ALP ஜோதிட முறையில் கணித்தவர் கூறிய உண்மைகள்.திரைக்கலைஞர் திரு.ராஜேஷ் சார் அவர்களின் நேர்காணலில்


அறிமுகம்

ஓம் சரவணபவ நேயர்களுக்கு வணக்கம். இன்றைக்கு நாம பார்க்கப் போறது புதிதாக ஒரு ஜோதிட கணிப்பு. ஜோதிடர் ஒருவர் அவர் வந்து ஒரு கணிப்புகளை எல்லாம் மிக அருமையாக கணித்திருக்கிறார். மதுரையில் டாக்டர் விக்னேஷ் என்பவர் நல்ல உளவியல் அடிப்படையில் போன பிறவி இது மாதிரி எதிர்காலத்தில வரக்கூடிய பிறவிகள் பத்தி எல்லாம் பெரிய ஆய்வு செய்து புக் எல்லாம் போட்டார். அவரைப் பற்றி நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். நிறைய சொல்லி இருக்கிறேன். அவர்தான் எனக்கு இவரை அறிமுகப்படுத்தினார். போன் மூலம் சொன்னார். இப்படி ஒருத்தர் வர்ராரு அவரை நீங்க பாருங்கன்னு சொல்லி.

 அவர கூப்பிட்டு வச்சு நான் பேசினேன். பட் எனக்கு அந்த கால்குலேஷன் எல்லாம் அந்த அளவுக்கு பிடிபடவில்லை. ஏன்னா நான் வந்து 30 ஆண்டுகள் ஆயிட்டு ஜோதிடம் படித்து அதை பார்த்து. நான் ஆய்வு தான் செய்து கொண்டிருக்கிறேன் பல்வேறு ஜோதிடர்களிடம் சென்று. அத வந்து மோகன் சீனிவாசன் என்று சொல்பவர் நம்ம வீட்டில் இருக்கக்கூடிய அப்பா, அம்மா,தாத்தா, பாட்டி, அண்ணன், தம்பி இவங்ககிட்ட இருக்கக்கூடிய எல்லா நட்சத்திரம் லக்னம் திதி இவைகள் எல்லாம் வச்சு ஒரு பத்து பேரு இது எடுத்தார்னா ஒரு அப்ராக்சிமேட்டா நான் வந்து ஒன்பதிலிருந்து பத்து குள்ள பிறந்தேன். இல்ல பத்துல இருந்து பத்திரைக்குள்ள பிறந்தேன், அப்படின்னு ஒரு அப்ராக்ஸிமேட்டா ஆப் அன் ஹவர் ஒன் ஹவர் டைம் சொன்னா இவர் கால்குலேட் பண்ணி கரெக்டா துல்லியமாக செகண்ட் முதற்கொண்டு சொல்லி விடுகிறார். மோகன் சீனிவாசன் அடையாறில் இருக்கிறார்.

 அவரிடம் நான் இவரை அனுப்பிச்சேன். ஏன்னா நம்ம ஒரு இசைனா அது சுப்புடு கிட்ட கேட்கணும். இல்லனா ஒரு இசை அமைப்பாளரையும் இன்னொரு இசையமைப்பாளர் கிட்ட எப்படின்னு கேட்கணும். அந்த மாதிரி வாமனன் போன்ற விமர்சகர் கிட்ட கேட்கணும். அது மாதிரி மோகன் சீனிவாசன் கிட்ட அனுப்பினேன். அப்புறம் அவர் கிட்ட கேட்டேன் அவர் மிக அருமையாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். அது மட்டும் இல்ல இரண்டு பேரும் சேர்ந்து 13 to 13.30 மணி நேரம் இரண்டு பேரும் விவாதித்து உரையாடி இருக்கிறார்கள். அவரை தான் இன்றைக்கு நான் அழைத்து வந்திருக்கிறேன் ஸ்டூடியோவுக்கு. நாம அவரிடம் சில கேள்விகள் கேட்போம்.

 அதற்கு முன்பாக அவர் வந்து என்ன சொல்கிறார் என்றால், நான் இப்பொழுது சிம்ம லக்னம் என்று சொல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன். நான் சிம்ம லக்னத்தில் பிறந்தேன் என்றால் ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் இந்த லக்னம் மாறிக்கொண்டே வருகிறது என்று சொல்கிறார். பத்து வயது வரைக்கும் சிம்ம லக்னம். இல்ல அது எவ்வளவு கழிந்திருக்கிறதோ சிம்ம லக்னத்தில் அது ஒரு கால்குலேஷன் வைத்திருக்கிறார். இந்த சிம்ம லக்னம் எந்த இடத்தில் வந்துச்சு மகத்துல வந்துச்சுன்னா அப்படின்னு சொன்னா அப்போ ஒன்பது வருஷம் வரும். அப்போ அந்த இதை கழித்து விட்டால் இப்படியே ஒவ்வொன்னையும் கழித்துக் கொண்டே வந்தால் இப்பொழுது நான் மீன லக்னம் என்று சொல்கிறார்.

www.alpastrology.com

இப்பொழுது
நாம் பேசப்போகிறது ஜோதிடர்களுக்கும் ஜாதகம் பார்க்க விரும்புவருக்கும் இது கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கும். அதுலயும் ஜோதிடர்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும். அக்குரேட்டா கால்குலேட்டிவ்வா ஒரு கம்ப்யூட்டர்ல போட்ட மாதிரி செகண்ட் முதல் கொண்டு அவர் மோகன் சீனிவாசன் உடைய, நான் பிறந்தது வந்து இரவு 10.03.

10.03 நாலு செகண்ட் , செகண்ட் அந்த செகண்ட் கூட சொல்ல கூடிய அளவுக்கு கம்ப்யூட்டர்ல இப்போ வளர்ச்சி வந்து இருக்கு விஞ்ஞான தொழில்நுட்பத்துல. அந்த மாதிரி  பொதுவுடைமூர்த்தி பண்ணியிருக்கிறார்.

 இவர் யார் என்று சொன்னால் இன்றைக்கு தமிழ்நாட்டிலேயே பேசு பொருளாக எல்லா youtube லயும் வந்து கொண்டிருக்கிற  மதிப்பிற்குரிய சசிகலா அம்மா அவர்கள். அதாவது அவருடைய கட்சியை சேர்ந்தவர்கள் விரும்புகிறவர்கள் சொல்கின்ற  மரியாதையான பெயர் வந்து சின்னம்மா என்று அழைக்கிறார்கள். அவர்கள் பிறக்கும் போது 1954 ஆகஸ்ட் மாதம் பிறந்தார்கள். அவர்கள் பிறக்கும் போது ஒரு ஜோதிடர் அவர்களைப் பார்த்து கணித்து சொல்லி இருக்கிறார். என்ன சொல்லி இருக்கிறார் என்றால். அவர் ஜோதிடர் பேர் சண்முக வாத்தியார் என்று பெயர். அவர் இந்த மாதிரி இந்த அம்மா பிறக்கும்போது ஜாதகம் பார்த்து இவர் தமிழ்நாட்டிலே ஒரு பெயர் விளங்குகின்ற எல்லோருக்கும் தெரிகின்ற பெரும் அளவு எல்லாரும் பேசுகின்ற அளவுக்கு ஒரு அதிகார தலைமைக்கு அவர் வரக்கூடிய அளவிற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.

