பாரம்பரிய ஜோதிட முறைக்கும், ALP ஜோதிட முறைக்கும் உள்ள வித்யாசம்

ராஜேஷ் சார் :

   வணக்கம். பொதுவுடைமூர்த்தி சார். என்ன யாரு வந்து உங்களுக்கு சொல்றா? ஏதோ கட்ஸ் இவங்க எல்லாம், ஆங்கில கவிஞர்கள் எல்லாம் காதுக்குள்ள ஏதோ சொல்லுது,  இடது காதும்பாங்க. இடது காதுல தான்  சொல்லுதா இதுவும்.  யார் அவரு?

பொதுவுடைமூர்த்தி ஐயா :

  அப்படின்னு இல்ல. அதுக்கு முன்னாடி சகுனங்கள், நிமித்தங்கள், ஆருடங்கள் இப்படித்தான் நம்ம ஜோதிடமே ஆரம்பிக்க போறோம். இந்த ஜோதிடம் முதல்ல ஆரம்பிக்கப்பட்டது இப்படித்தான் எனக்கு. ஆமா இவங்க மிஸ்ஸஸ். என்னுடைய மனைவி. அதை முதல்ல சொல்லிக்கணும்.www.alpastrology.com

    ஆமா அப்ப சகுனம், நிமித்தம், ஆரூடங்கள் வச்சு தான் ஜோதிடமே அப்ப பண்டைய காலத்துல பார்க்கப்பட்டுச்சு. இத பத்தி என்னுடைய ஆய்வுகளும் இருந்துச்சு. என்னுடைய பிஹெச்டி முனைவர் பட்டத்துக்கு ஆய்வுக்கு எடுத்துக்கிட்டதே நான் இந்த தலைப்புல தான் எடுத்துக்கிட்டேன். என்ன அப்படின்னா பண்டைய காலத்துல இந்த ஜோதிட முறைகளோட வகைகள் அல்லது ஜோதிடம் சார்ந்த ஜோடிகளோட பதிப்பு முறைகள் என்னென்னஎன  தொகுப்பியல் ஆய்வாதான் நான் பண்ண ஆரம்பிச்சேன். தமிழ் யுனிவர்சிட்டி 2014ல ஆரம்பிச்சது நான். இது ஒரு எட்டு வருட காலங்கள் என்னுடைய ஆய்வுமே வகைகள் பத்தி ஆய்வு. நான் என்னுடைய தேடல் இருந்த ஒரு காலகட்டம் இருந்தப்ப இந்த சகுனத்தை வச்சு நம்ம சொன்னோம் .ஒரு சத்தத்தை வச்சு கேட்டோம். ஒருத்தர் எதிர்த்தாப்புல வரக்கூடிய பொருட்களை வச்சுக்கிட்டு ஒருத்தர் வந்து விறகு கட்டோட வர்ரார், ஒருத்தர் பூவோட, ஒருத்தர் பாலோட ஒருத்தர் வர்ரார், பால் கேனோட ஒருத்தர் வர்ராரா, ரெண்டு பேர் வர்ராங்களா, குழந்தைகள் வர்ராங்களா, தம்பதிகள் வராங்களா, மாலை வருதா,  மாலை கேரிபேக் பேக்ல வருதா அப்படின்னு நிறைய சகுனங்களை வச்சுக்கிட்டு தான் பார்த்தாங்க. அந்த காலத்துல அதுக்கு பிறகு நிமித்தங்களா நமக்கு பண்டைய காலத்துல வந்து சவுண்டு ஒலி நம்ம பல்லி விழுகக்கூடிய சவுண்டு. ஆந்தை அலறக்கூடிய சத்தங்கள், மத்த பறவைகள், எண்ணங்களோட சத்தங்கள்.  எது எத்தனை சத்தம் கேக்குது அப்படிங்கறதுக்கு வச்சு சொன்னாங்க. இதுக்கு முன்னாடியே இருந்தது நம்மளுடைய பண்டைய காலத்துல கிரகணங்கள். ரெண்டு கிரகணங்கள் வாழ்க்கையில வந்து மொத்தமா, சூரிய கிரகணம் சந்திர கிரகணம். வாழ்க்கையில மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்பட்டது. பிறகு தான் இந்த சகுனம், நிமித்தம், ஆருடம். அதுக்கு பிறகு தான் ஆருடம் வருது.  ஆருடம் வரும் போது இதெல்லாம் நான் படிக்கிறேன், பாக்குறேன்.

     இது ஒன்பதாவது வயசுல யாருன்னா எங்க மாமா சொல்றாரு இந்த மாதிரி ஆருடத்தை வச்சு சொல்லுவாரு. ஒன்னுக்குள்ள , 12க்குள்ள ஒரு நம்பர் சொல்லு. ஒன்னுக்குள்ள, ஒன்பதுக்குள்ள ஒரு நம்பர் சொல்லு அப்படின்னுஒன்பதுக்குள்ள, ரெண்டுன்னு சொன்னோம்னு வச்சுக்கோங்களேன், உங்களுக்கு வந்து இப்ப ஒரு சிவகர்யை வீட்ல ஒரு சந்தோஷமான ஒரு செய்தி வரப்போகுது அப்படிம்பாரு. அப்ப  12 உள்ள ஒரு நம்பர் சொல்லு 11 இப்ப ப்ரொமோஷன் வரப்போகுது அப்படிம்பாரு. இது சொல்ல சொல்ல இந்த ஆரூட முறைகள்ல வந்து பாக்க பாக்க, ஆனா இதெல்லாம் பாக்க பாக்க எனக்கு ஒரு கேள்வி வந்துச்சு அது எப்ப நடக்கும்? அது எப்படி நடக்கும்? நடக்கணும்ல.

