ALP ஜோதிடத்தில் ஜாதகம் மூலம் உங்களுக்கு நல்லது கெட்டது எப்போது நடக்கும். ALP அஸ்ட்ராலஜர் Dr. சாந்திதேவி ராஜேஷ் குமார்.

 


வீடியோ லிங்க்https://youtu.be/LS_rFum10S8?si=2F-K-mKjNlAIVWid 

பக்தி கஃபே நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். ALP அஸ்ட்ராலஜர் சாந்திதேவி ராஜேஷ் குமார்.

 நம்ம அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் ஒரு ஜாதகத்தை எப்படி எல்லாம் ஆய்வு பண்ணலாம்? பக்தி கஃபே நேயர்களுக்காக ஜாதக ஆய்வு அப்படிங்கிறது நாம பண்ண போறோம். நிறைய கேள்விகள் வந்திருக்கு. நிறைய ஜாதகங்கள் அனுப்பி இருக்காங்க. ஒரு கேள்வி ஒரு பதில் அப்படின்னு நாம பார்க்க போறோம்.

 இப்போ இந்த ஜாதகத்திற்கு ஒரு முழுமையா நம்ம ALP ஜோதிடத்துல எப்படி பலன் எடுக்கப் போறோம். அப்படிங்கிற ஒரு நிகழ்வைதான் பார்க்கப்போறோம்.

 இந்த ஜாதகர் கௌதம் கடலூரிலிருந்து கேள்விகள் அனுப்பி இருக்காரு. அவருடைய வயசு 22 வயது முடிந்து ஒரு மாதம் ஆகுது. நம்ம அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்துல வயதுக்கு உரிய லக்னம் எடுத்து தான் பலன் பார்க்கிறோம்.

நகரும் லக்னம் :

நகரும் லக்னம் மாறும் லக்னம். அப்படிங்கறது தான் இந்த ஜோதிட முறையோட கான்செப்ட். இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தை கொடுத்த திரு பொதுவுடைமூர்த்தி சார் அவர்களுக்கு நன்றி சொல்லிக்குவோம்.

 இந்த ஜாதகருடைய பிறப்பு லக்னம் அப்படிங்கிறது துலாம் லக்னம். இன்னைக்கு அவருடைய வயதினுடைய லக்னம் அப்படிங்கிறது தனுசு லக்னம் போகுது. இந்த துலாம் லக்னத்தில் இருந்து இவருடைய 22 வயதிற்கு நகர்ந்து எங்க நிற்கிறார் தனுசு லக்னத்தில் நிற்கிறார். இங்க இருந்து தான் நம்ம பலன்களை பார்க்க போகிறோம்.

தனுசு லக்னம் :

இந்த தனுசு லக்னம் அப்படிங்கிறது பத்து வருட காலம் இயங்கும். இப்போ அவருக்கு போயிட்டு இருக்கக்கூடிய நட்சத்திரம் மூலம் நட்சத்திரம் மூன்றாம் பாதம். அப்போ மூன்று வருட காலம் ஆகவே அவருக்கு மூலம் நட்சத்திர அதிபதி கேது பகவான் தான் நட்சத்திரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

 இந்த மூன்று வருட காலகட்டங்கள் ஜாதகர் என்ன நினைக்கிறாரோ எந்த துறைக்கு போகணும்னு ஆசைப்படுறாரோ அந்த ஆசைகள் நிறைவேறும் அப்படிங்கிற ஒரு அமைப்புல இருக்கு.

 இப்போ ப்ரசண்ட்ல இவருக்கு செப்டம்பர் மாதம் முதல் அடுத்த 2024 அக்டோபர் 14ஆம் தேதி வரை.

ஜாதகர் என்ன நெனச்சாலும் அந்த எண்ணங்கள் நிறைவேறும் ஈடேறும் அப்படின்னு சொல்லலாம்.

 இப்போ அவருடைய தேவைகளையும் அவருடைய எண்ணங்களையும் பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய சாதகமான ஒரு சூழல் அவருக்கு இருக்கா? அப்படின்னா நிச்சயமாக இருக்கு. கௌதமுக்கு நல்ல நேரம் ஆரம்பிச்சுருச்சு அப்படின்னு சொல்லலாம். அவருக்கு ஒரு வாழ்த்துக்களை சொல்லிக்குவோம்.

