வீடியோ
லிங்க்: https://youtu.be/XU6IR2lcA3o?si=9uGpb4i3aU6eUPzT
ஏன்னா நம்ம வாழ்றதே சாப்பிடுறதுக்காக அப்படிங்கிற ஒரு விஷயம் இருக்கு இல்லையா. இந்த ஒரு ஜான் வயிற்றுக்காக தான் நான் பாடுபடுறேன். அப்படின்னு நாம எத்தனை தடவை சொல்லி இருப்போம். அப்போ அந்த மாதிரி நாம உணவாக எடுக்கக்கூடிய விஷயங்களையே நம்மளுடைய வளர்ச்சிகளும் இருக்கு. அப்படின்னா அதை பயன்படுத்திக்கலாம் இல்லையா.
அப்போ நம்ம ஒரு பொருளாதார ரீதியாக நம்ம வாழ்க்கையில ஒரு உயர்வுகளை அடையணும் அல்லது ஒரு பண தேவை எனக்கு இருக்கு அந்த பணம் எனக்கு வரணும். அல்லது நான் கொடுத்த பக்கம் எனக்கு பணம் வர மாட்டேங்குது அந்த பணம் எனக்கு வரணும். அப்படின்னா என்ன பண்ணனும்.
நம்ம என்ன உணவுல அதிகமா சேர்த்துக்கணும். நம்ம எந்த இடத்தை ஆக்டிவேட் பண்ணனும் அப்படிங்கிற ஒரு நிகழ்வு இருக்கு. அப்போ என்ன எடுத்துக்க கூடாது? என்ன சாப்பிடணும்?
நம்ம சொல்லக்கூடிய பரிகாரங்கள் எல்லாமே அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் தாங்க. அதனால இப்போ உங்களுக்கு என்ன லக்னம் போகுது அப்படிங்கிறது ரொம்ப முக்கியம். ஏன்னா இந்த லக்னம் போறவங்களுக்கு மட்டும் தான் இந்த உணவு அப்படிங்கிறது ஒர்க் அவுட் ஆகும்.
மேஷ லக்னம் :
மேஷ லக்னம் அட்சய லக்னமாக போறவங்க நீங்க
தவிர்க்க வேண்டிய உணவு என்னன்னா காரமான உணவுகளை தயவுசெய்து தவிர்த்திடுங்கள். கார
உணவுகளை எடுத்துக்காதீங்க. ஆனா காரமா சாப்பிடணும். காரஞ்சாரமாக
சாப்பிடனும் தான் உங்களுக்கு பிடிக்கும். ஆனால் காரஞ்சாரமாக சாப்பிடக்கூடாது.
அப்போ என்ன சாப்பிடலாம்? கொஞ்சம் இனிப்பாக சாப்பிடலாம்.
நீங்க எந்த உணவு சமைத்தாலும்
சமைக்கக்கூடிய சமையல்ல ஒரு துளி வெல்லத்தை சேர்த்துடுங்க. அந்த வெல்லத்தை
சேர்த்துட்டீங்கன்னா அந்த இனிப்பே உங்களுக்கு நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.
முக்கியமா பாலினால் செய்த பொருள்.
பால்கோவா அதாவது கெட்டியா திடமா சாப்பிடணும். திரவமா சாப்பிடக்கூடாது. அப்போ என்ன
பண்ணனும்? கெட்டியா பால் அல்வா பால்கோவா பால் ஆடை அந்த கட்டிகள் சீஸ் பன்னீர்
இதெல்லாம் சாப்பிடலாம்.
வெண்ணெய்:
அதுல முக்கியமா வெண்ணெய். வெண்ணையை
சாப்பிடுறீங்கனாலும் உங்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. இதுல என்னன்னா டைரக்டா நீங்க
எப்போதுமே கொஞ்சம் உஷ்ணமா இருப்பீங்க. அந்த உஷ்ணத்தை லிக்விட் ஆக எடுத்து குறைக்க
கூடாது. திடமா எடுத்து அந்த குளிர்ச்சியான உணவுகளை திடமாக சாப்பிட்டு அத கண்ட்ரோல்
பண்ணனும் அப்படின்னு சொல்லலாம்.
அப்போ நீங்க என்ன உணவுல சேர்த்துக்கணும்?
இனிப்பான உணவுகளை உணவுல
சேர்த்துக்கறீங்க. அப்படின்னா உங்களுக்கு நல்ல ஒரு பலன்கள் நல்ல மாற்றங்கள்.
நெனச்ச உடனே நாக்குல நீர் ஊறுதா. அந்த ஒரு ஸ்வீட் எனக்கு பிடிக்கும் அப்படின்னு
நினைக்கிறீங்களா, அத நீங்க சாப்பிடுங்க.