   2021, 2022 இந்த காலகட்டத்துல உங்களுக்கு ப்ரொமோஷன் வரும். நம்ம இப்ப அட்சய லக்ன பத்ததில மீன லக்னம் ஆறுக்குடைய சூரியன் பத்துல இருக்கு. உதய சூரியன். சூரியன். சூரியன் எங்க இருக்காரு? பத்துல இருக்காரு. அப்ப நம்ம என்ன சொல்றோம்? ஐயாவுக்கு, சாருக்கு உதய சூரியன் சின்னதால நமக்கு என்ன பண்ணுது  ஸ்டாலின் உதய சூரியன். ஸ்டாலின் அவராலே நமக்கு என்ன பண்ணுது, ஒரு பெரிய பதவி பட்டம். பதவி தேடி வரும். வீடு தேடி வரும். நான் என்ன சொன்னேன் கார் வந்து வீடு தேடி நிக்கும். நாலாம் வீட்டை சூரியன் பார்த்துச்சுன்னா என்ன பண்ணும் பட்டம் ,பதவி வீடு தேடி வரும்.

     எவ்வளவு அழகா வந்து உட்காருது பாருங்க. அவங்க கூப்பிட்டு ஒரு கௌரவமான ஒரு போஸ்ட். ஒரு கௌரவமான ஒரு பதவி. பத்துல சூரியன் கவர்மெண்ட். பத்துல சூரியன் அரசாங்க பதவி. பத்துல சூரியன் கௌரவ பதவி. அது சினிமா துறையிலே.  எவ்வளவு ஒரு சந்தோஷமான ஒரு செய்தி. இந்த காலகட்டத்தை நம்ம எப்ப சொல்ல முடிஞ்சுச்சுன்னா இந்த ஜோதிட முறையில அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் வரும் போது தான் சொல்ல முடிஞ்சுச்சு.

     இது அப்ப வந்து ஆரூடம் முடிஞ்சதுக்கு பிறகு நம்ம ஜாதக முறைகள் வருது. அது பாரம்பரிய முறைகள்ல வருது. ஜனன ஜாதகம் எழுதுறாங்க இதெல்லாம் வந்துகிட்டே இருந்தப்ப, இதுல எல்லாம் கைரேக வருது, வாஸ்து வருது, நியூமராலஜி வருது ,எண்ணியல்ல நிறைய கணக்கு முறைகள் வருது. அது தொடுகுறி சாஸ்திரங்கள் இடையில வந்து அதுக்கு முன்னாடியே தொடுகுறி சாஸ்திரங்கள் நிறைய வந்துச்சு.

    இதெல்லாம் இது மாதிரி 183 வகைகள் வந்து ஜோதிடத்துல வந்து, பிரசன்னம்னா அதுல ஒரு 27 பிரசன்னம் இருக்கு. அது தாம்பள பிரசன்னம், வெத்தலை பிரசன்னம், ஜாமக்கோல் பிரசன்னம், ஆரூட பிரசன்னம் 108 பிரசன்னம் வச்சுக்கலாம். ஒன்பது பிரசன்னம் வச்சுக்கலாம். 12 பிரசன்னம் வச்சுக்கலாம். 27 பிரசன்னம் வச்சுக்கலாம். 27 நம்பர் வச்சு பிரசன்னம் வச்சுக்கலாம், 49 வச்சு பிரசன்னம் வச்சுக்கலாம். 68 வச்சு.

ராஜேஷ் சார் :

    49 என்ன கணக்கு?

பொதுவுடைமூர்த்தி ஐயா :

    அது கணக்கு முறைகள் வந்தது. அந்த காலகட்டத்துல இப்ப வந்து பாத்தீங்கன்னா 72 அகத்தியரோட ஆருட முறைகள் 72 அப்படின்னு ஒரு கணக்கு இருக்கு. அது என்ன கணக்கா எடுத்துக்கிட்டான்னு தெரியல. அது எண்களை வச்சு எடுத்துக்கிட்டாங்க.

ராஜேஷ் சார் :

    72 மேல கர்த்தாரா அவங்க அப்படிங்கிற மாதிரி எடுத்துக்கிட்டாங்க.

 பொதுவுடைமூர்த்தி ஐயா :

    ஆனா இதுல எங்கேயுமே 2022, 2023 இவருக்கு இப்படி ,இது நல்லது, இது கெட்டது. இவ்வளவு தூரத்துல நடக்கும்னு சொல்ல முடியாது என்னால. அப்ப பாரம்பரிய முறையில படிச்சிட்டு அப்படியே தேடிக்கிட்டே இருக்கும் போது தான் என்னுடைய இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறைக்கு ஒரு பிள்ளையார் சுழி. லக்னம் வளரும் அப்படின்னு ஆரம்பிக்கப்பட்டது தான்.

 ராஜேஷ் சார் :

    ரொம்ப ஆச்சரியம் உங்களுக்கு இதுல எந்தவித ஒரு இன்ஸ்பிரேஷனும் இல்லை. இப்ப அந்த காலத்துல வாழ்ந்தவங்க. அங்க இருந்து நான் எடுத்துக்கிட்டேன். அந்த மாதிரி இல்ல?

பொதுவுடைமூர்த்தி ஐயா :

   நம்ம ஒரு மகான் ஒருத்தரை பெரியவரை சந்திக்க போறேன்.  அவர் கிட்ட இப்படி உட்கார்ந்து நிறைய பேர் ஒரு 200 பேர் அந்த சத்சங்கத்துல உட்கார்ந்து இருக்காங்க. 

