உங்கள் ஜாதகத்தில் இருக்கும் பிரச்சனையை நீங்களே சரி செய்யலாம். ALP அஸ்ட்ராலஜர் உமா வெங்கட்

 

வீடியோ லிங்க்https://youtu.be/nZo8K2iHCwE?si=uQ5AcuOw5esfh5ln 


ஆன்மீக தமிழ் நண்பர்களுக்கு வணக்கம்.

குரு பிரம்மா குரு விஷ்ணு

குரு தேவோ மகேஸ்வரஹ

குரு சாஷாத் பரப்பிரம்மா

  தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ.  

என்னுடைய குருநாதர்  திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு என்னுடைய முதற்கண் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

ஆன்மீக தமிழ் நண்பருக்கு வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் பெயர் உமாவெங்கட் நான் அட்சய லக்ன பத்ததி ஜோதிடர். நான் திருவனந்தபுரத்தில் இருக்கிறேன்.

 நிறைய நம்ம ஜோதிடங்கள் அப்படிங்கறது நிறைய பாத்துட்டு வாரோம். இப்ப நான் எத பத்தி பேச போறேனா அப்படின்னா அட்சய லக்ன பத்ததி அப்படிங்கற ஜோதிட முறை பத்தி நான் பேச போறேன். அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை பத்தி பார்க்க போறேன்அதென்ன அட்சய லக்ன பத்ததி, வளரும் லக்னம் பத்தி தான் நான் பேச போறேன்.

வளரும் லக்னம் :

இப்போ ஒரு குழந்தை பிறந்திருக்கு. அந்தக் குழந்தையோட ஜாதகம் பார்த்தீங்கன்னா பத்து வயசு வரைக்கும் ஒரு மனோபாவம் அப்படிங்கறது அந்த குழந்தைக்கு இருக்கும்.

10லிருந்து 20 வயசு வரைக்கும் அந்த குழந்தையோட தன்மை அப்படிங்கறது படிப்பு அதோட எதிர்கால வாழ்க்கை. அதாவது படிப்புல என்ன எதிர்காலத்தில படிக்கலாம் அப்படிங்கற ஒரு வாழ்க்கை முறை அந்த குழந்தைக்கு இருக்கும்.

20 – 30  வயது :

20 வயதிலிருந்து 30 வயது குள்ள அந்த குழந்தைக்கு தன்னுடைய எதிர்கால திட்டமிடுதல் அப்படிங்கிறது இருக்கும். லைக் அவங்க வந்து பிஎச்டி பண்ணலாமா? திருமண வாழ்க்கைக்காக? இல்ல எதிர்காலத்திற்கு என்னலாம் பண்ணனும் அப்படிங்கறது.

30 – 40 வயது :

30 வயதிலிருந்து 40 வயசுக்கு அந்த குழந்தையோட தன்மை எப்படி இருக்கும் அப்படின்னு பார்த்தீங்கன்னா அவங்களுக்கு குழந்தை குடும்பம் திருமணம் அப்படிங்கற வயசு பத்தி திரு சிந்தனைகள் ஓடிட்டு இருக்கும். இப்ப இவங்களுக்கு 30-லிருந்தே திருமணம் அப்படிங்கறது நிறைய நண்பர்களுக்கு நடக்கிறது அப்படித்தான் நடக்கணும். அப்படி இருந்தது அப்படின்னா அவங்களோட ஜாதகம் அப்படிங்கறது நன்றாகவே இருக்கிறது அப்படிங்கறது புரிஞ்சுக்கணும்.

 அப்போ படிநிறைகள் அப்படிங்கறது ஒன்னு இருக்கு. நம்ம 30 இருந்து 40 பார்த்தோம்

 40 ல் இருந்து 50 :

ருத்தவங்களோட குடும்பம் குலதெய்வம் பூர்வீகம் பற்றிய சிந்தனைகள் அப்படிங்கறது இருக்கும்.

50 லிருந்து 60 வயசு :

50 லிருந்து 60 வயசுக்குள்ள பாத்தீங்கன்னா அவங்களுடைய பிரார்த்தம். அவங்களுக்கு என்னென்ன கடமைகள் இருக்கு. அந்த கடமைகளை அவங்க சரியா செய்றாங்களா. எதிர்காலத்தில் அவர்கள் குழந்தைகளோட திட்டமிடுதல் பேரக்குழந்தைகள் அதைப்பற்றிய சிந்தனைகள். தன் நோய் பற்றி அப்படிங்கிற எண்ணம் இருக்கும். இதுதான் பத்திலிருந்து பிறந்த குழந்தைகள் இருந்து அறுபது வயசு வரைக்கும்.

