ன உணவு இருந்தாலும் அந்த அம்மாவுக்கு ரொம்ப ரொம்ப பிடித்தமான ஒன்று அதனால நீங்க இட்லியை கூட வச்சு தாராளமா வழிபாடு பண்ணலாம். நீங்க எவ்வளவு வழிபாடையும் முடிச்சுட்டு இந்த பூஜை நேரம் முடியறதுக்குள்ள நல்ல நேரம் இருக்கும்போதே இப்ப அந்த நோன்பு சரடு வச்சிருக்கீங்க பாத்தீங்களா அதை எடுத்து வீட்ல பெரியவங்க இருக்காங்க அப்படின்னா அவங்க கையால கட்டிவிட சொல்லி நீங்க கட்டிக்கோங்க அப்படி இல்ல அப்படின்னா உங்களோட கணவர் கிட்ட சொல்லி அதை கட்டிவிட சொல்லுங்க இல்ல கணவர் வெளிநாட்டில இருக்காரு நான் மாமனார் மாமியாரும் வெளியூர்ல இருக்காங்க நான் மட்டும் தனியாதான் இருக்கேன் அப்படின்னா நீங்களே மனதார உங்களோட பிரார்த்தனை, வேண்டுதல் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு அந்த அம்மனை மனதார நினைத்து நீங்க நீங்களே அந்த கயரை கட்டிக்கலாம். இப்ப இதுதான் வரலட்சுமி வழிபாட்டிற்கான முறை. இப்ப இவ்வளவு வரலட்சுமி பூஜை எல்லாம் முடிச்சட்டோம் எல்லாம் கும்ட்டுட்டோம் எல்லாம் பண்ணிட்டோம்.

புனர் பூஜை :

அடுத்ததா இந்த புனர் பூஜை அப்படின்னு ஒன்னு இருக்கு. அதை எனைக்கு பண்ணனும் அப்படின்னா நான் இங்க வியாழைக்கிழமை தான் அழைச்சிருக்கீங்க அம்மனை அப்படின்னா நீங்க சனிக்கிழமை புனர் பூஜை பண்ணலாம் இல்ல நான் வெள்ளிக்கிழமை தான் அழைச்சிருக்கேன் அப்படின்னா நீங்க ஞாயிற்றுக்கிழமை புனர்பூஜை பண்ணலாம். இப்ப

