தர்ப்பணம் கொடுக்காவிட்டால் குடும்ப பிரச்சினை வரும். ALP அஸ்ட்ராலஜர் டாக்டர் ஸ்ரீ குரு உமாவெங்கட்.

வீடியோ லிங்க்https://youtu.be/oar8GHjd3G0?si=AmSngCHztHqfj7md

வணக்கம். என் பெயர் உமாவெங்கட். நான் அட்சய லக்ன பத்ததி ஜோதிடர். ஒரு நண்பர் வந்து கேள்வி கேட்டாங்க. எங்களுக்கு வந்து பித்ரு அனுகூலம் முன்னோர்கள் அனுகூலம் இருக்குமா? இருக்குதா? என்னோட ஜாதகத்துல அப்படிங்கற கேள்வி வந்தது.

ஐந்தாம் பாவகம் :

பாத்தீங்கன்னா அவங்களுடைய பிறந்த லக்னத்திலிருந்து அவங்களோட லக்னம் அப்படிங்கறது ஐந்தாம் பாவகத்தில் இயங்குது. அப்போ ஐந்தாம் பாவகம் சார்ந்த கேள்விகள். பூர்வ புண்ணிய அனுகூலம் பித்ரு அவர்களுடைய கேள்விகளாக அவங்களுக்கு இருந்தது.

 ஆமா உங்களுக்கு அதுல சின்ன குறைபாடுகள் இருக்குது அப்படிங்கற மாதிரி சொன்னோம். அவங்களுடைய லக்னம் பாத்தீங்கன்னா என்ன லக்னம் அப்படின்னா சிம்ம லக்னம். இப்போ அவங்களுடைய அட்சய லக்னம் அப்படிங்கறது சிம்ம லக்னம். பிறந்த லக்னம் மேஷ லக்னம். மேஷ லக்னத்திற்கு ஐந்தாம் அதிபதின்னு சொல்லக்கூடியது சூரியன். அவர் நல்லா இருக்காரானா நல்லா இருக்கார்.

 தற்போது அவருக்கு லக்னம் என்ன லக்னம் அப்படின்னா சிம்ம லக்னம். சிம்ம லக்னத்திற்கு எப்படி இருக்குது? ஐந்தாம் இடம்னு பாத்தீங்கன்னா ஐந்துக்கும் எட்டுக்கும் அதிபதி குரு பகவான்.

 பித்ரு அனுகூலம் இருக்குது. பூர்வ புண்ணிய அனுகூலம் இருக்குதானா? இல்ல.

 அப்போ உங்களுடைய முதல் கேள்வி குடும்பத்தில பிரச்சினைகள் இருக்கும் அப்படின்னு கேட்டேன். ஆமானாங்க.

 குலதெய்வமே தெரியாது குலதெய்வம் கோயிலுக்கு நீங்க போகக்கூடிய தன்மை இருக்காது ஆமாங்க அப்படின்னாங்க. அதே மாதிரி இந்த குடும்பத்தில நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள் ஒன்னு போல கலந்துக்குவாங்களானா கலந்துக்க மாட்டாங்க.

 இன்க்ளூடிங் நல்லதாக இருக்கட்டும். ஏதாவது ஒரு அசுபமாக இருக்கட்டும். எல்லாருமே கலந்துப்பாங்களானா அவங்களுக்குள்ள பிரச்சினைகள் அப்படிங்கறது இருக்கத்தான் செய்யுது.

 இதுக்கு என்ன குறைபாடு?சரி இதோட வெளிப்பாடுகள் எப்படி எல்லாம் இருக்கலாம் பாத்தீங்கன்னா, குழந்தைகள் பற்றி உங்களுக்கு அதிகமான கவலைகள் அழுத்தங்கள் இருக்கும்னு சொன்னோம். ஆமாங்க அப்படித்தான் இருக்கு.

 ஒரு குழந்தைக்கு வந்து உடல்நிலை சரியில்ல. அதனால அவங்கள பத்தி எண்ணங்கள் கவலைகள் எங்களுக்கு அதிகமாகவே இருக்குன்னு சொன்னாங்க. அப்ப வருமானம் எப்படி இருக்கு அப்படின்னு கேள்வி கேட்டேன். வருமானமும் தடை. வருமானம் போய் லாக் ஆயிருக்கு. யாருகிட்டயோ பணம் கொடுத்து பணத்தை இழந்தவங்க அப்படின்னு அவங்க குடும்பத்துல இருந்தாங்க. அவங்களே இருந்தாங்க. அப்ப அங்க வருமானமும் அங்க தடை இருந்தது.

