அட்சய லக்ன பத்ததி எனும் ALP ஜோதிடம் என்றால் என்ன?

 


ஐயா, வணக்கம். 

ALP ஜோதிட முறை, தற்போது பல  இடங்களில் பிரபலம் ஆக உள்ள ஒரு முறை. இருந்தாலுமே, இன்னமும் நிறைய பேரு, நிறைய வீடியோவில் ALP என்றால் என்ன அப்படிங்கிற கேள்வியைக் கேட்கிறார்கள். இந்த ஜோதிட முறையைப் பற்றி மக்களுக்கு சின்னதாக ஒரு அறிமுகம், அதைப் பற்றின ஒரு ஸ்டார்ட்டிங் பாயிண்ட் மாதிரி சொன்னா நல்லா இருக்கும். ஏன்னா, புதுசா நிறைய பேர் இது பார்த்துட்டு இருக்காங்க.  அவங்களுக்கு இது தெளிவான ஒரு  விளக்கமா இருக்கும்.

Dr. பொதுவுடைமூர்த்தி, ALP ஜோதிட கண்டுபிடிப்பாளர்:

ALP எனும் அட்சய லக்ன பத்ததியில்,  அட்சயம் அப்படின்னா வளர்தல், லக்னம் அப்படின்னா தோற்றம், பத்ததி அப்படின்னா வரிசைப்படுத்துதல். 

நம்முடைய வயதுக்கு ஏற்ப எப்படி நம்ம உடல் மனம் எப்படி பெருக்கமடையுதோ, வளர்ச்சி அடையுதோ, அதே மாதிரி நம்மளுடைய பிறப்பின் லக்னம்,  ஜென்ம லக்னம் அப்படின்னு சொல்லுவோம். அது ஒவ்வொரு பத்து வருடத்திற்கும், லக்னம் மாறும் அப்படிங்கிறது தான் அட்சய லக்ன பத்ததி அப்படிங்கிற ஜோதிட முறை. www.alpastrology.com

மொத்தம் 12 ராசி கட்டங்கள் யாருக்குமே தெரியும். மொத்தம் விம்சோத்திரி தசா வருடங்கள் 120 அப்படின்னு தெரியும். 120 -ஐ நாம என்ன பண்றோம், ஒவ்வொரு லக்னத்திற்கும், பத்து வருடமா பிரிச்சிருக்கோம். இந்த பத்து  வருடமும், நம்ம வாழ்க்கை முறையில எவ்வளவு மாற்றங்கள் வருது. 

நாம பாரம்பரிய முறையில் என்ன சொல்லுவோம்? ஒன்று என்றால்  லக்னம், தோற்றம், புகழ், அதிகாரம், யோகங்கள் அப்படின்னு நாம சொல்லுவோம். 

அதே மாதிரி, நம்ம வாழ்க்கையில் முதல் பத்து வயது. இந்த முதல் பத்து வயதில்,  என்னுடைய அப்பா மற்றும் அம்மாவின் நிகழ்வுகளில் தான், நான் பயணிப்பேன். பத்து வயது வரைக்கும் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்குமா, அப்படின்னா இருக்காது. அவங்க என்ன சாப்பாடோ, அவங்க என்ன உடையோ, அது மாதிரி தான் கொடுப்பாங்க. அந்த பத்து வருட காலமும், என்னுடைய வாழ்க்கையில் நடக்கக் கூடிய  நிகழ்வுகள் எல்லாமே பார்த்தீங்கன்னா, என்னுடைய சமூகம் சார்ந்து, என்னுடைய சூழ்நிலை சார்ந்தே நடக்கும். 

இரண்டாவது பத்து வருடம் பார்த்தீங்க அப்படின்னா, இது எல்லாமே பாரம்பரிய முறையில்ல நம்ம என்ன சொல்றோமோ அதே தான். 11 வயதிலிருந்து 20 வயது வரைக்கும் பாத்தீங்க அப்படின்னா, ஜாதகர் என்ன பண்ணுவாரு, படிப்பு சார்ந்த விஷயங்கள் தான் அதிகமா இருக்கும். அது பற்றி தான் அவருடைய கேள்விகள் இருக்கும்.  அவை தான், அவருடைய நிகழ்வுகளாக, இருக்கும். அதுக்காக தான், அவருடைய நிலைகள்  எல்லாமே படிப்பு, குடும்பம்,  குடும்பத்தின் வருமானம் அப்படின்னு வந்துரும். அந்த இடத்துல அப்படி எடுத்துக்கிடணும். 

