ALP ஜோதிடத்தில் ஜாதகம் மூலம் உங்களுக்கு நல்லது கெட்டது எப்போது நடக்கும். - ALP ஜோதிடர் Dr. ஸ்ரீ குரு சாந்திதேவி ராஜேஷ்குமார்-PART-2
வீடியோ லிங்க்: https://youtu.be/LS_rFum10S8?si=j4rhBLpI7gzXRncJ
பக்தி கஃபே நேயர்களுக்காக ஜாதக ஆய்வு
அப்படிங்கிறது நாம பண்ண போறோம். நிறைய கேள்விகள் வந்திருக்கு. நிறைய ஜாதகங்கள் அனுப்பி இருக்காங்க. ஒரு கேள்வி ஒரு
பதில் அப்படின்னு நாம பார்க்க போறோம்.
திருமணம் எப்போது?
ஜனனி திருச்சியில் இருந்து கேள்வி கேட்டு இருக்காங்க. வயது 29. திருமணம் எப்போது? அப்படிங்கிற கேள்வி எழுதி அனுப்பி இருக்காங்க.
இந்த ஜாதகத்துல திருமணத்திற்கான காலம் ஃபர்ஸ்ட் இருக்கா? அப்படின்னு பாத்துருவோம்.
வயதுக்குரிய லக்னம் :
அவங்களுடைய பிறப்பு லக்னம்
அப்படிங்கிறது விருச்சிக லக்னம். அவங்களோட 29 வயதுக்குரிய லக்னமாக
அவங்களுக்கு இப்ப போகக்கூடிய லக்னம் கும்ப லக்னம்.
இதுல இன்னொரு கேள்வி ஒன்னு உண்டு. ஒவ்வொரு லக்னமும் பத்து வருஷத்துக்கு தானே. இது எப்படி நாலாவது கட்டம் லக்னமாக மாறும்? அப்படிங்கிற ஒரு கேள்வி இருக்கலாம்.
இப்ப என்ன பண்றோம், தனுசுல பத்து வருஷம் மகரத்துல பத்து வருஷம் 20 வருஷம். இப்போ (கும்பத்துல) சதயம் நான்காம் பாதத்துல அவங்க லக்ன புள்ளி இருக்கு. கிட்டத்தட்ட ஆறு வருஷம் (கும்பத்துல) போயிருக்கு.
இப்போ இவங்க வயது 29. இவங்க பிறப்பு லக்னத்தில ஒரு மூன்று வருடங்கள் மிச்சம் இருந்திருக்கும். இந்த (விருச்சிகத்தில்) பத்து வருடமும் முழுமையாக இருந்தால்தான், முப்பது வயசுக்குள்ள 3 கட்ட மட்டும் இருக்கும்.
விருச்சிக லக்னத்திற்கு மூன்று வருஷம்
தான் :
இவங்களுக்கு விருச்சிக லக்னத்திற்கு
மூன்று வருஷம் தான் பேலன்ஸ் இருக்கு. 13 வயசு வரையும் தனுசு லக்னம். 23 வயசு
வரையும் மகர லக்னம். 33 வயது வரையும் அவங்களுக்கு கும்ப லக்னம் போகும். அதனால
அவங்களுக்கு இந்த நாலாவது லக்னம் (கும்ப லக்னம்) அவங்களுடைய அட்சய லக்னமாக இப்போ
வந்திருக்கு அப்படின்னு சொல்லலாம்.
இப்போ அவங்க திருமணத்தை பத்தி கேள்வி கேட்டிருக்காங்க. சதய நட்சத்திரம் நாலாம் பாதத்தில் இப்ப லக்ன புள்ளி போயிட்டிருக்கு.
சதய நட்சத்திரம் :
சதய நட்சத்திரம் யாருடைய நட்சத்திரம்னா
ராகு பகவானோட நட்சத்திரம். கும்ப லக்னத்திற்கு ராகு பகவான் ஒன்பதாம் பாவகமான
துலாம் வீட்டில் நல்ல அமைப்பில் இருக்கிறார்.
பிரம்மாண்டமான நிகழ்வு
:
இந்த சதய நட்சத்திர காலகட்டங்கள் இந்த
நாலு வருஷமா அவங்க லைஃப்ல அவங்க ஆசைப்பட்ட மாதிரியான ஒரு லைஃப் அப்படிங்கிறது
இருக்கு அப்படின்னு சொல்லலாம். அவங்க நினைச்ச துறையில சாதிக்கிறதா இருக்கட்டும்,
அவங்க எதிர்பார்த்த விஷயங்கள் அதனுடைய தன்மைகளாக இருக்கட்டும், சுக்கிரன் ராகு
அப்படியினாலே ஒரு பிரம்மாண்டமான ஒரு கிரியேட்டிவான ஒரு நிகழ்வு அப்படின்னு
சொல்லலாம்.
