சித்தர்கள் வழிபட்டால் வெற்றி படியில் ஏறும் ராசிகள் - சக்சஸ் சீக்ரெட்-ALP அஸ்ட்ராலஜர் Dr. ஸ்ரீ குரு சாந்திதேவி ராஜேஷ்குமார்.

 

full video link: https://youtu.be/unTRVtTt0jc?si=Fd086tKaEujWqo8a

ஜோதிடம் டிவி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். ALP அஸ்ட்ராலஜர் ALP ஜோதிட ஆசிரியர் Dr. சாந்திதேவி ராஜேஷ்குமார்.

 நம்ம இன்னைக்கு பார்க்க போவது  ரொம்ப முக்கியமான பதிவுகள். நிறைய பேர் சித்தர் வழிபாட்டில் ரொம்ப ஈடுபாட்டோட ரொம்ப டெடிகேஷன்னா இருக்காங்க. சரி சித்தர்கள் வழிபாடு எல்லாருமே வழிபடுவது நல்லதா அப்படின்னா நல்லது. கும்பிடலாம். இவங்கதான் கும்பிடணும் அவங்க தான் கும்பிடணும் அப்படிங்கற விதி விலக்கு இருக்குதானா கிடையாது. ஆனா யாருக்கு அவருடைய அனுகிரகம் அது சீக்கிரமாக கிடைக்கும் அப்படிங்கறது இருக்குது இல்லையா.

 அப்போ ஒரு அம்மாவிற்கு நாலு குழந்தைகள் இருந்தாலும், ஒரு குழந்தை கேட்டா மட்டும் உடனே எல்லாத்தையும் கொடுத்துடுவாங்க. அது ஏன் அப்படின்னா அந்த குழந்தைக்கும் அவங்களுக்கும் உள்ள வேவ் லென்த் ஒரே மாதிரி இருக்கும். அதனால அந்த குழந்தை அழுதா அவங்களால தாங்க முடியாது. இதே கொஞ்சம் அடுத்த குழந்தை அழுதாக்க கொஞ்ச நேரம் அழுகட்டும் அப்புறம் பாத்துக்கலாம் அப்படின்னு விடறாங்க. நம்மளே கண்ணால பார்க்கிறோம் இல்லையா. அதே மாதிரி ஒரு முக்கியத்துவம் அல்லது அந்த இம்பார்ட்டண்ட் எந்த ராசிக்காரர்களுக்கு உடனே ஈர்க்கும். எந்த ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் லேட் ஆகும். அப்படிங்கறது தான் நாம பார்க்கிறோம்.

சித்தர் அனுகிரகம்  :

இந்த சித்தர் வழிபாடு நம்ம பொதுவா நம்ம எல்லாம் வந்து, சித்தர்களை அவங்க நினைச்சா மட்டும் தான் அவங்களுடைய அனுகிரகமும் அல்லது அவங்களை தரிசிக்கக்கூடிய பாக்கியமோ நமக்கு கிடைக்கும். நம்மளா நினைச்சு எவ்வளவுதான் போனாலும் நிறைய பேருக்கு இது அனுபவமா கூட இருந்திருக்கும். ஒரு சித்தர் கோயில் இருக்கு போகலாம்னு போவாங்க. அங்க நடை சாத்திருப்பாங்க பாக்கவும் முடியாது. அங்க யாருமே இருக்க மாட்டாங்க.

அனுபவம் வாழ்க்கை மாறிடும் :