அதுல குறிப்பா சொல்லனும்னா பால்கோவா
அல்லது பால் அல்வா அப்படிங்கிறது உங்களுக்கு வெற்றி வாய்ப்புகளை தரக்கூடிய ஒரு
உணவாக இருக்கும். அதை நீங்க எடுத்துக்கோங்க. கண்டிப்பாக நீங்க நினைச்ச
மாதிரியான ஒரு பொருளாதாரத்தில் வளர்ச்சியை உங்களால பெற முடியும்.
ரிஷப ராசி :
ரிஷப ராசிக்காரர்கள் பொதுவா நீங்க
எடுத்துக்க கூடிய உணவுகள் கொஞ்சம் லிக்யூட் ஐட்டமாக இருக்கு
அப்படின்னா உங்களுக்கு ரொம்ப சுலபமாக ஒரு வேலையாகும்ங்க. ஏன்னா இயல்பாவே கொஞ்சம்
மந்தமா இருப்பீங்க. சுறுசுறுப்பு என்பது கொஞ்சம் கம்மியாக தான் இருக்கும். என்னடா
இப்படி சொல்றாங்க அப்படின்னு நினைக்காதீங்க. ஏன்னா அது வந்து பொறுமையான ஒரு
சூழ்நிலையை தரக்கூடிய ராசின்னு சொல்லலாம்.
திரவமான பொருட்களை உட்கொள்ள வேண்டும் :
சுமையை வந்து அதிகமாக சுமக்க கூடிய ஒரு
ராசி அப்படிங்கிறது உண்டு. இதுல நீங்க திடமா உணவுகள் எடுத்துக்கிறீங்க அப்படின்னா
அது உங்களுக்கு ரொம்ப மந்தம் ஆக்கிடும். அப்போ நீங்க என்ன பண்ணனும் சுறுசுறுப்பான
உணவுகளை உடம்புல உட்கொள்ளனும் அப்படின்னா நீங்க திரவமான பொருட்களை உட்கொள்ள
வேண்டும்.
லிக்யூட் ஐட்டமா நீங்க என்ன சாப்பிட்டீங்கனாலும் அது உங்களுக்கு சாதகமான பலனை தரும். அதுல முக்கியமா சொல்லணும் அப்படின்னா இந்த நாக்குல வச்சதும் கரையுது அப்படின்னு சொல்லுவோம் இல்லையா அந்த மாதிரி உணவுகள்னு வச்சுக்கோங்க.
உதாரணத்துக்கு சொல்லனும்னா காய்கறிகள் நீங்க நிறைய சாப்பிடணும். நல்லா பச்சை நிற காய்கறிகள், கீரைகள் எந்த அளவுக்கு ரிஷப ராசிக்காரர்கள் கீரைகளை உணவில் சேர்த்துகிறீர்களோ, அந்த அளவு உங்களுக்கு வாழ்க்கையில நல்ல வளர்ச்சிகள் அப்படிங்கிறது உண்டு.
எப்படி நம்ம உணவுக்கும் நம்மளுடைய பொருளாதாரத்துக்கும் என்ன தொடர்பு அப்படின்னு கேட்டீங்கன்னா, ஒன்னும் இல்ல ஒரு சில உணவுகளை நாம எடுத்துக்கும் போது நம்ம மைண்ட் வந்து பாஸ்ட்டா வேலை செய்யும். கணக்கு போடும்.
நமக்கு பண வரணும் நினைக்கிறோம் ஒன்னு நம்ம சரியான ரூட்டில் போய் உழைக்கணும். உழைச்சா நமக்கு பணம் வரும். இன்னொன்னு சரியான நபர்கிட்ட அப்ரோச் பண்ணனும். அப்ரோச் பண்ணா நமக்கு பணம் வரும்.
அப்போ யார்கிட்ட நம்ம அப்ரோச் பண்ணனும்கிற சிந்தனையை நம்ம சாப்பிடக்கூடிய உணவு முடிவு பண்ணும். அப்போ நம்மளுடைய வீழ்ச்சியும் வளர்ச்சியும் நம்ம உணவுகுள்ள இருக்கு அப்படின்னா மிகை அல்ல.
உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு :
ஒரு சில நேரம் சாப்பிட்ட உடனே உண்ட
மயக்கம் தொண்டனுக்கும் உண்டுன்னு படுத்து தூங்கிடுவோம் இல்லையா. அப்போ முக்கியமான
கட்டங்கள்ல முக்கியமான முடிவுகள் எடுக்கக்கூடிய நேரம் நாம தூங்கிட்டோம்னா என்ன
ஆகும்? நம்ம வளர்ச்சி தடைபடுமா? அப்போ அந்த மாதிரி உணவுகளை நாம தவிர்க்கணும்.
முக்கியமா அசைவ உணவுகளை ரொம்ப ஹார்டா இருக்கக்கூடிய உணவுகளை இந்த ரிஷப ராசிக்காரர்கள் தவிர்த்தாலே போதும். அவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. அதுவும் முக்கியமா ரிஷப ராசிக்காரர்கள் மாட்டு இறைச்சி தொடவே கூடாதுங்க.
