குரு பலன் வந்தா கல்யாணம் நடந்துடுமா? அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் ஸ்ரீ குரு உமா வெங்கட்.

வீடியோ லிங்க்https://youtu.be/MarF5619VPY?si=jEJR-aIeCHbirki2

 உத்திர நட்சத்திரம் :

நாங்க பார்த்த ஜாதகத்துல ஒரு அமைப்பு அப்படிங்கறது இருந்தது. உத்திர நட்சத்திரம் இரண்டாம் பாதம் போகும் போது அவங்களுக்கு திருமணம் நடந்தது. அவங்களுக்கு உத்திர நட்சத்திரம் நாலாம் பாதத்திலே கொஞ்சம் பிரச்சனை வந்து அந்த திருமணம் பிரிவுக்கு உண்டான ஒரு காரணமாக அமைந்தது.

 பிரச்சனையாகி தீர்ப்பாகி இப்போ தற்போது அவங்களுக்கு ஹஸ்த நட்சத்திரம் போயிட்டு இருக்கு. ஹஸ்த நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில திருமணத்திற்கு உண்டான வாய்ப்பு இருக்குதான்னு கேட்டாங்க. இரண்டாம் தார திருமணத்திற்கு.

 கேட்கும்போதே தெரிஞ்சது செகண்ட் மேரேஜுக்கு உண்டான கேள்வியா அப்படின்னு அவங்களும் ஆமா அப்படிங்கற மாதிரி சொன்னாங்க. அப்போ இரண்டாம் தார திருமண வாய்ப்பு இந்த வரக்கூடிய ஆகஸ்ட் மாதத்திற்கு அப்புறமாட்டி கிடைக்கும் உங்களுக்கு. அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியா இருங்க அப்படிங்கற மாதிரி சொன்னோம்.

 அது என்ன கணக்கு?

ஆகஸ்ட் மாதத்துக்கு அப்புறமாட்டினு ஒரு கேள்வி எல்லாருக்குமே இருக்கும். ஒரு அட்சய லக்னம் அப்படிங்கறது பத்து வருடம் இயங்கக்கூடிய லக்னம். ஒரு நட்சத்திர புள்ளி அப்படிங்கறது ஒரு வருடம் ஒரு மாதம் பத்து நாள்.

 இந்த ஹஸ்த நட்சத்திரம் மூன்றாம் பாதம் ஆரம்பிச்சு நான்கு ஐந்து மாதங்கள் அப்படிங்கிறது நடக்குது. இன்னும் எட்டு மாதங்கள் முடியும்போது அவங்களுக்கு இரண்டாம் திருமணத்திற்கு உண்டான வாய்ப்பு அப்படிங்கறது அந்த ஜாதகருக்கு இருக்கு. அந்த ஆரம்ப காலகட்டத்திலேயே ஆகஸ்ட் முடிஞ்சு. செப்டம்பர் அக்டோபருக்குள்ளேயே இந்த திருமணம் அப்படிங்கறது நடைபெற்றுவிடும். அப்படிங்கறது அவங்க கிட்ட சொன்னோம்.

 இவ்வளவு கரெக்டா சொல்ல முடியுமானா? முடியும். ஏன்னா ஒரு கால அளவுகள் கால நிர்ணயம் அப்படிங்கறது நம்ம அட்சய லக்ன பத்ததில ரொம்ப தெள்ள தெளிவாக சொல்ல முடியும்.

 சிலர் வருவாங்க. எனக்கு நேரம் தெரியாது. எங்க அம்மா சொன்னாங்க 3:30 மணியிலிருந்து 4:30 மணிக்குள்ள பிறந்திருக்கேன். அப்படிங்கற ஒரு கேள்வி சொல்லி இருப்பாங்க. என்னடா இது 3:30 மணிக்குள்ள 4:30 மணிங்கறது லக்னமே இரண்டு லக்னமாக சில காலங்கள்ல வரும்.

 எப்படி அந்த டைம் ஈவன்ஸ் எடுக்க முடியும்னா, இவங்க பிறந்த தேதி வச்சிட்டு நேரம் வச்சிட்டு, இப்ப திருமணமானவர்களாக இருந்தாங்க அப்படின்னா அவங்களோட திருமண தேதி. அதே மாதிரி அவங்களுக்கு குழந்தை பிறந்த தேதி வச்சு நம்ம டைம் கரெக்ஷன் அப்படிங்கறது ரொம்ப சிம்பிளா பண்ண முடியும்.