அப்போ இந்த மாதிரியான அனுபவங்கள் நிறைய இருந்திருக்கும். அதற்கான காரணம் என்ன அப்படின்னா அவங்களுக்கு அதற்கான வேலை இன்னும் வரல. ஒரு சிலர் அதைப்பற்றி எல்லாம் யோசிக்க மாட்டாங்க. தெரிஞ்சவர் ஒருத்தர் கூப்பிடுவாரு ஏப்பா பக்கத்துல ஒரு சித்தர் கோயில் இருக்கு. வாப்பா போயிட்டு வருவோம் அப்படியும் பாரு போயிட்டு வந்தா அவருக்கு நல்லது நடக்குதோ இல்லையோ, இவருக்கு உடம்பு எல்லாம் சிலிர்த்து போயிரும். அப்படியே புல்லரிக்கற  மாதிரி அப்படியே மயிர் கால்கள் எல்லாம் நட்டு நிக்கும். அவருக்கு அவ்வளவு உணர்ச்சி பெருக்குல கண்ணுல தண்ணி வரும்.  போயிட்டு வந்ததுல இருந்து இவருடைய வாழ்க்கை மாறிடும். அப்படி அந்த அனுபவம் உங்களுக்கும் இருக்குது இல்லையா. உங்களுக்கு இருந்தா கமெண்ட் பண்ணுங்க. அப்படி யாருக்கெல்லாம் அந்த சித்தர்களுடைய அனுகிரகமும் அருள் ஆசியும் கிடைக்க வேண்டும்னு இருக்கோ.

சித்தர்களை தேடி நீங்க போகாதீங்க :

அதெல்லாம் நிறைய நிகழ்வுகளை நம்ம அட்சய லக்ன பத்ததில தான் பலன்கள் பாத்துட்டு இருக்கோம். இதுல  பொதுவுடைமூர்த்தி சார் அடிக்கடி சொல்வார். சித்தர்களை தேடி நீங்க போகாதீங்க. காரணம் என்னன்னா, அவங்க நினைச்சா மட்டும் தான் அவங்களுடைய அனுக்கிரகமும் அவங்களுடைய அருளாசியும் நமக்கு கிடைக்கும். அவங்க தேவையான நேரத்துல தேவைப்படும்போது கண்டிப்பா நம்மள வந்து அவங்களே அப்ரோச் பண்ணி நமக்கு அருள் கொடுப்பாங்க.

 சரி இல்லைங்க நான் தேடி போறேன் அப்படின்னு நினைக்கிறீங்களா, யாருக்கு சீக்கிரம் அவருடைய அனுகிரகம் கிடைக்கும் அப்படின்னா 12 லக்னங்கள்ல அல்லது 12 ராசிகள்ல உங்களுக்கு எது நீங்க வச்சிக்கிறீங்களோ அத வச்சுக்கோ. நாங்க எத எடுத்துக்குவோம்னா அட்சய லக்னத்தை தான் எடுத்துக்குவோம்.

 அப்படி எந்த அட்சய லக்னத்திற்கு அந்த சித்தர்களின் அனுகிரகம் அருள் ஆசியும் விரைவாக உங்களுக்கு பலன் தரக்கூடியதாக அமையும் அப்படின்னா ரிஷபம் கடகம் சிம்மம் துலாம் மகரம் இந்த 5 ராசிகள். இதுல ஒவ்வொன்னா ஏன்? எதற்கு? எதனால?

ரிஷபம் :

ரிஷபத்திற்கு எங்க சித்தர்களோடு அருள் ஆசி சீக்கிரம் கிடைக்கும் அப்படின்னு சொல்றோம். பொதுவா சித்தர்கள் அப்படின்னா என்ன? மறைமுகமாக அவர்களுடைய நிகழ்வுகளை நமக்கு சுட்டிக்காட்டக் கூடியவர்கள் அப்படின்னு நாம எடுத்துக்கிறோம். அப்போ மறைபொருள் ஆனது சித்த தத்துவங்கிறதே மறைபொருளானது. எதையுமே நேரடியாகவோ வெளிப்படையாகவோ அவர்கள் கொடுத்திடவே மாட்டாங்க. மறைபொருளாக தான் ஒரு நிகழ்வை சொல்லி வைப்பாங்க. அப்போ அந்த மறை பொருளுக்கு அர்த்தத்தை தேடுவது அப்படிங்கறது ரொம்ப ரிஸ்க்கானது.

 அந்த மாதிரி ரிஷபத்திற்கு சித்தர்கள் நம்ம என்னவாக சொல்றோம். வழிகாட்டினு சொல்றோம். குருன்னு சொல்றோம். அப்ப அந்த குரு யாருக்கு நன்மைகளை தரக்கூடியவராக இருக்காங்க? அப்படின்னா இந்த ரிஷபத்திற்கு இந்த மறைந்த, அதாவது மறைமுகமாக செயல்படுகிற இந்த சித்தர்கள் யாருக்கு நன்மைகளை செய்வார்கள்? எந்த ராசிகளுக்கு? இந்த குரு யாருக்கெல்லாம் மறைவு ஸ்தானமாக இருக்கிறதோ அவங்க எல்லாம் சித்தர் வழிபாடு பண்ணலாம்.