 மகிழ்ச்சி இருந்தாலுமே அது சந்தோஷமாக அனுபவிக்க கூடிய ஒரு தன்மை அப்படிங்கிறது ஜாதகருக்கு இல்லை.

 சொத்து நல்லா இருக்குதான்னு கேட்டீங்களானா, சொத்துலையும் பிரச்சனைகள் அவங்களுக்கு அதிகமாக இருந்தது அப்படின்னு சொன்னாங்க. எனக்கு கிடைக்க வேண்டிய லாபம் அப்படிங்கிறது என் கைக்கு வரல. அது எங்கேயோ முடங்கி இருக்கு. எனக்கு வந்து டாக்குமெண்ட் இஸ்யூஸ் இருக்கு. தொழில்ல பிரச்சனைகள் இருக்கு. இன்வெஸ்ட்மென்ட் போட்டு எனக்கு திருப்பி அது வரவே இல்ல.

பித்ரு அனுகூலம் :

எங்க வந்த கேள்விப் பாருங்க. அவங்க கேட்டது ஒரே ஒரு கேள்வி. எனக்கு பித்ரு அனுகூலம் இருக்குதான்னு ஒரு கேள்வி. நம்ம அட்சய லக்ன பத்ததில அவங்களுடைய ஜாதகம் பார்த்த உடனே இது சம்பந்தமான தொடர்புகள்.

 ஏன் அப்படின்னா என்னுடைய மூலாதாரம். என்னுடைய பூர்வ புண்ணியம். என்னுடைய லக்னமே எனக்கு உணர்த்துது. நான் முதல்ல சொன்னேன் என்னோட லக்னம் ஐந்தாம் பாவத்தில் இருந்தது நான் பிறந்ததிலிருந்து ஐந்தாம் பாவத்தில் என்னுடைய லக்னம் இயங்கிட்டு இருக்குங்க எனக்கு பூர்வ புண்ணியம் சார்ந்த குழந்தைகள் சார்ந்த கேள்வியாக இருக்கும்.

 இந்த ஜாதகர் கேட்க வந்த கேள்வியும் இதுவாக தான் இருந்தது. அப்ப அவங்களுக்கு நல்ல நிலையில இல்ல. இது எப்ப சரியாகும்னு ஒரு கேள்வி.

 முதல்ல இந்த பித்ரு காரியம் பண்றது நிறைய தடைப்பட்டு போயிருக்கு. முன்னோர்கள் நீர்த்தார் கடன் பண்றது சரியா இல்ல. சகோதர வழி உறவுகள் கரெக்டா இல்லை. அப்போ இதெல்லாம் நீங்க சரி பண்ணுங்க.

 முதல்ல எங்க தடைபட்டதோ அதை சரி பண்ணுங்க. முன்னோர்களுக்கு பித்ரு காரியம் தர்ப்பணம் அப்படிங்கறது அதிகமாக கொடுங்கள். ரொம்ப நாளா கொடுக்கலங்க. நான் என்ன சரி பண்றதுனு ஒரு கேள்வி அவர்களுக்கு இருந்தது.

ராமேஸ்வரம் :

ராமேஸ்வரம் சென்று வாருங்கள். ராமேஸ்வரம் போயிட்டு திலக ஹோமம் அப்படின்றது பண்ணுங்க. எல்லா பித்ருக்களையும் வேண்டிட்டு அவங்களுக்காக ஹோமம் அப்படிங்கறது பண்ணி, நீ தொடர்ந்து செய்வதற்கான முயற்சிகளை பண்ணுங்க. யார் வராங்களோ அவங்கள கூப்பிடுங்க. இல்லனா நீங்க கண்டிப்பாக போங்க. போய் செஞ்சுட்டு வாங்க அப்படின்னு சொன்னோம்.