 இது அவர்கள் ஏதோ கேட்டுவிட்டு ரொம்ப ஆதரவாக பெருசாக சொல்கிறார் என்று  நினைத்து இருக்கிறார்கள். ஏன்னா எதுவுமே இல்லை ஒன்னும் சினிமா நடிகராக வேண்டும். இல்ல அரசியல்வாதியாகணும். இது ரெண்டுமே அவர்களுக்கு எய்மோ அவங்க குடும்பத்திலையோ இல்ல. எனவே அப்படி இருந்துவிட்டு திருப்பியும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் இறந்த பிறகு அவர்களுடைய வளர்ச்சியை பார்த்து அப்புறம்தான் இவரை நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

 அந்த ஜோதிடரைப் போய் திருப்பி பார்த்து இருக்கிறார்கள். அவர் ஊர் எது என்று கேட்டால், வேதாரண்யம் பக்கத்துல இருக்கக்கூடிய தென்னடார் அப்படிங்கற ஊரைச் சேர்ந்தவர் தான் அவர். அவர் வந்து இவருடைய அக்கா பையன் தான் இவர் பொதுவுடைமூர்த்தி என்பவர். இவர் நான்கு தலைமுறைகளாக இவர் ஜோதிடக்கலையை அந்த நாலாவது தலைமுறையாக இவர் ஜோதிடம் பார்க்கிறார். நடேசன் என்பவர் முதலில் பார்த்திருக்கிறார். அதன் பிறகு சண்முகநாதன் வேத ரத்தினம் இப்படி வரிசையாக சொல்கிறார் அந்த கணக்கை. இவர் தாய் வழியில் வந்த ஒரு பேரன் இவர். இந்த பையன் பொதுவுடைமூர்த்தி அவர்கள். இவருக்கு இப்போ 38 வயசு ஆகிறது.

 இந்த பொதுவுடைமூர்த்திக்கு அவங்க பேமிலில 14 பேர் இருக்கிறார்கள் ஜோதிடர்கள். இப்படி எல்லாம் வச்சு கால்குலேட் பண்ணும் போது அவங்களுக்கு ஒரு சின்ன குழப்பம். என்ன இந்தப் பையன் சொல்றது மட்டும் கரெக்டா இருக்கு. மத்த எல்லாரும் சொல்றது கால்குலேஷன் மிஸ் ஆகுதே. ஆனா ஜோதிடம் என்பது உண்மை அது எப்படி கால்குலேட் பண்ணுகிறான் என்பது இவர் ரொம்ப அதற்கான ஆராய்ச்சிகள் எல்லாம் பண்ணி. எட்டு ஆண்டுகள் பத்து ஆண்டுகளுக்கு மேல பண்ணி ஒரு மெத்தடை கண்டுபிடிச்சிருக்காரு.

 


இதற்கு முன்பாக இவர் என்ன பண்ணி இருக்கார் அப்படின்னு கேட்டா, அந்த நீம் கரோலி பாபா அப்படின்னு சொல்லி உத்தரகாண்டில் ஒருவர் இருந்திருக்கிறார். 1900 இல் பிறந்து 1973 இல் இறந்து விட்டார். தன்னுடைய 74 வது வயதில் அதில் இறந்துட்டார். அவர் இறக்கும்போது அவர் வந்து ஒரு பெரிய பவர்ஃபுல் மேன் அப்படின்னு சொல்லி இருக்காங்க. அவர் 73 இறந்த பிறகு இவருடைய ஆசிரமத்துக்கு யாராவது போனாங்கன்னா அவங்களுக்கு ஒரு மாற்றம் ஏற்படும் என்பது நம்பிக்கை பரவலாக வெளியிலேயே இருக்கிறது.

 இதைப்பற்றி இவர் படிக்கும்போது இந்த ஸ்டீவ் ஜாப்ஸ் என்கின்ற லெவல்ல ஆப்பிள் அதெல்லாம் கண்டுபிடிச்சாங்கல, இவங்க எல்லாம் என்ன பண்ணி இருக்காங்க அவர் மரிப்பதற்கு முன்பாகவே அவர்களெல்லாம் இவரை வந்து பார்த்து, யாரு?

வெளிநாட்டில் இருப்பவர்கள் இங்கே வந்து உத்தரகாண்டில் பார்த்திருக்கிறார். பார்த்தவுடனே நாம ஏதாவது ஒன்னு செய்யணும் கொள்ளணும் கேட்கும் போது அவர் ஒரு ஆப்பிளை எடுத்து கடித்துவிட்டு கொடுத்திருக்கிறார். அது நிறைய ரிஷிகள் அப்படி செய்வார்கள்.

 இவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. இது பிரபஞ்ச சக்தியா? இல்ல  நடக்க போறது காக்கா ஏற பனம்பழம் விழுந்ததா? என்ன நடக்க போறது அவர் முன்கூட்டியே அறிந்திருக்கிறாரா? என்பது தெரியாது. ஆப்பிளைக் கடித்துவிட்டு கொடுத்த உடனே இவர்கள் எல்லாம் போய் அதை ஆராய்ச்சி பண்ணி, 1976 லிருந்து முயற்சி பண்ணி இந்த ஆப்பிள் என்கிற கம்பெனி இன்றைக்கு உலகம்  முழுவதுமும் மிகப்பெரிய மல்டி மில்லினரா அவர்கள் ஆகிவிட்டார்கள். இதை,  இவர்                   பொதுவுடைமூர்த்தி படித்திருக்கிறார்.