ராஜேஷ் சார் :

   எந்த ஊர்ல?

 பொதுவுடைமூர்த்தி ஐயா :

    ஹைதராபாத்ல. ஹைதராபாத் அந்த சத்சங்கத்துல கொண்டு போய் நான் அந்த புத்தகத்தை எல்லாம் பேசிட்டு இருக்கும் போது, இப்ப பின்னாடி உட்கார்ந்து இருக்கேன் உங்கள்ட்ட கொடுக்கிறேன். நீங்க வாங்கி அந்த புத்தகத்தை பிரட்டிட்டு இருக்கும் போது பக்கத்துல இருக்கறவரு இதுக்கு தாவது மூல நூல் இருக்கான்னு கேட்டுப்புட்டாங்க. என்கிட்ட. ஆனா அவர் காதில் விழுந்துட்டு. இப்ப உங்கள்ட்ட காதில் விழுந்தா நீங்க என்ன சொல்றீங்க அதுக்கு வேதத்துக்கு ஏது மூல நூல்? அப்படின்னு கேட்டாரு பாருங்க.www.alpastrology.org

 ராஜேஷ் சார்:

 அடுத்த அடி அவங்க

 பொதுவுடைமூர்த்தி ஐயா:

    யாருமே அந்த 200 பேரு ஒரே பின் ட்ராப் ஒரு சைலெண்ட் அப்படி இருந்துச்சு. அந்த சத்சங்கம் அப்படியே நின்னு போச்சுக்கோங்க அப்படியே. அவரு அந்த வார்த்தை சொல்லுவாருன்னு யாருமே எதிர்பார்க்கல. எப்படி? வேதத்துக்கு ஏது மூல நூல் அப்படின்னா அப்ப இந்த இதுக்கு எதுக்கு மூல நூல்? உங்களுடைய கணக்கு சரின்னா நீங்க எது அங்கீகாரம்? உங்களுக்கு என்ன அங்கீகாரம்? அப்படின்னு என்கிட்ட சொல்லும் போது உங்களுக்கு சந்தோஷம் இருந்துச்சு, பரவாயில்லை.

   ஒவ்வொரு காலகட்டத்துக்கும் இந்த ஜோதிட பரிணாமம் பண்ணும். உங்களுடைய பரிணாமம் உங்க கணக்கு வந்திருக்கு. இது வந்து மக்கள் சரின்னு எடுத்துக்கிட்டா சரின்னு சொல்லுங்க. இத வந்து இவங்க தான் அங்கீகாரம் கொடுக்கணும். இவங்க அங்கீகாரம் கொடுக்கணும்னு உங்களுக்கு தேவையில்லையே. அப்படின்னு ஒரு ஸ்ட்ராங்கான ஒரு கையில ஒரு தூண்டுகோலை கொடுத்தது. ஏன்னா நம்ம எல்லாத்தையும் கொண்டு குடுக்குறோம்.

     இப்ப எல்லாம் ஆதீனங்கள் கிட்டயும் நம்ம கொண்டு கொடுக்கிறோம். ஏன்னா இது படிச்சு நாலு பேர் சொன்னா இது சரியா தவறா நீங்க தானே முடிவு பண்ண முடியும். நான் ஒரு ஆய்வு பண்ணிருக்கேன். அதை நானே வச்சிருந்தேன்னு வச்சுக்கோங்களேன் அது எப்படி உங்க ஆய்வை நிரூபிச்சா தான் நீங்க வந்து அது சரியா தவறுன்னு நீங்க முடிவு பண்ண முடியும்.

    நான் பத்து ஜோசியரை கூப்பிட்டு இந்த ஜோசியர் சரியா இல்ல நீங்க கேளுங்க. நீங்க சரியா இல்லையான்னு நீங்க ஆய்வு பண்ணி நீங்க சொன்னா தான் நீதிபதி இல்ல. மக்கள் தானே நீதிபதி. நான் எப்படி நானே சொல்லிட்டு நான் ஆய்வு பண்ணிருக்கேன் ஆய்வு பண்ணுங்க நானே வச்சுக்கிட்டு இருந்தா, ஒரு புத்தகம் எழுதி இருக்கேன் கொடுத்திருக்கேன். ஒரு சாப்ட்வேர் போட்டுருக்கேன் கொடுத்திருக்கேன். இது ரெண்டையும் செக் பண்ணுங்க எல்லாம் உங்ககிட்ட கொடுத்துருக்கேன்ல செக் பண்ணலாம்ல அது தான் ஆய்வுங்கிறது.

ராஜேஷ் சார் :

    ஜாதகத்தை வச்சு கடைசில சாப்ட்வேர் வர அளவுக்கு வந்துட்டீங்களே. இல்ல எல்லாரும் போட்டு நோண்டிடுவானே.

 பொதுவுடைமூர்த்தி ஐயா:

 என்னன்னா சார்,

   எளிமையாக்கணும்ல சார். நீங்க அந்த காலத்துல நம்ம ஒரு பஞ்சாங்கத்தை எடுத்து ஒரு உதயாதி நாழிகையை கணிக்கிறதுக்குள்ள பாதி நேரம் போயிடும். நான் எழுதி கணக்கு போட்டோம்னா ஒரு மணி நேரம் உதயாதி நாழிகைக்கு போட்டு வரணும். ஒரு ஜாதகம் எழுதிட்டு ஒரு மணி நேரம். இன்னைக்கு பிறந்த தேதி, பிறந்த நேரம்பிறந்த ஊர்  போட்டா ஜென்ம லக்னம் இது. அட்சய லக்னம் இது.

