ஒரு வீட்டின் வாஸ்துவும், எண்ணங்களில் ஏற்படும் மாற்றங்களும். – ALP அட்சய வாஸ்து ஜோதிட ஆய்வு. ALP ஜோதிட ஆசிரியர் ஸ்ரீ குரு சத்தியநாராயணன்.
“ஞானானந்தமயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வவித்யானாம்
ஹயக்ரீவ முபாஸ்மஹே.”
ஒரு வீட்டினுடைய எட்டு திக்குகளுக்கும் வந்து பாத்தீங்கன்னா, பிரம்மஸ்தானம் அப்படிங்கற ஒரு விஷயம் எங்க இருக்கணும்?
எது அந்த பிரம்மஸ்தானத்தை இயக்குகிறது?
பிரம்மஸ்தானம்:
பிரம்மஸ்தானம் என்றால் வாஸ்துல, வீட்டினுடைய மத்திய பகுதிதான் பிரம்மஸ்தானம்னு சொல்லுவோம்.
முற்றம்:
இந்த செட்டிநாடு சைடுல இருக்குற ஹவுஸ் எல்லாம் போய் பார்த்தீங்கன்னா முற்றம் இருக்கும். அதுதான் பிரம்மஸ்தானத்தினுடைய பகுதி.
பூஜை அறை:
இந்த பிரம்மஸ்தானத்தில் நீங்க பூஜை அறை வைக்கிறீங்க, அந்த பிரம்மஸ்தானம் சம்பந்தப்பட்ட இந்த இடத்தில் வைக்கலாமா? தாராளமாக வைக்கலாம்.www.alpastrology.org
கண்ணாடி கூரை முற்றம்:
நீங்க தனியா ஒரு வீடு கட்டுறீங்க அப்படின்னு சொன்னா, இந்த பிரம்மஸ்தானம் வந்து பாத்தீங்கன்னா, ரெண்டுக்கு ரெண்டு ஸ்கொயர் வச்சு மேல கொஞ்சம் மேலே போய் அதே ரெண்டு அடி எழுப்பி, மேல ஒரு கண்ணாடி போட்டீங்க, இன்னைக்கு கண்ணாடி வந்து நல்ல திக்கான கண்ணாடி எல்லாம் இருக்கு. அந்த சூரிய வெளிச்சம் உள்ள வரனும். ஏன்னா, இன்னைக்கு சூரிய வெளிச்சமே உள்ள சரியா வரதில்லை. அதே மாதிரி காற்றோட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களும் உள்ள வரதுக்கு உண்டான தன்மையை தான் இந்த பிரம்மஸ்தானம் கொடுக்கிறது.
இத வந்து நிறைய பேருக்கு வந்து நம்ம சொல்லி ரெகமெண்ட் பண்ணி வச்சு கொடுத்திருக்கோம்.
பிரம்மஸ்தானம் என்ன பண்ணும்?
இந்த பிரம்ம ஸ்தானம் என்ன சார் பண்ணும். கிரியேட்டிவ் ஐடியாஸ், இந்த விவேகம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், எண்ணங்கள், சிந்தனைகள் எல்லாமே வந்து இயக்கக்கூடிய நிகழ்வுகள் எல்லாமே இந்த பிரம்மஸ்தானம் கொடுக்குமா அப்படின்னா, கண்டிப்பாக கொடுக்கும்.
வெளிச்சமும், காற்றோட்டமும்
நீங்க அப்பார்ட்மெண்ட்ல இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி, எப்படி இருந்தாலும் சரி, எல்லா சைடும் காற்றோட்டம் இருக்கிற மாதிரியான தன்மையை நம்ம கிரியேட் பண்ணி வைத்துவிட்டோம் அப்படின்னு சொன்னாவே உங்களுடைய பிரம்மஸ்தானம் நல்லா இருக்குனு அர்த்தம்.
பிரம்மஸ்தானத்தின் நன்மைகள்:
அப்ப கிரியேட்டிவ் ஐடியா சம்பந்தப்பட்ட நிகழ்வுகள், கிரியேட்டிவிட்டி, பிளசிங் (blessing) சம்பந்தப்பட்ட விஷயங்கள், ஞானம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், விவேகம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், நம்ம பாசிட்டிவா திங்க் பண்றது, எதிர்மறை சிந்தனைகளை ஒழிக்க கூடிய தன்மை, இந்த பிரம்மஸ்தானத்திற்கு இருக்கிறது.
இல்லனா, வீட்டை வந்து அடைச்சு வச்ச மாதிரி இருந்தது அப்படின்னு சொன்னாலே இந்த கிரியேட்டிவ் ஐடியாஸ் அடுத்த லெவல் மூவ் பண்றதுக்கு உண்டான தன்மை அதுல இருக்காது.www.alpastrology.com
பிரம்மஸ்தானம் எப்படி இருக்க வேண்டும் ?
அந்த பிரம்ம ஸ்தானம் என்று சொல்லப்படுகின்ற நடுப்பகுதியும் சரி, நடுப்பகுதி இப்ப வைக்க முடியல சார், சுற்றுப்புறம் சம்பந்தப்பட்ட விஷயம் காற்றோட்டமாக இருந்தாலே, காற்றோட்டம் உள்ள வந்தது அப்படி என்று சொன்னாலே உங்களுடைய பிரம்மஸ்தானம் உங்க வீட்டுல நல்லா இருக்குன்னு அர்த்தம்.
பிரம்மஸ்தானமும், வாழ்வியல் மாற்றமும்:
உங்களுக்கு கிரியேட்டிவ் ஐடியாஸ் நல்லா வரும். படிக்கக்கூடிய மாணவர்கள் இருக்காங்க இல்லையா, அந்த மாணவர்களுக்கு வந்து பார்த்திங்கன்னா சிந்தனைகள் அடுத்த லெவலுக்கு போகக்கூடிய தன்மை, இந்த டல்நெஸ் (Dullness) என்ற ஒரு விஷயமே இருக்காது. அப்ப கிரியேட்டிவ் திங்கிங், படிக்கலனா கூட மூளை நல்லா வேலை செய்யும்.
நமக்கு ஒரு விவேகம் உள்ள இருந்து ஊக்குவிக்கிறது இல்லையா, அந்த விவேகம். அந்த விவேகம் தான் சார் பிரம்ம ஸ்தானம் அப்படின்னு சொல்லப்படுகின்ற நிகழ்வு.
full video link: https://youtu.be/8-C2hrVz1BA?si=1DvyfxL7BEP-E-4Oபிரம்மஸ்தானம் சரியாக இருந்தாலே வந்து பாத்தீங்கன்னா, நம்மளுடைய எண்ணங்கள், சிந்தனைகள் மேலோங்கும்னு சொல்லலாம். நம்முடைய எண்ணங்கள், சிந்தனைகள் மேலோங்கும் அப்படின்னு சொன்னா நம்மளுடைய பொருளாதாரம் சம்பந்தபட்ட விஷயங்கள் அடுத்த நிலைக்கு நாம் எப்படி உயர்வது அப்படிங்கிற கிரியேட்டிவ் ஐடியாஸ் எல்லாமே உங்களுக்கு சாதகமாக இருப்பதற்கு உண்டான தன்மைகள் வரும்.
அடுத்த நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி,வணக்கம்.
Comments
Post a Comment