 நேராக உத்தரகாண்ட் சென்று இருக்கிறார். மூன்று பேர் பிளான் பண்ணி இருக்கிறார்கள். மூன்று பேர் போகலாம் என்று அதுல ரெண்டு பேர் வர முடியாமல் போயிட்டாங்க. அவர்களுக்கு பிராப்ளம் இல்லை என்று அர்த்தம் என்னை பொருத்தவரையில்ல. இவர் தனியாக சென்று அங்கு ஒரு வாரம் தங்கி இருந்திருக்கிறார். அவர்தான் 73 ல் இறந்து விட்டாரே. இப்போ சமீபத்தில் போய் அவர் தங்கி இருந்திருக்கிறார். தங்கி இருந்துட்டு திரும்பி வந்த உடனே அவருக்கு ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. அப்பேர்ப்பட்ட ஒரு மகான் இறந்த பிறகும் அந்த இடத்தில் இந்த வைப்ரேஷன் இருக்கிறது என்பது ரொம்ப ஆச்சரியமான ஒரு விஷயம். இதை அவர் எடுத்துக் கொண்டு வந்து இப்பொழுது பண்ணியிருக்கிறார்.

 ALP  ஆப் ன்னு பேரு. அட்சய லக்ன பத்ததி அப்படிங்கறது அதனுடைய எக்ஸ்பென்ஷன். அத வந்து நீங்க எல்லாரும் போட்டு பார்க்கலாம். மூன்று புத்தகங்கள் எழுதி இருக்கிறார் இதுவரை. இன்னும் 15 புத்தகம் எழுத வேண்டி இருக்கிறது. முழுவதுமாக ஆய்வு செய்து இது நம்ம  கிராமத்தில் சொல்றது மாதிரி தோண்டி தூர் வாரி இருக்காரு இந்த ஜோதிடக்கலையை. அது நிறைய பேர் கேபி சிஸ்டம் அது இதுன்னு நிறைய பேர் சொல்லுவாங்க, சில பேரு  திருக்கணித்தத்தை பண்ணுவாங்க சிலர் வாக்கிய பஞ்சாங்கம் பார்ப்பாங்க. எது இருந்தாலும் இவர்  கம்ப்யூட்டர்ல போட்டு நல்ல ஆய்வு செய்து மிக அருமையாக செய்திருக்கிறார்.

 இயக்குனர் மகாராஜன் அவர்கள் தமிழ் படத்திலே ஒரு ஐந்து ஆறு படங்கள் இயக்கினார். அதிலே அரசாட்சி என்ற படம் மிகப்பெரிய அளவிலே வக்கீல்கள் எல்லாம் அவர் மேலே வழக்குகள் எல்லாம் போட்டு. அது மிகப் பிரபல்யமான ஒரு படம். அவர் தர்மேந்திரா அவர்களுடைய மகன் சன்னிடூயலை வைத்து இந்தியன் படம் பண்ணி மிகப்பெரிய வெற்றி அடைந்தவர். அதன் பிறகு இந்தியன் 2 எடுக்க இருக்கிறார். நிறைய நல்ல கதை ஆசிரியர் எனக்கு அந்த காலத்துல மிகப்பெரிய ஆட்கள் எல்லாம் அங்கு இருந்தார்கள் கதை ஆசிரியர்கள் அவர்களைப் போல் நான் இப்போ பார்ப்பதிலே எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்

 மகாராஜன் சார் அவர் சொன்னதுனால தான் நான் இவரை கூப்பிட்டு வந்து பேசினேன். இவரை நாம் அறிமுகப்படுத்த வேண்டும். ஏனென்றால், தமிழகத்திற்கு நிறைய பேர்கள் இன்னைக்கு ஜோதிடர்கள் இருக்கிறார்கள். இவர் ஒரு வித்தியாசமான கணிப்பை கணித்திருக்கிறார். அது அந்த அளவுக்கு அக்யூரேட்டா இருக்கிறது. கடந்த காலமும் தெரிகிறது நிகழ்காலமும் சொல்ல முடியுது இவரால எதிர்காலத்தையும் சொல்ல முடியுது.

 அதுக்கப்புறம் மகாராஜன் சார்கிட்ட கேட்டேன் சார் ஏதாவது ஒரு உதாரணம் சொல்லுங்களேன்னு, அவர் என்ன பண்ணார் ஒரு பெரிய பிசினஸ்மேன் நல்ல ஃப்ரீக்குவன்ட் டிராவலர். பிளைட்ல எல்லாம் பாம்பே,மெட்ராஸ், கோயம்புத்தூர் இதெல்லாம் இப்படி போய் வந்து கொண்டிருப்பவர். அவர் என்னன்னு கேட்டா ஒரு சமீப காலமாவே அவர் பிளைட்ல போறதுக்கு பயப்பிடுறாரு.

 அது போபியா ன்னு சொல்லுவாங்க சைக்காலஜில. அது ஹைட் போபியா சிலபேர் தண்ணில ஹைட்ரோபோபியா இருக்கும் தண்ணில போக மாட்டாங்க. கார்ல போக மாட்டாங்க. எனக்கெல்லாம் தனியா கார்ல போறது கொஞ்சம் பயம். அதுக்கு பிளைட் கூட எனக்கு பயம் கிடையாது. ட்ரெயின்ல போறதுக்கு சில பேர் பயப்படுவாங்க அரியலூர் ரயில் விபத்து ஏற்பட்ட பிறகு நிறைய பேர் ரயில்ல போறதுக்கு பயப்படுவாங்க. நிறைய பேர சொல்ல நான் விரும்பல. அப்படிப்பட்ட ஒரு ஃபியர் சைக்கோஸிஸ் அவர் இருந்திருக்கிறார். இவரை பார்த்திருக்கிறார்.

 பார்த்த உடனே இவர் அதை கால்குலேட் பண்ணி விட்டு. நீங்கள் கடைசியாக போனது மதுரையா? மதுரைக்கு பிளைட்ல போயிட்டு திருப்பி அதோடு விட்டுட்டீங்களா? அப்படின்னு கேட்டு இருக்காப்ல. ஆமா சார் மதுரையில போய் இறங்குன என்னனு தெரியல திருப்பி மெட்ராசுக்கு வருவதற்கு பயந்துகிட்டு நான் கார்ல வந்து இருக்கேன் அப்படின்னு சொல்லி இருக்கிறார். அவர் எப்படி அதை கால்குலேட் பண்ணார் என்று இயக்குனர் மகாராஜன் அவர்கள் ஆச்சரியமாக கேட்டிருக்கிறார். அது அவர் வந்து இவரை பொருத்தவரை கொஞ்சம் இன்டரோவர்ட்டாக இருக்கிறார். அதாவது அதிகமாக பேசாமல் காந்தியைப் போல பேச்சை குறைத்து சாதனையில் செயலில் அதிகமாக காந்தியை சொன்னது போல அவர் நடந்து கொண்டிருக்கிறார்.

