வீடு வாங்கும் யோகம் யாருக்கு? ALP ASTROLOGY

வீடியோ லிங்க்https://youtu.be/ml53hMQ8CzM?si=jmrk0CgOKwTA-2hG

 வணக்கம்.என் பெயர் உமாவெங்கட். நான் அட்சய லக்ன பத்ததி ஜோதிடர்.

ஒரு ஜாதகர் கேட்டு வந்தாங்க. எனக்கு வீடு வாங்கக்கூடிய யோகம் இருக்குதா அப்படிங்கறது. எல்லாருக்குமே அந்த கேள்வி இருக்கும். வீடு வாங்கக்கூடிய யோகம் யாருக்கு தான் இல்லாதது. எனக்கு அந்த பாக்கியம் எப்ப கிடைக்கும் அப்படிங்கறது தான் ஒரு கேள்வி.

 சிலருக்கு வந்து இந்த பூர்வீக வீடு அப்படிங்கறது சிலருக்கு இருக்கும். அம்மாவோட வீடு பையனுக்கு இருக்கும். அதனால அவங்களுக்கு அந்த கேள்வி இருக்காது. ஆனாலுமே இன்னொரு வீடு வாங்கணும். இன்னொரு வீடுங்கிறது அவங்க பிளாட்டா வாங்கணும் அப்படிங்கிற தன்மை இருக்கும். எனக்கு ஒரு பிளாட் வாங்கணும். அப்போ அவங்களுக்கு அந்த கேள்வி இருக்குமான ஆனா இருக்கும். எந்த காலகட்டத்தில் அது நடக்கும் அப்படிங்கறது தான் அவங்க கேள்வியா இருக்கும். எந்த காலகட்டத்தில் அவங்களுக்கு அது நடக்கும் அப்படிங்கறத அவங்க ஜாதகத்தை வச்சு சொல்ல முடியும்.

வீடு மனை பாக்கியம் :

இப்ப ஒருத்தவங்களுக்கு அட்சய லக்னம் மகர லக்கினமாக இருக்குது அப்போ இவங்களுக்கு இந்த வீடு மனை பாக்கியம் இருக்குதானா கண்டிப்பாக இருக்குது. எப்போ ஆரம்பிக்கும் அப்படின்னா இந்த அவிட்ட நட்சத்திரம் சம்பந்தப்பட்ட காலங்களில் அம்மா மூலமாகவே வீடு வாங்கக்கூடிய யோகம் அப்படிங்கறத அவங்களுக்கு இருக்கு.

சிறந்த யோகம் :

அவிட்ட நட்சத்திரம் ஒன்றாம் பாதம், இரண்டாம் பாதம் இந்த ஜாதகருக்கு வீடு வாங்கக்கூடிய யோகம் ரொம்ப சிறந்த யோகம் அது அம்மாவே ஒரு நிலம் பார்த்து வாங்கி கொடுக்கக்கூடிய தன்மையும் லாபமாக வாங்கி கொடுக்க கூடிய தன்மையும் இந்த ஜாதகருக்கு அமையும் அப்படிங்கறது சொல்லலாம்.

 மீன லக்னம் :

சரி வேற எந்த லக்னக்காரர்களுக்கு இந்த அமைப்பு இருக்கு அப்படின்னு பாத்தீங்கன்னா மீன லக்னம். மீன லக்னத்தில் ரேவதி நட்சத்திரம் போகும்போது இந்த வீடு வாங்கக்கூடிய யோகம் இருக்குதானா கண்டிப்பாக இருக்குது. ரேவதி நட்சத்திரம் போகும்போது நாலாம் அதிபதி புதனாக வருவாரு வீட்டோட அமைப்பு அப்படிங்கறது ஜாதகரை தேடி வரும்.

 முதல்ல நான் சொன்னேன் அம்மாவோட வீடு இருக்கும் இவங்களுக்கு ஆனாலும் தனிப்பட்ட முறையில் வீடு வாங்கணும்னு எண்ணம் இருந்ததுனா அவங்க பிளாட்டாக வாங்கணும்னு நினைப்பாங்க. அதுவும் இவங்களுக்கு வாங்கக்கூடிய வீடுங்கிறது கார்னர் சைடு பிளாட்டினு சொல்லுவோம். அந்த மாதிரி அமைப்பு அப்படிங்கறதுதான் இவங்களுக்கு அமையும்.

 நிறைய ஜாதகங்கள் அப்படிங்கறது அட்சய லக்ன பத்ததில பார்த்திருக்கோம் சொல்லி இருக்கோம். அவங்களுடைய வீட்டோட அமைப்பு அப்படித்தான் இருக்கும். அதோட சிறப்பு அவங்க வீட்டுக்கு பக்கத்துல என்ன இருக்கும் யார் இருப்பாங்க. அப்படிங்கறதையும் தெள்ள தெளிவாக சொல்லி அவங்களுக்கு சொல்லி இருக்கோம் கண்டிப்பாக அது நடந்து இருக்கு.