 இப்ப லக்னமாக எடுத்துக்கிறோம் பாவகமாக எடுத்துக்கிறோம்னா, ரிஷபத்திற்கு குரு பகவான் எட்டாம் இடத்திற்கு அதிபதியாக வருகிறார். அதனால எட்டாம் இடம் என்பது மறைவு ஸ்தானம். எட்டாம் இடத்துக்கு குரு மறைவாக வருவதனால், மறைமுகமாக மறைந்து அவர்கள் சக்திகளை மறைத்துக்கொண்டு வாழ்கின்ற சித்தர்களை நீங்கள் வழிபாடு செய்தால் கை மேல பலன் கிடைக்குமானா? கிடைக்கும்.

லாபம் கிடைக்குமானா? கிடைக்கும்.

 சந்தோஷம் இருக்குமா? இருக்கும்.

பேரின்பத்திற்கான பாதை திறக்குமா? திறக்கும்.

கடகம் - கேட்காமலே எல்லாமே கிடைக்கும் :

கடகத்திற்கு சித்தர் ஆறாம் இடத்திற்கு அதிபதியாக குருபகவான் இருப்பார். அப்ப இந்த குரு பகவான் ஆறாம் இடத்திற்கு அதிபதி அப்படிங்கறதுனால, இவங்க அந்த மறைமுகமாக இருக்கக்கூடிய சித்தர் வழிபாடு செய்றாங்க அப்படினா இவங்களுக்கு ஒரு பாக்கியம் கிடைக்கும். இவங்க கேட்காமலே எல்லாமே கிடைக்கும். அப்ப அந்த ஒரு சூழ்நிலையை அந்த சித்த தத்துவம் அவங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.

சிம்மம்கடந்த கால புண்ணிய பலன் பிரதிபலிப்பு :

சிம்மத்திற்கு இந்த சித்தர் அப்படிங்கறது எங்க இருக்காரு? சிம்மத்திற்கு குரு பகவான் எட்டாம் இடத்திற்கு அதிபதியாக இருப்பார். அப்போ அங்க மறைமுகமாக மறைந்த மறைந்து வாழ்கின்ற தன்னுடைய சக்திகளை  மறைத்துக் கொண்டுள்ள மறைபொருளாக இருக்கின்ற சித்தர் வழிபாடு செயல்படுமானா? செயல்படும். இப்ப இதுனால அவங்களுக்கு பூர்வ புண்ணியத்தின் உடைய பலன்களை எடுத்துக் கொடுக்கப்படும். அவங்க கடந்த கால புண்ணிய பலன்களுடைய பிரதிபலிப்புகளை அவங்களால உணர முடியும். ஏதோ போன ஜென்மத்துல எனக்கும் அவங்களுக்கும் ஒரு தொடர்பு உண்டுன்னு சொல்லுவோம் பாருங்க. அந்த தொடர்புகளை நம்மளால பரிபூரணமாக அனுபவிக்க முடியும். அந்த மாதிரியான ஒரு சூழ்நிலையை கொடுக்கும்.

 துலாம்கடவுள் தரிசனம் போல்  :

துலாமிற்கு குரு ஆறாம் பாவகத்தின் அதிபதியாக வருவார். அப்போ ஆறு மறை பொருளை தேடக்கூடிய அமைப்பு. இவங்களுடைய கம்யூனிகேஷன். ஏதாவது ஒரு ஸ்பிரிச்சுவல் கனெக்டிவிட்டி அப்படிங்கறது அங்க மறைமுகமாக இவங்களுக்கு இங்கே இருக்கும். இவங்க வந்து குருவ மதிக்க மாட்டாங்க. இது அப்படி இது அப்படி அப்படின்னு சொல்லி சொல்லி அந்த காலகட்டத்துல குருவை தேட மாட்டாங்க. ஆனால் தேடாட்டினாலும் கூட அவர் வந்து இவங்களுக்கு இயக்குவாரானா? இயக்குவார்.