ரிஷப லக்னம் அட்சய லக்னமாக போகுதுனா தயவு செஞ்சு பசுவை கோமாதாவாக நினைத்து நீங்க கும்பிடுங்க. காளை மாடுகளை நந்தீஸ்வரரா நினைச்சு போற்றுங்க. உங்க வாழ்க்கையில அபரிவிதமான வளர்ச்சி உண்டு.
பசுவுக்கு உணவு :
பசுவுக்கும் உணவு கொடுத்து நீங்களும்
அந்த பசு சாப்பிடக்கூடிய சாத்வீக உணவு நீங்களும் எடுத்துக்கிட்டிங்கனா, அது கீரை
வகைகளா இருக்கட்டும். அது வெங்காயத்தாள் கூட உங்களுக்கு சப்போர்ட் பண்ண கூடிய
உணவுன்னு வச்சுக்கலாமே. அந்த அளவுக்கு பச்சை நிறமான காய்கறிகளும் பச்சை நிறமான
கீரைகளும் உங்க வாழ்க்கையில அபரிவிதமான வளர்ச்சியை ஏற்படுத்தும். நீங்க
அடுத்தவங்களுக்கு வாங்கி கொடுத்தாலும் சரி. பசுவுக்கு கீரைகளை வாங்கி சாப்பிட
கொடுத்தாலும் சரி. நீங்க சாப்பிட்டாலும் சரி. உங்களுக்கு எதிர்பார்த்த பண வரவு
நிச்சயமாக கிடைக்கும். உங்க வாழ்க்கையில அடுத்தடுத்த நல்ல வளர்ச்சிகள் உண்டு.
மிதுன லக்னம் :
மிதுன லக்னம் அட்சய லக்னமாக
போகக்கூடியவங்க அவங்களுக்கு ஜில்லுனு சாப்பிடுறதுக்கு ரொம்ப பிடிக்கும். ஜில்லுனு
எப்போதுமே, நல்ல குளிர் காய்ச்சல் அடிச்சாலும் கூட நல்ல ஐஸ் வாட்டர் குடிக்கிறவங்க
எல்லாம் நிறைய பேர் இருக்காங்க. இந்த மிதுன ராசியில் உள்ளவங்க.
ஐஸ்கிரீம் வாங்கி கொடுங்க :
ஆனா அவங்களுக்கு பணம் வரக்கூடிய வழியும்
அதுல ஒன்னுன்னு சொல்லலாம். நீங்க ஐஸ்கிரீம் சாப்பிடுங்க. ஐஸ்கிரீம்
வாங்கி கொடுங்க. கண்டிப்பாக உங்களுக்கு பண வரவுக்கான வாய்ப்பு உண்டு.
பழைய சாதம் :
அதே போல ஐஸ் பிரியாணியின் நாம
சொல்லுவோம். பழைய சாதம். இந்த பழைய சாதம் சாப்பிட்டா பணவரவு மிதுன ராசிக்கு உண்டு.
நம்ப முடியுமா உங்களால? பண்ணி தான் பாருங்களேன். பழைய சாதம் உங்க வாழ்க்கையில ஒரு
மாற்றங்களை ஏற்படுத்தும். கண்டிப்பா உங்களுக்கு அது சார்ந்த நிகழ்வுகள் சாதகமான
பலன்களை ஏற்படுத்தும்.
உங்களுக்கு சேர்க்க கூடாத உணவு அப்படின்னா, நீங்க வந்து திடமான உணவுகளை கொஞ்சம் அவாய்ட் பண்ணிக்கிறது நல்லது. அதுவும் கெட்டியாக உள்ள கொலஸ்ட்ரால் சம்பந்தப்பட்ட உணவுகளை நீங்க குறட்சிக்கிறீங்க. பூமியிலிருந்து விளையக்கூடிய கிழங்கு வகைகளை நீங்க குறைச்சிக்கிட்டாலே போதும். உங்களுக்கு வாழ்க்கையில் வளர்ச்சிகள் அடுத்த கட்ட நிகழ்வுகளை நோக்கி நீங்க செல்விங்க.
ஏன்னா எல்லாமே பூமியில் தான் விளையுது. ஆனால் பூமிக்கு அடியில் விளையக்கூடிய கிழங்கு வகைகள். ஏன்னா அது பூமியோட மண்ணோட மண்ணா ஒட்டி வளரக்கூடிய உணவு வகைகள்.
வெற்றி வாய்ப்பு :
முக்கியமா வெங்காயம் இல்லாம நீங்க
சமைச்சு பழகுறீங்க. சாப்பிட்டு பழகுறீங்கன்னா, உங்க வாழ்க்கையில வெற்றி
வாய்ப்புகளை நீங்க குவிக்க போறீங்க அப்படின்னு சொல்லலாம். ஏன்னா அந்த அளவுக்கு
அதனுடைய தன்மைகள் உங்களுக்கு ரொம்ப விரைவிலயே அதை பார்க்க முடியும் என்று
சொல்லலாம்.