 அதெல்லாம் ஒரு ஆப் ஒன்று செய்திருக்கிறார். அதுல நிறைய பேருக்கு ஃப்ரீயாவே கொடுத்து இருக்கிறார். 2000 ஸ்டூடண்ட்ஸ் இதுவரைக்கும் அவரிடம் படித்து வெளியேறியிருக்கிறார்கள். இப்பொழுது நிறைய பேர் வந்து கொண்டிருக்கிறார்கள். ஜோதிடர்களும் ஜாதகம் பார்க்க விரும்புகிறவர்களும் இல்ல புதிதாக இந்த கலையை கற்றுக் கொள்ள வேண்டும் என்று புதியவர்கள் வருகிறார்களே அவர்களுக்கும் இது ஒரு அருமையான இன்டர்வியூ. அது அவர்களிடம் நீங்கள் கேட்டு நம்பர்களை வாங்கி தொடர்பு கொண்டு நன்றாக நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். மாறும் என்பதே மாறாத விதி. மாறுதல் இல்லாமல் மாறுதல் இல்லை என்று சொல்வதைப் போல, எல்லாமே வளர்ச்சியை நோக்கிய சென்று கொண்டிருக்கிறது.

 ஆனால் ஜோதிடக்கலை மட்டும் அந்த காலத்தில் ஜாதக அலங்காரம் இந்த மாதிரி பிரம்ம சூத்திரம் இப்படி நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. அதை அகத்தியர் எழுதின புத்தகங்கள் எல்லாம். இதை பாடல்களாக பாடிக்கொண்டு அப்படியே ஜோதிடத்தை கற்றுக்கொண்டு இருப்பவர்கள் மத்தியில் இது ஒரு அருமையான கால்குலேஷனாக மிக அருமையாக இருக்கிறது. அதை அவரிடம் சில கேள்விகள் கேட்டு நான் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.

 திரு. ராஜேஷ் சார் :

 வணக்கம் பொதுவுடை ஏஎல்பி மூர்த்தி. ரொம்ப நாளைக்கு முன்னாடி டாக்டர் விஜய் சங்கர் சொன்னாரு. அப்புறம் திரைப்பட இயக்குனர் ஹிந்தி படம் எல்லாம் பண்ண டைரக்டர் மகாராஜன் சார் கூட்டிட்டு வந்தார்.

 இடையில ஒரு ரெண்டு வருஷம் நீங்க இல்லைனதும், நான் வந்து என்னடா ஃபாரின் ஏதும் போய்ட்டாரா? என்ன போன் பண்ணி எடுக்க மாட்டேங்கறாருனு நெனச்சேன். அப்புறம்தான் நீங்க கொரோனா விஷயம் சொன்னதெல்லாம் தெரிஞ்சது. இந்த சசிகலா அம்மாவுக்கு சொன்னது உங்க தாய் மாமா வா? உங்க பேமிலில ஏதோ 14 பேர் இருக்காங்கன்னு எல்லாம் சொன்னீங்க.

 திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா:

 தாத்தா வந்து சண்முக வாத்தியார்னாலே தெரியும் அங்கதாத்தாவுடைய தாய் மாமா வந்து வேத ரத்தினம். ரெண்டு பேருமே இந்த ஜாதகத்தை எழுதும் போது சொல்றாங்க, தாத்தா எழுதுறாரு சண்முக வாத்தியார். இது அரசியல் ஜாதகம் அப்படின்னு எழுதுறாங்க.

 திரு. ராஜேஷ் சார்:

 யார்? சசிகலா அம்மா அவ.

 திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா:

 ஆமா. அவங்க சொல்றாங்க எங்க ஃபேமிலி எல்லாமே டாக்டர் சம்பந்தப்பட்ட பேமிலி. இது எப்படி இது எல்லாம் சாத்தியம். அப்படின்னு சொல்லும்போது அப்ப யாருமே ஏத்துக்கிட மாட்டாங்கல்ல. அதுதான் ஆச்சரியமா இருந்தது. பிற்காலத்துல அது பத்தி ரொம்ப ஆச்சரியப்பட்டு கூப்பிட்டு அதற்கான வெகுமதிகள் எல்லாம் பாராட்டுக்கள் எல்லாம் கொடுக்கும் போது அது அப்பதான் அந்த ஜாதகம் ஆன்மீகம் அந்த ஜோதிடம் கலை வந்து மதிக்கப்படும் போது தான சந்தோஷம்.

 திரு. ராஜேஷ் சார்:

 ஆமாமா. அது வெற்றி பெறும் போது தான்எதிர்காலத்தைப் பற்றி உரைச்சது வெற்றி பெறும்போதுதான் அது ஜோதிடம் உண்மைனே தெரியும். அது இவ்ளோ பெரிய சேஞ்சஸ் ஆக. மன்னார்குடியில் பக்கத்துல பிறந்து அங்க போய் மெட்ராஸ்ல ஜெயலலிதா அம்மாவோட சேர்ந்து. அது பெரிய ஆச்சரியமா இருக்கு. அவர் இப்ப இல்ல சண்முகநாதன் இல்ல ஆமா. இப்ப யாரோ ஒருத்தர் முத்து கண்ணுன்னு சொன்னீங்க இல்ல அவர் யாரு?

 திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா:

 அது மாமா தாய் மாமா.

 திரு. ராஜேஷ் சார்:

 சசிகலா அம்மாவிற்கு சொன்னது உங்க அம்மாவோட அண்ணன். இப்போ ஏதோ கண்ணு தெரியாதுன்னு சொன்னீங்கல.

 திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா:

 ஆமா அவங்களுக்கு கண்ணு தெரியாது.

 திரு. ராஜேஷ் சார்:

 யாரு? முத்துகண்ணு

 திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா:

 ஆமா முத்துகண்ணு.

 திரு. ராஜேஷ் சார்:

 இப்போ இருக்காரு அவரு 83 வயது ஆகுது.

 திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா:

 ஆமாம். அவங்க மூலமா தான் உள்ள வந்ததுக்கு மிகப்பெரிய ஒரு காரணம்.

 திரு. ராஜேஷ் சார்:

 ALP கிறீங்களே அது? அட்சய?

 திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா:

 அட்சய லக்ன பத்ததி

 வளர்தல்

 திரு. ராஜேஷ் சார்:

 அப்புறம் உத்தரகாண்ட் போனீங்களே அது தான் ரொம்ப ஆச்சரியமா இருக்கு. அது எப்படி உங்களுக்கு இந்த யோசனை வந்தது?

 திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா:

 அதாவது என்னுடைய எண்ணங்கள் எப்படி நான் ஏதாவது ஒரு விஷயத்தை நம்ம தேடும்போது நமக்கு கொஞ்சம் அமைதியா தேடணும் அப்படிங்கற ஒரு இடம்தான். அப்போ இந்த இடத்தை விட இது பெட்டரா இருக்கும் அப்படிங்கும் போது எனக்கு ஒரு எண்ணங்கள் வந்து ஏதோ ஒரு நிகழ்வு மட்டும் அந்த நீம் கரோலி பாபா போய் பார்த்தா நமக்கு ஏதோ ஒன்னு நடந்திராதா? ஆசிரமம் போனா நடந்துராதா அப்படின்னு நான் யோசிக்கிறேன். இப்ப இன்னொரு எண்ணம் தோணுது எல்லாருக்கும் கொடுக்குறாங்க. நம்ம ஒரு ஆய்வாளர் ஒரு ஜோதிடம் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வு. மத்தபடி நமக்கு ஒரு பதவியோ பணமோ நம்மகிட்ட ஒரு பெரிய ஒரு கம்பெனி வைக்கிற அளவுக்கு என்கிட்ட பணம் கிடையாது.

 ஏன்னா ஸ்டீவ் சாப்ஸ் அவர் பெரிய கோடீஸ்வரர் அவருக்கு அப்படி ஒரு அமைப்பு கொடுத்தாங்க. மார்க் ஜூபருக்கு கொடுத்தாங்க அவங்க எல்லாம் பெரிய பெரிய நுட்பமான இடத்தில் இருக்காங்க அமெரிக்காவுல இருக்காங்க.

 நம்ம இருக்கிறதுலே கடை கோடி கிராமத்தில் இருக்கிறோம். இது சாத்தியம் கிடையாது. நம்மளை எப்படி உருட்ட முடியும். நம்மள எப்படி இவர் திசை திருப்ப முடியும். இது கற்பனை இதெல்லாம் நடக்காது இதெல்லாம் சாத்தியம் கிடையாது. எல்லாரும் உங்களை வந்து பார்த்தா நடந்துருமா என்ன. அப்படின்னு ஒரு எண்ணத்துல போய் பார்க்கும் போது, ஏன் ஜோதிடத்தில் நம்மள வந்து மாத்த முடியாது அப்படின்னு ஒரு எண்ணம் இருந்துச்சுஅங்க போகும் போதுதான் எப்பவுமே நோட்டு பக்கத்துல டைரி வச்சு குறிக்கிற எண்ணங்கள் எப்பவுமே இருக்கும். அங்க பாக்க கூடிய எண்ணங்கள் சமிக்கைகள் அந்த மாதிரி உணர்வுகளை நான் அதிக நேரம் உணர்வேன். அந்த இடத்தில் இருந்து உணரப்பட்ட ஒரு விஷயம் வந்து வளர்தல் அப்படிங்கற விஷயம் மட்டும் என் வாழ்க்கையை மாத்துனச்சி.

 திரு. ராஜேஷ் சார்:

 வளர்தல். எந்த வருஷம் போனீங்க?

 திரு .பொதுவுடைமூர்த்தி ஐயா:

 2009.

 திரு. ராஜேஷ் சார்:

 ஸ்டீவ் ஜாப்ஸ் ஏதோ போன மாதிரி சொன்னீங்களே?

 திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா:

 அவங்க போகும்போது அந்த ஆப்பிளை கடிச்சுட்டு கொடுக்கும்போது ஏன் இதையே நம்ம ஒரு சிம்பல உருவாக்க கூடாதுஅந்த ஆப்பிள் சிம்பல், கடித்தது வந்து நீம் கரோலி பாபா அப்படின்னு அது யதார்த்தமா நடந்த நிகழ்வை அவர் உருவாக்கினார் பாருங்க. தனிப்பட்ட திறமையை அந்த இடத்தில, எல்லாருமே ஆப்பிள கடிச்சிட்டு கொடுத்தா நான் சாப்பிடுவேன். அவ்வளவுதான் மக்களோட எண்ணங்கள் அப்படித்தான் இருக்கும்.

 திரு. ராஜேஷ் சார்:

 சாப்பிட்டா தான் அருள் நமக்கு வரும். நமக்கு பவர் வரும் நினைப்போம். ஆப்பிள்னு வெச்ச உடனே எனக்கு இதெல்லாம் தெரியாது. நான் நெனச்சேன் ஆடம் அன் ஈவ் ஆப்பிள் கடிச்சு கொடுப்பாங்கல அந்த சினிமா இங்கிலீஷ் படம் பார்த்த ஞாபகத்துல நான் நினைச்சிட்டேன். அது யாரோ அவருக்கு பாஸ்ட்ட போய் காமிச்சாராமே. ஸ்டீவ் ஜாப்ஸ் அவர் யார்கிட்டயோ போய் பார்த்தாங்கன்னு சொன்னாங்கலாமே.

 திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா:

 ஒவ்வொருத்தருமே அவங்க எல்லாமே பாத்தீங்கன்னா, இல்ல மார்க் ஜூகர் பேஸ்புக் ஓனர் தான் அந்த மாதிரி. ஸ்டீவ் ஜாப்ஸ் வந்து நிறைய டிஓட்டி வந்து அமெரிக்கால தான் அவங்களுக்கு நீம் கரோலி பாபாக்கு இருந்தாங்க. 1973 வரையுமே அங்க நிறைய பேர் வந்துட்டு போவாங்க. இவர் சொல்றது எல்லாம் ஒரு குறியீடா தான் சொல்லுவாங்க.

 சும்மா ஒரு பொருள் எடுத்துக் கொடுக்கிறது, கையை காண்பிக்கிறது, நீ உட்காருன்னு கைய காமிப்பாரு இவர் எதுக்கு நம்மள உட்கார சொல்றாரு அப்படின்னு நினைக்கிறாங்க. இவரு உட்காருங்க அப்படின்னுதுமே என்னடா எதுக்குமே காரணம் இல்லாம உட்கார சொல்றாரே அப்படின்னு உட்கார்ந்து மூணு கையை காமிக்கிறார். சரி எல்லாரும் கிளம்பி போயிட்டாங்க. இவர் என்ன சொன்னாரு இவர் உட்கார வச்சுட்டாரு. நம்ம உக்காந்துருவோம் அப்படின்னு ஒருத்தர் உட்கார்ந்திருக்கிறார். அது யாருன்னு ஸ்டீவ் ஜாப்ஸ் அங்க இருக்காங்க.

 அங்க போற வழில அது வெறும் மலைப்பகுதி. அந்த இடத்துல மூணு நாள் மழை பெஞ்சு நிலச்சரிவு வந்து போன வண்டியெல்லாம் நின்னு போச்சு. மூணு நாள் அந்தப் பாதை கட் ஆயிப்போச்சு. அப்பதான் உன் நம்மள வந்து அவருக்கு சொல்லும் போதெல்லாம் குறியீடுகளாக சமைக்கிகளாக அவர் சொல்ற வார்த்தைகள் ராம் ராம் ராம் அந்த வார்த்தைகளை வேற எதுவுமே சொல்ல மாட்டாங்க ராம் ராம் ராம் ராம் இருக்கும்.

