AடP மூலமாக என் வாழ்க்கையில் நடத்த ஓர் மாற்றம்


 ALP ஜோதிட வகுப்பில், புத்தம் புது மலர்கள் மலர்வது போல்,  எங்களுக்கு நாள்தோறும் சொல்லிக் கொடுக்கும் பாடங்கள், நன்கு மூளையில் பதிவாகிறது. 

குருவே சரணம். குருவே துணை

அட்சய லக்ன பத்ததி (ALP) ஜோதிடம், ஜோதிடக் கலைக்கே ஓர் மணி மகுடம். 

ALP ஜோதிட வகுப்பு நேரம், பிரம்ம முகூர்த்த வேளையில், காலை 4.32 am முதல் 6.32 am வரை தேர்ந்தெடுக்கப்பட்ட நேரம் மிகச் சிறப்பானது.  இந்த நேரமானது, தினமும் புத்தம் புது மலர்கள் மலருவது போல்,  எங்களுக்கு நாள்தோறும் சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் நன்கு மூளையில் பதிவாகிறது. மிகச் சிறந்த இவ்வரிய நேரத்தை தேர்ந்தெடுத்து, எங்களுக்கு கற்றலை நன்கு உள்வாங்கும் திறனை கண்டறிந்து, அதனை செயல் முறைப்படுத்தி வரும் நமது அய்யா, குருஜி, ALP . ஜோதிடத்தை உருவாக்கிய Dr. பொதுவுடைமூர்த்தி அவர்களையே சேரும். முதலில் அய்யா, குரு, அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்தையும், நன்றியையும் சமர்ப்பிக்கின்றேன்.

ALP வகுப்பில் கடைப் பிடிக்கும் ஒழுங்கு முறையும், ஒவ்வொரு மாணவர்களையும் ஈடுபாட்டோடு கற்பிக்கும் குருஜியும், மற்றும் பயிற்றுவிக்கும் பயிற்சியாளார்கள் அனைவரும், குறிப்பாக எனது Coach திருமதி உமா வெங்கட் (ALP ஜோதிடர், Dr குருஜி) அவர்களும், குறிப்பிடத் தக்கவர்கள். மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும் பாடங்களை பயிற்றுவித்து பயிற்சி கொடுக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.www.alpastrology.com

குறிப்பாக திருமதி சாந்தி தேவி (ALP ஜோதிடர்), திரு சத்திய நாராயணன் அய்யா (ALP ஜோதிடர்) அவர்களுக்கும், எனது நன்றியை, தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களது பயிற்சி வகுப்பு மிகவும் அருமை. தெள்ளத் தெளிவாக எங்களது கேள்விகளுக்கு பதிலை எங்கள் மூலமாகவே வரவழைக்கும் பாங்கு சிறப்பு.

பதினைந்து நாளில் ஜோதிடம் கற்பது என்பது வியப்பின் எல்லையே. இந்த அற்புதக் கலையை கற்று கொடுக்க அமைக்கப்பட்ட பாடத் திட்டங்கள்  அருமையிலும் அருமை. அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்க பட்ட இவ்வரிய ஜோதிடக் கலை, பாடத் திட்டங்கள், கற்றுக் கொடுக்கும் திறன் அது மட்டுமின்றி, அதை நமக்கு புரிய வைக்க அவர் எடுக்கும் முயற்சி. அறிவுக் கூர்மை, மிக மிக அற்புதமானது. அய்யா, குருஜி, Dr. பொதுவுடைமூர்த்தி அவர்கள், நமக்கு இறைவனால் அனுப்பப்பட்ட ஓர் அற்புத பொக்கிஷம், இறைத் தூதர். இறைவன் ஜோதிடத்திற்கென்றே, நமது குருஜியை படைத்திருக்கிறார். நமது குருஜி உருவாக்கிய அட்சய லக்ன பத்ததி என்னும் இவ்வரிய ஜோதிடக் கலையானது, மிக நுட்ப மதி கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும். மிகத் துல்லிய பலனை ALP பயிலும் மாணவர்கள் சொல்லும் வகையில் படைத்திருக்கிறார், நம் அய்யா அவர்கள்.

sasti tv: https://youtube.com/@alpastrology?si=l8LZvtdC2Pd0P1r4

அய்யா, குருஜி அவர்களுக்கே சொந்தமான இவ்வரிய ALP ஜோதிடக் கலையை தனக்கு மட்டுமே என்று இல்லாமல் பலகாலமாக மறைபொருளாக இருந்து வந்த இக்கலையை உடைத்து, அனைவருக்கும் போய் சேர வேண்டும் என்ற உலகளாவிய சிந்தனையால் நம்மைப் போன்றோர்க்கும், உலகநாடுகளுக்கும் சென்று விரிந்து பரவிக் கொண்டிருக்கிறது. இக்கலை மக்களிடம் போய் சேர அய்யா குருஜியின் உழைப்பு, முயற்சி அளப்பரியது. இதற்கு உறுதுணையாக என்னால் முடிந்த பணியை மேற் கொள்வேன். வீட்டிற்கு ஒரு ஜோதிடர் என்ற அவரது சிந்தனை நமக்கு கிடைத்த ஓர் வரப்பிரசாதம் ஆகும்.

அய்யா, குருஜி, Dr. பொதுவுடைமூர்த்தி உருவாக்கிய Software ஒரு ready reckoner. தட்டிய உடன் பலன் காட்டும் காலக் கண்ணாடி. இதன் சிறப்பை எண்ணி எண்ணி வியக்கிறேன். அதற்காக அவரது உழைப்பு அளப்பரியது. அதற்காக அவர் எடுத்துக்கொண்ட காலங்கள், அவரது வாழ்நாள் அர்ப்பணிப்பை எண்ணி நினைந்து நெகிழ்கிறேன். அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு அதில் உருவான அற்புத ALP ஜோதிடம், அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கம், பிரமிப்புக்குரியது. www.alpastrology.org

எனது பெயர் செல்வி. நான் சென்னையில் உள்ள ஆவடியில் வசிக்கிறேன். வயது 63. YOUTUBE   மூலம் தான் எனக்கு ALP அறிமுகமானது. சிறு வயதிலிருந்தே எனக்கு ஜோதிடத்தின் பால் ஓர் ஈர்ப்பு இருந்து கொண்டேயிருந்தது. அப்போது எல்லாம் கற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை எனக்கு ALP யில் மட்டும் தான் கிடைத்தது. அய்யா குருஜி சொல்வது போல் "உணர்வதும் உணர்த்துவும் தான் வாழ்க்கை". இது தான்  AடP மூலமாக என் வாழ்க்கையில் நடத்த ஓர் மாற்றமாகும். எனக்கு மட்டும் ஏன் இந்த பிரச்சனை ஒருவர் மூலமாக வருகிறது என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது. அதன் பிறகு  நான் அவரிடம் அன்பு பாராட்டத் தொடங்கிவிட்டேன், அதன் மூலம் என் வாழ்க்கையிலும் அதற்குரிய மாற்றங்கள் நிகழ்ந்து தற்போது சந்தோஷமாக இருக்கிறேன். ALP மூலம் கர்மா உணர்ந்து கொண்டேன். இவ்வாறு அனைவரது வாழ்விலும் மாற்றமும், மகிழ்ச்சி நிறைய வேண்டும் என கூறி அய்யா, குருஜி அவர்களுக்கு எனது வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டு, அவர் தாள் பணிந்து இவ்வரிய ALP  பரந்து, விரிந்து,  உலக முழுவதும் நிறைய வேண்டி, நிறைவு செய்கிறேன்.

ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656

Comments