கடக லக்னம் :
கடக லக்னம் அட்சய லக்னமாக செல்லக்கூடியவர்கள் உங்க வாழ்க்கையில பண
தேவைகள் பூர்த்தியாகணும். பணவரவுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கணும்னா, நீங்க
யாரு ஆக்டிவேட் பண்ணனும் தெரியுமா? உங்களுக்கு நெருப்பு. ஏனா நீங்க
ரொம்ப ஜில்லுனு இருப்பீங்க. கடகத்திற்கு மட்டும்தான் இது. மற்ற ராசிகள் இதை
பயன்படுத்த வேண்டாம். இந்த கடக ராசிக்காரங்க பணம் வருவதற்கு சூரிய பகவான ஆக்டிவேட்
பண்றீங்கண்ணா உங்களுக்கு பணம் வரவுக்கான வாய்ப்புகள் உண்டு.
அப்போ என்ன பண்ணனும்? அப்படின்னா உஷ்ணமான
உணவுகளை நீங்க உடம்புல எடுத்துக்கணும்.
உஷ்ணமான உணவுகள் என்ன அப்படின்னா, இப்போ
இதை சாப்பிட்டால் ஹீட்டு. உடம்புக்கு ஆகாது அப்படின்னு சொல்வோம் இல்லையா?
அப்படிப்பட்ட உணவு பொருட்கள்.
பழங்கள்ல எடுத்துகிட்டோம்னா பப்பாளி பழம்,
அண்ணாச்சி பழம். இதை வந்து நீங்க உணவுல எடுத்துக்கலாம். அதே சாப்பிடக்கூடிய
பொருட்கள்ல பார்த்தோம்னா கோதுமை உணவை நீங்க உணவாக உட்கொள்ள வேண்டும். கோதுமையை
நீங்க எந்த அளவுக்கு பயன்படுத்துறீங்களோ அந்த அளவுக்கு உங்களுக்கு பணவரவுக்கான
வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
இப்போ ஒன்னும் இல்லைங்க நீங்க இன்னைக்கு
ஒரு இடத்துக்கு பணம் தேவை இருக்கு, நல்லா கவனிச்சுக்கோங்க நமக்கு வரும்
அப்படிங்கிற ஒரு அமைப்பு நம்ம ஜாதகத்துல இருக்கணும். அது ரொம்ப முக்கியம். ஆனா அதே
நேரத்துல இதை சாப்பிட்டா வருங்கிற அமைப்பு இருக்கு ஆனாலும் வரமாட்டேங்குது. சில
தடைகள் இருக்கு. அப்படிங்கிற பட்சத்துல நமக்கு இந்த பரிகாரங்கள் எல்லாம் வேலை
செய்யும்.
கோதுமை உப்புமா :
அப்போ என்ன பண்ணனும் கோதுமை உப்புமா
இன்னைக்கு செஞ்சு சாப்பிட்டு. அல்லது கோதுமையை கொஞ்சம் கஞ்சி மாதிரி வச்சிட்டு
குடிச்சிட்டு. நீங்க அந்தப் பண தேவைக்காக நீங்க போறீங்க, பேசுறீங்க அப்படின்னா,
அது உங்களுக்கு வெற்றி வாய்ப்புகளை தரக்கூடியதாக அமையும் அப்படின்னு சொல்லலாம்.
கோதுமை உணவை நீங்க எந்த அளவுக்கு உட்கொள்றீங்களோ, அந்த அளவுக்கு இந்த பணம்
ஈர்ப்பு அப்படிங்கிறத அங்க அந்த ஈர்ப்பு விதி வேலை செய்யும். அது உங்க வாழ்க்கையில
சக்சஸை உண்டு பண்ணும்.
சிம்ம லக்னம் :
சிம்ம லக்னம் அட்சய லக்னமாக செல்லக்
கூடியவர்கள் என்ன பண்ணனும் அப்படின்னா காய்கறிகளை வெஜிடபிள் சாலட் நிறைய
எடுத்துக்கணும். அந்த கலவையான, அந்த காய்கறிகளின் உடைய அந்த கலவை அப்படிங்கிறது அதுவும் அரைவேக்காட்டுல
ஹாஃப் பாயில் சாப்பிடுவது அப்படிங்கிறதும் உங்களுக்கு சக்சஸ் ஆன பலன்களை
ஏற்படுத்தும்.
புத்தி லாபம் :
ஏன்னா நீங்க வந்து உங்களுக்கு பணம்
வரணும்னா நீங்க யாரு ஆக்டிவேட் பண்ணனும் அப்படின்னா புதனை ஆக்டிவேட் பண்ணனும்.