 அந்த பயபக்தி வந்து, ஆஞ்சநேயர் ஓட ஒன்பது இடத்துல அவரு பிரதிஷ்டை பண்றாரு அந்த இடத்துல. பிரதிஷ்டை பண்ணி அப்படியே அங்கங்க வச்சுட்டு போயிருவாங்க. அவர் சொல்லும் போதெல்லாம் அர்ப்பணிப்பா தான் இருக்கும் அப்படியே. ராம் ராம் ராம் ராம் ராம் அப்படியே இருப்பார்.

 யாரையும் நல்லது கெட்டது அப்படிலாம் சொல்ல மாட்டார் அது குறியீடுகள் சொல்லும்போது யாருக்குமே அப்படித்தான். நமக்கும் அப்படித்தான் வளருதல் என்ற வார்த்தை எதார்த்தமா வந்த போது நான் அதை பயன்படுத்தி அட்சய லக்ன பார்த்தது என்று கொண்டு வந்தேன்.

 திரு. ராஜேஷ் சார்:

18 புத்தகத்தில் மூன்று புத்தகம் போட்டீங்க, இன்னும் 15 போடணும்.

 திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா:

 ஆமா ஆமா சார்.

 ALP பிரசன்னம்

 திரு. ராஜேஷ் சார்:

 மோகன் சீனிவாசன் அவர் உங்கள பத்தி ரொம்ப சொன்னாரு. உங்களுடைய அனுபவங்கள் எல்லாம் நிறைய கொடுத்தீங்க நான் இன்னும் அத பாக்கல. பேர் சொல்லி இருக்காங்க அந்த பிளைட்ல கூட ஒருத்தர் போய் பயந்துட்டு மறுபடி போகலன்னு சொன்னது எப்படி கண்டுபிடிச்சீங்க மதுரைன்னு?

 திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா:

 அது அவர் ஜாதகம் பிரசன்னமா போடும்போது அட்சய லக்ன பத்ததில பிரசன்னம்னு  என்ன பண்ணுவோம்னா நம்ம கூகுள் பிளே ஸ்டோர் ஆப் ALP அஸ்ட்ராலஜி சாப்ட்வேருக்கு உள்ளேயே இருக்கு. அது ரேண்டமா நம்பர், நம்ம போகும்போது ரேண்டமா ஒரு நம்பர் கிரியேட் ஆகி அதுக்கு ஒரு ஜாதகத்துக்கு வரும்போது அதுல புதன் ஷ்டமத்துக்கு போகுது. நான் பிளைட்ல போனேன் அப்படிங்கும் போது நாலு எட்டு சம்பந்தப்பட்டதுனாலே அட்டமாதிபதி புதன் அப்படின்னாலே மதுரை மீனாட்சி அப்படின்னு வரும்போது மதுரை போனீங்களா? அப்படின்னு கேட்டேன்

 அவருக்கு இது ஆச்சரியமா இருந்தது. நம்ம கிரக ரீதியா தான் இத சொன்னேன். அதன் பிறகு இது வந்து அந்த பயணங்கள்

தடைபடுதுல, அந்த இறங்கும் போது மனசுல ஒரு பயத்தை உருவாக்கும். அதன் பிறகு நீங்க பிளைட்ல போகலையா அப்படின்னு கேட்டேன். ஆமா அப்படின்னு சொன்னாரு. அது அவருக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது.

 ஆனா கிரக ரீதியாக ஜாதக ரீதியாக தான் இத சொன்னது. இது அட்சய லக்ன பத்ததிங்கற ஜோதிட முறை தான் நான் சொன்னேன். ஆனா வெளியிலிருந்து பார்க்கும்போது ஏதோ குறி சொல்றது மாதிரி.

 திரு. ராஜேஷ் சார்:

 புரியுது, புரியுது. முன்னறிவிப்பு மாதிரி. எதிர்காலத்தை உங்களால ஒரு ஞான திருஷ்டியில பாக்குற மாதிரி தெரியும்.

 திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா:

 அப்படி தான் சொன்னாங்க.

 திரு. ராஜேஷ் சார்:

 நீங்க ரெண்டும் செய்வீங்க. ஒரு முன்னறிவிப்ப வந்து ஒரு ஞான மார்க்கமா நாஸ்ட்ரோ டாமஸ் மாதிரி சொல்ற மாதிரியே இருக்கும். இல்ல ஜாதகம் கணிச்சு நீங்க சொல்ற மாதிரி, எனக்கு சிம்ம லக்னத்திற்கு மீன லக்னம் வந்துட்டு சொன்னீங்கல, அது மாதிரி உங்களுக்கு.

 திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா:

 அதுல உணர்தல் வந்து கொஞ்சம் ஆழ்ந்த அந்த சவுண்ட் ஒலிகளை வந்து ஆழ்ந்து உணரும்போது அந்த எண்ணங்கள் தோணுச்சு. அதுல இருந்து தான் எனக்கு நிறைய விஷயங்கள் கிடைக்க ஆரம்பிச்சது.

 திரு. ராஜேஷ் சார்:

 இவர் சொன்னார் மோகன் சீனிவாசன் கடந்த காலத்தையும் சொன்னிங்க, நிகழ்வும் சொன்னீங்க, எதிர்காலத்தையும் சொன்னிங்க. ரொம்ப அக்யூரேட்டா இருக்குன்னு சொன்னாரு

 திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா:

 மூன்று விதமா நாம பிரிச்சோம் அதையேஎன்னன்னா கடந்த கால நிகழ்வுகளை நான் சொன்னாதான், 79 லிருந்து 89. 89 லிருந்து 99. 20 வருஷம் உங்கள் லக்னம் நல்லா இருக்கு. நீங்க நல்லா இருப்பீங்க. நல்லா இருந்தீங்கன்னு நான் சொன்னேனா, இல்ல மூர்த்தி நான் 79 லிருந்து 89 நான் ஒண்ணுமே இல்ல மூர்த்தி அப்படின்னு, நான் சொல்லக்கூடிய விஷயங்கள் கரெக்டா இருந்தா தானே அந்த லக்னம் கரெக்டா இருக்கும்.

