ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ஹயக்ரீவர் விக்ரஹத்தை ALP அலுவலகத்தில் ஐயா அவர்கள் ஸ்தாபித்து, உலக நன்மைக்காக வழிபடுகிறார்கள்
"ஞானானந்த மயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதம்,
ஆதாரம் சர்வ வித்யானாம்,
ஸ்ரீ ஹயக்ரீவம் உபாஸ்மஹே."
~ ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்லோகம்.
தினமும் ALP வகுப்பு துவங்குவதற்கு முன் சொல்லப்படும் ஸ்லோகங்களில் ஒன்று, இந்த ஸ்லோகம்.
இதன் பொருள், ஞானமும் ஆனந்தமயமானவரும், தூய்மையான ஸ்படிகம் போன்ற தேகத்தை உடையவரும், சகல கல்விக் கலைகளுக்கும் ஆதாரமாகத் திகழும் ஸ்ரீ ஹயக்ரீவரை, நான் உபாசிக்கிறேன், என்பது.
கல்விக்கு தெய்வம் ஸ்ரீ சரஸ்வதி தேவி.
ஸ்ரீ சரஸ்வதி தேவியின் குருநாதர், ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ஹயக்ரீவர்.
இவரை வழிபட்டால் படிப்பில் சிறப்பாகக் திகழலாம். www.alpastrology.org
வேதங்களின் துணையுடன் ஸ்ரீ பிரம்மா படைப்பு வேலையை செய்து கொண்டிருந்தார். மது மற்றும் கைடபர் என்ற இரு அசுரர்கள், ஸ்ரீ பிரம்மா அவர்களிடம் இருந்த வேதங்களை, குதிரை வடிவில் உருமாற்றி, கவர்ந்து சென்றனர். இதனால் உலகத்தில் இருள் சூழ்ந்தது.
ஸ்ரீ பிரம்மா, இதனை உடனே ஸ்ரீ மகாவிஷ்ணுவிடம் சொல்ல, அவர் குதிரை முகம் கொண்ட ஸ்ரீ ஹயக்ரீவராக அவதாரம் செய்து, மது மற்றும் கைடப அசுரர்களை அழித்து வேதங்களை மீட்டுக் கொடுத்தார்.
ஸ்ரீ ஹயக்ரீவரின் பக்தரான, ஸ்ரீ வாதிராஜர் இயற்றிய ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்லோகத்தை, தினமும் ஜபித்தால் கல்வியில் எப்போதும் சிறப்பாகத் திகழலாம்.
"ஹய" என்றால் குதிரை, "க்ரீவ" என்றால் கழுத்து என்று பொருள். ஹயக்ரீவரின் குதிரைத் தலை அவரது தனித்துவமான அடையாளமாகும். இது அவரது அறிவாற்றல், வேகம், மற்றும் ஆன்மிக சக்தியைக் குறிக்கிறது.
ஸ்ரீ ஹயக்ரீவர், பொதுவாக குதிரைத் தலை, மனித உடல், மற்றும் நான்கு கைகளுடன் சித்தரிக்கப்படுகிறார். அவரது கைகளில் புத்தகம் (வேதங்கள்), ஜபமாலை, சங்கு, மற்றும் சக்கரம் ஆகியவை உள்ளன.
அவர் பெரும்பாலும் வெண்மையாக, பளபளப்பான ஒளியுடன் தோன்றுவதாக விவரிக்கப்படுகிறார். இது தூய்மை மற்றும் ஞானத்தைக் குறிக்கிறது.
கோயில்கள்:
திருவனந்தபுரம், கேரளா: பத்மநாபசுவாமி கோயிலில் ஸ்ரீ ஹயக்ரீவருக்கு ஒரு சிறப்பு சன்னதி உள்ளது.
ஸ்ரீ திருவஹீந்திரபுரம், தமிழ்நாடு: இங்கு ஸ்ரீ ஹயக்ரீவர் முக்கிய தெய்வமாக வணங்கப்படுகிறார்.
காஞ்சிபுரம், தமிழ்நாடு: வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ஹயக்ரீவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
சென்னை, பெருங்களத்தூரில் உள்ள ALP அலுவலகத்தில், ஸ்ரீ ஹயக்ரீவரின் அற்புதமான, பெரிய விக்ரஹத்தை ஐயா அவர்கள் ஸ்தாபித்து, உலக நன்மைக்காக வழிபடுகிறார்கள். இந்த ஸ்ரீ ஹயக்ரீவரின் விக்ரஹம் பற்றி, ஐயாவுடன் நடத்திய விகடன் டி.வி. நேர்காணலில், திரைக் கலைஞர் நளினி அவர்கள், வியந்து சொல்லியுள்ளார். www.alpastrology.com
ஆன்மிகப் பயன்:
ஸ்ரீ ஹயக்ரீவரை வணங்குவது மனதில் தெளிவு, நினைவாற்றல், மற்றும் ஆன்மிக உயர்வைத் தருகிறது.
மாணவர்கள், தேர்வுகளில் வெற்றி பெறவும், அறிஞர்கள் ஆழ்ந்த ஞானத்தைப் பெறவும் அவரை வணங்குகின்றனர்.
ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656
Comments
Post a Comment