அப்போ புதனை ஆக்டிவேட் பண்ணா மட்டும்தான் உங்களுக்கு புத்தி லாபம் அப்படிங்கிறது அபரிவிதமாக வேலை செய்யும். அப்ப நீங்க என்ன உணவுல எடுத்துக்கிடனும் அப்படின்னா காய்கறிகளை அதுவும் பச்சையாக சாப்பிட முடியும். கேரட், பீட்ரூட் , முள்ளங்கி இந்த மாதிரியான காய்கறிகளை நீங்க பச்சையாக உட்கொள்ள முடியும் அப்படின்னா, தாராளமாக நீங்க எடுத்துக்கலாம்.
அதுக்கான அமைப்பு உங்களுக்கு ரொம்ப
ஈசியாக ஒரு விஷயத்தை அப்சர்வ் பண்ண முடியும். உங்களுக்கு பணம் வருவதற்கான வழிகளை
உங்களால் யோசிக்க முடியும். அவங்ககிட்ட மாத்திரம் நீங்க அப்ரோச் பண்ண முடியும்.
அப்போ நமக்கு ஒரு தேவை இருக்குதுனா,
நமக்கு கொடுக்க தயாராக இருக்கிறவங்க யாரோ? அவங்க கிட்ட நாம அப்ரோச் பண்ணும் போது
மட்டும் தான் அந்த தேவைகள் பூர்த்தியாகும். உங்களுக்கு கொடுக்க தயாராக
இருக்கிறவங்க யாரு? அப்படின்னா இந்த புதனுடைய அம்சம் நிறைந்தவங்க தான் உங்களுக்கு
கொடுக்க தயாராக இருப்பாங்க.
அப்போ அவங்கள அப்ரோச் பண்ணனும்னா, புதன்
சம்பந்தப்பட்ட கொடி வகைகள்ல விளையக்கூடிய காய்கறிகள் பீர்க்கங்கொடி , பாவற்கொடி , புடலங்கொடி அவரைக் கொடி அந்த கொடி வகைகள்ல
விளையக்கூடிய தானியங்களை நீங்க
எடுத்துக்குறீங்க அப்படின்னா உங்களுக்கு கண்டிப்பாக சாதகமான பலன்கள் நிச்சயமாக
உண்டு.
கன்னி லக்னம் :
கன்னி லக்னம் அட்சய லக்னமாக
செல்லக்கூடியவர்கள் என்ன உணவு எடுத்துக்கணும்? இனிப்பா சாப்பிடுங்க. உங்களுக்கு
பிடிச்ச உணவு இனிப்பான உணவுகளை சாப்பிடுங்க. கண்டிப்பா உங்களுக்கு நல்ல சாதகமான,
இன்னும் சொல்லப்போனால் ஜாங்கிரி. ஜாங்கிரின்னு சொன்ன உடனே உங்களுக்கு வாயில
எச்சில் ஊறும். அந்த மாதிரி இனிப்பா ஜிலேபி ஜாங்கிரிய நீங்க சாப்பிடுங்க.
கண்டிப்பா உங்களுக்கு பண வரவுக்கான வாய்ப்புகளும் சூழ்நிலைகளும் இருக்கும். அதே
மாதிரி கேசரி. கேசரி எடுக்கும் போதும் உங்களுக்கு பணம் வருவதற்கான
வாய்ப்புகள் உண்டு.
முதலில் ஒரு துளி ஸ்வீட் எடுத்து
சாப்பிட்டு அதுக்கு பிறகு நீங்க எந்த உணவா இருந்தாலும் உட்கொள்ளுங்கள்.
இன்னொன்னு அந்த ஸ்வீட்டை செய்வதற்கு ஒரு
பக்குவம் வேணும். அந்த ஸ்வீட்ட உங்களால சமையல் பண்ண முடியும், பெண்கள் சமைக்க
முடியும் இன்னைக்கு ஆண்கள் தான் நிறைய வீட்டில் சமைக்கிறீங்க. அதெல்லாம் வேற
விஷயம். அதனால ஸ்வீட் செஞ்சு ஸ்வீட் எடு கொண்டாடு அப்படிங்கிறது இந்த கன்னி
லக்னத்திற்கு சாத்தியமான விஷயம். உங்களுக்கு பண வரவுக்கான வாய்ப்புகள் நிறையவே
கிடைக்கும்.
துலாம் லக்னம் :
துலாம் லக்னம் அட்சய லக்னமாக
செல்லக்கூடியவர்கள் நீங்க உணவுல காரமான உணவுகளை எடுத்துக்கோங்க. அந்தக் காரத்தை நீங்க
சாப்பிடும்போது அது உங்களுக்கு அதுவும் சிவப்பு நிற காய்கறிகளை நீங்க உணவில்
எடுத்துக்கிட்டீங்க அப்படின்னா, உங்களுக்கு ரொம்ப நல்ல சக்ஸஸ் ஆன பலன்கள்
இருக்கும்.
