புத்திர தோஷம் ஏன்?, எதனால்? - ALP ஜோதிட முறையில் ஆய்வு.

அனைவருக்கும் வணக்கம்.

ALP  ஜோதிடர்  ஸ்ரீ குரு Dr.  சாந்தகுமார்.

   இன்னைக்கும்  பாரம்பரியத்தில   ஒரு  பதில் இல்லாத கேள்வி அப்படின்னு சொல்லுவாங்க. அந்த கேள்விக்கு நம்ம  ALP  இருந்து அழகான ஒரு தீர்வு இருக்கு, அப்படிங்கிறது பாக்க போறோம்.

      ஜென்ம லக்னம் மகரம்  என்று  எடுத்துக்கிறோம். குரு பகவான்  ஐந்தில் ரிஷபத்தில் இருக்கிறார்.  அப்படின்னு ஒரு நிலை எடுத்துக்கிறோம்.   இந்த நிலை பார்த்தீங்கன்னா, ஐந்தில் குரு பகவான் இருந்தால் புத்திர தோஷம். காரக பாவநாஸ்தினு சொல்வாங்க.www.alpastrology.com

 இரண்டு விதமான விதியும்,  விதிவிலக்கும் :

     புத்திர காரகன் புத்திர ஸ்தானத்தில் இருந்தாங்கன்னா குழந்தை இல்லை, அப்படின்னு ஒரு சாராரும், அந்த குரு பகவானுடைய ஒன்பதாம் பார்வை லக்னத்துக்கு இருக்கிறதுனால குழந்தை இருக்குதுன்னு  இரண்டாவது  சாராரும்  இரண்டு விதமான ஒரு விதியும்,விதிவிலக்கும் பேசுறதுனால எது ரைட்டுன்னு ஒரு பெரிய கேள்வி இருக்கு.

         இது ரெண்டுமே ரைட்னு அப்படிங்கிறது தான் ALP சொல்லுது. அது எப்படின்னு பார்க்கலாமா?

எப்படி ALP யில் கரெக்ட்?

       ஜாதகரின்  ஜென்ம லக்னம் மகரம்.  அப்படின்னா, அவருக்கு  20 வயதிற்கு பின், ALP லக்னம் மீனத்தில் வந்துரும். ALP பிரகாரம் மூன்றாம் இடத்தில் குரு பகவான்  இருந்தால் வீரியம் குறைவு. இப்ப குழந்தை இருக்குமானால் குழந்தை  இருக்காது. இது சரியா இருக்கா. இந்த இடத்துல கரெக்ட்.

      ஆனா, இந்த லக்னம் இங்கே இருக்காது. இது நகர்ந்து அடுத்து முப்பது வயதுக்கு வரும் போது ALP நகர்ந்து மேஷத்துக்கு வரும் போது, அதற்கான தீர்வும் வரும் அப்படிங்கிறது தான் இங்க நிகழ்வா நாம பாக்க போறோம்.

லக்னம் மாற்றத்திற்கு பின் தீர்வு :

   அப்போ மீனத்தில் இருக்கும் போது 3-ல் இருக்கும் குரு பகவான் இங்க வீரியத்தை தடை செய்து அப்படிங்கிறதாகவும், ஜென்ம லக்னத்திற்கு நாலாம் இடத்தில் (மேஷத்திற்கு) ALP லக்னம் நகர்ந்த பிறகு இந்த குழந்தை பாக்கியம் இல்லாதது அதற்கான தீர்வும் உருவாகிடும். அப்படிங்கிற நிகழ்வையும் நாம இங்க கணக்குல பார்த்துக்கலாம்.

   பாரம்பரியத்தில் சொல்லப்படக்கூடிய இரண்டு குழப்பமான விதிகளுக்கும்,  தீர்வுகள் ALP மூலமா நாம பார்க்க  முடியுதுங்கிறது ALP னுடைய விசேஷம்னு நாம சொல்றோம்.www.alpastrology.org

   இந்த இடத்துல இந்த மாதிரி ஒரு அருமையான வயதிற்கு ஏற்ற லக்னம் அப்படிங்கிற ஒரு தன்மை உருவாக்கி கொடுக்கிறதுனால தான் இந்த தீர்வை அழகா பாக்க முடியுது இல்லையா? இதை உருவாக்கிக் கொடுத்த நமது குருவான திரு பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களை இந்த நேரத்துல வணங்குவோம். நன்றி சொல்லுவோம்.

 நன்றி. வணக்கம்.

ALP ஜோதிட அலுவலகம்: 9786556156 / 9363035656


 

Comments