 நம்மளுடைய வாழ்க்கையோட ஸ்ட்ரெச்சர், வடிவமைப்புன்னு சொல்லலாம். இதுதான் அட்சய லக்ன பத்ததி முறை.

வயதும், கேள்வியும் :

இப்போ ஒருத்தவங்க ஜாதகம் கேட்க வந்தாங்க அப்படின்னா 25 வயசுல இருந்து அதாவது 20 வயசிலிருந்து 30 வயசுக்குள்ள கேட்க வராங்கன்னா, அவங்களோட தேடுதல் அப்படிங்கறது என்னது தன்னுடைய எதிர்காலம் திட்டமிடுதல் திருமணம் முறை. திருமணம் எந்த காலகட்டத்தில் எப்ப நடக்கும். நான் என்ன திட்டமிட்டால் என்னுடைய எதிர்காலம் எப்படி நன்றாக இருக்கும். அதுதான் இந்த அட்சய லக்ன பத்ததி முறை. இது வந்து நம்மளுடைய குருநாதர் திரு.  பொதுவுடைமூர்த்தி சார் கண்டுபிடித்தது.

 இப்போ நிறைய ஜோதிடம் அப்படின்னு இருக்கு. இதுல மிகவும் எளிமையானது. இப்போ ஒரு பெரிய டார்கெட் என்னதுன்னா நான் என்ன கேள்வி கேட்க வந்திருக்கேன் உங்களுக்கு. என்னுடைய கேள்வி என்னது, நான் எனக்கு கேட்கக்கூடிய கேள்விக்கு பதில் எந்த காலத்தில் கிடைக்கும். இதுதான் நம்முடைய ஜாதகங்கறது. இதை நம்மளுடைய அட்சய லக்ன பத்ததி முறையில் ரொம்ப அழகா சொல்லலாம்

 இப்போ ஒருத்தவங்க 25 வயசுல ஜாதகம் பார்க்க வராங்க அப்படின்னா அவங்களுக்கு இந்த காலகட்டத்தில் திருமணத்திற்கு அப்படின்னா, திருமணம் எந்த ஊர்ல நடக்கும். வரன் எந்த இடத்தில் இருந்து அமையும். அதுதான் அவங்களுடைய கேள்வியா இருக்கும். அப்போ அந்த அமைப்பு அப்படிங்கறது நம்ம பிறந்த கால ஜாதகத்தை விட தற்போது அவங்களுடைய லக்னம், அட்சய லக்னத்தை வைத்து ரொம்ப அருமையா சொல்லலாம். இது ஒரு எளிமையான ஜோதிட முறை அப்படிங்கறது தான் குருஜி உடையது.

 என்னனா இப்போ ஒருத்தவங்க கடன் வாங்குறாங்க அப்படின்னா  அந்த கடன் வாங்குறதுக்கு உண்டான அமைப்பு நம்ம ஜாதகத்துல இருக்கும். எந்த காலகட்டத்தில் வாங்கணும் வாங்க கூடாதுன்னு இருக்கும். வாங்கினால் நம்ம அதை அடைப்போமா, நமக்கு பிரச்சனையா இருக்குமா, இது உங்களுக்கு வரக்கூடிய ஒரு பிரச்சனை.

 அப்போ திருமண நிகழ்வும் ஒரு பிரச்சனைக்குரிய காலமும் உங்களுக்கு எந்த காலகட்டத்தில் நடக்கும் அப்படிங்கறது உங்க ஜாதகத்தை வைத்து மிக எளிமையாக கூறுவது தான் ஏஎல்பி மெத்தட் அட்சய லக்ன பத்ததி முறை.

 நம்ம நிறைய முறையில ஜாதகம் பார்த்திருப்போம். இப்ப அட்சய லக்ன பத்ததி முறையில் வந்து ஒரு குலதெய்வம் அமைப்பு எப்படி இருக்கும் பாத்தீங்கன்னா ரொம்ப எளிமையா கண்டுபிடிக்கலாம்பிறந்த ஜாதகத்துல ஜாதகர்கள் குலதெய்வத்தை சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா இப்போது உங்களோட தாத்தா பாட்டியெல்லாம் நீங்க பார்த்திருப்பீங்க. பிறந்த காலத்துல ஒரு இடத்துலயும் தற்பொழுது ஒரு இடத்திலும் தான் நீங்க வாழ்றீங்க. அப்போ உங்களுடைய குலதெய்வ அமைப்புங்குறது இங்க மாறுபாடாக இருக்கும்.

 குலதெய்வத்தை கும்பிடுகிற முறைகள்.