கலைத்துறை :
அப்போ சுக்கிரன் சம்பந்தப்படும்போது
கலைத்துறை. ராகு சம்பந்தப்படும்போது கலைத்துறையில் ஏதாவது ஒரு வாய்ப்புகளை
தேடுறாங்க அல்லது டெக்னிக்கல் டெக்னாலஜி சம்பந்தப்பட துறைகளில் ஏதாவது வாய்ப்புகள்
தேடுறாங்கன்னா அவங்களுக்கு இது சாதகமாக இருக்குன்னு சொல்லலாம்.
லக்னாதிபதியான சனி பகவான் பத்து வருஷத்திற்கு அதிபதியும் நல்ல அமைப்புல தான் இருக்காங்க. அப்ப ஜாதகருடைய தன்மைகள் ரொம்ப சாதகமான ஒரு அமைப்புல தான் இருக்கு.
கேள்விக்கான பதில் எங்க இருக்கு?
ஆனால் வயசு 29. அப்போ இதுவரையும் ஏன்
திருமணம் ஆகல. கேள்வி இருக்கு இல்லையா? அந்த கேள்விக்கான பதில் எங்க இருக்கு?
அப்படின்னா ஏழாம் பாவகம் (சிம்மம்) சூரியனோட வீடு. சூரிய பகவான் எங்க இருக்காரு
பத்தாம் வீட்டில் (விருச்சிகத்தில்) இருக்காரு. எனக்கு இதுவரையும் திருமணத்திற்கான
எண்ணம் தோன்றலை. எனக்கு ஒரு வேலை இல்ல. நான் ஜெயிக்கணும். சொந்தமா
சம்பாதிக்கணும்கிற எண்ணங்கள் அதிகமாக இருந்தது. அப்படிங்கிற ஒரு நிலை இங்கே
இருக்கு.அது மட்டும் இல்லாம, அங்க ராகு அப்படிங்கிறப்போ இங்க லக்னாதிபதி ராகு.
அவங்க நினைச்ச விஷயத்தை சாதிச்சதுக்கு அப்புறம் தான் கல்யாணம். அப்படிங்கிற ஒரு
வைராக்கியத்தோட செயல்படுவாங்க அப்படின்னு சொல்லலாம்.
அடுத்து இன்னொரு விசயம். சனி பகவான் நேர் ஏழாம் வீட்டில் (சிம்மத்தில்) செவ்வாய் தொடர்புல இருக்காரு.
நம்ம பிறப்பு ஜாதகத்துல செவ்வாய் எந்தெந்த இடத்துல இருந்தா தோஷம்னு சொல்லுவோம். 2,4,7,8,12 இருந்தால் செவ்வாய் தோஷம்னு சொல்லுவோம்.
ஆனால் இங்க பிறப்பு ஜாதகத்திற்கு 10 ல தான் செவ்வாய். அது தோஷமாக கிடையாது. இன்னைக்கு இந்த ( கும்பம்) லக்னத்திற்கு ஏழுல செவ்வாய். இன்னைக்கு செவ்வாய் தோஷம் அவங்களுக்கு வேலை செய்தா? வேலை செய்து.
அப்போ எங்க இருந்து திருமணத்திற்கு தாமதம் ஏன் நடக்குது? பிறப்பு ஜாதகத்தில் இல்லாத செவ்வாய் ALP ஜாதகத்துக்கு இருக்கு.
இந்த செவ்வாய் ஒரு காரணமாக இங்கே திருமணத்தில் தடைகளையும் தாமதங்களையும் உருவாக்குகிறார். அப்போ இவங்க என்ன பண்ணனும். இந்த செவ்வாய்க்காக ப்ரீத்தி பண்ணிக்கிட்டாங்கன்னா திருமணத்திற்கான காலம் அவங்களுக்கு உண்டு.
மாப்பிள்ளை தேடி வந்திருக்கும் :
போன வருஷமே ஒரு மாப்பிள்ளை தேடி
வந்திருக்கும். ஆனால் இவர்களுக்கு திருப்திகரமான ஒரு சூழ்நிலையா இல்லை
அப்படிங்கிறதுனால இந்த செவ்வாய் ஏதாவது ஒரு காரணத்துனால அந்த கல்யாண வரையும் பேசி.
நாளைக்கு நிச்சயதார்த்தம் பண்ணலாம்னு வரையும் பேசி இருப்பாங்க. ஆனால் தடையை உண்டு
பண்ணி இருக்கும்.
அல்லது இன்னும் கொஞ்சம் பெட்டரா பாக்கலாம்னு இவங்களே அதற்கு பதில் சொல்லாமல் பிரேக் பண்ணி இருப்பாங்க.