    47 வயசு இந்த வயசுல இந்த லக்னம் இருக்கு. இந்த நட்சத்திர புள்ளி போகுது. உத்திரட்டாதி நட்சத்திரம் இந்த வயசுல இப்படி போகுது. உத்திரட்டாதி நட்சத்திரம் சனி பகவான் நாலுல இருக்கு. இந்த ஜாதகர் இப்படித்தான் இருப்பாரு. உத்திரட்டாதி நட்சத்திரம் முடிஞ்சு ரேவதி நட்சத்திரம் வரும் போது ஓகோன்னு இருப்பாரு.  இப்படித்தான் சார்.

    இந்த அனுபவங்களை எங்க மனைவிகிட்ட கேட்டீங்கன்னா தெரியும். ஏன்னா கடந்து வந்த பாதைகள் வந்து யாருமே கூட இல்லைல.

ராஜேஷ் சார் :

  அந்த காலத்துல நீங்க படிச்சீங்களா?

திருமதி . அருளரசி பொதுவுடைமூர்த்தி :

    இல்ல சார். முதல்ல வந்து இந்த மாதிரி நான் ஒரு விஷயம் பண்ணனும் எனக்கு இதுல ஆர்வம் இருக்கு அதுக்கு வந்து அதுக்கு பிள்ளையார் சுழி அமைஞ்சது வந்து எங்களோட திருமணம். இவங்க மாமா வந்து உனக்கு இந்த மாதிரி இந்த வயசுல சீக்கிரமே திருமணம் ஆயிடும்.     

அப்படின்னு சொன்னப்ப எப்படி நடக்கும்? நம்ம வந்து படிச்சிட்டு இருக்கோம். எப்படி இந்த மாதிரி ஒரு நேரத்துல நடக்கும் அப்படின்னு முதல் கேள்வி. அதே மாதிரி அவங்க மாமா சொன்ன மாதிரியே எதிர்பார்க்காத வகையில எங்களுக்கு திருமணமும் நடந்துச்சு. திருமணம் நடந்ததுக்கு அப்புறம் அந்த கேள்விக்கான பதிலை தேடுறதுக்கான அந்த தேடல் ரொம்ப அதிகமாயிடுச்சு. எப்படி சரியா சொல்ல முடிஞ்சுச்சு நம்ம மாமாவால.

பொதுவுடைமூர்த்தி ஐயா:

     மாமாவும், சித்தப்பா, பெரியப்பா ,பெரிய அம்மா, நடு மாமா , தாத்தா,  பெரிய தாத்தா எல்லாருமே ஜோசியர். அதுல ஒருத்தர் என்ன பண்றாங்கன்னா இப்ப அதெல்லாம் நடக்காது அப்படிங்கிறாங்க. ஒருத்தர் நடக்கும்னு சொல்றாங்க. நடக்கும்னு சொல்லும் போது அது நடந்துட்டு. அப்ப இவங்களுக்குள்ள இருக்கக்கூடிய வேறுபாடு தான் எனக்கு இந்த இடத்துல கொண்டு வந்துச்சு. இல்ல ரெண்டு பேருமே நடக்கும்னு சொல்லியிருந்தால் எனக்கு இந்த இடத்துக்கு நான் வந்திருப்பனா? ஏன்னா எனக்கு ஆர்வம் இருந்துச்சு.

     ஒன்பது வயசுலயே நான் என்ன பண்ணுவேன்னா டிவி பார்க்க போகும் போது உங்க வீட்டுக்கு டிவி பார்க்க வர்ராங்கன்னா, நீங்க ஜோசியம் பாக்குறீங்கன்னா அதை கேட்டுட்டு தான் உட்கார்ந்து ஆகணும். நான் டிவி பார்க்க வரேன் உங்க வீட்டுக்கு நீங்க என்ன ஜோசியத்தை பத்தி பேசினா கேட்டுதான் ஆகணும். பேசாம உட்கார்ந்து கேட்டுட்டு இருப்பேன்.

    சூரியன், சந்திரன்,  செவ்வாய்,  புதன், சுக்கிரன்,  சனி,  ராகு, கேது,  செவ்வாய்.  மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் கன்னி, துலாம் , தனுசு, கும்பம், மீனம். இப்படியே சொல்லி சொல்லி சொல்லி சொல்லி ஒன்பதாவது வயசுல இது ஆரம்பிக்கப்பட்டது. எனக்கு நாலு வயசு நான் படிச்சப்ப எனக்கு. அப்ப ஆரம்பிச்சது.  நாலாவது படிக்கும் போது எட்டு,  ஒன்பது வயசு. அப்ப எனக்கு ஒன்பது வயசு நல்ல வயசு. அப்ப தான் இந்த கல்யாணம் வரும் போது இந்த கல்யாணம் நடந்த உடனே இது வந்து கண்டிப்பா இதுக்குள்ள ஏதோ ஒரு ஒற்றுமையும் இருக்கு;  ஒரு வேற்றுமை இருக்கு. அது தான் நம்ம அந்த வழியா பிடிக்கணும்னு நினைச்சுட்டு ஆரம்பிச்சோம்.

