வீடியோ
லிங்க்: https://youtu.be/0zOFV__CB0Y?si=ijep5lg6JgEmAJCN
ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு ஜாதகம் பார்த்தோம். ஜாதகத்தோட அமைப்பு எப்படி இருந்ததுன்னா, கணவன் மனைவிக்குள்ள பிரச்சனை அப்படிங்கறது குறிக்காட்டினார்கள். ஆணுடைய அப்பா வந்து கேட்ட ஜாதகம். அவங்க ஜாதகத்துல பிரிவு அப்படிங்கிறது வந்துருச்சு. கணவன் மனைவியும் பிரிஞ்சு தான் இருக்காங்க. எப்ப சேர்வாங்க அப்படின்னு கேள்வி இருந்தது. இவங்களுக்கு லக்னம் மாற்றம் அப்படிங்கிறது நடக்குது. லக்னம் மாற்றத்துக்கு பிறகு இவங்க சேரக்கூடிய அமைப்பு இருக்குது. தற்காலம் கொஞ்சம் அமைதியா இருங்கன்னு சொன்னோம்.
பில்லி சூனியம் :
அடுத்து ஒரு கேள்வி கேட்டார். ஏதும்
பில்லி சூனியம், கெட்ட சக்தி ஏதாவது வச்சிருக்காங்களா யாராவது? இவங்க கணவன் மனைவி
பிரிந்து வாழனும்கிற தன்மை அந்த ஜாதகத்துல இருக்குதா? அந்த கெட்ட சக்தி
அவங்களுக்குள்ள யாராவது செய்வினை செஞ்சு வச்சிருக்காங்க கெட்ட சக்தி ஏதாவது
அவங்களுக்கு வந்துருச்சா? அவங்க ஜாதக அமைப்பு அப்படி குறி காட்டுதா? அப்படின்னு
கேள்வி கேட்டாங்க. எல்லாருக்குமே இந்த கேள்வி இருக்கும். ரொம்ப அருமையான ஒரு
கேள்வி. அந்த நண்பர் வந்து தன் மனசுல நினைச்சதை கேட்டிருக்காரு.
வணக்கம். அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் ஸ்ரீ குரு உமா வெங்கட். அவருடைய ஜாதக அமைப்பு அப்படி இருக்குதானா? அந்த கிரகங்கள் செய்யக்கூடிய வேலைகள் அப்படிங்கறது அது. இந்தப் பெண்ணோட ஜாதகத்துக்கும் சரி அந்த ஆணோட ஜாதகத்துக்கும் சரி. இந்த ஒரு எண்ணம் அந்த கிரகங்கள் சரியில்லாத நிலைமை.
நான் நல்லா இருக்கணும் :
முதல்ல ஜாதகம் நல்லா இருக்கணும்னா நான்
நல்லா இருக்கணும். நானே நல்லா இல்ல. நான் வந்து
அடுத்தவங்க சொல்றத கேட்கக்கூடிய தன்மையோ என் மனதிற்கோ என் உடலுக்கோ எதுவுமே
இல்லை அப்படிங்கிற பட்சத்துல, என்னோட நிலைகிறது அப்படித்தான் இருக்கும்.
அப்போ அவங்களுக்கு அந்த நிலைமை அப்படிங்கறது நம்ம சொல்லக்கூடியது லக்ன நட்சத்திர புள்ளி அவர்களை இயக்கக்கூடிய நட்சத்திர புள்ளின்னு சொல்லக்கூடிய கிரகம் சரியில்லாத நிலைமை.
திருப்தி அற்ற தன்மை :
லக்ன அதிபதின்னு சொல்லக்கூடிய கிரகம்
அதுவும் சரி இல்ல அப்போ இவங்களுக்குள்ள ஒரு திருப்தி அற்ற தன்மை
அப்படிங்கிறது இந்த ஜாதகர் வாழ்கிறார். அந்த பொண்ணுக்கும் பாத்தீங்கன்னா அதே
மாதிரி அமைப்பு. ரெண்டு பேருக்கும் இயக்கக்கூடிய தன்மை அப்படிங்கிறது இல்ல. அதே மாதிரி அவங்களுக்கு அழுத்தம்
தரக்கூடிய கிரகங்கள்னு சொல்லக்கூடியது நம்ம ஜாதகத்துல எல்லாமே பார்வைகளாலும்
கிரகத்திலும் ஒன்று சேர்ந்து இருக்கிறது கோச்சாரத்திலையும்.