 79 லிருந்து 89, 89 லிருந்து 99 நீங்க மிகப் பிரபலமான ஒரு நடிகர் அப்படின்னா ஆம மூர்த்தி உங்கள் லக்னம் அன்னைக்கு விருச்சிக லக்னத்தில் இருந்து விசாக நட்சத்திரத்தில் இருந்து அந்த உத்திராட நட்சத்திரம் ஒன்னாம் பாதம் வரைக்கும் இருபது வருஷம் சார்.

 விருச்சிக லக்னம், தனுசு லக்னம் உங்களுக்கு பெயர் புகழ் குடுத்துச்சு. உங்க இயக்கங்களை சரியான வகையில பயன்படுத்துனீங்க. அந்த 89 லிருந்து 99 வரும் போது கொஞ்சம் மேலேயும் கீழையும் ஏற்ற இறக்கம் இருந்துச்சு. அது ஒரு நட்சத்திர பாதம் மாறும்போது அது கடந்த காலத்தை நான் சொன்னா தான சார் நம்புவீங்க. நூறு பேருக்கு சொன்னாலும் அதுதான் நடக்கும்.

 திரு. ராஜேஷ் சார்:

 எப்போ இத முடிப்பீங்க?

இந்த 15 புத்தகம்?

 திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா:

 ஆறு வருஷம் ஆகும் சார்.

 திரு. ராஜேஷ் சார்:

 ஆறு வருஷம் ஆகும். மொத்தம் எத்தனை இது 18 வருஷமா பண்றீங்களா? இந்த ப்ராக்டீஸ்.

 திரு. பொதுவுடை மூர்த்தி ஐயா:

 14 வருஷமா. ஏழு வருஷமா அட்சய லக்ன பத்ததி தனியா ஆய்வு பண்ணேன்.

 திரு. ராஜேஷ் சார்:

 ரொம்ப ஆச்சரியம் தான். ரொம்ப பெரிய விஷயம். மிக மிக நன்றி வேற எதுவும் நீங்க சொல்லனுமா? ஆடியன்ஸ்க்கு,

 திரு. பொதுவுடை மூர்த்தி ஐயா:

 இந்த அட்சய லக்ன பத்ததி வந்து அந்த லக்னத்தை நகர்த்தும் போது, வயது எப்படி மாறுதோ அந்த லக்னம் மாறும். மாறும்போது உங்களுக்கு தசா புத்தியை இணைத்து பலன் சொன்னாலே போதும். எல்லாத்துக்கும் ஒரே மாதிரியான பலன் சொல்லுவேன். திருவோண நட்சத்திரம் 4 ம் பாதத்தில் திருமணம் நடக்கும் நான் சொன்னேனா, என்கிட்ட படிச்ச மாணவரும் அதே திருவோண நட்சத்திரம் 4 ம் பாதத்தில்  திருமணம் நடக்கும்னு தான் சொல்லுவார்.

 ஏன்னா ஒரே மாதிரியான கால்குலேஷன் கொண்டு வரணும். இது ஒரே மாதிரியான ரூல் கொண்டு வரணும். இது ஏழைக்கு ஒருத்தருக்கு, பணக்கார ஒருத்தருக்கு, வசதி படைத்தவங்களுக்கு ஒன்னு, அதாவது சினிமா துறையில உள்ளவங்களுக்கு ஒன்னு. இது மாறாது இதுல.

 என்னுடைய தேவை 10 லட்ச ரூபாய் நான் உருவாக்கணும் அப்படின்னா இன்னொருத்தருக்கு 10 கோடி ரூபாய். அவங்களுடைய திறமைக்கு தகுந்தார் போல்

வசதி வாய்ப்புகள் கூடுமே தவிர ஆனா இவருக்கு 10 லட்சம் கிடைச்சுச்சு எனக்கு ஜாக்பாட் இன்னொரு பத்து கோடி கிடைச்சா அதுவும் உங்களுக்கு ஜாக்பாட். அப்படிங்கறதுதான் முறைகள். ஒரே மாதிரியான பலன்.

 இப்போ, மேஷ லக்னத்திற்கு நான் ஒரு புத்தகம் பதிவு பண்ணி இருக்கேன். கடந்த வாரம் தான் வெளியிட்டேன். அதாவது அட்சய லக்னம்1, 2 படிச்சவங்களுக்கு, இந்த மூணாவது புத்தகம் எப்படின்னா இப்ப மேஷ லக்னம் என்னுடைய லக்கனமாய் இருந்து இந்த கோச்சார கிரகங்கள் நகருதுல இந்த கோச்சார கிரகங்கள் தான் சார் இந்த கர்மாவை தீர்மானிக்கும்.

 திரு. ராஜேஷ் சார்:


 ஜாதகத்தைப் பொறுத்தவரைக்கும் சார் இந்தியால வந்து என்னன்னா கர்மா அப்படிங்கற ஒரு நம்பிக்கை. போன பிறவில செய்ததுக்கு தான் இந்த பிறவி நம்ம எடுத்திருக்கோம்பிறவி எடுத்ததே அதனாலதான்னு இருக்கு. ஆனா எதுவுமே மாற்ற முடியாது. ஜாதகம் அப்படியேதான் இருக்கும் அப்படின்னு. அந்த கால்குலேஷன்ல நிறைய மிஸ் ஆகுதுங்கிறது தான் உங்களுடைய தியரி.

 இப்ப சிம்ம லக்னம் நான் பிறந்தேனா என்னுடைய 70 வயசு தாண்டினது பிறகு சிம்ம லக்னமா இருக்கும். இல்ல அது மீன லக்னமா வந்துட்டீங்க நீங்க அப்படின்னு சொல்றீங்க. அது எப்படின்னு நீங்க சொல்லுங்களேன்.

 திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா

 ஒரு மூணு வயதில் உங்களுடைய எண்ணங்கள், உங்களுடைய உள்ள அமைப்பு எப்படி இருக்கும்னா அப்படின்னா எதுவுமே தெரியாது. 30 வயதுல வந்து பாத்தீங்கன்னா பெரிய ஹானஸ்டா இருக்கும். ஒரு 60 வயசுல அதைவிட மிகப்பெரிய தன்மையை இருக்கும். உடலுக்கு ஒரு தன்மை மனதுக்கு ஒரு தன்மை.

 மூணு வயசுல எனக்கு எதுவும் தெரியாது எங்க அம்மா அப்பா கொடுத்தது. அந்த உடலும் மனமும் ஒவ்வொரு வயதுக்கும் அந்த எண்ணங்களும் உடலும் மாறும்போது ஏன் லக்னம் மட்டும் மாறக்கூடாது அப்படிங்கறது தான் என்னுடைய கேள்வி.