 திருமதி . அருளரசி பொதுவுடைமூர்த்தி:

     ரெண்டு பேரோட அம்மா அப்பாவும் இந்த நாள் வரைக்கும் எந்த கேள்வியும் கேட்டதில்லை. ஏன் நீங்க வேலைக்கு போகல. இதை மட்டும் ஏன் இப்படி ஒரு தொழிலா எடுத்துருக்கீங்க. ஏன் இதுல இவ்வளவு ஆர்வம்? ஏன் அதெல்லாம்? ரெண்டு பேர் வீட்லயுமே அதெல்லாம் கேட்டது கிடையாது. அப்படி இருக்கும் போது நான் இந்த மாதிரி எனக்கு எங்க மாமா சொன்னாங்க. எனக்கு இதுல ஆர்வம் இருக்கு. நான் இதை பத்தி ஆராய்ச்சி பண்ணனும் அப்படின்னு சொல்லும் போது, தாராளமா பண்ணுங்க அப்படின்னு சொன்னேன்.

    இல்ல எல்லாரும் வேலைக்கு போயிட்டு வரணும்னு நினைப்பாங்க நீ எதுவுமே சொல்லலையே அப்படின்னு சொல்லும் போது நான் சொன்னேன். என்ன பொறுத்தவரைக்கும் இந்த எட்டு மணி நேரம் இந்த காலைல 9:00 மணிக்கு போயிட்டு திரும்ப நைட்டு வீட்டுக்கு வர்றது அந்த வேலையை விட உங்களுக்கு எது புடிச்சிருக்கோ உங்க மனசுக்கு எது புடிச்சிருக்கோ அந்த வேலையை செய்யுங்க. நான் அதை தான் ஆசைப்படுறேன். புடிச்ச வேலையை தாராளமா செய்யுங்க. அப்படின்னு மட்டும் தான் சொன்னேன்.

     இதற்காக வந்து இவங்களோட சொந்தக்காரங்கள் ஆகட்டும் பிரண்ட்ஸ் இருக்கட்டும் நிறைய பேர் கேள்வி கேட்டவங்க இருக்காங்க. கேட்கக்கூடாத கேள்விகள் அந்த மாதிரி நிறைய வார்த்தைகள் அந்த மாதிரி எல்லாம் நிறைய கேட்டிருக்காங்க. ஆனா ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அப்புறம் அவங்களே வந்து எனக்கு ஒரு அப்பாயிண்ட்மென்ட் வாங்கி கொடு அப்படின்னு கேட்கும் போது, எனக்கு உள்ளுக்குள்ள ஒரு அந்த தருணத்தை வந்து என்னால வார்த்தையால சொல்ல முடியல.

   அன்னைக்கு வந்து நம்மள நிக்க வச்சு கேள்வி கேட்டவங்க. ஒரு மனிதனோட ஒரு தனிப்பட்ட வளர்ச்சியை பார்த்துட்டு இன்னைக்கு நம்மகிட்டயே வந்து இந்த மாதிரி கேக்குறாங்க அப்படிங்கும் போது அந்த தருணத்தை வந்து என்னால வார்த்தையால வெளிப்படுத்த முடியாது. இதற்காக இந்த ALP  அப்படிங்கறது வந்து முதல்ல எங்களோட குழந்தையா தான் நான் பார்க்கிறேன்.

   ஏன்னா இதை கண்டுபிடிக்கிறதுக்காக எடுத்துக்கிட்ட நாட்கள், மாதங்கள், வருடம் அது வந்து ரொம்ப ரொம்ப பெரிய ஆராய்ச்சி.

    15 வருஷமா இருந்துச்சு. ஆமா இதனால அந்த குடும்பத்தோட பொறுப்பை நான் எடுத்துக்கிட்டேன். என்னன்னா இந்த மாதிரி ஆராய்ச்சினால வந்து இவங்க மாடியில படுத்து தூங்குவாங்க. நாங்க கீழ தூங்குவோம். காலைல பசங்களை கிளப்பனும். இந்த மாதிரி எங்களுக்கு வேலைகள் இருக்கிறதுனால. தூங்கிட்டு இருக்கும் போது ரெண்டு மணிக்கு மொபைல் போன் வச்சிருந்தேன். பக்கத்துல போன் அடிக்குது நான் எடுத்த தூக்க கலக்கத்திலேயே சரி எதுவும் டீ வேணும் போல இருக்கு சரி இல்ல என்னன்னு தெரியல அப்படின்னுட்டு எடுக்குறேன். உடனே சீக்கிரம் மாடிக்கு வா அப்படின்னு ரொம்ப பதட்டமா குரல் வந்த உடனே, எனக்கு ஒரு நிமிஷம் ஒண்ணுமே புரியல. மாடிக்கு போறேன்.

   அவசர அவசரமா ஓடிப்போறேன். அங்க பார்த்த உடனே அங்க போன உடனே நான் ஒன்னு கண்டுபிடிச்சிருக்கேன். உன்கிட்ட சொல்லணும் உட்காரு. அப்படின்னு சரி மணி ஆயிடுச்சு. இருந்தாலும், ஒரு மனிதர் வந்து இவ்வளவு தூரம் வந்து வாழ்க்கையில இவ்வளவு சந்திச்சு ஏதோ ஒன்னு சொல்லி இருக்கேன்தெரிஞ்சுக்கிட்டேன் அப்படின்னு சொல்லும் போது என்னன்னு உட்கார்ந்து கேட்டுறணும் அப்படின்னு சொல்லிட்டு அந்த ரெண்டு மணிக்கு போய் உட்கார்ந்தேன்.