அடுத்து அவருடைய வருமானம் எந்த அளவுல இருக்கு?

அப்படின்னு பார்த்தோம்னா, அவருடைய வருமானத்தை தரக்கூடியவர் யாரா இருப்பாங்க? சனிபகவான இருப்பாங்க. இந்த சனிபகவான் லக்னத்திற்கு ஆறாம் இடத்தில் இருக்காங்க.

 அப்போ ஜாதகர் எவ்வளவு சம்பாதித்தாலும் அந்த வருமானம் கடனுக்கு போகும் அப்படிங்கிற ஒரு நிலை இருக்கு.

 அப்ப கடன் சார்ந்த நிலைகள் அல்லது ஆரோக்கியம் சார்ந்த மருத்துவ செலவுக்காக அவர் செலவு செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலைகள் தான் அவருக்கு இருக்கு. குடும்பத்துல மருத்துவ செலவுகள் உண்டு அப்படிங்கிற ஒரு நிலை இருக்கு.

ஜாதகர் படிப்பு சார்ந்த நிகழ்வுகள் :

ஜாதகர் படிப்பு சார்ந்த நிகழ்வுகள் அவருக்கு சாதகமாக இருந்தாலும், படிப்புக்காக அவர் செலவு பண்ணனும் அல்லது எஜுகேஷன் லோன் போணும். அது போட்டா தான் அவருக்கு படிச்சிருக்க முடியும் அப்படிங்கிற ஒரு சூழ்நிலையும் இந்த ஜாதகத்துல காமிக்குதுன்னு சொல்லலாம்.

நிதானமா பேசணும் :

அடுத்து இவருடைய ஜாதகத்துல ரெண்டாம் இடத்தில செவ்வாய் இருக்கு. பேசுறதுல கொஞ்சம் நிதானமா பேசணும். கோவப்பட்டு பேசினாருனா, அவருக்கு வரக்கூடிய வருமானம், குடும்ப உறவுகள் தடைபடும் அப்படிங்கிற ஒரு நிகழ்வு இருக்கு. அதனால கோவத்தை ரொம்ப குறைச்சுக்கணும். சட்டுனு கோவம் வரும் வாயில வார்த்தைகள் வந்து விழுந்துடும். பார்த்து பேசணும். ஏன்னா திருவள்ளுவர் சொல்ற மாதிரி நாவை அடக்காம விட்டோம்னா அது தீ புண்ணால ஏற்பட்ட காயத்தை விட அதிகமாக இருக்கும் அப்படின்னு சொல்லலாம். அதனாலேயே இவருக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் தடைபடும் அப்படின்னு சொல்லப்படுது.

முயற்சி :

அடுத்த அவருடைய முயற்சி. ஜாதகருடைய முயற்சி அப்படிங்கிறது ரொம்ப சிறப்பாக இருந்தாலும், அவருக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தும். ஏன்னா மூன்றாம் அதிபதி ALP லக்னத்திற்கு ஆறாம் வீட்டில் இருக்கு. கம்யூனிகேஷன் கட்டாக கூடிய ஒரு வாய்ப்பு இருக்கு.

 அவர் செல்போன்ல பேசினாரு இப்ப ஒருத்தரை நேர்ல பார்க்க வேண்டியவங்கள, நேர்ல இப்போ இன்னைக்கு என்னால வர முடியல அப்படின்னு சொல்லிட்டு போன்ல பேசுவோம். நமக்கு இந்த வேலை ஆகணும் அப்படின்னு சொல்லி ஃபோனில் பேசினார்னா அந்த கம்யூனிகேஷன் சிறப்பாக நடைபெறாது கட் ஆயிடும் அப்படின்னு சொல்லப்படுது.

 அதனால இவர் போன்ல பேசுவதை விட நேரில் தொடர்பு கொண்டு பேசுறது இவருக்கு சாலச் சிறந்தது அப்படின்னு சொல்லலாம்.