 அப்போ இதுதான் நீங்க அனுபவிக்க போறீங்க. அப்போ சென்னையில இருந்து பெங்களூருக்கு தான் போ போறீங்க. அது எந்த வழியில போ போறீங்க அப்படிங்கறது. அதுதான் நான் என்ன சொல்றேன் இந்த உடல் எப்படி வளருது அப்படிங்கறத இந்த லக்னம் வழிய நகர்ந்து பார்க்கும் போது கண்டிப்பா நாம எந்த பாதையில் பயணிக்கிறோம். அந்த பாதை நல்ல பாதையா கெட்ட பாதையா அப்படிங்கிற இந்த லக்னம் முடிவு பண்ணும்.

 சிம்ம லக்னத்தில் இருந்து மீன லக்னம் வந்திருக்கீங்கன்னா உங்களுடைய வயதுல இந்த உடல் மேல கீழ ஏற்ற இறக்கம் நல்லது கெட்டது நோய் அப்படி எல்லாம் வந்திருக்கும். ஆனால் இந்த வயதுக்கு தகுந்த மாதிரி இந்த லக்கினத்திற்கு இந்த ராசி எடுத்துக்கிட்டோம்னா கண்டிப்பா 20 வயசில் ஒருவருக்கு சுக்கிர திசையும் 60 வயசுல ஒரு சுக்கிர திசை வரும் போது இந்த லக்னம் மாறும்போது ரெண்டு பேரோட ஆதிபத்தியம் மாறும்போது இந்த நூறு சதவீதம் லக்னம் மாறுச்சுனா ஆதிபத்தியம் மாறுச்சுனா பலன் எல்லாமே மாறி போகும்.

 தனுசு லக்கினத்திற்கு ஆறாம் அதிபதி சுக்கிர திசையா இருக்கும். அதே மகர லக்கினத்திற்கு ஐந்து பத்துக்குரிய மகர லக்கினத்திற்கு 20 வயசுல படிக்க கூடிய வயசுல சுக்கிர திசை வந்ததா டாக்டர் படிச்சிடுவாங்க.

 திரு. ராஜேஷ் சார்:

 அதனால் தான் ஜோசியக்காரங்க ஒருத்தர் சொல்றது இந்த மாதிரி கால்குலேட் பண்றது நடக்காம போகுது.

 திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா:

 இந்த ரெண்டு மணி நேரம் சொல்றீங்கல ஒரு லக்னத்துக்கு 2 மணி நேரம். அந்த ரெண்டு மணி நேரத்த உங்க பத்து வருஷத்துல எப்படி கால்குலேட் பண்றீங்க?

இந்த பத்து பத்து வருடங்கறது ஒரு நட்சத்திர பாதத்தை ஒரு வருஷம் ஒரு மாதம் 10 நாள் கடந்து செல்லும். இப்போ 360 டிகிரி என்பது 12 ராசி கட்டங்களோட அளவு. அதுல ஒரு கட்டத்துக்கு 30 டிகிரி. இந்த 360,120 வயது. அதாவது விம்சோதிரி  வயதுங்கறது 120. 360 வகுத்தல் 120 அப்படிங்கறது ஒரு வயதுக்கு மூன்று டிகிரி இந்த உடல் நகர்ந்து செல்லும். இந்த உடல் காரகத்தன்மை. அது வளருதுனா அடுத்தடுத்து 5 அடி 6 அடி 7 அடி வளருது.

 காரகத்தன்மையே அந்த உடலோடு அமைப்பை மாற்றும். எனக்கு இன்னைக்கு ஸ்வீட் பிடிக்கும், நாளைக்கு ஸ்வீட் பிடிக்காது. இன்னைக்கு எனக்கு ஒரு மியூசிக் பிடிக்கும் நாளைக்கு ஒரு மியூசிக் பிடிக்காது. இந்த மாதிரி காரகத்தன்மை என்ன பண்ணும் இந்த மூன்று டிகிரி ஒவ்வொரு வயதுக்கும், இப்போ 40 வயது 40 x 3 =120 டிகிரி. பிறந்த லக்னம், லக்னம் முடிந்து போனது. இந்த உடல் எங்க முடியுதோ அதுல இருந்து தான் எடுக்கணும்.

 அஸ்வினி நட்சத்திரம் ஒன்றாம் பாதம் ஒரு லக்னம் பிறக்குதுன்னா அப்ப ரேவதி நட்சத்திரம்  நாலாம் பாதத்திலே இந்த உடல் முடிஞ்சு போச்சு. எப்ப முடிஞ்சு போச்சுகடந்த ஜென்மத்துல. அந்த ஜென்மம் முடிஞ்ச பிறகு இந்த அம்மாவோட கர்ப்பத்துல தரிக்க கூடிய வயது அந்த காலம் வந்து பாத்தீங்கன்னா அந்த அஸ்வினி நட்சத்திரம் ஒன்னாம் பாதத்தில் இருந்து தொடர்ச்சியா அஸ்வினி 1, அஸ்வினி 2, அஸ்வினி 3,  அஸ்வினி 4 தொடர்ச்சியா ஒரு கோடு போட்டுட்டே வரேன். அந்தக் கோடு எங்க வந்து நிக்கிதோ அங்க முடிஞ்சு போகும். மேத்திலோ, ரிபத்திலோ எங்க வந்து முடியுதோ அங்க

 ஒவ்வொரு வயதும் இந்த உடலும் மனமும் வளரும்போது அந்த லக்கனம் நகரும் இதுல மாற்றுக்கருத்தே கிடையாது”.

 திரு. ராஜேஷ் சார்:

 இப்போ இந்த நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் அப்படிங்கிறாங்கல அஞ்சு நீங்க கால்குலேட் பண்றீங்களா இதுல?

 திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா:

 எல்லாமே. அந்தப் பாரம்பரியத்தை  அப்படியேதான் நான் எடுத்து இருக்கேன்.அந்த லக்னம் அப்படியே தான் இருக்கு. ஜென்ம லக்னம் என்பது நான் என்ன அனுபவிக்கணும்ங்கிறது பிறக்கிறது. அத நான் எப்படி அனுபவிக்க போறேன். நான் அதை எப்படி அனுபவிக்கிறது, சந்தோஷமா எந்தெந்த வயதில் என்ன அனுபவிக்க போறேங்கிறது வந்து அந்தந்த வயது லக்னம் தான் முடிவு பண்ணுகிறது தான் அட்சய லக்னம். அட்சய லக்னம் பத்ததி அப்படிங்கற ஒரு விஷயம்

 திரு. ராஜேஷ் சார்:

 ரொம்ப சந்தோஷம், ரொம்ப நன்றி.

 திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா:

 ரொம்ப சந்தோஷம், ரொம்ப நன்றி.

ALP ASTROLOGY OFFICE: 9363035656 / 9786556156


 

Comments