அனைவருக்கும் வணக்கம்.
இப்போ ஒரு ஜாதகம் பார்க்க போறோம். இந்த ஜாதகருக்கு இதுவரைக்கும் திருமணம் நடக்கல. ஆனால் இப்போ அவருக்கு காதல் (லவ்) சம்பந்தப்பட்ட விஷயங்கள் இவரோட லைஃப்ல போயிட்டு இருக்கு அப்படின்னு நாம சொல்லலாம். லவ் மேரேஜ் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஆகுறதுக்கு முன்னாடி லவ் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நடந்துட்டு இருக்கு அப்படின்னு எப்படி சொல்லலாம்? எங்கிற விஷயத்தை இங்க பார்ப்போம்.
பாரம்பரிய முறையில்:
உதாரணமாக, ஜென்ம லக்னம் கடகம். இப்போ இவருக்கு
ஐந்தாம் பாவகம் காதல் சம்பந்தப்பட்ட விஷயங்கள். பாரம்பரியத்தில் காதல்
சம்பந்தப்பட்ட விஷயங்கள் வரும் போது ஐந்தாம் பாவகத்தை எடுக்கணும்.
கடக லக்னாதிபதி சந்திரன் ஐந்தாம் அதிபதி இடத்தில் (விருச்சிகத்தில்) இருக்கிறார். ஐந்தாம் அதிபதியை பார்க்கணும். அதாவது காதல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் வரும் போது ஐந்தாம் அதிபதி எப்படி இருக்கார் அப்படின்னு பார்க்கணும்?
ஐந்தாம் அதிபதி செவ்வாய் பகவான்.
ஐந்தாம் பாவகத்தில் (விருச்சிகத்தில்) இருந்து எட்டாம்
பாவகம் ஆன மிதுனத்தில் செவ்வாய்
பகவான் இருக்கிறார். இதுக்கு எப்படி நீங்க பலன் சொல்லுவீங்க, அப்படின்னு நாம பாக்கணும்.www.alpastrology.com
திசையை
மட்டும் வைத்து
பலன் சொல்ல முடியுமா?
இப்போ
அவருக்கு நடக்கிற திசை என்ன பாத்தீங்கனா சுக்கிர திசை. நீங்க சொல்லலாம், பாதகாதிபதி திசை அப்படின்னு. ஆனால்,
ஐந்தாம் பாவத்தை கனெக்ட் பண்ணாமல் நாம திசையை மட்டும் வச்சு பலன் சொல்ல முடியாது
அப்படிங்கிறது தான் உண்மை. ஏன் அப்படின்னா? காதல் சம்பந்தப்பட்ட விஷயங்கள்
எல்லாம் ஐந்தாம் பாவகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை பொறுத்து வரும் அப்படின்னு
நாம படித்திருக்கிறோம்.
அப்போ சுக்கிர திசை ,சனி புத்தி, ராகு அந்தரம் அப்படின்னு வருது. ராகுபகவான் லக்னத்திற்கு எட்டாம் இடமான கும்பத்தில் இருக்கிறார். லக்னத்திற்கு, எட்டாம் இடத்தில் இருக்கிற ராகுபகவான் காதல் சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு எப்படி துணை புரிவார் அப்படிங்கிறது ஒரு கொஸ்டின் மார்க். இரண்டாவது, சனிபகவான் கடக லக்னத்திற்கு ஆறாம் வீடான தனுசு வீட்டில் இருக்கிறார். எப்படி இதை நடத்துவார் அப்படிங்கிறது கொஸ்டின் மார்க். இத நாம கேட்கணும்.
ஏன்னா ஒரு திசையில் ஒன்னு ஸ்டார்ட் ஆகுது. 2017 ல, இது ஸ்டார்ட் பண்ணும் போது நடக்கிற விஷயங்கள் சுக்கிர திசை, சனி புத்தி ,ராகு அந்தரம். நீங்க சுக்கிரனை பேஸ் பண்ணி சொல்லிடலாம். சுக்கிர பகவான் பதினோராம் வீடான துலாம் வீட்டில் இருக்கிறார். அதனால, காதல் சம்பந்தப்பட்ட விஷயங்கள். ஐந்தாம் பாவத்தை பார்க்கிறார். அதனால காதல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நடக்கும் அப்படின்னு சொல்லலாம்.
