மனதுக்கு பிடித்த கணவனா இல்லை பெற்றோர்கள் பார்த்து வைக்கக்கூடிய திருமணமா? - ஸ்ரீ குரு உமா வெங்கட் ALP அஸ்ட்ராலஜர்.

 

வீடியோ லிங்க்https://youtu.be/J19Xf636UlI?si=XAJjhRmAztDqppO5 

வணக்கம். என் பெயர் உமாவெங்கட். நான் அட்சய லக்ன பத்ததி ஜோதிடர். எல்லா பெற்றோர்களுக்கும்  ஒரு கேள்வி இருக்கும். பெண்ணுடைய ஜாதகம் எடுத்ததும் நாங்களா மாப்பிள்ளை பார்க்கணுமா,  அவங்களே பாத்துட்டாங்களா அப்படிங்கற கேள்வி எல்லாருக்கும் இருக்கும். அது உங்களுடைய ஜாதகம் அந்த குழந்தையோட ஜாதகம் எடுக்கும் போதே அவங்களுக்கு புரிதல் அப்படிங்கறது ஏற்படும். அட்சய லக்ன பத்ததில ரொம்ப தெள்ளத்தெளிவா சொல்ல முடியும்.

 ஒரு ஜாதகம் வருது அப்படின்னா அந்த வரன் அந்த பெண்ணிற்கு வரக்கூடிய மணமகன் (கணவன்) அப்படிங்கறது மனதுக்கு பிடித்த கணவனா இல்லை பெற்றோர்கள் பார்த்து வைக்கக்கூடிய திருமணமா? அப்படிங்கறத நம்மளால அது சொல்ல முடியும். அட்சய லக்ன பத்ததி சாப்ட்வேர்ல போட்டீங்கன்னா உங்களுக்கு தெரியும். www.alpastrology.com

கன்னி லக்னம் :

இப்போ உதாரணம் சொல்லணும் அப்படின்னா கன்னியா லக்னம், அட்சய லக்னம் போகும்போது அங்கு 9 நட்சத்திர பாதங்கள். அங்க ஹஸ்த நட்சத்திரம் இயங்கும்போது ஒருத்தருக்கு திருமணம் வாய்ப்பு அப்படிங்கிறது இருந்தது அப்படின்னா அவங்களுக்கு மனதுக்கு பிடித்த திருமணம் அப்படிங்கறது நடக்கும்.

 எதிர்பாராத திருமணம். அம்மா , அப்பா பார்க்கவே வேண்டாம். இப்போதைக்கு வேண்டாம்னு நினைப்பாங்க. ஆனா அவங்களுக்கு சடனா மேரேஜ் அதுவும் அவங்களுக்கு மனசுக்கு பிடிச்ச  மாதிரியே வரன் அப்படிங்கறது அமையும். ஹஸ்த நட்சத்திரம் நான்காம் பாதம் நடக்கும் போதும், ஹஸ்த நட்சத்திரம் ஒன்றாம் பாதம் நடக்கும் போதும் இந்த அமைப்பை கண்டிப்பாக கொடுக்கும் அப்படின்னு சொல்லலாம்.

 பெற்றோர்கள் ரொம்ப தேடுவாங்க. அங்க இங்க அங்கனு தேடுவாங்க. ஆனா கிடையாதுங்க. வரன் எங்க இருக்கு அப்படின்னா, உங்க பெண்ணிடமும், பையனிடம்   கேட்டா போதும் அவங்களே சொல்லுவாங்க அப்படிங்கிறது தான் உண்மை.

 இது எப்படி நீங்க தெள்ளத்தெளிவா சொல்ல முடியும்?

 இது மாதிரி நிறைய ஜாதகங்கள் பார்த்து இருக்கீங்களா என்று கேள்வி இருக்குதானா கண்டிப்பாக பார்த்திருக்கோம். அட்சய லக்ன பத்ததில ரொம்ப தெள்ளத்தெளிவா சொல்ல முடியும்.

 ஒன்று அந்த குழந்தைகளுக்கு மனதுக்குப் பிடித்த காதல் திருமணமாக நடக்க வாய்ப்பு. இல்லை என்றால் அவர்களுக்கு உறவுகள்ல திருமணம். ஒரு தாய் மாமாவோ அத்தையோ ஒரு பையன கொண்டு வந்து திடீர்னு ஒரு திடீர்  திருமணம் அப்படிங்கிறது செய்றதுக்கு உண்டான வாய்ப்பு அப்படிங்கறது கண்டிப்பாக நடக்கும்.