அப்போ இவங்களுக்குள்ள இந்த பில்லி, சூனியம், ஏவல் இதெல்லாம் யாரோ பண்ணி வச்சிருக்காங்களோ அதனாலதான் இவங்க பிரிஞ்சாங்களாங்கிற தன்மை இருக்கும். சில காலங்கள் மட்டும் தான் இந்த தன்மை அவங்க ஜாதக அமைப்பின்படி. எனவே, நீங்க வருத்தப்பட வேண்டாம் அப்படி எதுவுமே இல்லை அப்படிங்கிறது அவங்க தந்தைக்கு சொன்னோம்.
அதே மாதிரி அவங்க வீட்ல ஒரு கெட்ட சக்தி இருக்குது. அது நடமாடுது அப்படிங்கிறாங்க. அவங்களுக்கு போகக்கூடியது ராகுவோட நட்சத்திர புள்ளி. துலாம் லக்னம் ராகுவோட நட்சத்திர புள்ளி சம்பந்தபடும்போது இந்த தேவையற்ற மனம் அப்படிங்கறது அவங்களுக்கு நிகழும்.
இது ஒரு மூணு மாசமா உங்களுக்கு இருக்குதான்னு? கேட்டோம் அவங்க கிட்ட. ஆமாங்க மேடம் மூணு மாசமா அப்படித்தான் இருக்குது எனக்கு அப்படிம்பாங்க.
ஆமாம் யாருமே இல்லாத நேரத்துல யாராட்டி நடமாட்றாங்க அப்படிங்கற பிரம்மையை ஒரு மாயையை உங்க மனசுல வந்து அது ஏற்படுத்தும் அப்படின்னா, ஆமாங்க அப்படித்தான் இருக்குது அப்படின்னாங்க.
இதற்கும் அவர்கள் ஜாதகமே காரணம். நீங்க சொல்ற மாதிரி கெட்ட சத்தியோ வேற எந்த இதுவுமே இல்லை அப்படிங்கறது தான் உண்மை. இருக்குதான்னு கேட்டீங்கண்ணா, முன்னாடி காலகட்டத்தில இருந்தது. இன்று அளவுல நாம பார்க்கிறோம் நிறைய ஜாதகங்கள் அப்படிங்கறது பாத்துட்டு இருக்கும். இந்த பில்லி சூனியம் வைக்கிறது ஏவல் வைக்கிறது சிலர் போன் பண்ணி கேட்பாங்க. எனக்கு அது சம்பந்தப்படுதாங்க? மேடம். அப்படி இல்லைங்க உங்க ஜாதக அமைப்புங்கறது கரெக்டா இல்ல.
தெய்வ அனுகூலம் அப்படிங்கறது உங்களுக்கு கம்மியா இருக்குது. நீங்க சாமி கோயிலுக்கு போய் எத்தனை நாள் ஆச்சுன்னு கேட்டேன்.
பல வருஷமா போகலைங்க சாமிய கும்பிடுற
எண்ணமே வரலங்க அப்படின்னாங்க.
குறைந்தபட்சம் ஒரு இரண்டு வருடம் ஆச்சா? அப்படின்னேன். ஆமாங்க கரெக்டா ரெண்டு வருஷம் ஆச்சுன்னாங்க அப்போ அந்த நட்சத்திர புள்ளி எப்ப மாற்றம் அடைந்ததோ இவர்களுக்கும் கடவுளுக்கும் உள்ள இடைவெளிங்கிறது குறைஞ்சிருச்சு.
குருவுடைய அனுக்கிரகம் :
குருவுடைய அனுக்கிரகம்னு சொல்லுவோம்
கடவுளோட அனுகிரகம் குறைய குறைய இந்த ஜாதகருக்கு இந்த தன்மையை ஏற்படுத்தும். இப்ப
நீங்க பார்த்தீங்கன்னா விருச்சிக லக்னம் அட்சய லக்னமாக செல்லக்கூடிய நண்பர்கள்
கடந்த ஒரு எட்டு மாதமாக அவங்க படாத பாடு பட்டுருப்பாங்க.
மனசு அளவுல அவங்களுக்கு என்னெல்லாம் எண்ணங்கள் வரக்கூடாதோ எல்லா எண்ணங்களும் வந்திருக்கும். அவங்க அவ்வளவு கஷ்டப்படுவாங்க. கடன் இருக்குதும்பாங்க நோய் இருக்குதும்பாங்க மனசு சரி இல்லை என்பார்கள். காதல் வந்தது சிலருக்குன்னா, அது பிரச்சினையாவே முடிஞ்சிடும். எதுவுமே கிடையாது. பிரச்சனையாவே இருக்காது. ஆனால் அவங்களுக்கு மட்டும் பிரச்சனையா இருக்கிற தன்மையை கொடுக்கும்.