அதுவே 21 வயதிலிருந்து 30 வயது வரைக்கும், திருமணத்தைப் பற்றியான நிகழ்வு. ஒரு வாடிக்கையாளர் வராங்க, ஒரு ஜோதிடர் கிட்ட வரும்போது உங்களுடைய கேள்வி என்னவாக இருக்கும்? ஏன்னா, உதாரணத்திற்கு பார்த்தீங்க அப்படின்னா 21 வயதிலிருந்து 30 வயது வரைக்கும் வாராங்கன்னு வச்சுக்கோங்க, அப்ப என்ன கேள்வி இருக்கும்னு பாத்தீங்கன்னா, அவருக்கு திருமணத்தை பத்தி தான் கேள்வி கேட்பாங்க. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? திருமணம் எப்ப நடக்கும்? திருமணத்தோட நிலைகள் எப்படி இருக்கும்? அதுல லவ் மேரேஜா? திடீர் மேரேஜா? உறவுகள் வகையில் திருமணம் நடக்குமா? இப்படி நிறைய கேள்விகள் இருக்கும்.

அடுத்தது பார்த்தீங்க அப்படின்னா, 31 வயதிலிருந்து 40 வயது வரைக்கும். சார், நான் வீடு கட்டலாமா? ஏன்னா, இந்த 12 கட்டங்களை எப்படி பிரித்து இருக்காங்க, அப்படின்னு நாம் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய கேள்வி, உங்களுடைய லக்னம், எங்க போகுதுன்னு பாருங்க. உதாரணமா 31 வயதில் இருந்து 40 வயது வரைக்கும் லக்னம் வருதுன்னு வச்சுக்கோங்களேன். அப்ப தான் சார் நான் வீடு கட்டலாமா? நான் என்ன தொழில் பண்ணலாம்? நான் என்ன வேலை பார்க்கலாம்? எனக்கு வீடு, அம்மா சார்ந்த உறவுகள், எப்படி இருக்கும்? இப்படி நிறைய கேள்விகள் அடுக்கடுக்கான விஷயங்கள். 


அதே மாதிரி 41 லிருந்து 50 வயது வரைக்கும், குழந்தைகள் சம்பந்தப்பட்டது. என்னோட குழந்தைகளை, எப்படி படிக்க வைக்கலாம்? என்னுடைய குழந்தைகள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் எப்படி இருக்கும்? குழந்தைகளுடைய தேவைகள் எப்படி இருக்கும்? என்னுடைய மனம் எப்படி இருக்கும்? என்னுடைய புத்தி எப்படி இருக்கும்? என்னுடைய சிந்தனைகள் எப்படி இருக்கும்? என்னுடைய யோக நிலைகள் எப்படி இருக்கும்? என்னுடைய வாழ்க்கை முறைகள் எப்படி இருக்கும்? ஏன்னா, இந்த பூர்வ புண்ணியத்தை கடக்கும் போது, அந்த 41 வயதில் இருந்து 50 வயது வரைக்கும் பூர்வ புண்ணியத்தோட சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கான காலம் இது. அப்படியே சந்தோஷமா இருக்கும். நல்லா இருந்தா,  சந்தோஷமா இருக்கும். நல்லா இல்லைனா, சித்த பிரமையா இருக்கும். அது எப்படிங்கறது கிரகங்களை வைத்து முடிவு பண்ணிக்கலாம்.