இல்லையென்றால் விட்டு போன குலதெய்வம் அப்படின்னு சொல்லுவோம். அப்ப இந்த காலகட்டத்துல உங்களோட குலதெய்வம் அப்படிங்கிறது எப்படி இருக்கு. தொடர்ந்து நீங்க எப்படி வழிபடனும் அப்படிங்கறது நம்ம ALP முறையில ரொம்ப அழகாக கூறலாம்.

 குழந்தை பிறப்பு அப்படிங்கிறது நிறைய பேருக்கு ஒரு கேள்வியா இருக்கும். குழந்தை பிறப்புக்கு தகுந்த காலமா ஏன் எனக்கு குழந்தை பிறக்கல. அப்போ முதல் கேள்வியா சிலருக்கு அதுதான் இருக்கும். குழந்தை பிறப்பு பற்றி நிறைய ஜாதகங்கள் குழந்தை பிறப்பு இல்லை அப்படிங்கிறதும் பிறந்த குழந்தை அது ஒரு பிரச்சனை தரக்கூடிய ஒரு காலமாக இருக்கும். ஏன்னா அவங்க கொஞ்சம் சாஃப்ட்டா இருப்பாங்க. அந்த குழந்தை ரொம்ப சூப்பரா பிங்க் பண்ணக்கூடியது பேசக்கூடியது. இந்த பெற்றோர்களுக்கு அந்த குழந்தை மூலமாக ஒரு அழுத்தம் அப்படிங்கறது இருக்கு. சிலருக்கு ஆட்டிசம் சம்பந்தப்பட்ட குழந்தைகள் பிறப்பதற்கு காரணமா இருக்கு. இத நீங்க பாத்தீங்கன்னா நம்ம ALP ரொம்ப அழகா பதில் சொல்லலாம்னு சொல்லலாம்.

 இது மாதிரி நிறைய காரணங்கள் நிறைய காரியங்கள் ALP ரொம்ப அழகா பதில் சொல்லலாம். சரி இதற்கெல்லாம் என்ன தீர்வு என்று பார்த்தீங்கன்னா, இந்த காலகட்டத்துல உங்களுடைய ஜாதக அமைப்பிற்கு உங்க குலதெய்வம் நன்றாக இருக்கிறதா இல்ல அப்படின்னா உங்க இஷ்ட தெய்வம் அப்படின்னு சொல்லுவோம். முதல்ல ஒரு ஜாதகம் எடுத்தோம் அப்படின்னா நமக்கு ஐந்து தெய்வங்கள் வழிகாட்டும் அப்படின்னு. அப்போ குலதெய்வ  அமைப்பு முதன்மையானது. அந்தக் குலதெய்வ அமைப்பு அப்படிங்கறது சரியாக இருந்தது அப்படின்னா அதை நீங்கள் தொடர்ந்து வழிபடலாம். அதற்குண்டான வழிமுறைகள் அப்படிங்கறது சொல்லுவோம். ஏன்னா நம்ம கிரகங்கள் வைத்து தான் குலதெய்வங்களோட தன்மைகள். அவங்க நல்ல இடத்துல இருக்காங்களா? அவங்க வந்து பிரச்சனைக்குரிய இடத்தில இருக்காங்களா? அவர்களே பிரச்சனைக்குரியவர்களா என்பது தெரியணும்.

 இது என்ன நல்ல இடம் பிரச்சனைக்குரிய இடம். உதாரணமாக சொல்லப்போனா கன்னியா லக்னம். கன்னியா லக்னத்திற்கு குழந்தைகளை பொருத்தவரைக்கும் அதாவது குலதெய்வ அமைப்பு ஒரு பிரச்சனைக்குரிய தெய்வமாக தான் இருக்கும். எல்லாருக்குமே தெரிந்தது. அப்போ அந்த பிரச்சனைக்குரிய தெய்வத்தை வழிபடுவது எந்த முறையில் அப்படின்னு கேள்வி இருக்கும்.

கும்ப லக்னம்:

இப்போ இதே தான் கும்ப லக்னம். கும்ப லக்னத்தை பொருத்தவரைக்கும் குலதெய்வம் மறைந்து இருக்கக்கூடிய ஒரு தன்மையா தான் இருக்கும். அப்போ அந்த குலதெய்வம் மறைவை எப்படி சரி ஆக்கலாம். எந்த காலகட்டத்தில் அது நிவர்த்தி ஆகும். அப்படிங்கிறது நம்ம அட்சய லக்ன பத்ததி பார்க்க போறோம்

 ரொம்ப எளிமையா அத வந்து பரிகாரங்கள் மூலமாக மிக எளிமையாக நீங்க செய்யக்கூடிய பரிகாரங்கள். நீ உங்க வீட்ல இருந்து செய்யக்கூடிய பரிகாரங்கள் மூலமாக அதை நிவர்த்தி செய்யலாம். அப்படிங்கிறது இங்க சொல்லப்படுகிறது.