   அப்ப இந்த கட்டம் எல்லாம் போட்டு இந்த மாதிரி வேற வேற பதில் கிடைக்குது. ஒரு ஒருத்தருக்கும் நான் இந்த மாதிரி இதை கண்டுபிடிச்சிருக்கேன். இதை முதல்ல வந்து நான் வந்து உறுதியா இதை நிலைப்படுத்திக்கணும் படுத்திட்டு அப்புறமாதான் இதை வெளி உலகத்துக்கு நான் கொண்டு போகணும். அதனால நான் சொல்றதை கேளு. நமக்கு வந்து புரியுதோ, புரியலையோ ஒரு மனிதர் வந்து இவ்வளவு வாழ்நாள்ல இவ்வளவு கடினப்பட்டு இந்த பாதையில ஏதோ ஒன்னு சொல்ல வரும் போது கேட்கணும். அப்படின்னு சொல்லிட்டு அதை உட்கார்ந்து கேட்டேன். எனக்கு புரியுது.  புரிஞ்சதெல்லாம் தாண்டி நான் கேட்க ஆரம்பிச்சேன். அப்ப வந்து இந்த முகத்துல வந்து ஒரு குழந்தை வந்து ஒரு சாக்லேட்டோ இல்ல ஒரு சின்ன அது கிடைக்காத பொருள் கிடைச்சா எவ்வளவு சந்தோஷம் கிடைக்குமோ அப்படி ஒரு சந்தோஷத்தை பார்த்தேன் இந்த முகத்துல.

    அந்த சந்தோஷம் வந்து இன்னைக்கு இப்படி உங்க எல்லார் முன்னாடியும் இப்படி கொண்டு வந்து உட்கார வச்சிருக்கு. அதுக்கு முதல்ல அந்த கடவுளுக்கு நான் நன்றி சொல்லணும். அடுத்து இதை வெளியில எல்லாம் கொண்டு வரணும் அப்படிங்கும் போது நிறைய அதற்கான சோதனை எல்லாம் நிறைய தாண்டி வரவேண்டியதா இருந்துச்சு. அடிக்கடி வெளியூர் பயணம் எல்லாரையும் பார்த்து இதை சொல்லணும். இந்த மாதிரி நான் ஒன்னு எடுத்திருக்கேன். இதை எப்படி ஏத்துக்குவாங்க? வெளியில மக்களோட கருத்துக்கள் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும். அதனால வந்து பயணம் ரொம்ப அதிகமா இருக்கும். நான் அதுக்காக என்னை தயார்படுத்திக்கிட்டேன்.

 பொதுவுடைமூர்த்தி ஐயா:

    ஆனா ஜோதிடம் படிச்சதோட தான் எனக்கு இந்த அனுபவம்.

 ராஜேஷ் சார்:

    எனக்கு ஆச்சரியமா இருக்கு. என்ன உங்களுக்கு எப்படி இப்படி திடீர்னு ஒரு ஜம்ப் கட் மாதிரி வருதே. எங்க சினிமால சொல்லுவோம், டாப்ன்னு ஒரு சீன் ஓபன் ஆகுது.

 பொதுவுடைமூர்த்தி ஐயா:

    எல்லாருமே படிக்கணும்னு. காரணம் என்னன்னா நான் இன்னைக்கு நல்லா இருக்கறதுக்கு காரணம்,  இன்னைக்கு இந்த ஜோதிடம் படிச்சது தான் சார்.  நான் இன்னைக்கு இவ்வளவு புரிதல் இருக்குறது,  ஒரு குடும்பம் ஒரு வாழ்க்கைன்னா என்ன, குடும்பம்னா என்ன, குழந்தைகள்னா என்ன, அனுபவம்னா என்ன, எல்லாருக்கும் ஒரு புரிதல் வந்ததுக்கு காரணம் இந்த ஜோதிடம். நான் படிச்சது எனக்கு இந்த அனுபவம். எனக்கு உள் உணர்ந்த விஷயத்தால நான் இவ்வளவு பொறுமையா இருக்கிறேன்.

     இது வேற எல்லாரும் புரிஞ்சுகிட்டாங்கன்னா எல்லாருடைய வாழ்க்கையும் எல்லாருடைய நல்லா சுபிட்சமா இருக்கும். அப்படிங்கறதுக்கு தான் இந்த ஜோதிடம் படிங்க. நீங்க எந்த ஜோதிட முறை படிச்சாலும் பரவாயில்லை. எனக்கு அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் படிக்கணும்னு கிடையாது. எந்த ஜோதிட முறை படிக்கிறாங்களோ அவங்க எந்த முறை எடுக்கலாம்.

   ஆனா அட்சய லக்ன பத்ததினா, இது நான் படிக்கும் போது 2004ல வந்து இந்த டிப்ளமோ படிக்கிறேன். என்ன படிக்கிறேன் அப்படின்னா ஆசிரியர் பயிற்சி. ஒரு வகுப்புனா எப்படி இருக்கணும்? மாணவர்களுக்கு இப்படித்தான் இருக்கணும். இப்படித்தான் கொடுக்கணும். ஒரு பாடத்திட்டம்னா இப்படித்தான் இருக்கணும். அது எவ்வளவு நேரம் கொடுக்கணும். எப்படி கொடுக்கணும். அது யார் எப்படி நடத்தணும்? என்ன வாரத்தை சொல்லணும். என்ன வார்த்தை சொல்லக்கூடாது. இது எல்லாமே ஒன் பை ஒன் எப்ப 2004லயே நான் முடிவு பண்றேன்.

     அதே மாதிரி இன்னைக்கு நான் இத்தனை வருஷமா அதை வந்து வகுப்பா நான் வந்து நடத்துறதுக்கு ஒரு பெரிய சப்போர்ட் பண்ணுது எனக்கு. இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் சார். நிறைய வாய்ப்புகள் எனக்கு கொடுத்துச்சு சார். உண்மையிலேயே இன்னைக்கு நல்லா இருக்குறதுக்கு காரணம் இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் தான் சார்.

