வீடியோலிங்க்
: https://youtu.be/VZ1GWjfrMjI?si=WdZaf8Tr8zwB4f9P
வணக்கம். என் பெயர் உமாவெங்கட். நான் அட்சய லக்ன பத்ததி ஜோதிடர். எல்லாருக்குமே ஒரு கேள்வி இருக்கும். கடன் சார்ந்த பிரச்சினைகள் எந்த ஜாதகருக்கு வரும், எந்த ஜாதகருக்கு அது பாதிப்பு இருக்காது. என்னோட லக்னம் என்னன்னு தெரிஞ்சுட்டா எனக்கு கடன் வரக்கூடிய காலங்கள் என்ன அப்படிங்கறது என்னால சொல்ல முடியும்.
மேஷ லக்னம் :
உதாரணம் சொல்லப்போனால் இப்போ ஒருத்தவங்களுக்கு அட்சய லக்னம் அப்படிங்கறது மேஷ லக்னமாக இருந்தது. ஏன் மேஷ லக்னம் சொல்றேன்னா எல்லாருக்கும் தெரியும் மேஷ லக்னம் அப்படிங்கறது, அதனால சொல்றேன். மேஷ லக்னமாக இருந்தால் அவர்களுக்கு கடன் இருக்குமானால் அவங்களுக்கு ரொம்ப லாங் டைம் கடன் அப்படிங்கறது இருந்துட்டே இருக்கும். இவங்களே இவங்க பிரச்சனைக்கு காரணம்னு சொல்லலாம்.
இவங்களுக்கு ஒரு முடிவு எடுக்க முடியாத ஒரு தன்மை. கடன் சுமை அதிகம். ஒரு தீராத பிரச்சனை அப்படிங்கிறது அவங்களுக்கு இருக்கும். கடனுக்கு பொதுவாக நாம் ஆறாம் பாவகம் பார்ப்போம். ஆறாம் பாவகம் கடன் இருக்குதானா அது வளர்ந்த கடனா அது தீரக்கூடிய கடனா அப்படின்றது சொல்ல முடியும்.
சிலர் என்ன பண்ணுவாங்க ரெண்டு மூணு இடத்துல கடன் வாங்கிட்டு அந்த கடன் அடிக்கிறதுக்காக இன்னொரு பெரிய கடன் அப்படின்னு வாங்குவாங்க. இதுதான் அவங்களுக்கு லாங் டைம் ஆக போகும். அவங்களால அந்த பிரஷர்ல இருந்து மீளவே முடியாது. இது மேஷ லக்னக்காரர்களுக்கு இருக்குமான இருக்கும்.
கன்னி லக்னம் :
அதே மாதிரி இன்னொரு லக்னம் யாருன்னு பாத்தீங்கன்னா கன்னி லக்னம். இவங்களுக்கு கடன் அமைப்பு இருக்குதானா ரொம்ப பெரிய கடன் அமைப்பு அப்படின்னு இருக்கும். பணம் கொடுத்து மாட்டிகிறது. கையால பணம் கொடுத்து அதை திரும்பி வராத தன்மை. அதுவும் இந்த கன்னியா லக்னக்காரர்கள் சித்திரை நட்சத்திரம் ஒன்றாம் பாதம், இரண்டாம் பாதம் அவங்களுக்கு அட்சய லக்ன நட்சத்திர புள்ளியாக இயங்கும் போது இவங்களுக்கு கடன் சுமை இருக்குமானால் இந்த வருட காலம் தான் அவங்களுக்கு இருக்கும்.
நிறைய லாங் டைம் கடன் ஆகவே இருக்கும். என்ன பண்ணுவாங்க கைமாத்து பணம் கொடுக்கிறேன் சொல்லுவாங்க. டாக்குமெண்ட் சைன் பண்றேன் அடுத்தவங்களுக்காக, ஜாமீன் கையெழுத்து போடுறேன்னு போடுவாங்க. எங்கேயோ பத்திரத்தை கொடுக்கிறேன் கொடுப்பாங்க. கடன் வாங்கி அத வாங்கி செய்வோம் நமக்கு லாபமாக இருக்கும்னு.
சிலர் வந்து இந்த MLM பண்ணுவாங்க. இந்த பக்கம் பணம் போட்டு அந்த பக்கம் எடுக்கிறது. இவங்களுக்குமே, இந்த கன்னியா லக்னக்காரர்களுக்குமே இந்த கடன் அப்படிங்கறது இப்படி தான் வருது. இவங்க இப்படி பண்ணலாமா என்றால் கூடாது. இவங்களுக்கு பணம் அப்படிங்கறது கையிலயே இருக்காது.
