தெரியாமல் செய்த தவறு கர்மாவில் சேருமா? தீய கர்மா யாருக்கு அதிகமாக வேலை செய்யும்? ALP முறையில் ஒரு ஆய்வு
அனைவருக்கும் வணக்கம். நம்மளுடைய வாழ்க்கையில பாத்தீங்கன்னா யாருக்கு தீய கர்மா அதிகமா வேலை செய்யும்? அப்படின்ற விஷயம் பார்க்க போறோம். தீய கர்மாக்கள் எப்படி வேலை செய்து அப்படின்ற விஷயத்தை பார்த்தோம். இந்த கர்மாக்கள் எப்படி வேலை செய்யும் அப்படிங்கறது விஷயத்தை ஏற்கனவே ஒரு இடத்துல பேசி இருக்கோம். www.alpastrology.com
பகுத்தறிவு :
கடவுள் நமக்கு என்ன சாய்ஸ் கொடுத்திருக்கார்? எந்த கர்மா வேலை செய்யும்?
யார் சூஸ் சூஸ் பண்றா?
கர்மாக்கள் வந்து நான் ஒரு தப்பு செய்றேன். அந்த தப்பின் மூலமாக நம்ம கர்மா வந்து நம்மளை தொடுது அப்படிங்கிறது முக்கியம். எனக்கு தெரியாமல் செய்த தவறாக இருந்தால் அந்த கர்மாக்கள் உங்களைத் தொடாது. நீங்க தெரிந்தே ஒரு விஷயத்தை தவறாக செய்தால் அந்த கர்மாக்கள் உங்களை அழிக்கும் அப்படிங்கிறது முக்கியமான விஷயம். ஒரு விஷயத்தை, தவறுன்னு தெரிஞ்சு கூட நம்ம பண்ணக்கூடாது. தவறுன்னு ஒரு விஷயம் தெரியுது அது ஏன் பண்ணனும்? அப்படிங்கறது முக்கியமான விஷயம். அப்ப தான் அந்த கர்மாக்கள் நம்ம தொடும். எப்படி? அப்படின்னு பார்த்தீங்கன்னா, அதாவது ஆண்டவன் நமக்கு ரெண்டு சாய்ஸ் கொடுத்திருக்கார். அதனால்தான் பகுத்தறிவு அப்படின்னு ஆறாவது அறிவு நமக்கு ஆண்டவன் கொடுத்திருக்கிறார் அப்படின்னு சொல்லலாம். அந்த அறிவை வச்சுக்கிட்டு ஆப்ஷன் கொடுப்பார் ஆண்டவன்.
நீ லெப்ட் ல போக போறியா?
ரைட்ல போக போறியா?
நல்ல வழியை தேர்ந்தெடுக்க போறியா? தீய வழிய தேர்ந்தெடுக்க போறியா? இந்த நல்ல வழிக்கு உண்டான மைண்டையும் நமக்கு கொடுத்திருக்கார். தீய வழிக்கு உண்டான மைண்டையும் நமக்கு கொடுத்திருக்கார். ஆனா சூஸ் பண்றது யாரு அப்படின்னா நீங்க தான் சூஸ் பண்றீங்க. நீங்க சூஸ் பண்ணீங்க அப்படின்னு சொன்னா, நல்ல வழியை சூஸ் பண்ணீங்க அப்படின்னா நல்ல கர்மாக்கள் வேலை செய்யும். உங்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும்.
கர்மாவின் விதி என்ன?
இன்னிக்கு செய்ற, அதாவது நியூட்டன் 3 ம் விதி சொல்லுவாங்க,
“Every action there is equal and opposite reaction”.
அதே மாதிரி ஒரு ஒரு வினைக்கும் எதிர்வினை இருக்கிறது.
சயின்ஸ்ல மட்டும் கிடையாதுங்க,
நமக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கும் எதிர்வினை இருக்கு அப்படிங்கிற விஷயம் தெள்ள தெளிவா நமக்கு தெரியும். எப்படி அப்படின்னு பார்ப்போம். எல்லாமே தெரியும் உங்களுக்கு தெரிஞ்சு கூட தவறு செய்தால் அந்த தவறுக்கு உண்டான பலனை நீங்கள் அனுபவிப்பீங்க அப்படின்றது முக்கியமான கர்மாக்கள்ல அட்சய லக்ன பத்ததில படிச்சவங்களுக்கு இந்த கர்மாக்கள் அப்படிங்கற ஒரு விஷயம் கிளீனா தெரியும்.