 அடுத்து மூன்றாம் இடத்தில் சந்திரன் இருக்கிறதுனால இப்போ அவருடைய பேச்சு போன்ல பேசும்போது கொஞ்சம் சாஃப்ட்டா இருக்கும். ஏன்னா அங்க சந்திரன் இருக்காரு. அப்ப இவர் போன்ல பேசினாருன்னா பையன் நல்ல பையன் நல்ல தெளிவா பேசுறாரு அப்படிங்கிற ஒரு வார்த்தைகள் இருக்கும்.

 அதுவே நேர்ல குடும்ப உறவுகளிடம் மட்டும்தான் அவர் கோபமாக பேசுவாரு அப்படின்னு சொல்லப்படுது.

வீடு சார்ந்த எண்ணங்கள் :

அடுத்து இவருடைய வீடு சொத்து சுகம் சார்ந்த நிகழ்வுகள் எப்படி இருக்குன்னா, குரு பகவான் ரொம்ப நல்ல அமைப்புல இருக்காரு. ஆனா அங்கு ராகு அப்படிங்கிற ஒரு கிரகம் சேர்ந்து இருக்கிறதுனால, அவருடைய வீடு சார்ந்த எண்ணங்கள் எல்லாம் பிரம்மாண்டமாக இருக்கும் அப்படின்னு சொல்லப்படுது. நான் பெரிய வீடு கட்டுவனா? பெரிய அளவுல வாகனம் வாங்கினால் கூட ரொம்ப உயர்ரக வாகனம் வாங்கணும் அப்படிங்கிற எண்ணம். லக்சூரியான ஒரு வாழ்க்கை வாழ திட்டமிடல் அப்படிங்கிறது இவருக்கு அதிகமாக இருக்கும் அப்படின்னு சொல்லலாம்.

 அப்ப அவருடைய எண்ணங்களுக்கு ஏற்ற செயல் வடிவம் அங்க உண்டானா? நிச்சயமாக உண்டு. அவர் எதிர்பார்த்தது மாதிரி வீடு வாகனம் அமைவதற்கான ஒரு சூழ்நிலைகளும் உண்டு.

 ஆனால் அதே நேரத்தில இந்த ராகு அப்படிங்கிறதுனால பிரம்மாண்டம். அந்த பிரம்மாண்டம் அப்படிங்கிறது சில நேரத்துல நமக்கு நிறைய செலவுகளை இழுத்து விட்டுடும். கொஞ்சம் கவனமாக விரலுக்கு ஏத்த வீக்கத்தோடு இருப்பது நல்லது அப்படின்னு சொல்லலாம்.

 அடுத்து தாயாரோட தன்மைகள் இங்க நல்லாவே இருக்கு. அம்மா சார்ந்த நிலைகள் சிறப்பாகவே இருந்தாலும், அம்மாவுக்கு உடல் நலத்துல கொஞ்சம் பிரச்சனைகள் இருக்கு. அத கொஞ்சம் கவனிச்சுக்கணும் அப்படின்னு சொல்லலாம்.

பூர்வ புண்ணிய பலன் எப்படி இருக்கு?

அடுத்து இவருடைய பூர்வ புண்ணிய பலன் எப்படி இருக்கு? குலதெய்வத்தினுடைய அனுக்கிரகம் எப்படி இருக்கு? அப்படின்னா இவருக்கு குலதெய்வம் சார்ந்த நிலைகள் நல்லாவே இருக்கு. குலதெய்வத்தினுடைய பெயரை உச்சரிப்பதே இவருக்கு பரிகாரம் அப்படின்னு சொல்லலாம்.

 இவர் வாழ்க்கையில ஒரு நன்மைகளை அடையணும். பூர்வ புண்ணிய பலம் ஆக்டிவேட் ஆகணும். அவருக்கு ஒரு நல்ல சாதகமான ஒரு சூழ்நிலைகள் நடக்கணும். ஒரு எதிர்பார்ப்புகள் அங்க பூர்த்தி ஆகணும். ஏன்னா ஐந்தாம் இடம் அப்படிங்கிறது இந்த வயதுக்குரிய பலன் அப்படிங்கிறதுனால 22 வயசுல ஒருத்தருக்கு என்ன தேவையா இருக்கும்?