 அப்போ அவங்களுக்கு என்ன ஆகுது? அந்த குருவோட அனுக்கிரகம் பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுது. இவங்க திட்டினாலும் கூட, தெய்வ நிந்தனை செய்தாலும் கூட, அவங்களுக்கு அந்த குருவோட அனுக்கிரகம் கிடைக்குமானா? கிடைக்கும். திட்டத்திட்ட திண்டுக்கல் வைய வைய வைரக்கல்னு சொல்றது மாதிரி. அவங்களுக்கு அந்த அனுக்கிரகம் கிடைக்குமானா? கிடைக்கும். நம்ம எத்தனை ஒரு சினிமாவுல கூட பார்த்திருக்கோம். நீ எல்லாம் கடவுளா? அப்படி இப்படின்னு பேசுறவங்களுக்கு உடனே கடவுள் தரிசனம் கொடுத்துடுவாரு. விழுந்து விழுந்து உருகி உருகி கும்பிடுறவங்களுக்கு கொடுக்க மாட்டார்.

 நான் பக்தியா இருந்தேனே? இதனுடைய விளக்கம் வந்து, யார்ன்னு ஒரு பழைய படம் ஒன்னு. அந்தப் படத்துல அந்த குரு என்ன பண்ணுவாரு? ரொம்ப ஆத்மார்த்தமா இறைவழிபாடு செய்வார். ஆனால் அவருடைய சிஷ்யர் என்ன பண்ணுவாரு? அப்பதான் வெளியே போயிட்டு வருவாரு. வந்துட்டு அவர் ஒரு செயலை செய்வாரு. உடனே இறைவன் அவருக்கு காட்சி கொடுத்துடுவார். எனக்கு இறைவன் காட்சி கொடுத்துட்டாருன்னு குரு கிட்ட சொல்லுவாரு. குருக்கு கோபம் வந்துரும். நான் இவ்வளவு வருந்தி வருந்தி அழைக்கிற அவர் எனக்கு காட்சி கொடுக்காமல் உனக்கு காட்சி கொடுத்தாரா? அப்படின்னு சொல்லிட்டு, அவர் அதுல இருந்து நான் இனிமேல் கடவுளையே கும்பிட மாட்டேன். அப்படின்னு சொல்லி வேற பாதைக்கு திரும்பிடுவார்.

 இது ஒரு உதாரணத்திற்காக. ஏன்னா அப்படி மறுத்தால் கூட கடவுள் உங்களுக்கு காட்சி கொடுப்பாரு அப்படிங்கறதுக்கு ஒரு உதாரணம் இது.

மகரம் - முன்கூட்டியே உணரமுடியும்:

மகரத்திற்கு 12 ஆம் பாவகத்திற்கு அதிபதி ஆயிடுவார். நிறைய கனவுகள்ல சில காட்சிகள் தெரியுது. சில நிகழ்வுகள் எனக்கு வருவதை முன்கூட்டியே என்னால் உணர முடியுது. இதற்கெல்லாம் காரணம் யாரா இருக்கும்? ஏதோ ஒரு சித்தர் தொடர்பு. இன்னொரு நிகழ்வை நாம இங்க புரிஞ்சுக்கணும் நம்ம உடம்பில் நிறைய ஆத்மக்கள் வந்து வந்து போகும். இது நம்ம உடம்பு ஒரு உயிர் ஒரே ஒரு ஆத்மா. இந்த உயிர் ஆத்மாவிற்கு சாந்திதேவின் ஒரு பெயர் இருக்கு. அவ்வளவுதான் நமக்கு தெரியும். ஆனால் இந்த உடலுக்கு நம்ம அன்னியன் படம் பார்த்திருக்கோம் இல்லையா? அம்பியாக ரெமோவாக அந்நியனாக நிறைய பேய் பிடித்தவர்கள் அப்படின்னு தன்னிலை மறந்தவர்களை நாம் என்ன சொல்வோம்? ஏதோ ஒன்னு புகுந்துருச்சு ஆயிட்டு இருக்கு அப்படின்னு சொல்லுவோம்.