இது வந்து இந்த கோச்சார கிரகங்களால் நகரக்கூடிய ஒரு அமைப்பாக தான் இருக்கும். நிறைய பேருக்கு அது உணர வைத்திருக்கும். உணர வைக்க முடியுமான்னா? முடியும்.
மகர லக்னம் :
நிறைய ஜாதகங்கள் நமக்கு தெளிவுபடுத்தி
இருக்கு. சிலர் வந்து மகர லக்னம் போறவங்களுக்கு வீடு கரெக்டா இருக்காதுங்கற ஒரு
தன்மை. எனக்கு வீடு அமைப்பாகவே இல்லை. வீடு வந்து எப்ப பாருங்க எனக்கு பிரச்சனை
பண்ணிட்டு இருக்கு. வீடு கரெக்டா தான் இருக்கும்.
இந்த வருஷம், இப்ப யாருக்கு மகர லக்னம் போகுதோ கடந்த ஆறு மாத காலமாக வீட்டில் பொருட்கள் உடையும். முதல்ல நான் சொன்னது மாதிரி. உணவுப்பொருட்கள் கெட்டுப் போயிடும்.
தானாக கிச்சன்ல ஏதாவது உடைஞ்சிட்டு இருக்கும். கிச்சன்ல டோர் மாற்றக்கூடிய தன்மை. கிச்சன்ல மூலையில அதிகமான வலை. எட்டுக்கால் வந்து வலை கட்டுவது அமைப்பு இருக்கும். ஒரு பொருளை வச்சு மறந்துருவோம். அது பங்கஸ் அப்படிங்கிறது அங்க உருவாகும். நடக்குதா இல்லையான்னு உங்க ஜாதகத்துல செக் பண்ணி பாருங்க.
உங்களுடைய லக்னம் மகர லக்னமாக இருந்து, தற்போது தான் மகர லக்னம் மாற்றமடைந்தது அப்படின்னா, மூன்று மாதக்காலம் உங்க வாழ்க்கையில உங்க வீட்ல ஏற்படக்கூடிய நிகழ்வு பாருங்க.
அப்போ உங்க வீட்ல ஏதாவது இருக்குதுன்னு என்னம்மா? கிடையாது. கோச்சார கிரகங்களால் நிகழக்கூடிய ஒரு அமைப்பாக தான் இருக்கும். எப்ப சேஞ்ச் ஆகும்ன்னா? நமக்கு அந்த காலம் அவங்க ஜாதகத்துல அழகா தெரியப்படுத்தும்.
உத்திராட நட்சத்திரம் :
ஏன்னா இவங்களுக்கு என்ன நட்சத்திர
புள்ளி போகுது அப்படிங்கற கேள்வி இருக்குது. இந்த லக்னம் ஆரம்பிச்சு அவங்களுக்கு
உத்திராட நட்சத்திரமாக இருந்தது அப்படின்னா, நம்ம என்ன சொன்னாலுமே அவங்களுக்கு
திருப்தி அப்படிங்கிறது ஏற்படாது. அப்போ நான் சரியா இருக்கேனா என் வீடு சரியா
இருக்குதான்னு கேட்டீங்கன்னா இவங்க ரெண்டு பேருமே சரியல்ல. நீங்க சொல்ற மாதிரி
கெட்ட சக்திங்கறது வீட்ல வந்துருச்சான்னா? அவங்களே சொல்லுவாங்க ஆமா ஆமா
வந்துருச்சு ரொம்ப நாளாச்சு அப்படிம்பாங்க. மூணு மாசமா அப்படித்தான் இருக்கு. ஏதோ
சரியில்லம்பாங்க. கிச்சன் போனா சமைக்க மாட்டாங்க. அவங்களுக்கு வயிறு சார்ந்த
உபாதைகள் ஏற்படுமான்னா? கண்டிப்பாக ஏற்படும்.
அவங்களுடைய இன்றைய ஜாதகநிலை அனுசரிச்சு கூற முடியுமானா? கண்டிப்பாக கூற முடியும் அப்படிங்கறதுதான் உண்மை. இதுபோல் மேலும் ஒரு ஜாதகத்தில் பார்க்கலாம். நன்றி.
- Dr. ஸ்ரீ குரு உமாவெங்கட்.( ALP ASTROLOGER )
ALP ASTROLOGY OFFICE: 9786556156 /9363035656
Comments
Post a Comment