உதாரண ஜாதகம் :
ஜென்ம லக்னத்திற்கு எடுத்த பலன்
இப்போ ஜென்ம லக்னம் மகரம். இப்போ ராகு தசா ராகு புத்தி நடக்குது. எங்க இருக்கார் ராகு? 4 ஆம் இடமான மேஷத்தில் இருக்கிறார். 4 ஆம் இடத்தில் ராகு இருக்கும்போது அவர் என்ன பண்ணனும் அப்படின்னு பாத்தீங்கன்னா சுகபோகத்தை கொடுக்க வேண்டும். அவர் யார் கூட சேர்ந்து இருக்காருன்னா ஏழாம் இடத்துக்கு (கடகம்) உரியவரோட சேர்ந்து ராகு நாலாம் ( மேஷம்) இடத்தில் இருக்கார். வீடு சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு சுகபோகத்தை கொடுக்க வேண்டும் அப்படிறது ஒரு விஷயம் இருக்கு. பெரிய வீடு இருக்கணும் அப்படின்னு இருக்கு. பெரிய வீடு இல்ல அவருக்கு. ரொம்ப பெரிய வீடு எல்லாம் கிடையாது. நார்மல் சைஸ் வீடு தான் அவர்கிட்ட. ஆனால் இவருக்கு சுகபோகத்தை கொடுக்கணும் அப்படிங்கிற விதி பயன் ஜென்ம லக்னத்திலிருந்து பாத்தீங்கன்னா மகர லக்னத்தில் இருந்து பாத்தீங்கன்னா இதனுடைய பலன் வந்து இவ்வளவு தான் இருக்கும் ராகு தசா ராகு புத்தில.
அட்சய லக்ன பத்தி ஜோதிட முறையில் எடுத்த துல்லிய பலன்:
ஆனால் இந்த விஷயத்துக்கு, இன்னும் ப்ரிஸைசா நாம கண்டுபிடிக்கணும். என்னத்துக்காக ஜாதகர் வந்து இருக்காரு? அப்படின்றது பிரசைஸா கண்டுபிடிக்கணும் அப்படின்னு பார்த்தீங்கன்னா, அட்சய லக்ன பத்ததிக்கு தான் நீங்க போகணும்.
ஜாதகரே தேடிக்கொண்ட எதிர்வினை:
ALP லக்னம் அப்படின்னு சொல்லப்படுகிற லக்னம் மேஷ லக்னம். நட்சத்திர புள்ளி பரணி 4 ஆம் பாதம். மேஷ லக்னத்திற்கு லக்னாதிபதியே போய் எட்டாம் இடத்தில் மறைஞ்சிட்டார் அப்போ நானே எனக்கு பாதகம் செய்து கொள்கிறேன்னு அர்த்தம். அவருக்கு அவரே எதிர்வினையை தேடி கொள்கிறார். அவர் தவறை அவரே தேர்ந்தெடுத்துக் கொள்கிறார் அப்படின்னு அர்த்தம்.
இந்த தவறுகள் அப்படிங்கற ஒரு விஷயம் வந்து ALP லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் (விருச்சிகத்தில்) இருக்கக்கூடிய செவ்வாய் கூடவே வந்து சனியும் கூட இருக்கார். யாரு பத்தாம் இடத்துக்குரிய ( மகர வீட்டிற்கு உரிய) கர்ம காரகன் அப்படின்னு சொல்லப்படுகிற சனியும் பத்தாம் இடத்துக்கு (மகர வீட்டிற்கு) உரியவன் இங்கே இருக்கார்.
அப்போ அவரே அவருக்கு பிரச்சனையே கொடுப்பதற்கு உண்டான விஷயத்தை செய்து கொள்கிறார் அப்படின்னு அர்த்தம்.
லக்கனாதிபதி தவறாக,
ஏன்னா நமக்கு நல்ல விஷயங்கள் பண்ணா நல்ல விஷயம் நடக்கும்னு சொல்லி இருக்கோம். அப்போ எட்டாம் இடம்னு சொல்றது அதீத பிரச்சனைகள் அவமானங்கள் ஒன்னு.
இரண்டாவது நெகடிவ் தாட்ஸ்னு சொல்லுவாங்க. எனக்கு எதிரான வினைகளை நானே தேடிக் கொள்கிறேன் அப்படின்னு அர்த்தம். ஏன்னா சனி பகவானோட சேர்ந்து இருக்கார். அப்ப ALP லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் இருக்கிற செவ்வாய் சனி காம்பினேஷன் பிரச்சனையை கொடுக்குது.
மேஷத்தில் லக்னம் நின்ற நட்சத்திர புள்ளி பரணி 4. பரணி நட்சத்திர அதிபதி யாரு? சுக்கிரன். சுக்கிரன் எங்க உட்கார்ந்து இருக்கார்? 12ஆம் இடத்தில் உட்கார்ந்திருக்கார். விரைய ஸ்தானத்தில் உட்கார்ந்திருக்கிறார். போக ஸ்தானத்தில் உட்கார்ந்திருக்கிறார். விரையமான சுகங்கள் என்னலாம் இருக்கோ எல்லாத்தையும் அனுபவிக்கணும் அப்படிங்கறதுக்காக இந்த பரணி நட்சத்திராதிபதி (சுக்கிரன்) அங்க போய் (மீனத்தில்) உட்கார்ந்து இருக்கிறார் என்று அர்த்தம்.