அனந்த பத்மநாப சுவாமி கோயில் :

அதே மாதிரி திருவனந்தபுரத்துல, உங்க எல்லாருக்கும் தெரியும். அனந்த பத்மநாப சுவாமி கோயில். அங்க பரசுராமர் கோயில் அப்படிங்கறது இருக்குது. திருவள்ளா அப்படிங்கற இடத்தில பரசுராமர் கோவில் இருக்கு. அங்க போயிட்டு திலக ஹோமம் அப்படிங்கறது பண்ணிட்டு. முன்னோர்கள் எல்லாரும் வேண்டிட்டு ஒரு ஹோமம் பண்ணி அவங்களுக்கு தர்ப்பணம் கொடுக்கிறது அப்படிங்கறது ரொம்ப ரொம்ப விசேஷம்.

 எனக்கு மூன்று ஜெனரேஷன்னா என்னுடைய முன்னோர்களுக்கு பலி தர்ப்ப கொடுக்கவே இல்ல. அவங்கள என்னால ஒண்ணுமே திருப்தி பண்ணவே முடியல. ஆனா என் குடும்பத்தில் பிரச்சனை இருக்குது.

 குழந்தைகளுக்கு கல்வி நிலை சரியில்ல. சில குழந்தைகள் வந்து காதல் திருமணத்தினால் அடுத்த வேற்று மத திருமணம் அப்படிங்கிறது நடக்குது. இதுக்கு எல்லாமே இந்த பூர்வ புண்ணியம் அப்படிங்கறது காரணங்க. நம்மளுடைய தலைமுறையை சரியாக கடைபிடித்து வராத காரணம் கூட நம்ம ஜாதகத்துல பார்க்க முடியுமானா இருக்கும்.

 அந்நிய மொழி நண்பர்கள் நம்மளுடைய குடும்பத்தில வந்திருப்பாங்களா  வந்திருப்பாங்க. அதற்குமே இங்கு ரீசன் அப்படிங்கறது சொல்ல முடியும். அப்ப இதுக்கெல்லாம் பரிகாரம் என்ன அப்படின்னா திருவனந்தபுரத்தில் திருவள்ளம் அப்படிங்கற இடத்தில பரசுராமர் கோவில் இருக்குது. அங்க போயிட்டு திரு தர்ப்பணம் பலி தர்ப்பணம் அப்படிங்கறத கொடுத்து வந்தீங்கன்னா ரொம்ப சிறப்பா இருக்கும்.

 நீங்க அந்த கோயிலுக்கு போனீங்கன்னா காலம் வர 5 மணியிலிருந்து மதியம் 12 மணி வரைக்கும். கோயிலை சுற்றி அனைத்து நண்பர்களும் உட்கார்ந்து அவர்களுடைய முன்னோர்கள் கடன் நீர்த்தார் கடன் அப்படிங்கறது கொடுப்பாங்க.

 அந்த இடத்துக்கு போனாலே மோட்சம் நம்ம திருவண்ணாமலை நினைச்சாலே மோட்சம் சொல்லுவோம்ல. அந்த மாதிரி பித்ருக்களுக்காக அங்க போயிட்டு ஒரு தர்ப்பணம் பண்ணிட்டு வருவது அவ்வளவு சிறந்த பலனை கொடுக்கும். இது பெரிய மாற்றத்தை கொடுத்து இருக்கானா கொடுத்து இருக்கு.

 பத்து வருஷத்துக்கு முன்னாடி ராமேஸ்வரத்தில் செய்த நண்பர்கள். அங்கிருந்து திருவள்ளால போயிட்டு அந்த பித்ரு தர்ப்பணம் பண்ணி நிறைய பிரச்சனைகள் இருந்தது அவங்க ஃபேமிலில. நான் பார்த்த ஜாதகத்தை நான் சொல்றேன்.

 பத்து வருஷத்துக்கு முன்னாடி அவங்க குடும்பத்துல நடந்த நிகழ்வுகள், திடீர் ஆக்சிடெண்ட் நடக்கும். குழந்தைகளுக்கு ஒரு சந்தோஷமான சூழ்நிலை அப்படிங்கறது இருக்காது. குழந்தைகள் திருமணம் அப்படிங்கறது அங்க தடைப்பட்டது. வர்ற வரன் தட்டி தட்டி போகுது. ஏன் இது எல்லாம் நடக்குது அப்படின்னு அவங்க ஜாதகத்தை எடுத்து ஆராய்ச்சி பண்ணும்போது, எனக்கு வலிக்கணும் அப்படின்னா நான் என்ன செய்வேன்? என் குழந்தைக்கு தான் வலியை கொடுப்பேன்.