 அந்த அரை மணி நேரத்துல அவங்க பிறந்த நேரம் எது? இந்த காலகட்டத்தில அவங்களுக்கு ஒரு நிகழ்வுகள் நடக்குமா? தற்கால கட்டத்துக்கு அவங்களுக்கு என்ன நிகழ்ச்சி நடந்துட்டு இருக்கு? அவங்களுக்கு அழுத்தம் இருக்குமா? இவங்களுக்கு லாபம் நடந்ததா? அப்படிங்கறத ரொம்ப சிம்பிளா டைம் கரெக்ஷன் அப்படிங்கறது அவங்க ஜாதகத்துல செய்ய முடியுமான்னா செய்ய முடியும்.

 நிறைய ஜாதகங்கள் நாங்க பார்த்திருக்கோம். 4:15 ல இருந்து 4:30 குள்ள பொறந்திருக்காங்க அப்படிம்பாங்க. அது பாரம்பரிய முறைப்படி கொஞ்சம் இந்த ஆண் லக்னம் பெண் லக்னம் அப்படின்னு எடுப்பாங்க. அதுவுமே சில தடுமாற்றம் அப்படிங்கறது அங்க கொடுக்கும். ஆனா அட்சய லக்ன பத்ததில இதை செய்ய முடியுமான்னா? செய்ய முடியும். தற்கால கட்டத்துக்கு நீங்க என்ன முயற்சி பண்ணீங்க. அந்த முயற்சிகள் இந்த காலகட்டத்தில் நடந்ததா? இந்த காலகட்டத்தில் நிறைவு பெறுகிறதா? அல்லது கடந்த காலத்துல ஒரு வருஷத்துக்கு முன்னாடி நீங்க ஒரு செயல் செய்து இப்படி நடந்ததா? அப்படின்னு அவங்க கிட்ட கேட்கும் போது, ஆமாம். அப்படிங்கற பதில் வரும்போது நமக்கு அந்த டைம் கரெக்ஷன் பண்ண முடியும்.

 டைம் கரெக்ஷன் :

இப்போ எல்லா ஜாதகத்துலயுமே டைம் கரெக்ஷன் இருக்குமானா? இருக்காது. சில ஜாதகங்கள் அப்படிங்கறது ஒரு ரெண்டு , மூன்று நிமிடங்கள் வித்தியாசம் வரும். எல்லா ஜாதகத்திலேயும் இருக்கும். அதையும் ரொம்ப தெள்ள தெளிவாக சொல்ல முடியும்.

 ஏன்னா இந்த டைம் கரெக்ஷன் பண்ணா தான் உங்களுக்கு ஒரு நிகழ்வுகள் எப்போது நடக்கும். அது எப்போ நல்லபடியா நடக்கும். இப்போ ஒரு வருஷத்துக்கு அப்புறமா ஒரு நிகழ்ச்சி நடக்குது அப்படின்னா இப்பவே நாம போராட வேண்டாம். நான் சொன்னேன்ல முதல்ல இந்த ஹஸ்த நட்சத்திரம் மூன்றாம் பாதம் நடக்குது. இரண்டாம் திருமண அமைப்பிற்கு ஹஸ்த நட்சத்திரம் நாலாம் பாதம் தான் உகந்தது. ஒரு வருஷமா நான் பொண்ணு பார்க்கணும்கிறது கிடையாது. எனக்கு இந்த காலகட்டத்துக்கு அப்புறம்தான் இரண்டாம் திருமணத்திற்கு உண்டான வாய்ப்பு கிடைக்கும் போது, நான் தைரியமாக கூறலாம். அப்போ ஒரு வருஷம் அமைதியா இருந்துட்டு அதுக்கப்புறம் நான் செயல்படுவது என் மன நிம்மதி அப்படிங்கறது எனக்கு தரும். மகிழ்ச்சியும் தரும்.

 சில ஜாதகங்கள் பார்த்திருப்பீங்க. ரெண்டு வருஷமாவே கல்யாணத்துக்கு பாக்குறோம். அமைப்பே இல்லைம்பாங்க. அந்த ஜாதகத்திலயும் இதே மாதிரி நேர திருத்தம் அப்படிங்கறது இருக்கும். நேர திருத்தம் செய்து எடுத்து பார்க்கும்போது மூன்று வருட காலங்கள் கழித்து தான் அந்த திருமண அமைப்பு. இரண்டு வருட காலம் கழித்து தான் அந்த ஜாதகருக்கு திருமண அமைப்புங்கும் போது கொஞ்சம் அமைதியாக இருக்கலாம்.

 இப்போ பெற்றோர்கள் நிறைய பேர் பார்க்கிறோம். 19 வயசு 20 வயசுல இருந்து மேரேஜ்க்கு பாப்பாங்க. எதுவுமே சரி வரல சரி வரல சரி வரலம்பாங்க. 18 வயசுல ஒரு அலையன்ஸ் வந்திருக்கும். அதை பிக்ஸ் பண்ணாம அவங்க விட்டிருப்பாங்க. அதுக்கு அடுத்த காலங்கள் தகுந்த காலங்கள் அவங்களுக்கு இல்ல.