ரிஷப லக்னம் :

அடுத்த எந்த லக்னம்னு பாத்தீங்கன்னா ரிஷப லக்னம். ரிஷப லக்னக்காரங்க அந்த லக்ன மாற்றம் அடைந்த உடனே வீடு வாங்கணும் அப்படிங்கிற எண்ணம் தான் அதிகமா இருக்கும் வாங்கலாமா அப்படின்னா, கண்டிப்பாக வாங்கலாம். அதற்கு உண்டான அமைப்பு இருக்குதானா அமைப்பு இருக்குது. தாராளமாக வாங்கலாம் அப்படின்னு சொல்லுவோம் அது எந்த காலகட்டத்தில் வாங்கலாம் அப்படிங்கற தான் கேள்வி இந்த ரிஷப லக்னம் கார்த்திகை நட்சத்திரம் இரண்டாம் பாதத்துல அமைப்புங்கிறது கொஞ்சம் கம்மியா இருக்கும். கார்த்திகை 3,கார்த்திகை 4  ரொம்ப சிறப்பா இருக்கும் உங்க வீட்டினுடைய அமைப்பு.

 அவங்க வீடு எப்படி இருக்கும்னா ரொம்ப பிரம்மாண்டமா இருக்கணும்னு நினைப்பாங்க. யாருமே அமையாத மாதிரி கொஞ்சம் ரிச்சா கொஞ்சம் ஒயிட் அண்ட் ஒயிட் போட்டுண்டு. இல்லன்னா நான் வாங்குற வீடுங்கிறது அடுத்தவங்க வீட விட கொஞ்சம் மேலாக. பார்க்கும் கண்ணை பறிக்கும் அளவு. ஒரு பிரம்மாண்டமாக இருக்கக்கூடிய ஒரு அமைப்பாக இந்த ஜாதகருக்கு இந்த வீடு வாங்க கூடிய அமைப்பு அப்படிங்கிறது ஏற்படும்.

 அதற்குண்டான முயற்சிகள் எந்த காலகட்டத்தில் ஏற்படும்?

எப்போ அதை வாங்க முயற்சி பண்ணுவாங்க எப்ப வாங்கி முடிப்பாங்கநீங்க நண்பர்கள் இப்ப ஏதாவது வீடு வாங்கி இருந்திங்கனா இந்த நட்சத்திர புள்ளிகள் உங்களுக்கு சம்பந்தபடுதா நீங்க செக் பண்ணி பாருங்க கண்டிப்பாக சம்பந்தப்படும்.

 இந்த ரிஷப லக்னம் கார்த்திகை நட்சத்திரம் பாதம் போகும் போது வீட்டோட அமைப்பு ரொம்ப சூப்பரா இருக்கும். தாராளமாக நீங்க வீடு வாங்கக்கூடிய யோகம் உங்களுக்கு இருக்குது.

நான் புது வீடு வாங்கலாமா?

என்னங்க எனக்கு வீட்டில பிரச்சனை அதிகமாகவே இருக்கு வீட்டோட அமைப்புங்கிறது இல்லவே இல்ல அப்படிங்கற ஒரு கேள்வி வரும். ஏன் பாத்தீங்கன்னா உங்களுக்கு பழைய வீடா புதிய வீடான்னு ஒரு அமைப்பு இருக்கும். இந்த தனுசு லக்னம் போகும்போது இந்தக் கேள்வி எல்லாருக்குமே வரும். நான் புது வீடு வாங்கலாமா? பழைய வீடு வாங்கலாமா ன்னு? ஏன்னா புது வீடு வரும் ஆனால் வாங்கக்கூடிய தன்மை அப்படிங்கிறது இருக்காது பழைய வீடு முன்னாடி வந்து நிற்கும்.

 இவங்க என்ன பண்ணுவாங்க புது வீட்டோட அமைப்பு அப்படிங்கிற ஒரு தன்மையில தான் இருப்பாங்க. அப்ப நீங்க சொல்லலாம் இந்த காலகட்டத்துல உங்களுக்கு பழைய வீட்டிற்கு உண்டான யோகம் இருக்குது. அந்த மாதிரி வீடோ, நிலமோ, பூர்வீக நிலம் ஏதாவது இருக்கும் பழைய வீடுங்கிறது இருக்கும். அந்தம் ஒரு அமைப்பு இருந்ததுனா பாருங்க உங்களுக்கு நல்லா இருக்கும்னு சொல்லுவோம். கண்டிப்பாக அவங்களுக்கு அந்த அமைப்பு அப்படிங்கிறது இருக்கும்.