என்ன செய்வாங்கனா மாத்தி மாத்தி செலவழிக்க கூடிய ஒரு தன்மை. ஒரு பத்து ரூபா கையில வந்தாலுமே அதை எதையாவது செலவழிக்கக்கூடிய தன்மை அப்படிங்கிறது இருக்கும். எப்போ இந்த கன்னியா லக்னம் ஆரம்பித்ததோ அப்போதே இவங்களுக்கு பணம் கையில் இருந்து செலவு பண்ணிட்டே இருப்பாங்க. அது நிலையாகவே இவங்களுக்கு இருக்கவே இருக்காது. கையில பத்து பைசா கூட சேமிக்க முடியாத ஒரு தன்மை அப்படிங்கிறது இவர்களுக்கு கண்டிப்பாக கொடுக்கும் அப்படிங்கிறது சொல்லலாம்.
இல்ல நான் பணம் எல்லாம் சேமிச்சு வைக்கிறேன். அப்ப நீங்க உள்ளூர்ல இல்ல. வெளியூர்ல இருக்கீங்க அப்படிங்கிறது தான் உண்மை. வெளியூர் அப்படின்றதைவிட வெளிநாட்டு வருமானம் உங்களுக்கு கிடைக்குது அப்படிங்கிறது தான் உண்மை.
கடக லக்னம் :
சிலர் வந்து கடக லக்னம் போகும். கடக லக்னத்திற்கு கடன் அமைப்பு இருக்குதானா அதிகமாகவே இருக்கு. இவங்களுக்கு அது லாங் டைம் கடன் என்று சொல்லலாம்.
வருமானம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் இவங்களுக்கு பெரிய பெரிய பிரச்சினையாகவே இருக்கும்.
சிலருக்கு நண்பர்களால் ஏற்படக்கூடிய கடன் அமைப்பாகவே இருக்கும். நண்பர்கள் மூலமாக அந்த கடன் அப்படிங்கறது வாங்குவாங்க. நன்பன் கேட்டான் நண்பனுக்கு கொடுத்தேன். ஆனால் திரும்பி வரவே இல்லை. அவன் என்னை ஏமாத்திட்டான். யார் மூலமாக வருதுனா இந்த நண்பர்கள் மூலமாக இந்த கடன் அமைப்பு உங்களுக்கு வருது. இதுக்கு இவங்க என்ன பண்ணுவாங்க, கோர்ட்டு கேஸ் அப்படின்னு போக அமைப்பு இருக்குதானா கண்டிப்பா போக அமைப்ப இருக்குன்னு சொல்லலாம்.
மகர லக்னம் :
மகர லக்னம் அட்சய லக்னம் ஒருத்தங்களுக்கு போகுது அவங்களுக்கு கடன் இருக்குதானா? கண்டிப்பாக இருக்குது. இந்த மகர லக்னம் போகும்போது அந்த ஆரம்ப காலகட்டங்கள்ல ஒரு பெரிய கடன் ஒரு அவமானம் ஒரு தீராத பிரச்சனை. ஜாதகர் மாட்டிக்கிறாரான்னா கண்டிப்பா மாட்டிக்கிறாங்க. இது எப்படி இது எல்லாம் இவங்களுக்கு வருது.
இந்த லக்னம் வந்து பத்து வருஷத்துக்கு ஒரு தடவை சேஞ்ச் ஆகுது. அப்ப அதை நம்ம சொல்ல முடியுமா? என்றால் சொல்ல முடியும். இது இந்த அட்சய லக்ன பத்ததில வந்து மூன்று காலத்தையும் உணர்த்தக்கூடிய ஒரு கண்ணாடின்னு சொல்லுவோம். பின்னாடி போய் என்ன நடக்கிறது அப்படின்னு சொல்ல முடியும். இப்போ உங்களுக்கு என்ன நடக்குதுன்னு சொல்ல முடியும். எதிர்காலத்துல நீங்க என்ன செய்யப்போறீங்க அப்படின்னு ரொம்ப தெள்ளத் தெளிவாக சொல்ல முடியும். ஏன்னா நட்சத்திரப்புள்ளிகள் வழியாக தான் உங்களுடைய இயக்கம் அப்படிங்கறது இருக்கும்.