 அவருக்கு வேலை வாய்ப்பு சார்ந்தது வீடு வாங்கணும்னு சொல்றது. சொத்தெல்லாம் இரண்டாம் பட்சம் தான். ஆனால் அதே நேரத்தில் நமக்கு நல்ல மனைவி அமைவாளா? அப்படிங்கிற ஒரு எண்ணம் எதிர்பார்ப்பு  அதிகமாக இருக்கும்.

 அப்ப அஞ்சுங்கிறது விருப்பம். அந்த விருப்பம் எங்க இருக்கு? குடும்ப ஸ்தானத்தில இரண்டாம் இடத்தில இருக்கு. குலதெய்வத்தை கும்பிடுவதனாலையே குல தெய்வத்தின் பெயரை சொல்வதனாலையே அவருடைய விருப்பங்கள் ஈடேறும் அப்படின்னு சொல்லலாம்.

 ஆறாம் இடம் சார்ந்த நிகழ்வு இவருக்கு சுக்கிர பகவான் பத்தாம் வீட்டில் இருக்காரு. தொழிலுக்காக கடன் வாங்கக்கூடிய அமைப்பு உண்டு. இந்த ஜாதகருக்கு முக்கியமா சொல்ல வேண்டிய ஒரு அட்வைஸ் என்னன்னா சொந்த தொழில் செய்யணும்னு கனவுல கூட நினைக்க கூடாது. அப்படிங்கிறது தான் இதுல உள்ள அட்வைஸ்.

 ஏன்னா உபய லக்னம் போகும்போது, அதுவும் தனுசு லக்னம் அட்சய லக்னமா போகும்போது இங்க தொழில் ஸ்தானத்தில் அதனுடைய தன்மை கடன் ஸ்தானத்தின் அதிபதியே தொழில்ல இருக்கும் போது, அவர் தொழில் செய்றார்னா கடன் வாங்கி பண்ணுவாரு. அந்த கடன் போட்ட முதல்ல எடுக்க முடியாத சூழ்நிலைகள் அமைஞ்சிடும். அதனால சொந்தத் தொழில் அப்படிங்கிறது அவருக்கு வேண்டாம்.

 அதுவே பிரச்சனைக்குரிய வேலை அப்படிங்கிற ஒரு நிகழ்வு இருக்கு. ஆறுகிறது பிரச்சனை. அது வேலையில போய் உட்கார்ந்து இருக்கிறதுனால பிரச்சனைக்குரிய வேலை. அப்போ இந்த ஜாதகர் என்னென்ன தொழில்களுக்குள்ள இருந்தா இவருக்கு நல்லா இருக்கும்.

 ஒன்னு புதனோட வீடு. அந்த புதனும் சுக்கிரனும் கலைத்துறை சம்பந்தப்பட்ட ஒரு வேலையில இருக்காங்க. இல்ல கம்ப்யூட்டர் டெக்னிக்கல் டெக்னாலஜி சம்பந்தப்பட்ட ஒரு வேலையில இருக்காங்க. எடிட்டிங் சம்பந்தப்பட்ட விஷுவல் கம்யூனிகேஷன் சம்பந்தப்பட்ட ஒரு வேலையில ஏன்னா சுக்கிரன் புதன். சினிமாத்துறை சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வுகளை இருக்காங்க. மீடியா துறையில் இருக்காங்கண்ணா, அது அவங்களுக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும்.

 ஏன்னா அவங்களுக்கு ஆறாம் இடம்ங்கிறது எடிட்டிங் ஒர்க் அதிகம்னு சொல்லலாம். இதுல என்னன்னா கட் பண்றது வெட்றது ஒட்டுவது எல்லாமே எடிட்டிங் வொர்க்ல உண்டு.

 அதேபோல அவருக்கு மருத்துவம் சார்ந்த துறைகள். இவர் மருத்துவம் சம்பந்தப்பட்ட நிகழ்வு எடுத்திருந்தாலும் அவருக்கு சாதகமான பலன்கள் உண்டு.