அடுத்தது, 51 வயதிலிருந்து 60 வயது வரைக்கும். அப்ப தான் பாத்தீங்கன்னா, ஒரு மனிதனின் முதல் கட்டம். அப்படின்னா நாம இது நாள் வரைக்கும் நாம செஞ்சிருக்கோம்ல. பிறந்ததிலிருந்து செஞ்சிருக்கோம்ல. நல்லது செஞ்சிருக்கோம், கெட்டது செஞ்சிருக்கோம்ல. நல்லது செஞ்சா அந்த காலங்கள் சுப கடனாகவும்,  கெட்டது செஞ்சிருந்தா அசுபக்கடனாகவும், மருத்துவ செலவுகளாகவும், வரும். அங்க இடம் வாங்கினேன் சார். அந்த இடம் பிரச்சனையா போச்சு சார். எப்படி இந்த 51 வயதில் இருந்து 60 வயது வரைக்கும் பாத்தீங்கன்னா, கடன், வம்பு, வழக்கு, நோய் நொடி, பிரச்சனை, எதிரி, தொந்தரவு, சும்மா போட்டு படுத்தி எடுத்துடுங்க. ஏதாவது சம்பந்தமே இல்லாத நிகழ்வுகளை போட்டு அது ஒரு பெரிய லெவல்ல கஷ்டத்தை ஏற்படுத்தும். 

அப்போ, இந்த கால கட்டத்தை தாண்டிட்டோம்னா, அதுக்கு பிறகு அப்பாடா இந்த 61 -ல் இருந்து 70 வயது வரைக்கும் பாத்தீங்கன்னா ஒரு  வாழ்க்கையில், சந்தோஷமான யோகமான நிலையை, குழந்தைகளுக்காக, குழந்தைகளோட படிப்புக்காக, குழந்தைகளோடு திருமணத்துக்காக, அந்த நிகழ்வுகளை, அந்த கால கட்டங்களில் கடமைகளை முடிக்கிறது தான். 

71 வயதிலிருந்து 80 வயது  வரைக்கும் பாத்தீங்கன்னா என்னோட இரண்டாவது கர்மப் பகுதி.  இது என்னுடைய வாழ்க்கையில ஆத்மார்த்தமான பகுதி. அப்ப தாங்க இந்த இரண்டாவது கட்டம் தாண்டிட்டோம் அப்படின்னு ஜெயிச்சிருவோம். இந்தக் கட்டத்துல,  முதல்ல பாத்தீங்கன்னா, இதற்கு முந்தைய பத்து வருஷத்துல கடன்,  வம்பு, வழக்கு இருக்குல்ல,  அதனுடைய தாக்கம், அந்த எட்டாம் வீட்டில் அதிகக் கடன் ஆகும். ஆபரேஷன் சம்பந்தப்பட்டது, நோய் நொடியில் தீவிர பிரச்சனைகள் இப்படி நிறைய விஷயங்கள் எட்டாம் பாவகம் வேலை செய்யும். 

81 வயதில் இருந்து 90 வயது வரைக்கும், ஒரு மனிதன் வாழ்ந்தாலே, அதான் பாரம்பரியத்தில் பாக்கியம், யோகம் அப்படின்னு சொல்றது. ஒரு கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணா எவ்ளோ பாக்கியம் கிடைக்குமோ, அவ்வளவு பாக்கியம் கிடைக்கும். 81 வயதிலிருந்து 90 வயதுக்குள் ஒரு ஜாதகர், ஒரு வீட்ல, உங்க வீட்ல தாத்தாவோ, பாட்டியோ, இல்ல பக்கத்து வீட்ல தாத்தாவோ, பாட்டியோ, ஒருத்தர் குடும்பத்துல இருந்தாங்கனா, அவர், நல்லவரா இருக்காரு, கெட்டவரா இருக்காரு,  தண்ணி அடிக்கிறார், அப்படில்லாம் ஒண்ணும் கிடையாதுங்க. அவர் யாரா வேணாலும் இருக்கட்டும். அவருடைய வாழ்க்கையில 81 வயதிலிருந்து 90 வயதில்,  இரண்டு கர்மாவை  கடந்துட்டாருல.  மூன்றாவது இடத்துக்கு வந்துட்டாரு பாருங்க. அடுத்தது, 81 வயதிலிருந்து 90 வயது வரைக்கும் அவருடைய பாக்கியமான ஒரு நிலைகளை அவர் அடைய வேண்டிய சூழ்நிலை உருவாக்கும். www.alpastrology.org