 சரி தொழில் அமைப்பை எப்படி இருக்குதுன்னு பார்த்தீங்கன்னா, தொழில் அமைப்பு அப்படிங்கிறது நீங்க அட்ச லக்ன பத்ததில யார் சொந்த தொழில் செய்யலாம்? செய்யக்கூடாது? அப்படி என்ற எண்ணம் இருக்கு. அப்ப சொந்த தொழில் செய்றவங்களுக்கு அவர்கள் ஜாதகம் ஒத்துப் போக வேண்டும்.

 இப்போ பொதுவாகவே அட்சய லக்ன பத்ததில உபய லக்கனங்களுக்கு தொழிலாகாது அப்படின்னு சொல்லிட்டோம்அப்போ இந்த உபய லக்னக்காரர்களுக்கு  தொழில் பண்ணிட்டு இருந்தாங்கன்னா என்ன மாதிரி தொடர்ந்து செய்யலாம் அப்படிங்கற ஒரு எண்ணம் இருக்கும்.

 கடந்த வருடம் வரை இவங்களுக்கு அட்சய லக்னம் ரிஷப லக்னமாக இருக்கும்போது தொழில் நன்றாகவே இருந்திருக்கும். இப்போ மிதுன லக்னமாக இருக்கும்போது அவர்களுக்கு சிறு அழுதத்தை கொடுக்கும். அப்ப தொடர்ந்து இவங்க தொழில்ல ஈடுபடணும் அப்படின்னா எந்த மாதிரி வழிமுறைகள் இவர்கள் பின்பற்ற வேண்டும் அப்படின்னு தெரிஞ்சுக்கணும்.

 இப்ப இன்வெஸ்ட்மென்ட் பண்ணலாமா கூடாதா இல்லைனா இந்த தொழிலை விட்டுட்டு அடுத்தவங்க கையில கொடுத்துட்டு தான் வேலைக்கு செல்வது சிறப்பா. அது அவர்கள் ஜாதகம் அங்க குறிக்காட்டும் னு சொல்லலாம். சிலருக்கு வருமானத்தில் ஏற்றத்தாழ்வுகள் அப்படின்னு இருக்கும். நிறைய நண்பர்கள் பாத்தீங்கன்னா, எவ்வளவு சம்பாதித்தாலும் வருமானம் இல்ல அப்படின்னு தான் சொல்லுவாங்க. இப்ப யாரு சொல்ல அப்படின்னா ரிஷப லக்னக்காரர்களுக்கு ரிஷப லக்னக்காரங்களுக்கு இந்த காலகட்டத்தில் வருமானம் அப்படிங்கறது அதிகமா வரும். எதிர்பாராத வருமானம் கூட கிடைக்கும். அதே மாதிரி எதிர்பாராத செலவுகள் அப்படிங்கறதும் இருக்கும்.

 தன் கையில திடீர் பணம் அப்படிங்கறது வந்தாலுமே திடீர்னு அது காணாமல் போகக்கூடிய காலகட்டம் எதுனா இந்த காலகட்டமாக இருக்கும். அப்ப இந்த வருமானத்தை எந்த மாதிரி அவர்கள் சேமிக்கலாம் அப்படிங்கறத நீங்க பார்த்தீங்க அப்படின்னா ரொம்ப அருமையான விளக்கம் உங்களுக்கு கிடைக்கும் இந்த மாதிரி உங்க வாழ்க்கை பயணம் அப்படிங்கறது எந்த வகையில் இருக்கு. அதை தொடர்ந்து நீங்க எப்படி பயணம், பண்ணா உங்க வாழ்க்கையில எந்த பிரச்சனையும் இல்லாமல் நீங்க போகலாம் அப்படிங்கிறதுதான் எளிமையான முறை அட்சய லக்ன பத்ததி முறைன்னு சொல்லலாம். இது வந்து பொதுவுடைமூர்த்தி சார் கண்டுபிடிச்சாங்க தன்னுடைய 15- 16 வருட ஆராய்ச்சி பின் நமக்கு கொடுத்தார் ஒரு ராசி கட்டத்தை வைத்து மட்டுமே நம்மளால ஜாதகம் பார்க்க முடியும் அப்படிங்கறதுதான் உண்மை நமக்கு நிறைய முறைகள் இருந்தாலும் இந்த முறை மிக எளிமையான முறை இதை எல்லோரும் தெரிந்து கொள்வது மிக சிறப்பாக இருக்கும் அப்படிங்கறது நான் சொல்லிக்கிறேன்.

அனைவருக்கும் நன்றி.

வாழ்த்துக்கள்.

ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656

WEBSITE: www.alpastrology.com

Comments