 அப்போ நம்ம உடம்புக்குள் வெவ்வேறு ஆத்மாக்கள் வந்து வந்து போகும். அது நல்ல ஆத்மாவா இருந்தா நமக்கு வெளிய தெரியாது. இல்ல கொஞ்சம் நெகட்டிவிட்டியா இருந்தாக்கா அது நமக்கு வெளிய காமிச்சு கொடுத்துடும் அவ்வளவுதான். அதுதான் நம்ம பேய் பிடிச்சிருக்கு அது பிடிச்சிருக்கு இது பிடிச்சிருக்கு. அமானுஷ்யமான நிகழ்வுகள் எல்லாம் சொல்றோம். அப்போ நம்ம உடம்புக்கும் அந்த ஆத்மாவுக்கும் தொடர்பு இல்லைன்னா  அது நம்மள டச் பண்ண கூட முடியாது. அப்போ அது டச் பண்ணுதுனா ஏதோ ஒரு தேவை ஏதோ ஒரு நிகழ்வு நம்ம மூலமாக அங்க பிரதிபலிக்கனும்னு இருக்கு. அதனால அந்த சூழ்நிலைகளை உருவாக்குது. இதையெல்லாம் சித்தர்கள் நமக்கு உணர்த்துவார்கள். அப்ப அந்த உணர்வுகளை நாம உணர்வு பூர்வமாக தான, சித்தரை ஆக கண்ணால பார்த்தேன் அப்படின்னா அது நிஜம். புற கண்ணுல அவங்கள பார்க்கவே முடியாது. அக கண்ணுல அவங்கள பார்க்க முடியும்.

 அப்போ அந்த மாதிரி சித்தர்கள் உடைய அனுகிரகம் கிடைக்கணும்னா இந்த 5ராசிகள் மானசீகமாக, ஏன்னா இவங்க கும்பிட மாட்டீங்க. ஆனா கும்பிட்டீங்கன்னா அதனுடைய பலன் கை மேல கிடைக்கும். அப்படிங்கறது தான் இந்த சித்தர்கள் வழிபாட்டால் சிறப்படைய கூடிய ராசிகளாக இந்த அஞ்சு பேர் இருக்கீங்க.

 அப்போ நீங்க மனதார நீங்க எங்களுக்கு காட்சி குடுங்க. அருளாசி குடுங்க அப்படின்னு வேண்டுங்க. அவர்களே முற்றும் துறந்தவர்கள். அவங்க கிட்ட போய் எனக்கு இதை குடுங்க அத குடுங்க அத பண்ணுங்க. பொருள் சாராமல் அருளை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டும்னு தான் அவங்க சித்தர்களாகவே ஆனாங்க. அவங்க கிட்ட போயி எனக்கு பொருளை கொடு உன்ன கொடு பணத்தை கொடு கடனை தீர்த்துவிடு அப்படினு சொல்லி வேண்றதெல்லாம் சிறப்புக்குரியது அல்ல.

 அவங்க அனுகிரகம் வேணும். அவங்க அனுகிரகம் இருந்துட்டாலே அவங்க நம்மளை வழிநடத்தி செல்வார்கள். அவர்கள் வழிநடத்தினாலே நமக்கு எல்லாமே நல்லதாகவே அமையும். 

 சரி இந்த சித்தர்களை நாம எப்படி வழிபடனும்?

யார் என்ன மாதிரி வழிபடனும்?

 ரிஷபம் :  அவங்க வெள்ளிக்கிழமை அன்னைக்கு சித்தர்களை வழிபடனும். ஏன்னா அவங்களோட ரிஷபத்துல அந்த சுக்கிரனுடைய இயக்கங்கள் தான் அவங்களுக்குள்ள அதிகமாக இயங்கிக் கொண்டிருக்கும். இந்த சுக்கிரனுடைய நாள் அன்னைக்கு அவங்க போய் அந்த சித்தரை வழிபடும்போது அவங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டு.