 அதை மாத்திட்டு அவங்களுக்கு புதிய வீடு வாங்கக்கூடிய ஒரு யோகமும் அவங்க கையில கண்டிப்பாக வரும் அப்படிங்கறதும் சொல்லலாம் அப்போ ஒரு ஜாதகத்துல வீடு வாங்கக்கூடிய காலங்கள் சொல்ல முடியுமான கண்டிப்பாக சொல்ல முடியும்.

 அது எப்படி இருக்கும் அந்த வீட்டோட தன்மைகள் எப்படி இருக்கணும்? யார் மூலமாக வாங்குவாங்க? எந்த இடத்துல வாங்குவாங்க சிலர் கேப்பீங்களா எங்க வீட்டினுடைய திசை கிழக்கா மேற்கா வடக்கா தெற்கானு.

கடக லக்னம் :

இப்போ கடக லக்னம் போச்சுன்னா ஒருத்தருக்கு வீட்டோட அமைப்புங்கிறது வடக்கு பாகத்தில் இருக்கும். அவங்களோட நிலம் அப்படிங்கிறது வடக்கு மனை பார்த்த நிலமாக தான் இருக்கும் அவங்க அப்படித்தான் வாங்குவாங்க அதுவும் ரொம்ப பெருசு அதுவும் இந்த ரயில்வே கிராஸ் எலக்ட்ரிக் இது அது பக்கத்துல தான் அவங்க வீட்டோட அமைப்பு இருக்கும் அதோட சிறப்பு அவங்க வீட்டுக்கு பக்கத்துல எதாவது ஒரு ஸ்கூல் இருக்கும் ஆபீஸ் இருக்கும் கோவில் சம்பந்தப்பட்ட இடங்கள் அப்படிங்கறது அங்க சம்பந்தபடும். இது நடந்திருக்கானா இது நடந்திருக்கு. ரிலேட்டடா வீடு  வாங்கினவங்களுடைய தன்மைகள் அப்படிங்கறது அப்படி தான் இருக்கும்.

 எந்தெந்த வீடு எந்த மாதிரி மனை அமைப்பு இது எனக்கு வாக்கா இருக்குமா என்று சொல்ல முடியுமானா சொல்ல முடியும். நம்மளுடைய அட்சய லக்ன பத்ததி முறையில அப்படிங்கிறது சொல்லலாம்.

திருச்செந்தூர் முருகன் :

வீடு வாங்கல வீடு அமைப்பு வந்து கொஞ்சம் தட்டியே போகுது. எனக்கு மனசுக்கு பிடிச்ச வீடு எதுன்னு எனக்கு கரெக்ட்டா செலக்சன் பண்ண முடியல. அப்படிங்கற கேள்வி எல்லாருக்குமே இருக்கும். இந்தக் கேள்விக்கு விடை என்னென்னா? நீங்க உங்க ஊருக்கோ உங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு முருகன் கோயில் இருக்குது. இல்ல அப்படின்னா முதல்ல சொன்னேன் நான் திருச்செந்தூர் முருகன் பழனி ஆறுபடை வீடுகள்ல ஒரு கோயில் அப்படிங்கறது தரிசனம் பண்ணிட்டு வாங்க. வீட்டோட அமைப்பு உங்களுக்கு நல்லாவே இருக்கும்.

 பழனி கோயிலுக்கு போயிட்டு வாங்க. படி ஏறி போயிட்டு வாங்க. படி ஏறி போயிட்டு வரும்போது, சிலர் வந்து வின்ச்ல போவாங்க வயசானவங்க. படியேறி போய் தரிசனம் பண்ணிட்டு வா. உங்க வீட்டினுடைய அமைப்பு அப்படிங்கிறது ரொம்ப எளிமையா உங்க கண்ணுல காமிச்சு கொடுப்பார் அந்த முருகர்.

 ஏன்னா அவர் வீட்டை விட்டு ஓடிப்போய் எங்க உக்காந்தாருன்னா பழனி மலையில தான் உட்கார்ந்தார். அப்ப யாருக்கு வீடு வாங்கணும்னு எண்ணம் இருக்கோ அந்த பழனி முருகனை போய் தரிசனம் செய்து விட்டு வாருங்கள். வீட்டோட அமைப்புங்கிறது உங்களுக்கு கண் முன்னாடி கண்டிப்பாக காமிச்சி தரும் அப்படிங்கிறத சொல்லலாம்.

நன்றி.

 - ஸ்ரீ குரு உமாவெங்கட்.

     ( ALP ASTROLOGER )

ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656

Comments