இப்போ எனக்கு என்ன நட்சத்திரம் அப்படிங்கறது இயங்குது உதாரணமா நாம் முன்னாடியே சொன்னேன். தனுசு லக்னம் போகும்போது ஒருத்தவங்களுக்கு திடீர் திருமணம். திருமணத்திற்கு உண்டான அமைப்பு காதல் திருமணமாக இருக்கும். அதே இது கேது ஓட நட்சத்திர புள்ளிகள் போகும்போது இது இருக்கும்.
தனுசு லக்னம் :
அதே தனுசு லக்னத்தில சுக்கிரனோட நட்சத்திரப்புள்ளி பூராடம் போகும்போது இவங்களுக்கு கடன் அமைப்பு இருக்குமானா இருக்கும்.
சந்தோஷத்துக்காக கடன் வாங்கக்கூடிய ஒரு தன்மை அப்படின்றது இந்த ஜாதகருக்கு இருக்கும். தன்னுடைய மனமகிழ்ச்சிக்காக செலவுக்காக கடன் வாங்கி செலவழிக்கக்கூடிய ஒரு தன்மை
அப்படிங்கறது அவங்களுக்கு இருக்கும்.
உத்திராட நட்சத்திரம் ஒன்றாம் :
அதுவே உத்திராட நட்சத்திரம் ஒன்றாம் பாதம் வரும்போது ஒரு வருடம் கொஞ்சம் அமைதியாக இருக்கும். ஏன்னா வருமானத்தையும் கொடுத்து ஒரு பாக்கியத்தையும் கொடுத்து வச்சுரும்.
நமக்கு தான் பாக்கியம் வந்திருச்சே அடுத்தது வருமானம் வந்துரும்னு என்ன பண்ணுவாங்க அதிகமான கடன் அப்படிங்கறது வாங்குவாங்க. அப்ப இவங்களுக்கு லக்னமே மாற்றம் அடையும்.
அப்போ இவங்களுடைய லக்னம் தனுசு லக்னத்தில் இருந்து மகர லக்னம்னு மாற்றம் அடையும். அப்ப அந்த மகர லக்னத்திற்கு அடுத்து வரக்கூடிய காலங்கள், பெரிய கடன் அப்படின்னு மாட்டிக்குவாங்க.
மகர லக்னம் :
மகர லக்னம் யாருக்கெல்லாம் போகுதோ அவங்களுக்கு என்ன ஆகும்னு பாருங்க. அந்த மூன்று ஆண்டு காலங்கள் ஆரம்பித்து அந்த வருட காலங்கள் இவங்களுக்கு ரொம்ப ரொம்ப பெரிய பிரச்சனை அவமானம். சிலருக்கு ஊரை விட்டு வெளியே போகக்கூடிய தன்மையும்.
சில ஜாதகர்கள் என்ன பண்ணுவாங்க வீட்டிலேயே இருக்கக்கூடிய தன்மை. வெளியே தலை காட்ட முடியாத ஒரு தன்மை இருக்குமானா இருக்கும்.
கடன் சுமை அதிகம் அப்படிங்கறது இந்த மகர லக்னத்திற்கு கண்டிப்பாக இருக்கும் அப்படின்னு சொல்லலாம். அப்போ நான் இப்ப என்ன லக்னத்தில் இருக்கேன்? எதிர்காலத்தில நான் என்ன பண்ணலாம்? என்ன பண்ண கூடாது? நான் என்ன பண்ணா எனக்கு அது லாபமா இருக்கும்? அப்படிங்கறது இந்த மூன்று காலத்தையும் உணர்த்தக்கூடிய ஒரு தன்மை அப்படிங்கிறது நம்மளுடைய அட்சய லக்ன பத்ததி அப்படிங்கற மெத்தட்ல இருக்குது.
இதை அனுசரிச்சு தான் நாங்க பலன் சொல்றோம். இப்போ ஒருத்தவங்க பிசினஸ் பத்தி கேட்க வர்றாங்க. உதாரணம் சொல்ல போனா இவங்களுக்கு தனுசு லக்னமாகவே வச்சுக்கோங்க. இப்ப நான் பிசினஸ் பண்ணலாமா கேட்கலாமான்னு ஒரு கேள்வி இருந்ததுனா? பண்ண கூடாதுன்னு சொல்லுவோம்.