91 -லிருந்து 100 வயது வரைக்கும், ஒரு ஜாதகர் இருந்தாருன்னா, மூன்றாவது நிலையான அந்த கால கட்டத்தில்,  ஒரு வாழ்க்கையில, இது நாள்  வரைக்கும் அடைந்த யோகங்களையும் அவயோகங்களையும், அனுபவித்து தீர்க்க வேண்டிய மூன்றாவது கர்மப்  பகுதி. 91 -லிருந்து 100 வரைக்கும், இதுதான் பத்தாம் பாவகம் அப்படின்னு நாம சொல்றோம். 

அடுத்து, 101 -ல் இருந்து 110 வரைக்கும் ஒரு மனிதன் வாழ்ந்தாலே, அது பேரின்பம், சந்தோஷம், ஆனந்தம், அதாவது எல்லாத்துக்கும் அப்பாற்பட்ட ஒரு நிகழ்வு,  அப்படிங்கிறது தான் 11 ஆம் பாவகம். 

அடுத்து, 111 -ல் இருந்து 120 வயது வரைக்கும் இருந்தாங்கன்னா, அந்த ஜாதகருடையது, முக்தி மோட்சத்துக்கான, ஒரு ஜாதக அமைப்பு. யோகமான நிலைகளை குறிக்கும். அப்படிங்கிறது தான் 12 கட்டங்கள்.  

நான் பாரம்பரிய முறைகளில் இருக்கக் கூடிய நிகழ்வுகளை, அட்சய லக்ன பத்ததியில அடிப்படையா இப்படி பண்ணி இருக்கேன். இப்ப இதை ஏன் நான் சொல்றேன் அப்படின்னு உங்களுக்கு தெரியும். ஏன்னா அட்சய லக்னம்னா என்ன அப்படின்னா, நம்மளுடைய வளரும் லக்னம், வயது உடைய  லக்னம்னு சொல்லிட்டோம். இதை நாம சொல்றோம் அப்படின்னா, இப்போ ஒருத்தர் 31 வயதிலிருந்து 40 வயதுக்குள் வாராரு. இப்ப என்ன கேள்வி கேப்பீங்க என்றால், உடனே அட்சய லக்ன பத்ததி படிச்ச நண்பர்கள் என்ன சொல்லுவாங்க,  எங்க வீடு, வண்டி, வாகனம், சொத்து, சுகம் பத்தி தான் கேள்வி இருக்கும். ஏங்க, கடன பத்தி கேள்வி கேட்டு இருக்காரு. ஆமாம் 6 ஆம் அதிபதி 4 ல இருந்தா, சொத்துக்காக கடன் வாங்க வந்திருக்கிறார். சொத்து சம்பந்தப்பட்ட கேள்வி கடனாக உள்ளது, என அதை ஈஸியா சொல்ல முடியும். அதுக்காகத் தான் இந்த விஷயம். 

இப்போது, நீங்க உங்க வாழ்க்கையில, எந்த அமைப்பில் இருக்கீங்க? சார் 21-லிருந்து 30 வயது வரைக்கும் இருக்கு. நான் ஒரு போட்டித் தேர்வுல இருக்கேன். கரெக்டான கேள்வி,  கரெக்டான பதில். கரெக்டானது அந்த ஜாதகம். இப்ப அவர் வந்து மூன்றாம் பாவக அதிபதி, முயற்சி பத்தி கேள்வி கேட்கல. காதலைப் பற்றி கேள்வி கேட்கல. திருமணத்தைப் பத்தி கேள்வி கேட்கல. உதாரணமா குழந்தைகளைப் பத்தி கேள்வி கேட்டிருக்கிறார். அதாவது நூத்துல,  ஆயிரத்துல, லட்சத்துல, கோடில வந்து, ஒரு ஜாதகம் வந்து 12 வயதில் கல்யாணம் ஆயிருக்கு ஒரு ஜாதகருக்கு. எப்படி 12 வயதில் கல்யாணம் ஆயிருக்கு. இது எப்படி சார் அப்படின்னா, அந்த இரண்டாம் வீடு பார்த்தீங்கன்னா அந்த 12 வயதிலிருந்து 20 வயதுக்குள்ளயே, 3 ஆம் பாவம் வந்திருக்கும். 4 ஆம் பாவம் அங்க இருக்கும். ஏழாம் பாவம் அங்க இருக்கும். 11ம் பாவம் அங்க இருக்கும்.  எல்லாமே கனெக்டிவிட்டி ஆயிடும். 