 அந்தப் 19, 20 இருக்காங்க திருமணம் செய்றவங்களும் இருக்காங்க. அதே மாதிரி இந்த 22 வயசுல பார்க்கக்கூடிய ஜாதகங்கள் எல்லாமே தகுந்த காலமா? இந்த ஜாதகருக்கு திருமண வாய்ப்பு தற்போது இருக்கிறதா? இது நடக்கக்கூடிய காலமா? அப்படிங்கறது நம்ம அட்சய லக்ன பத்ததில ரொம்ப தெள்ள தெளிவா சொல்ல முடியும்.

குருபலன் :

நீங்க சொல்லுவீங்க குருபலன் வந்துருச்சுன்னா திருமணம் நடந்திடும். அப்படிங்கற கேள்வி எல்லாருக்குமே இருக்கும். ஏன்னா எங்க பாட்டி அப்படி தான் சொல்லுவாங்க. குரு பலன் வந்துருச்சு திருமண யோகம் வந்துருச்சு அப்படின்னு சொல்லுவாங்க. ஆனால் உங்களுக்கு அந்த குரு பகவான் யாரு? அப்படிங்கற கேள்வி இருக்கும்.

துலாம் லக்னம் :

இதே இது உதாரணமாக துலாம் லக்னம். துலாம் லக்னத்திற்கு குரு யாருன்னா? ஆறாம் அதிபதி. ஆறாம் அதிபதி குருபகவானோட பார்வை அப்படிங்கறது நமக்கு பிரச்சனைக்குரிய பார்வையா இருக்கும். அவர் ஏழாம் இடத்தில் இருந்தார்னா திருமண உறவுகள்ள நிறைய பிரச்சனைகள் நடந்திருக்கு. கணவன் மனைவி பிரிவுக்கே அந்த குரு பகவான் தான் காரணம்.

 அப்போ இந்த குரு பார்வை உங்களுக்கு எப்படி இருக்கும்? அப்போ அது அங்கு நடைமுறைப்படுத்தப்படவில்லை. சரியாகல அப்படிங்கறது தான் நம்ம ALP யோட தனித்துவம். நாம பார்த்த ஜாதகங்கள்ல அது சரியாக இல்லை. அப்போ அதைவிட சிறந்ததாக இந்த ஹஸ்தம் நட்சத்திரம் நாலாம் பாதம் இரண்டாம் திருமணத்திற்கு இந்த ஜாதகருக்கு உகந்த காலமாக இருக்கும்னா காலமாக இருக்கும்.

பூரட்டாதி நட்சத்திரம் :

நிறைய ஜாதகங்கள் இப்படி சொல்லலாம், இந்தப் பூரட்டாதி நட்சத்திரம் நாலாம் பாதத்தில் நடக்கக்கூடிய திருமணம் எப்படி இருக்கும்னா? ஒரு அழுத்தத்தை தரக்கூடிய திருமணம். பூரட்டாதி இரண்டிலேயே திருமணம் அப்படிங்கறது நடக்கும். பூரட்டாதி மூன்றாம் பாதத்தில் திருமணம் நடக்குது அப்படின்னா அங்கேயும் ஒரு சில குடும்ப உறவுகள்ல பிரச்சனை அப்படிங்கறது கண்டிப்பாக இருக்குது.

 இவங்களுக்கு இந்த இரண்டாம் தார திருமணம் செய்வது ரொம்ப நல்லா இருக்கும். ஒரு பார்த்த பொண்ண கல்யாணம் வரைக்கும் போயி அந்த மேரேஜ் நின்னுடுச்சு. அந்த பொண்ண கல்யாணம் பண்ணலாமான்னா? பண்ணலாம்.

 அவங்களுக்கு அந்த திருமண அமைப்புங்கிறது நல்லா இருக்கும். அதே இது செகண்ட் மேரேஜ் அமைப்புங்கிறது சிலருக்கு கொடுக்கும். அதுவுமே ரொம்ப சிறப்பா இருக்கும்.

மிருகசீரிஷ நட்சத்திரம் மூன்றாம் பாதம் :

அதே மாதிரி இந்த மிருகசீரிஷ நட்சத்திரம் மூன்றாம் பாதம் போகும்போது இரண்டாம் திருமணத்திற்கு வாய்ப்பை கொடுக்குமான கண்டிப்பாக கொடுக்கும். மிருகசீரிஷம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் செவ்வாய் பகவான் ஏழில் இருக்கும் போது வரக்கூடிய திருமணங்கள் இரண்டாம் திருமணம் சார்ந்த விஷயங்கள் தடைப்பட்ட திருமணம். அது மறுபடியும் நடக்குமா? கேட்கக்கூடிய விஷயங்களா தான் ஒரு ஜாதகர் வருவார். அப்படிங்கறத நாம தெள்ளத்தெளிவாக அட்சய லக்ன பத்ததில சொல்ல முடியும்.