இந்த புனர்பூஜை அப்படிங்கறதுன்னா என்ன அப்படின்னா இப்ப நம்ம அந்த கலசத்துல அம்மாவ ஒரு படுத்தி அலங்கரிச்சு அப்படியே வச்சிருக்கோம் இல்லையா இப்ப அந்த அம்மனை அப்படியே அந்த கலசத்தோட தூக்கி எடுத்துட்டு போகணும். சனிக்கிழமை அன்னைக்கு அந்த புனர்பூஜைக்கு எங்க எடுத்துட்டு போகணும் அப்படின்னு பாத்தீங்கன்னா நம்மளோட வீட்ல கிச்சன்ல இருக்கற இந்த அரிசி பானை அரிசி பானையோ,  ட்ரம்மோ,  டப்பாவோ,  நீங்க எதுல கொட்டி வச்சிருக்கீங்களோ அரிசிய அந்த இடத்துக்கு தூக்கிட்டு போகணும். அப்படியே தூக்கிட்டு போயி இவங்கள அந்த அரிசி பானைக்குள்ள உட்கார வைக்கணும். உட்கார வச்சு நீங்க மனதார வேண்டிக்கணும். அம்மா இந்த வருஷம் உங்களோட ஆசீர்வாதத்தோட இந்த பூஜையை நான் நல்லபடியா முடிச்சிருக்கேன்மா. நீங்க எப்பவும் இதே மாதிரி எங்க வீட்ல இந்த செல்வத்துல அன்னபூரணியா நீங்க எப்பவுமே எங்களுக்கு அருள் ஆசி கொடுக்கணுமா எப்பவுமே இருக்கணுமா என்னோடே தங்கி இருக்கணும் அப்படின்னு சொல்லி வேண்டிட்டு நீங்க ஒரு ஒரு பொருளா இப்ப எடுத்துக்கலாம். அரிசியை ஃர்ஸ்ட் தனியா எடுத்து வச்சுக்கலாம். தேங்காவை நீங்க ஏதாவது இனிப்பு செய்றதுக்கு இனிப்பு பொருள் செய்து சாப்பிடுறதுக்கு பயன்படுத்தலாம். அதே மாதிரி அதுல இருக்கற அந்த எலுமிச்சம் பழம், காதோள கருகமணி இதெல்லாம் வந்து நீங்க பூ மாய இலை இதெல்லாம் பூஜை குப்பையோட சேர்த்துரலாம். அதுல வாசனை திராவியம் இந்த ஏலக்காய் கிராம்பு இந்த மாதிரியான விஷயங்களை சமையலுக்கு தாராளமாக நீங்க பயன்படுத்தலாம். இதெல்லாம் பண்ணும்போது இப்ப அரிசி இருக்கும். அந்த அரிசியை எடுத்து சர்க்கரை பொங்கல் செஞ்சு சாப்பிடலாம். இல்ல ரொம்ப கலச அளவுக்குல நாங்க அரிசி போட்டுருக்கோம். இப்ப அதை என்ன பண்றது அப்படின்னு கேட்டீங்கன்னா அடுத்து வரக்கூடிய கிருஷ்ண ஜெயந்திக்கு வர பட்சணம் எல்லாம் அந்த அரிசியில எடுத்து தாராளமா செய்யலாம். அதுதான் காலம் காலமா செய்யற பழக்கமும் கூட. இப்படி நீங்க செய்யற பட்சத்துல இந்த வரலட்சுமின்னு சொல்ற லட்சுமி தேவி உங்களுக்கு எல்லாவிதமான அருளையும் கொடுப்பாங்க. நீங்க என்ன வேண்டுதல் வைக்கிறீங்களோ நல்ல வரன் கிடைக்கச்சு திருமணம் அமையணும். இல்ல திருமண வாழ்க்கை எனக்கு இன்னும் நல்லா இருக்கணும். என்னோட கணவர் குடும்பம் என்னோட உற்றார் உணர்வினர் எல்லாருமே நல்லா இருக்கணும் எல்லாரும் அமைதியான வாழ்க்கை கிடைக்கணும் எல்லாரும் ஒரு செல்வம் செழிப்போட ஒரு நல்ல வாழ்க்கை அவங்களுக்கு கிடைக்கணும் நல்லா இருக்கணும் எல்லாரும் அப்படின்னு நீங்க என்ன வேண்டுதல் வைக்கிறீங்களோ அத அப்படியே மனதார நிறைவேற அருளாசி கொடுப்பாங்க அவங்க அப்படியே இதுதான் இந்த வரலட்சுமி விரத வழிபாட்டு முறை இந்த வருடமும் தவறவிடாம வருடம் தோறும் செய்றவங்க இந்த வரலட்சுமி விரதத்தை தவறவிடாம செய்யங்க அந்த அம்மாவோட அருள் எப்பவுமே உங்களுக்கு கிடைக்கட்டும் இல்ல இந்த வருடம் தான் நான் புதுசா செய்ய ஆரம்பிக்கிறேன் அப்படின்னு சொல்றவங்களும் தாராளமா செய்யங்க. அவங்களோட அருள் உங்களுக்கு எப்பவுமே கிடைக்கும். அந்த வரலட்சுமியோட அருள் இந்த உலகம் முழுவதும் எல்லா பெண்களுக்கு மட்டுமி இல்லாம இந்த விரதம் மேற்கொள்ற அனைவருக்குமே அவங்களோட அருளாசி கிடைக்கட்டும் அப்படின்னு நானும் இந்த நேரத்தில் கேட்டுக்கிறேன்.

நன்றி.

ALP ASTROLOGY  OFFICE: 9786556156 / 9363035656

WEBSITE: www.alpastrology.com


Comments