சிவப்பு சோயான்னு ஒரு விஷயம் இருக்கு பாருங்க. அதே மாதிரி பீட்ரூட். சிவப்பு நிறமான காய்கறிகள். சிவப்பு நிற பழங்கள். இத நீங்க உணவுல எடுத்துக்கறீங்க. காரமான உணவுகளை நீங்க எடுத்துக்குறீங்க அப்படின்னா உங்களுக்கு பணம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஹெல்த் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அது மட்டும் இல்லைங்க, உங்களுக்கு நண்பர்களுடைய உதவிகள் நிறைய கிடைக்கும்.
இந்த காரமான உணவு நீங்க எடுத்துக்கும் போது சிவப்பு மிளகாய். இன்னைக்கு வந்து காஷ்மீர் சில்லி அப்படிங்கிறது எல்லாம் ரொம்ப விசேஷமா இருக்கு. அந்த மாதிரி சிவப்பு நிறமான நிகழ்வுகள் உங்களுக்கு உணவுகள் நீங்க எடுத்துக்கும் போது மாதுளம் பழம் சாப்பிடுங்க. பழத்துல மாதுளம் பழம் எடுத்துக்கிட்டீங்கன்னா அப்படின்னா உங்களுக்கு பண வரவுக்கான வாய்ப்புகளை அதிகமாக கொடுக்கும்.
ஆரோக்கியம் நமக்கு நல்லா இருந்தாலே நமக்கு எல்லா வேலைகளும் ரொம்ப ஸ்மூத்தா போகும். நம்ம அடுத்த விஷயங்களை நம்ம மைண்ட் நல்லா ஃபாஸ்ட்டா திங்க் பண்ணும். அதன் மூலமா எதுவுமே நமக்கு ஜீபூம்பா மேஜிக் இல்ல. இதை சாப்பிட்ட உடனே இது வந்துரும் அப்படிங்கிறதுக்கு.
இது என்னன்னா நம்ம எடுக்கக்கூடிய உணவு நம்ம உடம்புக்கு சத்தானதா இருக்கும். நம்ம உடம்புக்கு சத்தான உணவுகளை நாம எடுத்துக்கும் போது நம்ம மூளை நமக்கு நல்ல சாதகமாக வேலை செய்யும். அது வந்து நம்மளுடைய மைண்டுக்கு தெரியும். நம்மளுடைய ஆழ் மனசுக்கு தெரியும். எதை பண்ணினா நமக்கு என்ன கிடைக்கும்? அப்படிங்கிறது.
அது நல்லா பாசிட்டிவா வேலை செய்யும் போது நமக்கு சாதகமான பலன்கள் நிறைய கிடைக்கும். அதுதான் நமக்கு அதிர்ஷ்டம் அப்படின்னு நாம சொல்றோம். அந்த ஈர்ப்பு விதி அப்படிங்கிறது அங்க தாங்க வேலை செய்து. அதனால செவ்வாய் நீங்க பலமா பிடிச்சுக்கணும். அதனால சிவப்பு நிற உணவுகளை நீங்க எடுத்துக்கோங்க. கட்டாயம் உங்களுக்கு நல்ல ஒரு சாதகமான பலன்கள் அப்படிங்கிறது நிச்சயமாக உண்டு.
விருச்சிக லக்னம் :
விருச்சிக லக்னம் அட்சய லக்னமாக
செல்லக்கூடியவங்க உணவுகள்ள நீங்க மஞ்சள் அதிகமா சேர்த்துக்கணும் மஞ்சள்ல நீங்க
உணவுல எந்த அளவுக்கு நீங்க சேர்த்துக்கறீங்க. ஏன்னா குரு பகவானோட அனுகிரகம்
உங்களுக்கு அதிகம் தேவைப்படும். பூர்வ புண்ணிய பலனும் உங்களுக்கு அதிகம் தேவைப்படும்.
அப்போ நீங்க மஞ்சள் நிறமான உணவுகளை நீங்க அதிகமாக எடுத்துக்கும் போது,
உருளைக்கிழங்கு கொஞ்சம் அளவுக்கு தகுந்த மாதிரி நீங்க பயன்படுத்திக்கோங்க. ஏன்னா
அதிகமா சாப்பிட்டாலும் உடம்பு பேட் போட ஆரம்பித்து விடும்.
நெய் நீங்க உணவுல பயன்படுத்திக்கிறீங்க அப்படின்னா உங்களுக்கு
பணம் வருவதற்கான வாய்ப்புகள் அந்த வழிகள் ஓபன் ஆகும் அப்படின்னு சொல்லலாம்.
ஆரோக்கியமும் உங்களுக்கு சீராக
இருக்கும். தினமும் காலையில வெறும் வயித்துல ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுங்க.
உங்களுக்கு அன்றைய நாள் ரொம்ப புத்துணர்ச்சி
தரக்கூடிய நாளாக அமையும்.