ஏன்னா 12 ஆம் (மீனம்) இடம்றது தூக்கம் போக ஸ்தானம் அப்படின்னு சொல்லப்படுகின்ற விஷயம். இவருடைய எண்ணங்கள் ஃபுல்லாவே நெகட்டிவ்வா தான் இருக்கும். சுகமான விஷயங்களை தேடி தான் இருக்கும். 12-ஆம் இடம் சுகஸ்தானம் தான் ஆக்சுவலா. 12-ஆம் இடம் போக ஸ்தானம் இந்த போக ஸ்தானத்தில் சுக்கிரன் உட்கார்ந்திருக்கிறார் அப்படின்னு சொல்லலாம். இன்னொன்னு வந்து பாக்யாதிபதி யாரு 9,12 ஆம் (தனுசு, மீனம்) இடத்துக்கு உரியவர் குரு. குரு 11 ஆம் இடத்தில் (கும்பத்தில்) உட்கார்ந்திருக்காரு. 11 ஆம் இடத்தில் உட்கார்ந்திருக்கிற அமைப்பு இந்த ராகு கேதுவின்னுடைய அமைப்பு சந்திரன் ராகுவினுடைய அமைப்பு. மன ஓட்டத்தை மாற்றி விடுகிறது அப்படின்னு அர்த்தம். என்னுடைய எண்ணங்களை மாற்றுகிறது அப்படின்னு அர்த்தம். சந்திரன்கிறது மனோகரகன். என்னுடைய எண்ணங்களை மாற்றுகிறது.
அப்போ சந்திரன் ராகு காம்பினேஷன் மேஷத்தில். கேது துலாத்தில் பிரிவினையை ஏற்படுத்துகிறது. 11 ஆம் பாகம் ஆக்டிவேட் ஆகும். 11ஆம் பாகம் குரு. இத ALP லக்னத்தை வச்சு பாத்தீங்கன்னா கிளீனா தெரியும்.
அப்போ இந்த (கும்பத்தில்) இடத்துல அவருக்கு சாதகமான அமைப்பு இருக்கு அப்படின்னு அர்த்தம். அவருக்கு இரண்டாம் திருமணம் செய்து கொள்கிற ஒரு முனைப்பான விஷயத்தை அவர் மேற்கொள்கிறார் அப்படிங்கிற விஷயம் நமக்கு தெரிய வருது.
ஜாதகர் என்ன சொன்னார்?
அப்போ இது இருக்கா அப்படின்னு கேட்டா ஆமா சொல்றாங்க. அந்த மாதிரி தான் இருக்கு சார் என்ன பண்ணலாம்? இதுல இருந்து எப்படி வெளியில வரலாம்? அப்படிங்கற மாதிரி கேக்குறாங்க.
கர்மா இந்த ஜாதகருக்கு எப்படி வேலை செய்கிறது :
அதனாலதான் நான் முன்னாடியே என்ன சொன்னேன்னா தெரிந்து தவறுகளை செய்யாதீர்கள். தெரிந்து தவறுகளை செய்தால் உங்களுடைய வினைகளை உங்களுக்கே திரும்பி வரும் அப்படிங்கிறது முக்கியமான விஷயம். அப்போ மேஷத்தில் இருக்கக்கூடிய அமைப்பு இரண்டாம் திருமணம் தேடி வருகிறது.
இது காலம் ALP லக்னம் மாறும்போது நிறைய விஷயங்கள் மாறுகிறது. அப்போ ALP லக்னம் மாறினா, மாறுமா?
மாறும்.
இப்ப ALP லக்னம் மாறும்போது ஆட்டோமேட்டிக்கா மாறும் என்று சொல்லி இருக்கோம். இது எப்படிங்கிற விஷயத்தை டீடைல அடுத்த வீடியோவில் பார்ப்போம்.
யார் காரணம் என்பதும் ALP முறையில் சொல்லப்பட்டது:
இப்போ இந்த விஷயங்கள் எல்லாமே பார்த்தீங்கன்னா. ராகு வந்து ALP லக்னத்திலேயே இருக்கார். ராகு நின்ற வீட்டை செய்வார். அப்போ மாற்று எண்ணங்களை ஜாதகரே செய்து கொள்வார். இரண்டாம் திருமணத்தை ஏற்படுத்திக் கொள்கிறார் அப்படிங்கிறது முக்கியமான விஷயம். இந்த விஷயத்தை யார் பண்றார்? ஜாதகரே பண்றாரு அப்படின்னு அர்த்தம். இந்த ஜாதகர் இந்த மாதிரி பண்ணும் போது ஆட்டோமேட்டிக்கா தீவினைகள் இவரை தேடி வருகிறது அப்படிங்கற விஷயம் வருது.
இந்த மாதிரி ஜாதகங்கள் ஆய்வுகள் நிறைய இருக்கு. இது ஆய்வு செய்து பார்க்கும் போது தான் தெரியும் ALP லக்னம் எந்த மாதிரி ஒர்க் பண்ணுது அப்படின்னு.வாட்ச் ALP அஸ்ட்ராலஜி. www.alpastrology.org
நன்றி.
full video link: https://youtu.be/OVTWPTCLaX8?si=iQoXxbzuwBeMp6d9வணக்கம்.
- ஸ்ரீ குரு சத்யநாராயணன்
(ALP ASTROLOGER)
ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656
Comments
Post a Comment