ஒன்னு சந்திர புத்தி அப்படின்னு வரணும், இல்ல சந்திரன் அந்தரம்னு வரணும். இங்க நடக்கிறது பார்த்தீங்கன்னா
சனிபகவான், ராகுபகவானு வருது. அதாவது சுக்கிர திசை, சனிபகவான் புத்தி, ராகுபகவான்
அந்தரம் அப்படின்னு வருது. எதுவுமே கனெக்ட் ஆகல பாருங்க.
அப்படின்னு நாம ஜஸ்ட்டிபிகேசன் குடுத்தோம்னு வச்சுக்கோங்களேன். சுக்கிர திசைனா, சுக்கிர திசை இருபது வருஷம் இருக்கு. அந்தக் காலகட்டத்துல எப்போ காதல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மலரும் அப்படிங்கிற விஷயத்தை பாரம்பரிய முறைப்படி பார்க்கும் போது பெரிய கொஸ்டின் மார்க். நமக்கு நிக்குது.
ALP முறையில்:
ALP ல
எப்படி பார்ப்பது அப்படிங்கிற விஷயத்தை பத்தி சார் கிட்ட கேட்போம். ALP ல வந்து இப்போ நடந்த நிகழ்வு அவர்
சொல்லிட்டாரு. சார், 2017
ல் ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டேன் அப்படின்னு சொல்லிட்டார். இது
எப்படி? அப்படின்னு கேட்கும் போது நமக்கு ALP ல பாக்கும் போது நாம ஒரே ஒரு விஷயத்தை பார்ப்போம்.
ALP லக்னாதிபதி யார்? அப்படின்னு பார்ப்போம். லக்னாதிபதி செவ்வாய் அட்டமத்துல (மிதுனத்தில்). அப்ப ஜாதகருக்கு பிரச்சனைல இருக்கு. இந்த காலகட்டம் அவருக்கு பிரச்சனை உண்டு அப்படின்னு தெரிஞ்சுகிட்டோம். ஆனா இவர் என்ன நட்சத்திரம்? விசாகம் - 4 ஆம் பாதம். அப்போ ரெண்டுக்கும் ஐந்துக்குரியவர் குருபகவான். எங்க இருக்கார்? ஏழாம் வீடான ரிஷபத்தில் இருக்கிறார். ஐந்தாம் அதிபதி ஏழோடு தொடர்பு கொண்டால் காதல்.
தசா புத்தி:
இப்போ தசா புத்தி சொல்றது, அப்படின்னா இப்ப ALP லக்னத்திற்கு ஏழில் குருபகவான் இருக்கார். புதபகவான் இருக்கார், சுக்கிர பகவான் இருக்கார்.
காதல் வயப்படுதல். அப்போ சனிபகவான் இரண்டில் உள்ளார். சந்தோசமா பேச்சுவார்த்தையின் மூலமாக
எதிர்பாராத யோகத்தை கொடுக்கிறார். ராகுபகவான் நாலுல இருக்கார்.
இப்படி நாம எப்படி வேணும்னாலும் எடுத்துக்கலாம். அதான் தசா புத்தி.
இருதார யோகம்:
விசாகம் - 4 ஆம் பாதம், ஐந்தாம் அதிபதி குருபகவான் 7ல்
இருந்தால் இருதார யோகம். அதாவது இந்த ஜாதகத்திற்கு காதல்கிறது ஒன்னு. அடுத்த
ஸ்டெப் இதே ALP லக்னம் விசாகம் -
4 ல் உதாரணமா காதலித்து திருமணம் நடந்துச்சு அப்படின்னா, அவருக்கு இரண்டாம் தாரம்
திருமண வாய்ப்புகள் கூட இருக்கும் அமைப்பு.
கிரகங்களின் இணைவும், பாவக பலனும்:
ஏன்னா குரு பகவானும், புத பகவானும் சேர கூடாது. குரு பகவானும், சுக்கிர பகவானும்
சேர கூடாது எங்க?
ரிஷபத்தில்.
விருச்சிக லக்னத்திற்கு ஐந்திலோ, ஏழிலோ குருவும், சுக்கிரனும் சம்பந்தப்பட்டதுனா, காதல் வயப்பட்டு இருதார யோகத்தை கூட
கொடுக்கும்னு நாம சொல்லிடலாம்.