 உங்களுடைய அட்சய லக்னம் அப்படிங்கறது மிருகசீரிஷம் மூன்றாம் பாதமாக இருந்து, உங்கள் லக்னத்திற்கு செவ்வாய் ஏழாம் ஆம் இடத்தில் இருந்தார்னா, இரண்டாம் தாரம் சம்பந்தப்பட்ட திருமண கேள்வியாக தான் உங்களுக்கு வரும் அப்படிங்கறத நாங்க ஆணித்தரமாக சொல்லி இருக்கோம். அது அப்படித்தான் நடந்தது.  அட்சய லக்ன பத்ததில ரொம்ப தெள்ளத்தெளிவாக சொல்ல முடியும் அப்படிங்கிறது தான் உண்மை.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் :

சரி இந்த இரண்டாம் தார திருமண அமைப்பு நிறைய நடக்கலங்க. என்ன பண்றதுன்னு? ஒரு கேள்வி இருக்கும் எல்லாருக்குமே. இப்போ ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு போறது ரொம்ப சிறப்பா இருக்கும். இந்த பூரம் நட்சத்திரம் போகும்போது திருமணம் நடக்கும். பூரம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் ,  நாலாம் பாதம் நிறைய திருமணங்கள் தடைபடுது. இரண்டாம் திருமணத்திற்கு அங்க காரணமாகவே அமையுது.

 சில ஜாதகங்கள் பிரச்சனைக்குரிய திருமணமாகவே இருக்கும். நீங்க என்ன பண்ணனும் அப்படின்னா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தரிசனம் செய்வது ரொம்ப நல்லா இருக்கும். அதே மாதிரி ஸ்ரீரங்கம் போயிட்டு ரங்கநாதர் தரிசனம் செய்வது ரொம்ப சிறப்பா இருக்கும்.

மருதமலை :

மிருகசீரிஷம் நட்சத்திரம் போறவங்க முருகனுக்கு மருதமலை சென்று தரிசனம் செய்வது ரொம்ப நல்லா இருக்கும். மருதமலைக்கு போங்க. முருகனை வழிபடுங்க. மிகச்சிறந்த பலனை கண்டிப்பாக கொடுக்கும் அப்படின்னு சொல்லலாம்.

 அதே மாதிரி கோவில்களில் கல்யாண உற்சவம் அப்படிங்கறது நடக்கும். சீனிவாச கல்யாணம் சீதா கல்யாணம் முருகர் கல்யாணம் வள்ளி தெய்வானை திருமண உற்சவம் அப்படிங்கறது நடக்கும். அந்த உற்சவத்தில் கலந்து கொண்டு அங்க கொடுக்கிற மாங்கல்ய சரடுகளை வாங்கி பத்திரமாக வைங்க. இந்த குறிப்பிட்ட நாட்கள்ல உங்களுக்கு திருமணம் யோகம் அப்படிங்கறது விரைவில் கைகூடும் அப்படின்னு சொல்லலாம்.

 இல்லங்க நாங்க இது எல்லாம் நாங்க செஞ்சு பார்த்துட்டோம் சரி வரல. டைரக்ட்டா பழனி போய்ட்டு வாங்க. ரொம்ப நல்லா இருக்கும். திருப்பரங்குன்றம் சென்று வாருங்கள் திருமண கோலம் விரைவில் வரும்னு சொல்லலாம். திருப்பரங்குன்றம் போயிட்டு வந்தீங்கன்னா ரொம்ப சிறப்பா இருக்கும். பழமுதிர்சோலை போயிட்டு வாங்க இன்னும் நல்லா இருக்கும்.

 ஏன்னா முருகனுடைய ஆறுபடை வீடுகள்ல இந்த திருப்பரங்குன்றம் திருமண கோலத்திற்கு உகந்த காலமாக இருக்கு. தடைபட்ட திருமணங்கள் , இரண்டாம் தார திருமணங்களுக்கு இந்த கோயிலுக்கு போயிட்டு வருவது ரொம்ப சிறந்த பலனை கொடுக்கும் அப்படின்னு சொல்லலாம்.

நன்றி.

இது போல் மீண்டும் ஒரு நிகழ்வில் சந்திக்கலாம்.

  - Dr. ஸ்ரீ குரு உமாவெங்கட்

  ( ALP ASTROLOGER )

www.alpastrology.com

ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656

Comments

Post a Comment