இப்போ சதயம் நாலாம் பாதத்தில் அந்தப் பேசி முடிக்காத வரனை திரும்பவும் பேசுறாங்க அப்படின்னா அந்த செவ்வாய் ப்ரீத்தி பண்ணதுக்கு அப்புறம் அந்த வரனை முயற்சி பண்றாங்கன்னா அந்த வரனே முடியறதுக்கு வாய்ப்பாக இருக்கு.
ஏற்கனவே பார்த்த வரனை இப்போது திருமணம் செய்யலாமா?
தாராளமா பண்ணலாம். எப்பவரையும் அடுத்து வரக்கூடிய 2024 ஜூலை
வரையும் அவங்களுக்கு திருமணத்திற்கான காலம் இருக்கு அவுங்க பார்க்கலாம்.
சரி எப்படிப்பட்ட கணவர் அமைவார். ஏழாம் பாவகம் செவ்வாயினுடைய தன்மையில் இருக்கு. ஒரு கோவக்கார பையன் தான் கணவனா வருவாரு அப்படிங்கிற ஒரு நிகழ்வு இருக்கு.
ஏழாம் அதிபதியும் சூரியனாக இருக்காரு. சூரியன் போய் பத்தாவது வீட்டில. அவர் வேலைக்கு போகக்கூடிய, தொழில் செய்யக்கூடிய அமைப்பு அவருக்கு மூன்று விதமான வருமானங்களை பெறக்கூடிய ஒரு வாய்ப்பும் அந்த ஜாதகருக்கு உண்டு அப்படின்னு சொல்லலாம்.
வீடு சொத்து இது எல்லாமே அவருக்கு நிறைவாக இருக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. அவருடைய வீடுங்கிறது ஒரு கோயிலுக்கு அருகாமையில் இருக்கும் அப்படின்னு சொல்லப்படுது. கோயில் மணி சத்தம் அல்லது தேவாலய சத்தங்கள் அல்லது பக்கத்துல மசூதியோட சத்தங்கள் அவருக்கு கேட்கலாம். ஏதாவது ஒரு ஆலயத்தின் உடைய சப்தம் அவருடைய வீட்டில் ஒலிச்சுக்கிட்டே இருக்கும் அப்படிங்கிற ஒரு நிலையானது இருக்கு.
ஒரே துறையில்
இருக்கக்கூடிய மாப்பிள்ளை :
அடுத்து அந்த ஜாதகத்தினுடைய தன்மைகள்ல
ஏழாம் பாவகம் கணவனுடைய வேலை வாய்ப்புகள் அப்படிங்கும் போது அந்த சுக்கிரனாக
இருக்காரு. இந்த பெண்ணும் அந்த கணவரும் ஒரே துறையில் வேலை செய்யக்கூடியவராக, இப்ப
இவங்க கம்ப்யூட்டர் ஃபீல்டுல இருந்தாங்கன்னா ரெண்டு பேரும் ஒரே ஃபீல்டுல
இருப்பாங்க. கலைத்துறையில் இருந்தாங்கன்னா ரெண்டு பேரும் ஒரே பீல்டுல இருப்பாங்க.
இப்படி ஒரே ஃபீல்டுல இருக்கக்கூடிய மாப்பிள்ளை அமைவதற்கான அமைப்பு இருக்கு. தற்சமயம் இவங்களுக்கு திருமண வாய்ப்பு ஏழாவது மாசம் வரைக்கும் இருக்கு. இந்த ஏழாவது மாசம் வரையும் விட்டுட்டாங்க அப்படின்னா அடுத்து அவங்களுக்கு அடுத்த வருஷம் திருமணத்திற்கான காலம் கிடையாது. அதுக்கு அடுத்த வருஷம் தான் திருமணத்திற்கான காலம் வரும்.
எப்போது?
இந்த ஜாதகரை பொறுத்தவரை முடிவு யார் எடுப்பா? அப்பா எடுப்பாங்க. ஜனனி ஓட அப்பா இந்த நேரத்தில் பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பதில் சீக்கிரம் கொஞ்சம் அக்கறை செலுத்துவது நல்லது.
இந்த மாதிரி தான் ஒவ்வொரு ஜாதகங்களுக்கும் நம்ம பக்தி கஃபேல பாக்க போறோம். இந்த மாதிரி விரிவான ஜாதகங்கள் உங்களுக்கு கிடைக்கணும்னா, நீங்க இந்த ப்ரோக்ராமை உங்களுக்கு வேண்டியவங்களுக்கு ஷேர் பண்ணி அந்த ஷேர் பண்ணத ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அந்த சேனலுக்கு அனுப்புங்க. உங்களுடைய கேள்விகளுக்கும் விரிவான பதில்களை தர முடியும். இனியொரு நிகழ்வில் சந்திப்போம். நன்றி. வணக்கம்.
- ALP ASTROLOGER Dr. ஸ்ரீ குரு சாந்திதேவி ராஜேஷ்குமார்
நன்றி
ALP ASTROLOGY OFFICE: 9363035656 / 9786556156
Comments
Post a Comment