எப்ப அந்த 2 ஆம் பாவத்துல, 3 வது பாவம் தொடர்பு இருந்தால், தொடர்புகளை ஏற்படுத்தி, கல்யாணத்தை, திடீர் திருமணம், பிரச்சனைக்குரிய திருமணம், காதல் திருமணங்கள், இப்படி நடந்திருக்கும். அதே சமயம், முறையான திருமணம் அப்படின்னா 21 வயதிலிருந்து 30 வயது வரைக்கும். 

நீங்க போட்டித் தேர்வுக்கு கேள்வி கேட்டு  இருந்திருக்கீங்க. போட்டித் தேர்வு கண்டிப்பா முயற்சி பண்ணுங்க. உங்களுக்கு மூன்றாம் அதிபதி 3 -க்கு 3 -ல், நல்லா இருக்கு. ஒரு முயற்சி பண்ணலாம். நடக்கும் அப்படின்னு சொல்லலாம். நடக்காதுன்னா, அந்த கிரக அமைப்பு என்ன அப்படிங்கிறத, இன்னும்  நிறைய விஷயங்களை, அட்சய லக்ன பத்ததில சொல்ல முடியும்.   

ஒவ்வொரு மாதமும், அட்சய லக்ன பத்ததியோட அடிப்படை ஜோதிட வகுப்பு நடக்குது.  அடிப்படை ஜோதிடம் தெரியாதவர்கள், தெரிந்தவர்கள், எல்லாரும் கலந்து கொள்ளலாம். ஜோதிடம் தெரிந்தவர்கள், உங்களுடைய வாழ்க்கையில இது நாள் வரைக்கும் நான் பலன் எடுக்க முடியல. நிறைய படித்திருப்பீர்கள். நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும். நீங்க அந்த வகுப்பில் சேர்ந்து பாருங்களேன், உங்களுடைய வாழ்க்கை மாறுதா இல்லையான்னு. 

உங்க வாழ்க்கையில வந்து எவ்வளவோ நாள் என்னென்னமோ பண்ணி பார்த்திருப்போம், படிச்சிருப்போம்.  எத்தனையோ புத்தகம் படிச்சிருப்போம். ஆனா  எல்லாருமே கணக்கு போடுவாங்க. நல்லா கணக்கு போடுவாங்க. பலன் எடுக்கும் போது அங்க கொஞ்சம் எதிர்பார்த்த மாதிரி இருக்குமா என்றால், இருக்காது.

ஆனால், அட்சய லக்ன பத்ததியில்,  நீங்க 15 நாள் ஆன்லைன் வகுப்புல வந்து கலந்துக்கும் போது,  உங்களுக்கு எதெல்லாம் தேவை, எது தேவையில்லை, உங்களோட வாழ்க்கையில எந்தெந்த விஷயங்கள் முக்கியமான விஷயங்கள், அது மட்டும் நாம் சொல்லித் தருகிறோம். 

கண்டிப்பா நீங்க வந்து கலந்துக்கணும். ஜோதிடம் ஆர்வம் உள்ளவர்கள், ஜோதிடத்தில் இருக்கக் கூடியவர்கள், ஜோதிடம் பார்ப்பவர்கள், ஜோதிட ஆராய்ச்சியாளர்கள், கண்டிப்பா வரணுங்க, பாக்கணுங்க. 