 ராஜேஷ் சார்:

    பெரிய விஷயம்.

 பொதுவுடைமூர்த்தி ஐயா:

     எல்லாரும் படிக்கணுங்கிறது என்னுடைய வேண்டுகோள்.

 ராஜேஷ் சார்:

    அது தான் ரொம்ப ஆச்சரியமான விஷயம். எல்லாரும் என்கிட்ட வாங்க நான் பார்த்து சொல்றேங்கிறதை விட. எல்லாரும் படிக்கணுங்கிறீங்கல.

 பொதுவுடைமூர்த்தி ஐயா:

     நான் மட்டும் கிடையாது சார். ஏஎல்பி படிச்சவங்க எல்லாருமே இததான் எல்லாரும் சொல்றாங்க. ஏன்னா நான் படிச்சா நல்லா இருக்கு. நீங்களும் போய் படிங்கன்னு சொல்றாங்க. அவங்க ஜாதகம் பாருங்க நான் பாக்குறேன்னு சொல்லல. அவங்க கூட நீங்க போய் படிங்க அப்படிங்கறாங்க. அவங்களும் பாக்குறாங்க. நல்லா படிக்கிறாங்க.   நல்லா பாக்குறாங்க. நல்லா சொல்றாங்க. அவங்க எல்லாருக்கும் ஒரு சந்தோஷமான ஒரு நிகழ்வு. அதுல எல்லா முறைகளையும் நம்ம அட்சய லக்ன பத்ததில வாஸ்து கொண்டு வந்தாச்சு. நியூமராலஜி அதுல இருக்கு. ராசி சம்பந்தப்பட்ட கல்கள். ராசிக்கல் போடுறாங்க. அவங்க குறிப்பிட்ட திசைகள் வரைக்கும் தான் அந்த கல் இயங்கும். அது பிறகு இயங்காது.

    ஒரு வீட்டுக்கு ஒரு பத்து வருஷம் 20 வருஷம் இயங்கும். அதுக்கு பிறகு அந்த வீட்டோட தன்மை மாறும்.

ராஜேஷ் சார்:

  60 வருஷம் சொல்லுவாங்க கணக்கு.

 பொதுவுடைமூர்த்தி ஐயா:

     30 வருஷம் சார் கணக்கு. 30 வருஷத்துக்கு ஒரு சொத்து அப்படின்னு நம்ம சொல்றோம். 30 வருஷத்துக்கு ஒரு இயக்கம் இயங்கும். அப்படிங்கறது தான் இப்ப நிறைய இடத்துல அது மாதிரி.

   வாஸ்து சம்பந்தப்பட்டு தனியாவே ஒரு வகுப்பு எடுக்குறோம். இந்த மாதிரி நிறைய நிகழ்வு. அதுக்கு எல்லாமே என்ன பண்ணிருக்கோம் அப்படின்னா கிரகத்தோட வேல்யூன்னு (value) சொல்லி ஒன்னு கொடுக்கிறோம் சார். இப்ப எல்லாருமே இவங்க சொன்னாங்க சுக்கிரன் உச்சமா இருக்கு. இப்ப என்ன சொல்றாங்கன்னா சுக்கிரன் உச்சமா இருக்கு. எல்லாமே இவங்களுக்கு பார்த்தீங்கன்னா சுக்கிரன் உச்சமான எத்தனையோ ஜாதகத்துல பார்த்தீங்கன்னா, ரோட்ல ரொம்ப கஷ்டப்பட்டு நிக்கிறாங்க. ஒண்ணுமே இல்லை சுக்கிரன்  நீசம்னு சொன்ன ஜாதகம் கால் மேல காலை போட்டு மாட மாளிகையில உட்கார்ந்து இருக்கு. அப்ப இவங்க வேல்யூ என்னன்னு தெரியல.

    அதுக்கு தான் நான் என்ன பண்ணேன் அதுக்குன்னு ஒரு கிரகத்துக்கு வேல்யூன்னு ஒரு சாப்ட்வேர் கிரியேட் பண்ணேன். அப்ப சுக்கிரனுக்கு பாத்தீங்கன்னா அந்த ஜாதகம் யாரு கால் மேல காலை போட்டுக்கிட்டு மாட மாளிகையில உட்காருறாரோ அவங்களுக்கு பார்த்தீங்கன்னா 100 இருக்கும். அங்க பாத்தீங்கன்னா ரோட்டு ஓரத்துல நிக்கிறவருக்கு பார்த்தீங்கன்னா சுக்கிரன் உச்சம் வாங்குறீங்க அவங்களுக்கு ஜீரோ இருக்கு. 20% இருக்கு.

  அதை என்னால நான் ஆய்வு பண்ண முடியுது. இது நான் இல்ல சார் நீங்க போட்டாலும் அது வரும். ஏன்னா சாப்ட்வேர்ல.

  அதே மாதிரி ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் அஸ்வினி நட்சத்திரம் ஒன்றாம் பாதம் போச்சுன்னா அவங்க வீட்ல பொருள் காணாம போகும். அஸ்வினி நட்சத்திரம் ஒன்றாம் பாதம் போச்சுன்னா அவங்க வீட்ல ஐடி ரைட் வரும். அஸ்வினி நட்சத்திரம் ஒன்றாம் பாதம் போச்சுன்னா அவங்க வீட்ல இன்கம் டாக்ஸ்   சம்பந்தப்பட்ட,  டாக்குமென்ட் சம்பந்தப்பட்ட பிரச்சனை வருமா வரும். அஸ்வினி நட்சத்திரம் இரண்டாம் பாதம் போச்சுன்னா அவங்க வீட்ல எதிர்பாராத திடீர் திருமணம் நடந்தே தீரும்.