 தனுசு லக்னம் :

 இந்த தனுசு லக்னம் அட்சய லக்னமாக போகும்போது, அதுவும் மூல நட்சத்திரம் ஒன்றாம் பாதம் போகுது அவங்களுக்கு திருமணத்திற்கு வாய்ப்பு இருக்குதானா அதிகமாக இருக்குது. இவர்களுக்கு திடீர்னு ஏற்படக்கூடிய ஒரு திருமணம் மனமகிழ்ச்சிக்கு உண்டான திருமணம் அப்படிங்கறது இவங்க வாழ்க்கையில இருக்கு.

மூல நட்சத்திரம் நான்காம் பாதம் :

அதே மாதிரி மூல நட்சத்திரம் நான்காம் பாதம் இப்ப திருமணத்திற்கு வாய்ப்பானு கேட்டீங்கன்னா கடந்த ஒரு வருஷத்துக்கு முன்னாடி லவ் மேரேஜ் ஆன ஜாதகம் எல்லாம் எடுத்து பாருங்க.

 மூல நட்சத்திரம் மூன்றாம் பாதம்,  நான்காம் பாதம் நடந்த எல்லாருக்குமே ஒரு திடீர் திருமணம் காதல் திருமணம் அப்படிங்கிறது நடந்திருக்கும். இப்போ அவங்களோட அட்சய லக்னம் தனுசு லக்னமாகவும். மூல நட்சத்திரம் மூன்று,  நான்கு செல்லக்கூடிய காலங்கள் இவங்களுக்கு ஒரு திடீர் திருமணமாக நடக்கிறதுக்கு வாய்ப்புகள் நிறைய இருந்திருக்கு. நிறைய பேருக்கு நடந்திருக்கு. நாங்களும் சொல்லி இருக்கோம்.

 திடீர் திருமணத்திற்கு என்ன அமைப்பு :

 அட்சய லக்ன பத்ததில எடுத்த உடனே சொல்ல முடியும் திடீர் திருமணத்திற்கு என்ன அமைப்பு கிரக அமைப்பு என்ன அப்படிங்கிறது. அதே மாதிரி சிலருக்கு இந்த பூரட்டாதி நட்சத்திரம் போகும்போது அவங்க மனசுக்கு பிடிச்ச திருமணம் அப்படிங்கறது நடக்கும். ஒரு தடவை பார்த்து வேண்டாம் என்று சொல்லி, மறுபடியும் அதே பையன திருமணம் பண்ண கிரகங்கள் அப்படிங்கறது இருக்கு ஜாதகம் அப்படிங்கிறது இருக்கு. அதையும் நாங்க சொல்லிருக்கோம்.

 என்னங்க இத நீங்க இப்படியே அடுக்கிக்கிட்டே போறீங்க. இதெல்லாம் எப்படி சாத்தியத்தை அப்படின்னு கேக்குறீங்களா? பார்த்த ஜாதகங்கள் பெற்றோர்களிடம் கூறிய ஜாதகங்கள் மட்டுமே இங்கு உதாரணமாக சொல்றேன்.

 கும்ப லக்னம் :

 ஏன்னா ஒருத்தவங்களுக்கு கும்ப லக்னம் அட்சய லக்னமாக போகும்போது அவங்களுக்கும் இதே ஒரு திருமண அமைப்பு அப்படிங்கிறது இருக்கும். அவங்க கிட்ட சொல்லி இருக்கோம்.

 ரெண்டு மூணு வருஷமாவே பாக்குறோம். அந்த லக்னம் ஆரம்பிச்சு கும்ப லக்னம் ஆரம்பிச்சு இரண்டு வருடமாக வரன் பார்க்கிறோம். அங்க நல்ல நிலையில் இல்ல. அப்ப இந்த சதய நட்சத்திரம் எப்ப ஆரம்பிக்குதோ அவர்களுக்கு லவ் மேரேஜ் அப்படிங்கிறது கண்டிப்பா நடக்கும். அதுவும் ஒரு திடீர் திருமணம். நீங்க நினைச்சே பார்க்க மாட்டீங்க. மூணு வருஷமா தேடிட்டு இருக்கோம் நடக்கல. ஆனா இப்ப என்னமோ இந்த மூணு மாசத்துல நடந்த ஒரு திருமணமா இருக்கும். பார்த்தோம் பழகினோம், பேசினோம் , மேரேஜ் பண்ணோம். இதுதான் அவங்களோட அமைப்பாகவே இருக்கும்.