தனுசு லக்னம் :
தனுசு லக்னம் அட்சய லக்னமாக செல்லக்கூடியவங்க மனசு எப்படி இருக்கும் அப்படின்னா ஒரு நேரத்துல ஃபிரஷ்ஷா சாப்பிடணும்னு ஆசைப்படும். ஒரு நேரத்துல பழசு தான் நல்லா இருக்கும் அப்படின்னு நினைக்கும். அப்போ புதுசு பழசு அப்படிங்கிற ஒரு நிகழ்வு தனுசு லக்கனம் சந்தர்ப்பத்திற்கு தகுந்தா மாதிரி பயன்படுத்திக்கும் அப்படின்னு சொல்லலாம்.
இப்போ இவங்க உணவுல என்ன சேர்த்துக்கணும் அப்படின்னா புளிப்பு அவங்களுக்கு ரொம்ப இஷ்டமாக இருக்கும். இந்த புளிப்பு சேர்த்துக்கறீங்க புளி சாதம் இல்ல புளியோதரை மிக்ஸ் நீங்க வாங்கி சாப்பிடுறீங்க. தானம் செய்றீங்க அப்படின்னா உங்களுக்கு அது சாதகமான பலனை ஏற்படுத்தும்.
எலுமிச்சம் பழம் – வெற்றிக்கனி :
இந்த புளி அப்படிங்கிறது உங்க உடம்புக்கு
ரொம்ப சப்போர்ட்டிவ் ஆகவும் இருக்கும் சாதகமாகவும் இருக்கும். அந்தப் புளிப்புக்கு
பதிலாக நீங்க எலுமிச்சம் பழம் சேர்த்துக்கறீங்க அப்படினாலும்
உங்களுக்கு வெற்றிக்கனி அப்படிங்கிறது உங்க கையில தாங்க இருக்கு. அந்த
வெற்றிக்கனிய நம்ம எலுமிச்சை அப்படிங்கிறது தான் ராஜ கனி அப்படின்னு சொல்லுவோம்.
அந்த ராஜ கனி அப்படிங்கிறதும் உங்களுக்கு
சாதகமான பலன்களை ஏற்படுத்தும். அந்த புளிப்பு உங்களுக்கு நல்ல உணவாக பயன்படும்
அப்படின்னு சொல்லலாம்.
மகர லக்னம் :
மகர லக்னம் அட்சய லக்னமாக
செல்லக்கூடியவர்கள் பாகற்காய் உணவுல எடுத்துக்கோங்க. பாகற்காயை எந்த அளவுக்கு
நீங்க உணவுல எடுத்துகிறீர்களோ அந்த அளவுக்கு உங்களுக்கு பணம் வருவதற்கான வழிகளும்
வாய்ப்புகளும் ஓபன் ஆகும் அப்படின்னு சொல்லலாம்.
பாகற்காயை ஏன் சொல்றோம் அப்படின்னா அந்த
கசப்பு சுவை அப்படிங்கிறது உங்களுக்கு உடம்புக்கு தேவையான விஷயம் அப்படின்னு
சொல்லலாம்.
ஏன்னா நீங்க நிறைய எண்ணெய் பலகாரங்கள்
மேல ஆர்வம் அதிகமாக இருக்கும். அதை சாப்பிடணும்கிற எண்ணம் அதிகமா இருக்கும். ஆனா
அந்த என்ன பலகாரத்தை சாப்பிட சாப்பிட உங்களுக்கு ஆரோக்கியம் கெட்டு போறதுக்கான
வாய்ப்புகள் அதிகம் உண்டு.
அப்போ அந்த கசப்பான உணவுகளை
எடுத்துக்கும் போது உங்க உடம்புல நச்சு உள்ள கழிவுகள் அப்படிங்கிறது
ஆட்டோமேட்டிக்கா ரெடி ஆயிரும். அப்போ நச்சு கழிவுகள் நம்மள விட்டு போயிட்டாவே,
நமக்கு பாசிட்டிவான ஒரு எனர்ஜி கிடைக்கும். பாசிட்டிவான பலன்களும் நமக்கு சாதகமாக
நிறையவே கிடைக்கும். அதனால கசப்பு நீங்க உணவுல அதிகமாக
சேத்துக்கோங்க.
கும்ப லக்னம் :
கும்ப லக்னம் அட்சய லக்னமாக
செல்லக்கூடியவங்க துவர்ப்பான உணவுகளை நீங்க அதிகமாக நீங்க உணவுல
சேர்த்துக்கணும். கொத்தவரங்காய் அது கொஞ்சம் துவர்ப்பான உணவாக
இருக்கும். வாழைப்பூ, வாழைத்தண்டு இதை நீங்க எந்த அளவுக்கு உணவுல சேர்த்துகிறீர்களோ, அந்த
அளவுக்கு உங்களுக்கு ஹெல்த் ரொம்ப நல்ல இம்ப்ரூவ் ஆகும் உங்களுக்கு நல்ல சாதகமான
ஒரு பலன்களும் அதிகமாகவே இருக்கும். பணம் வருவதற்கான வாய்ப்புகளும் வழிகளும்
உங்களுக்கு கிடைக்கும்.