 அதேபோல வக்கீல். ஏன்னா அங்க ஆறாம் இடத்தினுடைய தன்மை புதன் அப்படிங்கிறது கேள்வி ஞானம , அறிவு நிறைய இருக்கும். அப்போ வக்கீல் சம்பந்தப்பட்ட துறைகள் அப்படிங்கிறது இதுல உண்டு.

 ஆனால் இவருக்கு எது சிறப்பாக இருக்கு புதன் சுக்கிரன் இணைவு ரொம்ப சாப்ட் நேச்சர் அப்படிங்கிறதுனால அவர் சினிமா துறை கலைத்துறைகள்ல அவருக்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு என்று சொல்லலாம்.

திருமணம் அமைப்புக்கு :

அடுத்து இவருடைய ஜாதக அமைப்புக்கு திருமணம் சார்ந்த நிலைகள் அப்படிங்கிறது ஏழுல ராகு. லக்னத்தில கேது இருக்கு. மூலம் நட்சத்திரம் இங்க போறதுனால எதிர்பாராத திடீர் திருமண வாய்ப்புகளையும் காதல் திருமண வாய்ப்புகளையும் இவருக்கு ஏற்படுத்தும் அப்படின்னு சொல்லப்படுது.

 அதாவது அவருடைய கம்யூனிட்டில இல்லாம. அதர் கம்யூனிட்டில அல்லது வேற ஜாதி தொடர்பு மத தொடர்பு கூட ஏற்படக்கூடிய ஒரு வாய்ப்புகள் இருக்கு.

 அப்போ அது சார்ந்த நிலைகள் அவருக்கு திடீர் திருமண வாய்ப்புகளை இப்போதே அவருக்கு ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் இருக்கு அப்படின்னு சொல்லலாம்.

 ஆனால் திருமணம் சார்ந்த நிலைகள் அவருக்கு அடுத்து இந்த கேதுவோட நட்சத்திரம் முடிஞ்சு சுக்கிரனோட பூராட நட்சத்திரம் இங்க ஜாதகரை இயக்கும்போது, அது தொழில் சார்ந்த நிகழ்வுகளோடு தொடர்பு பெரும்போது இப்போ இந்த ரெண்டு வருஷத்துல இவர் திருமணம் செய்யலைன்னா அடுத்து நாலு வருட காலம் திருமணத்தைப் பற்றி யோசிக்க மாட்டாரு. வேலை வேலை தொழில் தொழில் அப்படிங்கிற நிகழ்வுகளோட தான் ஜாதகர் பயணிப்பாரு அப்படின்னு சொல்லலாம்.

 அடுத்து இவர் ஆயுள் சம்பந்தப்பட்ட நிகழ்வு. நாம பொதுவா அட்சய லக்ன பத்ததில ஆயுள் பாவகத்தை குறிப்பிடுவது கிடையாது. ஆனால் இந்த பத்து வருட காலகட்டங்கள்ல அவருக்கு ஏதாவது பாதிப்புகள் இருக்கா? அதுக்கான பயமுறுத்தல்கள் இருக்கா? அப்படிங்கிறது மட்டும் நாம எட்டாம் பாவகத்தை வச்சி எடுத்துக்கலாம்.

 எட்டாம் அதிபதி யாரு? 

சந்திரனாக இருப்பார். அந்த சந்திரன் இந்த ஜாதகருக்கு எட்டுக்கு எட்டாம் இடத்தொடர்போடு இருக்கிறதுனால எதிர்பாராத தண்ணியினால அவருக்கு பிரச்சனை இருக்கு. எதிர்பாராத, இப்ப மழை பெஞ்சு இருக்கு அப்படின்னா ரோட்ல தண்ணில பயணிக்கும் போது ரொம்ப கவனமா இருக்கணும்.

 வழுக்கி விழுதல் போன்ற நிகழ்வு. நீர் சம்பந்தப்பட்ட உபாதைகள். இந்த மாதிரியான ஒரு சூழ்நிலைகள் அவருக்கு இருக்கு. அதே மாதிரி யூரினரி இன்பெக்சன். எட்டாம் பாவகம் அப்படிங்கிறது மர்ம ஸ்தானம். எட்டாம் பாவகம்கிறது சிறுநீரகம் தொடர்பான நிகழ்வு. அப்போ மோஷன் சம்பந்தப்பட்டது மலஜலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் அவருக்கு உண்டு அப்படின்னு சொல்லலாம்.