விசாகம் - 4 ஆம் பாதம். ஒரே
பாயிண்டு தான் சார். வேற ஒன்னும் இல்ல. நாங்க
ஆய்வுல என்ன சொல்றோம், விசாகம் - 4 ஆம் பாதத்தில் எதிர்பாராத காதல் வயபடக்கூடிய
யோகம் உண்டு. ஐந்தாம் அதிபதியான குருபகவான். ஏன்னா இரண்டுக்கும்,ஐந்துக்கும் உரியவர் யாரு? குரு பகவான்.
எங்க இருக்காரு? ஏழாம் வீடான ரிஷபத்தில். விசாகம் - 4 ஆம் பாதம்னு சொல்றது அந்த
ஒரு வருஷம், ஒரு
மாதத்துக்குள்ள அந்த காதல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இருக்கும். அப்பதான் ஸ்டார்ட்
ஆயிருக்கும்.www.alpastrology.org
காதல் குடும்பமாக எப்போது மாறும்?
அடுத்து வந்து பாத்தீங்கன்னா மூன்றுக்கும், நாலுக்கும் உரியவர் யாருன்னு பாத்தீங்கன்னா, முயற்சிக்கு அதிபதி, சுகத்துக்கு அதிபதி
யார்? அப்படின்னா சனி பகவான்.
அவர் இரண்டாம் வீடான தனுசில் இருக்கிறார். அது குடும்பமா மாறிடும். காதல்
வந்து என்ன பண்ணும்? அப்படின்னா குடும்பமா மாறிடும். விசாகம்
- 4 ஆம் பாதம் முடிஞ்சதும் அனுஷ நட்சத்திரம் வந்துரும். சனிபகவான் இரண்டில்
வரும் போது குடும்பமா மாறிடும்.
இரண்டாவது காதல் என்று கணித்தது
எப்படி?
அடுத்தது பாத்தீங்கன்னா கேட்டை நட்சத்திரம். அதிபதி
புதபகவான். அவர் ஏழாம் வீடான ரிஷப வீட்டில் இருக்கிறார். அப்ப மறுபடியும் காதல்
உண்டு அப்படின்னு சொல்லலாம். ஏன்னா 8 ஆம் வீடு (மிதுனம்) 11க்குரியவர்
(கன்னி) ஏழாம் வீட்டில் இருக்கக் கூடாது.
அது இருதார யோகம். மறு மாங்கல்யம் கட்டனும்.
நல்லா கேட்டுக்கோங்க என்ன லக்னம்? எந்த
கிரகம்?
விருச்சிக லக்னத்திற்கு குருபகவான், புதபகவான்,
சுக்கிர பகவான் யாருக்கும் சேர்ந்திருக்கா? பாருங்க. இல்லனா, குருபகவானும், சுக்கிரபகவானும்
பரிவர்த்தனை ஆயிருக்கா? பாருங்க.
அவங்களுக்கு இருதார யோகம்.
நீங்க
யார் ஜாதகத்தை வேணும்னாலும் எப்படி வேணும்னா எடுத்து ஆய்வு பண்ணி பாருங்களேன். இது
வந்து உங்களுக்கு ALP லக்னமா
போகணும். நல்லா கேட்டுக்கோங்க, ALP லக்னம் விருச்சிகமாய் இருந்து,
இந்த காலகட்டத்துல குருவோ,சுக்கிரனோ
பரிவர்த்தனையாய் இருந்தோ அல்லது குருபகவான், சுக்கிரபகவான், புதபகவானோடு
சம்பந்தப்பட்டு இருந்தால், அந்த ஜாதகருக்கு இருதார யோகம் உண்டு அப்படின்னு நாம
சொல்றோம்.
ஏன்னா
நடந்த நிகழ்வு குடுத்துட்டாங்கல்ல. என்ன? காதல் வயப்படுதல். ஏன்னா
புரியனுமே என்பதற்காக ஒவ்வொரு ஜாதகத்துல ஒவ்வொரு விதமான நம்ம ஒரு நிகழ்வு
கொடுக்கிறோம். இந்த ஜாதகத்துல ALP ல
விசாகம் - 4 ஆம் பாதம் மட்டும் சொல்லி இருக்கோம்.
கண்டிப்பா இதே மாதிரி ஒவ்வொரு ஜாதகத்தையும் ஆய்வு பண்ணுவோம்.
உங்களுடைய ஜாதகத்தை நீங்க ஆய்வு பண்ணுங்க. ரொம்ப சந்தோஷம்.
நன்றி.
வணக்கம்.
Comments
Post a Comment