வருமானம் :
இன்னும் சொல்லப்போனால் இந்த கும்ப
லக்னக்காரங்க வாய வச்சி வருமானம் ஈட்டுவது ரொம்ப ரொம்ப விசேஷம். அப்போ அவங்க உண்ண
கூடிய உணவுலயும் அவங்களுக்கு அதற்கு தகுந்த மாதிரியான நிகழ்வுகளும் உண்டு.
துவர்ப்பான உணவுகளை இந்த கும்ப லக்னம் அட்சய லக்னமாக செல்லக்கூடியவங்க சேத்துக்குறாங்க
அப்படின்னா கண்டிப்பாக உங்க வாழ்க்கையில ஒரு முன்னேற்றம்.
முக்கியமா வெற்றிலை பாக்கு
போடுங்க. வெற்றிலை பாக்கு நீங்க போடுவதன் மூலமாக உங்க வாழ்க்கையில வெற்றிப்படிகள்
அப்படிங்கிறது நிச்சயமாக உண்டுங்க. ஏன்னா துவர்ப்பு அப்படிங்கிறது பாக்குல
இருக்குது இல்லையா. அப்போ வெற்றிலை பாக்கு போட்டாலே உங்கள் உடம்புக்கு தேவையான
சத்துக்கள் அதுல கிடைச்சிடும். உங்களுக்கு நோய் எதிர்ப்பு திறனும்
அதிகமாக இருக்கும்.
ஏன்னா கும்பம் வந்து குடத்துல வச்ச விளக்கு மாதிரி தான் அமைதியா இருக்கும். அப்போ அவங்கள சுறுசுறுப்பாக்குறது எங்க இருக்குன்னா வெற்றிலை பாக்குல இருக்கு. அப்போ வெற்றிலை பாக்கு போடுங்க உங்களுக்கு கட்டாயம் உங்க வாழ்க்கையில் பொருளாதார மேன்மைகள் அடையலை என்றால் நிச்சயமாக இந்த நிகழ்ச்சியில என்னோட நம்பர் இருக்கும் நீங்க போன் பண்ணி கேட்கலாம். உங்க ஜாதகத்தினுடைய பலனும் துணை செய்ய வேண்டும் கவனிச்சுக்கோங்க.
மீன லக்னம் :
மீன லக்னம் அட்சய லக்னமாக
செல்லக்கூடியவங்க நீங்க எந்த உணவுகளை சாப்பிட்டாலும் அதை ஒரு ஆத்மார்த்தமா ஏதாவது
ஒரு இறை நாமத்தை சொல்லிட்டு, இப்போ கிருஷ்ணார்ப்பணம் அப்படின்னு
சொல்லுவோம் ஒரு உணவை கொடுக்கும் போது. சிவார்ப்பணம் அப்படின்னு சொல்லுவோம் அந்த
மாதிரி எந்த உணவை சாப்பிட்டாலும் ஏதாவது ஒரு இறை நாமத்தை சொல்லிட்டு சாப்பிடுங்க.
அது உங்களுக்கு அமிர்தமாக உங்க உடம்புல வேலை செய்யும்.
முக்கியமா நீங்க காரமான உணவுகளை எடுத்துக்குவிங்க. காரத்தை அளவோடு சேர்த்துக்கோங்க. மீன லக்னத்தை பொறுத்தவரை அட்சய லக்னம் மீன லக்னமாக போகும் போது காரத்தை கொஞ்சம் அளவோட பயன்படுத்தினீங்கன்னா உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்க பக்கம் தான் இருக்கும்.
அதே மாதிரி இனிப்பான உணவுகளும் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் இனிப்பை சேர்க்கக்கூடாது அப்படிங்கறத மைண்ட்ல வச்சுக்கோங்க அரை இனிப்பா இருக்கு அப்படின்னா ஓகே ஆனா ஃபுல் சுகர் அப்படிங்கறது வேண்டாம் அது பிரச்சனைகளை தரக்கூடியதாக இருக்கும் உங்களுடைய வீழ்ச்சிக்கு இனிப்பும் உங்களுடைய வளர்ச்சிக்கு காரமும் உங்களுக்கு சிறப்பாக வேலை செய்யும்.
அப்படின்னா 12 லக்னக்காரங்களும்
உங்களுடைய உணவுகளை சரியான சுவையை தேர்ந்தெடுத்து உங்க வாழ்க்கையில வெற்றி அடைய
வாழ்த்துக்கள். மீண்டும் இனிதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி. வணக்கம்
ALP ASTROLOGER ஸ்ரீ குரு Dr. சாந்திதேவி ராஜேஷ்குமார்.
ALP ASTROLOGY OFFICE: 9363035656 / 9786556156
Comments
Post a Comment