      இப்படி ஒவ்வொரு 108 நட்சத்திர பாதத்துக்கும் ஒரு கணக்கு இருக்குது சார்.

 ராஜேஷ் சார்:

  அப்பா அட அட

பொதுவுடைமூர்த்தி ஐயா:

    அதே மாதிரி ஒரு பூச நட்சத்திரம் யாராவது ஒருத்தர் இருக்காங்கன்னு வச்சுக்கோங்களேன். அவங்க வந்து அந்த நட்சத்திரங்கள் வந்து ஏக்கத்தோட தன்மைகள் அப்படின்னு சொல்லுவோம். எனக்கு ஒரு விஷயம் நடக்காது,  அந்த விஷயத்தை நான் உங்க கிட்ட தீர்த்துக்குவேன். அப்படின்னு சொல்லி, ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் அது பூசம், அனுஷம் இல்ல.  நீங்க பூரம், உத்திரம் எந்த நட்சத்திரம் சொன்னாலும் அவங்களுக்குன்னு ஒரு பேக்ரவுண்ட் ஒன்னு இருக்கும். அதுதான் நாங்க இன்னைக்கும் அதை சொல்லிக் கொடுக்கிறோம்.

ராஜேஷ் சார்:

     ரொம்ப ரொம்ப நன்றி டைம் எடுத்து வந்ததுக்கு.

 பொதுவுடைமூர்த்தி ஐயா:

    ரொம்ப நன்றி சார் நன்றி.

 ராஜேஷ் சார் :

     நக்கிரனின் ஓம் சரவணப நேயர்களுக்கு வணக்கம். இந்த மூர்த்தி சாருடைய அந்த கண்டுபிடிப்பு வந்து நிறைய நம்ம இந்த வரலாற்றுல செல்லி கிட்ஸ்  ரவீந்திரநாத் தாகூர் இவங்களுடைய திறமைகள்.  இப்ப லார்ட் மெக்காலே, நம்ம நாட்டுல விவேகானந்தர் இந்த மாதிரி எல்லாம் நிறைய விஷயங்களை நம்ம கேட்டு நம்மளால ஈவன் சர்ச்சில் கூட, வின்சென்ட் சர்ச்சில் யாராவது ஒருத்தவங்க பேசுனாங்கன்னா அரைமணி  நேரம்  பேசி முடிச்சா,  இவரை பேச சொன்னா அந்த ஹாஃப் அன் ஹவர் ஸ்பீச்சையும் டேப் ரெக்கார்ட் மாதிரி பேசிருவார்.  சர்ச்சில்   நடக்கப்போறது கூட அவருக்கு தெரியும் (premanture). இப்படி எல்லாம் நிறைய அறிவாளிகள் பெரிய வாழ்ந்தவர்களை எல்லாம் படிக்கும் போது நான் இதை நம்புறேன். இவரை,  யாரை? மூர்த்தி சாரை.

    இவருடைய அந்த கண்டுபிடிப்பு புதியது. ஸ்பேஸ்ல (space) இருந்து இருக்கிறது இவரால் எடுக்க முடியுதா? இல்ல ஸ்பேஸ்ல இருந்து வந்து இவருக்குள்ள திணிக்கப்படுதான்னு தெரியல. அது தான் ரொம்ப ஆச்சரியம். ஏன்னா டாக்டர் ஹரிகோன்னு ஒரு ஆளு அவன் எவ்வளவு ஆபரேஷன் பண்ணான். 20 லட்சம், 20 லட்சம் பேர் ட்ரீட்மென்ட் கொடுத்திருக்காப்புல அதெல்லாம் நாசாவுல இருந்து எல்லாம் வந்தெல்லாம் ஆராய்ச்சி பண்ணாங்க.

         இதெல்லாம் சும்மா என்னால நம்ப முடியல. நான் நம்ப மாட்டேன்னா, நீங்க நம்ப மாட்டேன்னா போக வேண்டியது தான். இந்த நாசாவிலிருந்து வந்தவங்க எல்லாம் டாக்டர் ஹரிகோன்ன ஆராய்ச்சி பண்ணாங்க. அது போல இவருடைய கண்டுபிடிப்பு இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்தாலும், இன்னும் ஒரு 10 ,20 ஆண்டுகள்ல இவருடைய கண்டுபிடிப்பு மிகப்பெரிய கண்டுபிடிப்பாக பின்னால் பேசப்படும். இந்த ALP ஜோதிடம் இன்னும் ஒரு சில ஆண்டுகள்ல மிகப்பெரிய அளவுல வளர்ந்து, நம்ம காலண்டர் பார்த்து டேட் பார்த்து இன்னைக்கு என்ன திதி?இன்னைக்கு என்ன இது நட்சத்திரம்? என்ன இன்னைக்கு என்ன? அப்படின்னு கேலண்டர்ல பாக்குற மாதிரி, அந்த மாதிரி ரொம்ப சாதாரணமா நிறைய பேர் வீட்ல டவுன்லோட் பண்ணி வச்சு, பார்க்கக் கூடிய அளவுக்கு இந்த  ALP  நிச்சயமாக வளரும் என்று நான் நம்புகிறேன்.

நன்றி.

வணக்கம்.

ALP ஜோதிட அலுவலகம்: 9786556156 / 9363035656

Comments