 கடகம் :  அப்படின்னா திங்கட்கிழமை அன்னைக்கு போய் சித்தரை வழிபாடு பண்ணுங்க. நம்ம ஒரு மைண்ட் செட் வச்சிருப்போம். சித்தரைக் கும்பிடுறதுனா வியாழக்கிழமை தான் அதற்கு உகந்த நாள் அப்படின்னு. அப்படிலாம் கிடையாது. குரு கடாட்சம் நமக்கு வியாழக்கிழமை மட்டும்  கிடைச்சா போதுமா? மத்த நாள்ல எல்லாம் நமக்கு வேண்டியதில்லையா? நம்ம வைப்ரேஷன் எந்த நாள்ல ஒரு விஷயத்தை ஈர்க்கும்கிற அமைப்பு இருக்குதோ அந்த நாள்ல தான் ஈர்க்கும்.

 அப்ப வெள்ளிக்கிழமை நீங்க போய் சித்தரை ரிஷபத்தில் பிறந்தவர்கள் வழிபடுவதும்.

கடகம் அப்படிங்கற லக்னம் இப்ப போய்கிட்டு இருக்குறவங்க போய் திங்கட்கிழமை வழிபடுவதும்.

சிம்மத்தில் உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமை போய் வழிபடுவதும்.

துலாம் லக்னமாக இருப்பவர்கள் வெள்ளிக்கிழமை வழிபடுவதும்.

 மகர லக்னமாக இருப்பவர்கள் சனிக்கிழமை வழிபடுவதும். ரொம்ப சிறப்பான பலன்களை தரும்.

 உங்கள் அருகாமையில எந்த சித்தர் இருக்காங்களோ, எந்த சித்தருடைய ஜீவசமாதி இருக்கிறதோ, அந்த சித்தர் ஆலயங்கள்ல நீங்க போய் நீங்கள் வழிபாடு செஞ்சி கலாம். குறிப்பா எல்லாரும் வழிபடக்கூடிய ஒரு சித்தர் கோயில், இந்த 5ராசிக்காரர்களும் வழிபடக்கூடிய சித்தர் கோயில் உண்டு. வாய்ப்பிருக்கிறவங்க இந்த சித்தர் கோயிலுக்கு போயிட்டு வாங்க.

 எங்க இருக்கு?

 திருச்சி துறையூர் வழித்தடத்தில ஏகாம்பரேஸ்வரர் கோயில்னு ஒன்னு உண்டு. திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் வழித்தடத்தில பகளவாடி அப்படின்னு சொல்லி ஒரு ஊர் இருக்கு. அந்த பகளவாடி பக்கத்துல காராம்பட்டி அப்படிங்கற இடத்தில, ஒரு தனியார் பொறியியல் கல்லூரி இருக்கு. அங்க இருந்து கொஞ்ச தூரம் தொலைவில, சத்திரம் அப்படிங்கற ஊர்ல வந்து இந்த ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மன் சமேதராக அங்க சிவபெருமான் காட்சி கொடுக்கிறார். அங்க வந்து சாரங்கநாதர் வழிபட்ட சிவலிங்கமும் அங்க இருக்கு. இந்த சாரங்கநாதர் அங்க  ஜீவசமாதி ஆனதாகவும்.

 அங்க  சித்தர்கள் 12, ரொம்ப விசேஷமான, இந்தக் கோவில் பத்தி தனிபதிவாகவே உங்களுக்கு பக்தியில் போடணும். ஏன்னா அந்த அளவுக்கு அந்தக் கோவிலினுடைய விசேஷங்கள் 1300 வருடங்கள் பழமையான ஒரு சிவாலயம். அந்த சித்தர் வந்து அன்னைக்கு அவ்ளோ விசேஷமாக போற்றப்படுகிறார். எல்லாருமே அந்த சித்தர் வழிபாடு பண்ணலாமா? அந்த ஏகாம்பரேஸ்வரர் வழிபடலாமா? வழிபடலாம். அந்த ஏகாம்பரஸ்வரர் அனுகிரகம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அப்படின்னு நாம பிரார்த்தனை பண்ணிக்குவோம். சித்தர் வழிபாட்டால் சிறப்பை காணும் இந்த 5 ராசிகளும் சித்தரை வழிபட்டு சிறப்பு பெற வேண்டும். அப்படின்னு பிரார்த்தனை பண்ணிக்குவோம்.

நன்றி.

  - Dr. ஸ்ரீ குரு சாந்திதேவி ராஜேஷ்குமார்.

 ( ALP ASTROLOGER )

ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656

Comments