 அதே மாதிரி மூணுங்கிறது தொண்டை பகுதி. அடிக்கடி சளி தொந்தரவுகள். இன்பெக்சன் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அவருக்கு சைனஸ் பிரச்சனைக்கான ஏன்னா மூக்குங்கிறது அந்த மூன்றாம் பாகத்தினுடைய தன்மைகள் அப்படிங்கிறது சுவாசம் சம்பந்தப்பட்ட கழுத்து பகுதி சம்பந்தப்பட்ட நிகழ்வு. அதனால கழுத்து பகுதிகளில் அவருக்கு கொஞ்சம் சோல்டர் பெயின். கை வலி கால் வலி எல்லாம் அவருக்கு ஏற்படலாம் அப்படின்னு சொல்லலாம்.

ஒன்பதாம் பாவகம் :

அடுத்து இவருடைய ஜாதகத்தினுடைய தன்மை அவருக்கு ஒன்பதாம் பாவகம். அப்பாவின் உடைய நிலை எப்படி இருக்கு? சூரியன் இங்க நல்ல அமைப்புல 11ல நல்லா தான் இருக்காரு. அப்பாவோட நிலை இங்க சாதகமாகவே இருக்கு ஜாதகருக்கு அப்படின்னு சொல்லலாம்.

 அப்போ இவருடைய தொழில் சம்பந்தப்பட்ட தனி அமைப்புங்கிறது புதன் பலமான அமைப்புல இருக்கு. என்னதான் ஜாதகர் வேலை பார்த்தாலும் உள்ளுக்குள்ள சொந்தமா பண்ணனும் அப்படிங்கிற ஒரு எண்ணம் தான் இங்கு வலுவாக காணப்படுது.

 சொந்தமா பண்ணும் போது நான் பண்ணி தான் ஆகணும் ஒரு முடிவுக்கு வந்தார்னா, முதலீடு போடாமா கம்யூனிகேஷன் கமிஷன் பேசிஸ்ல இவரு ஏதாவது சர்வீஸ் ஓரியண்டடா ஏதாவது ஒரு தொழில் செய்றாருன்னா அவருக்கு அது சாதகமான பலன்கள் உண்டு. முதலீடு போட்டு செய்யக்கூடிய விஷயம்கிறது இவருக்கு சிறப்பு இல்லை.

 சரி இதுவே திருமணத்திற்கு அப்புறம் மனைவி ஏழாம் பாவகத்தின் அதிபதியான புதன் 10 ல இருக்காங்க. மனைவியோட சேர்ந்து பார்ட்னர் ஆக ஒரு விஷயத்தை பண்ணலாமா? தாராளமா பண்ணலாம். அதுக்கான வாய்ப்புகள் இங்க நல்லா இருக்கு அப்படின்னு சொல்லலாம்.

வேலைவாய்ப்பு :

இவருடைய லாபம் இவருடைய மகிழ்ச்சி தொழில் சார்ந்து தான் இருக்கும். வேலைவாய்ப்பு நல்ல ஜாப் கிடைச்சதுனா அதுல ரொம்ப சந்தோஷப்படுவாரு. சம்பள உயர்வு கிடைச்சுதுனா ரொம்ப சந்தோசப்படுவாரு. இப்போ இந்த நேரத்துல அவருக்கு சம்பள உயர்வுக்கான ப்ரோமோஷன்னுக்கான ஒரு வாய்ப்புகள் இங்க இருக்கு  அத பயன்படுத்திக்கலாம்.

வருமானத்திற்காக தூக்கத்தை தொலைப்பார் :

அவருடைய அயன சயன போகம் பன்னிரண்டாம் இடத்தினுடைய தொடர்பு எப்படி இருக்கு? செவ்வாய்.  இந்த செவ்வாய் போய் இவருடைய லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில. வருமானத்திற்காக தூக்கத்தை தொலைப்பார் அப்படிங்கிற ஒரு சூழ்நிலை இருக்கு.