இந்த உபய லக்னங்கள் போகும்போது தொழில் சார்ந்த விஷயங்கள்ல ஈடுபடக்கூடாது. இவங்களுக்கு கடன் சுமை அப்படிங்கறது அதிகப்படுத்துமானா அதிகப்படுத்தும். போட்டு இன்வெஸ்ட்மெண்ட் வந்து லாஸ் ஆகும். அதே மாதிரி நான் பண்ற பிசினஸ் வந்து எனக்கு செட் ஆகுமான்னா செட்டாகாது.
நீங்க உங்களோட பிசினஸ் சரியா வரல அப்படின்னா உங்க லக்னங்கள் அட்சய லக்ன பத்ததி சாப்ட்வேர்ல எடுத்து பாருங்க. உங்களுடைய லக்னம் மிதுன லக்னமாகவோ கன்னி லக்னமாகவோ தனுசு லக்னமாகவோ அல்லது மீன லக்னமாகவோ இருக்கும்.
இந்த நான்கு லக்னக்காரர்கள் கண்டிப்பாக தொழில் அப்படிங்கறது பண்ணக்கூடாது. அழுத்தம் கண்டிப்பாக ஏற்படும். கடன் சுமை அப்படிங்கறது கண்டிப்பாக ஏற்படும் அப்படிங்கிறது சொல்ல முடியும். அப்போ மூன்று காலத்தையும் உணர்த்தக்கூடிய தன்மை அப்படிங்கிறது ஏஎல்பி மெத்தட்ல இருக்கு.
என்ன பண்ணலாம்? என்ன பரிகாரம்?
சரிங்க கடன் வந்திருச்சு என்ன பண்ணலாம்? என்ன பரிகாரம்? அப்படிங்கிற கேள்வி இருக்கும். பொதுவான பரிகாரம் அப்படின்னு சொல்றேன். உங்க ஜாதக அமைப்பின்படி, உங்க கடன் ஸ்தானாதிபதி எந்த இடத்துல இருக்கிறாரு அவர் எப்ப மாற்றம் அடைவார், அதற்குண்டான பரிகாரம் அப்படிங்கிறது உங்களுடைய ஜாதக அமைப்பின்படி சொல்ல முடியும்.
பொதுவான பரிகாரம் என்ன சொல்லலாம் அப்படின்னா, இந்த கடன் சுமை ஜாஸ்தியா இருக்கிறவங்க பிசினஸ் சரியா போகல அது கொஞ்சம் செட் ஆகல எனக்கு கம்யூனிகேஷன் எரர் இருக்குன்னு சொல்லக்கூடிய நண்பர்களுக்கு திருச்செந்தூர் வழிபாடு மிகச் சிறந்த பலனை கொடுக்கும். திருச்செந்தூருக்கு போயிட்டு முருகன் தரிசனம் பண்ணிட்டு வாங்க.
அதே மாதிரி முருகனுக்கு பால் அபிஷேகம். வெட்டிவேர் மாலை வாங்கி கொடுங்க. கோவிலுக்கு போயிட்டு கடல் நீராடி, அந்த கடல்ல ஸ்தானம் பண்ணிட்டு நீங்க அதுக்கப்புறம் கோவிலுக்கு போயிட்டு தரிசனம் பண்றது அப்படிங்கறது ரொம்ப சிறந்த பலனை கொடுக்கும்.
எந்த லக்னக்காரர்களாக இருந்தாலும் சரி, திருச்செந்தூர் சென்று உங்களுடைய தடைகளை உடைக்க கூடியது எங்க? அப்படின்னா அந்த சூரசம்காரம் நடந்த ஒரே ஸ்தலம் அப்படிங்கறது திருச்செந்தூர். அதுவும் கடல் நீராடல் நதிநீராடல் ரொம்ப சிறப்பு. அப்போ நதிகளுக்கு பக்கத்தில் இருக்கிற முருகன் கோயில். கடலுக்கு பக்கத்துல இருக்கிற முருகன் கோயில். அதுவும் சூரனை வதைத்த இடம்னு சொல்லக்கூடிய சம்கார மூர்த்தி எங்கே உட்கார்ந்து இருக்கிறாரோ அங்க போயிட்டு உங்க கடனுக்காக நீங்க வேண்டுவது ரொம்ப சிறந்த பலனை கொடுக்கும்.
நன்றி.
- ஸ்ரீ குரு உமாவெங்கட்
( ALP ASTROLOGER)
WEBSITE: www.alpastrology.com
ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656
Comments
Post a Comment