 இப்படியெல்லாம் நடக்குமான்னா? கண்டிப்பா நடக்கும். அவங்களுக்கு அந்த மாதிரி அமைப்பு அவங்க ஜாதகத்துல இருக்கும். இந்த மாதிரி திடீர் திருமணமானவங்க. காதல் திருமணம் பண்ணவங்க. அவங்களோட ஜாதகத்துல எடுத்து பாருங்க இதே மாதிரி அமைப்பு அப்படிங்கிறது தான் இருக்கும்.

 ரொம்ப அருமையாக அட்சய லக்ன பத்ததில ஒரு திருமணத்தை எளிமையாக, நீங்க கேட்கலாம் வரனை எங்க இருந்து எடுக்கலாம்? இப்ப காதல் திருமணத்துக்கு சொல்லியாச்சு. இப்போ நார்மல் மேரேஜ்ங்கறது எப்படி நடக்கும்? யார் மூலமா நடக்கும்? அப்படின்னு சொல்ல முடியுமா? சொல்ல முடியும்.

 அவங்களுடைய கிரக அமைப்பு வைத்து அவங்களுடைய ஜாதகங்கள் அவங்க அட்சய லக்னத்திற்கு ஏழாம் பாவக அதிபதி எங்க இருக்காங்க. அந்த அதிபதி எங்கிருந்து அந்த வரனை தரப்போறாங்க.

வரன்கள் :

சிலருக்கு சொல்லுவோம் கன்னியா லக்னம் போகும்போது இவங்களுக்கு புரோக்கர்களின் வழியாக நம்ம கம்யூனிகேஷன் பேஸ்ல தேடக்கூடிய வரன்கள் அப்படிங்கறது அவங்களுக்கு சரி ஆகாது. அப்ப அவங்க அது வழி திருமணம் பார்க்கலாமான்னு கூடாது அப்படின்னு சொல்லலாம். அதே மாதிரி மேஷ லக்னம் அட்சய லக்னமாக போகும்போது இவர்களுக்கும் இதே மாதிரி அமைப்புன்னு சொல்லலாம். மேரேஜ்க்கு இதெல்லாம் கொடுப்பாங்க. அப்போ அவங்களுக்கு அது மாதிரி திருமணம் அமைப்பு இருக்குதானா கண்டிப்பா இருக்காது.

 இவங்களுக்கு ஒரு சடன் மேரேஜ். நம்ம எங்கேயாவது போவோம். பார்ப்போம் பேசுவோம்.அவங்க சொல்லுவாங்க பையன் இருக்காங்க. இவங்க சொல்லுவாங்க வரன் இருக்குன்னு. அப்ப அந்த மாதிரி அமைப்பு அவங்க ஜாதகத்துல இருக்கும். இன்னும் ஈஸியா நான் ரெண்டு வருஷமா அங்க குடுத்துட்டு இருக்கேன். என்னோட பணம் செலவு. ஒரு ஜாதகம் கூட வரல. மறுபடியும் சொல்றேன் நீங்க கொடுக்கக்கூடிய ஜாதகங்கள் நீங்க அந்த இடத்துல கொடுக்கக்கூடிய ஜாதகங்கள் கரெக்டாக உங்களுக்கு சஷ்டாஷ்டகமாக தான் இருக்கும். www.alpastrologyorg

 ஒரு ஜாதகமும் பொருந்தாது. நிறைய ஜாதகம் நாங்களும் தொடர்பு படுத்தி பார்த்திருக்கோம். வரக்கூடிய ஜாதகங்கள் அந்த இடத்தில் பொருந்தாது. அந்த இடம்தான் பிராப்ளமான அது கிடையாது. உங்களுக்கு அந்த இடத்துல இருந்து வரன் அமைய கூடிய வாய்ப்பு இல்லை அப்படிங்கிறது தான் உண்மை.

 அப்போ ஒரு ஜாதகத்திற்கு வரன் எந்த இடத்தில் இருந்து தேடலாம். அவங்களுக்கு எவ்ளோ எளிமையாக கல்யாணம் நடக்கும். எந்த காலகட்டத்தில் நடக்கும். ஒரு நட்சத்திரப் புள்ளிங்கறது 1வருடம் 1மாதம் 10 நாள். இந்த1 வருடம் 1மாசம் 10 நாள்ல எனக்கு திருமணத்திற்கான அமைப்பு இருக்குதானு கேட்கக்கூடிய ஜாதகங்கள் இருக்குதானா கண்டிப்பாக இருக்குது. அதுவும் இந்த மாதத்தில் இது நடக்கக்கூடிய வாய்ப்பு இருக்குன்னு சொல்லி இருக்கோம். அது நிறைய திருமணங்கள் அப்படி நடந்து இருக்கு. மீண்டும் பார்ப்போம். அட்சய லக்ன பத்ததி முறையில் நன்றி.

ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656

Comments