 ஹெல்த்த கொஞ்சம் கவனிச்சுக்கணும். தூக்கம் சரியான நேரத்தில் தூங்கணும். இல்லன்னா கண் பார்வைல அவருக்கு பிரச்சனைகள் வரும். கண்ணு பல் சார்ந்த நிகழ்வு அவருக்கு பிரச்சனைக்குரியதாக மாறும். அது மட்டும் கொஞ்சம் கவனிச்சுக்கணும் அப்படின்னு சொல்லலாம்.

 இப்போ இவருக்கு குரு திசையில சுக்கிர புத்தி போயிட்டு இருக்கு. இந்த லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் இருந்து குருபகவான் இயக்குகிறார். சுக்கிரன் இந்த லக்னத்தில இருந்து 6, 11க்கு அதிபதியா பத்துல இருக்காரு. அப்ப தொழில் ரீதியாக ஒரு கடன் வாங்கக்கூடிய ஒரு வாய்ப்புகள் அப்படிங்கிறது இருக்கு.

 இப்போ தொழிலுக்காக ஏதாவது ஒரு உபகரணங்கள் வாங்கணும்னாலும் அது கடன்ல வாங்கக்கூடிய அமைப்புல இருக்கு.

 அப்போ இந்த குரு திசைல சுக்கிர புத்தி இவருக்கு கடன கொடுத்தாலும் சந்தோஷம் மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில்ல மாற்றங்களையும் கொடுக்கும். இந்த நேரம் அவருடைய முயற்சிகளுக்கு ஏற்ற பலன் உண்டு, ஜாதகருக்கு வெற்றி வாய்ப்புகளுக்கான நேரம் நல்லா இருக்கு.

எந்த கிரகம் காரணம்?

வெளிநாடு சம்பந்தப்பட்ட கேள்வி ஜாதகர் கேட்டிருக்கிறார். வெளிநாடுங்கிறது 12ஆம் வீடு. வெளிநாடு என்னுடைய அமைப்பு யாரு? எந்த கிரகம் காரணம்? செவ்வாய் பகவான். இந்தச் செவ்வாய் பகவான் ரெண்டோடு தொடர்பு. வெளிநாட்டின் மூலமாக வருமானம்.

 ரொம்ப நல்லா இருக்கு. ஜாதகர் வெளிநாட்டு வாய்ப்புகளை பயன்படுத்திக்கலாம். அரபு கண்ட்ரிகள் முஸ்லிம் கண்ட்ரிகள் அவருக்கு பயனுள்ளதாக இருக்கும். சிறப்பை தரக்கூடியதாக இருக்கும்.

 அடுத்து கொஞ்சம் தன்மையில் பார்க்கிறார்னா, சிங்கப்பூர் செல்லலாமானா? ஆனால் செல்லலாம் அப்படிங்கிற ஒரு அமைப்பு இருக்கு.

 இந்த மாதிரி தான் ஒவ்வொரு ஜாதகங்களுக்கும் பக்தி நம்ம கஃபேல பாக்க போறோம். இந்த மாதிரி விரிவான ஜாதகங்கள் உங்களுக்கு கிடைக்கணும்னா, நீங்க இந்த ப்ரோக்ராமை உங்களுக்கு வேண்டியவங்களுக்கு ஷேர் பண்ணி அந்த ஷேர் பண்ணத ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அந்த சேனலுக்கு அனுப்புங்க. உங்களுடைய கேள்விகளுக்கும் விரிவான பதில்களை தர முடியும். இனியொரு நிகழ்வில் சந்திப்போம். நன்றி. வணக்கம்.

  - ALP ASTROLOGER Dr. ஸ்ரீ குரு சாந்திதேவி ராஜேஷ்குமார்.  

குறிப்பு: இப்பதிவு, இந்த வீடியோ லிங்க்கில் முதலில் சொல்லப்படும் ஜாதக ஆய்வு.

நன்றி.

www.alpastrology.com

ALP ASTROLOGY OFFICE: 9363035656 / 9786556156

Comments