 அப்போ என்னுடைய முன்னோர்களை சந்தோஷப்படுத்தினால் என் குழந்தை அப்படிங்கிறது நல்லா இருக்கும். அப்ப இங்க என்ன குறை இருக்குதோ இதுக்கு மேல உள்ளவங்க யாரு? அவங்கள திருப்தி படுத்துங்கள். உங்க முன்னோர் நீர்த்தார் கடன் மூலமாக உங்க குழந்தைகளுக்கு நடக்க வேண்டிய சுப நிகழ்வுகள் அங்க தானாகவே நடக்கும்.

 அப்ப பித்ரு தர்ப்பணம் அப்படிங்கறது மிகப் பெரியது. நான் சொன்னது ஒரு லக்னம் சிம்ம லக்னத்திற்கு மட்டுமே. இதே கும்ப லக்னத்திற்கு சம்மதப்படுமானா கண்டிப்பாக கும்ப லக்னத்திற்கு இதே மாதிரி பிரச்சனை அப்படிங்கறது இருக்கும். கடக லக்னத்திற்குமானா? கடக லக்னத்திற்கு இருக்குங்க.

கடக லக்னம் :

அட்சய லக்னம் கடக லக்னமா இருக்குது அப்படின்னா குலதெய்வ வழிபாடு தொடர்ந்து பண்ணுவீங்க முன்னோர்கள் கடன் கரெக்ட்டா பண்ணுவீங்களா? கிடையாது. அமாவாசை அன்னைக்கு தான் நீங்க தர்ப்பணம் கொடுக்கணும்னு போனீங்கன்னா அங்க என்னைக்காவது ஒரு பிரச்சனை வரும். ஒன்னும் பணம் கொடுக்கிறதுல போகுறதுல வர்றதுல ஏதாவது ஒரு பிரச்சனை கொடுத்துட்டே இருக்கும். நீங்க ஜாதகத்தை எடுத்துப் பாருங்க. சரிங்க அதெல்லாம் பண்ணல.

 ஒரு ஆளுக்கு அன்னைக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து பாருங்க. ரொம்ப சிறப்பா இருக்கும். தொடர்ந்து இதை பண்ணிட்டு வாங்க. அமாவாசை அன்னைக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள். இரண்டு பேருக்கு நீரும் உணவும் வாங்கிக் கொடுப்பது ரொம்ப சிறப்பு.

 அது நீங்க கோவில்ல உள்ளவங்களுக்கு கொடுத்தாலும் சரி. உங்களுக்கு யார் பசிச்சுருக்காங்களோ அவங்களுக்கு கொண்டு குடுங்க. அது மிக சிறந்த பலனை அன்னைக்கு உங்களுக்கு கொடுக்கும். தொடர்ந்து அது செய்து வரும் போது நிறைய பிரச்சனைகள் உங்க வாழ்க்கையில் இருந்து கண்டிப்பாக மாறுபாடு அப்படின்னு இருக்கும்.

 கடக லக்னம் சொன்னேன். கடக லக்னம் என்ன பண்ணும் அப்படின்னா இந்த பித்ரு தர்ப்பணம் செய்யாமல் விட்டவர்கள். குலதெய்வ வழிபாடு செய்யமா விட்டவங்களுக்கு என்ன செய்யும்? கணவன் மனைவிக்குள்ள பிரச்சனை ஏற்படுத்தும். ஒன்று குழந்தை பிறக்கும். குழந்தை பிறந்து பிரியக்கூடிய தன்மை இருக்கும். இல்ல குழந்தை பிறக்காமலே இந்த ஜாதகருக்கு ஒரு பிரிவு அப்படிங்கிறத கொடுக்கும்.

 இல்லையே எங்களுக்கு நல்லா தானே இருக்குன்னா நீங்க கண்டிப்பாக பிரச்சனைக்குரிய துறையில் வேலை பார்ப்பவர்களாக இருப்பீர்கள். உங்களுடைய லக்னம் அட்சய லக்னம் கடக லக்னமாக இருக்கும் நண்பர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் அப்படின்னு சொல்லிக்கிறேன். நன்றி. இதுபோல மீண்டும் சந்திக்கலாம்.

 - DR. ஸ்ரீ குரு உமாவெங்கட்

   (ALP ASTROLOGER )

ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656

WEBSITE: www.alpastrology.com

Comments