இந்த ஆய்வு வந்து பார்க்கும் போது தான், கரெக்டா வந்து 5 ஆம் பாவகம் வரும் போது குழந்தைகள் சம்பந்தப்பட்ட கேள்வி, என இதன் நுணுக்கங்கள் உங்களுக்கு வரும். அந்த புரிதல் என்பது என்ன அப்படின்னா, யாரோ பக்கத்து வீட்டுல தேன் சாப்டாங்க அப்படிங்கிறதுக்கும்,  நான் தேன் சாப்பிட்டேன். அப்படிங்கிறதுக்கும், வித்தியாசம் இருக்குல்ல. இப்ப பாத்தீங்கன்னா,  சத்தியநாராயணன் சார் சென்னையில இருக்காரு. பாரம்பரியமான ஜோதிடர். அவர் அந்த நிகழ்வை வந்து பார்த்தாங்க. தனக்குத் தானே அந்த தேனை ருசிச்சாங்க. எனக்கு இது நல்லா இருக்கு, நான் எடுத்துக்கிறேன், என்றார். இதுல நிறைய விஷயங்கள் உங்களுக்கு தேவையான விஷயங்கள், இருக்கு. இது நடக்கும்,  இது நடக்காது, இது முடியும், முடியாது,  இது வேணும், வேண்டாம், இது நடக்கவே நடக்காது, என. நடக்காதுன்னா விட்ரலாமே. இது நடக்கும்னா ஒரு முயற்சி செஞ்சி பார்க்கலாமே. அப்படித்தான் இந்த அட்சய லக்ன பத்ததி அப்படிங்கிறது. 

உங்களுடைய லக்னம் எங்க இருக்கு அப்படின்னு பாருங்க.  பிறப்பு லக்னத்தில் இருந்து, ALP லக்னம் எத்தனாவது வீட்டில் போகுதோ, அது சம்பந்தப்பட்ட கேள்வி உங்க மனசுக்குள்ள தோணுதா, அப்படின்னு பாருங்க. கண்டிப்பா உங்களோட வாழ்க்கைல அது வரும்.  ஏன்னா இந்த 12 கட்டங்களை, 12 பகுதிகளாக பிரித்து இருக்கிறோம். இல்ல சார்,  இப்ப 12 ஆம் அதிபதி, 3 -ல்  உட்கார்ந்திருக்காருல்ல சார். இப்ப, ஒருத்தருக்கு, ALP லக்னம் தனுசு. அவருடைய ஜென்ம லக்னம் துலாம் லக்னம். உதாரணமா, இப்போ இதுல ரெண்டு நிகழ்வு இருக்கு இதுல. இப்ப நாம தனுசு லக்னம் ALP லக்னம் எடுத்துக்கிட்டா, அதுல இருந்து நாம அடுத்த நிகழ்வு எடுத்துக்கணும். இப்ப நாம எங்க நிக்கிறோம் அப்படின்னா,  தனுசு லக்னத்தில. இப்ப தனுசு லக்னாதிபதி குரு எங்க இருக்காரு அப்படின்னா விருச்சிகத்தில் இருந்தார் அப்படின்னா அவருக்கு விரையமான காலம். அவ்வளவு தான். 

இந்த நிகழ்வுகள் எல்லாம் நாம்  தெளிவா எடுத்தோம்னாலே, இந்த கணக்கு முறைகளை தெரிஞ்சுகிட்டோம், அப்படின்னாலே, இந்த 15 நாள் வகுப்பு உங்க வாழ்க்கையில் பெரிய மாற்றத்தைத் தரும். 

யார் யாரோ சொல்றாங்க, யார் யாரோ படிக்கிறாங்க, யார் யாரோ வந்து சொல்ல முடியும் அப்படி எல்லாம் கிடையாது. நீங்களும் சொல்ல முடியும். நீங்களும் படிக்க முடியும். நீங்களும் அதை உணர முடியும். கண்டிப்பா அட்சய லக்ன பத்ததி வகுப்புக்கு வாங்க. கண்டிப்பா உங்களுடைய வாழ்க்கையில ஒரு மாற்றமா அமையும். 

இந்த அட்சய லக்ன பத்ததி அடிப்படை நிகழ்வுகள்ல, இன்னும் நிறைய விஷயங்கள் அடுத்தடுத்த வீடியோவில் பேசுவோம். கண்டிப்பா உங்களோட பகிர்ந்துக்கிறேன். ஜோதிடம் படித்து எல்லாரும் வாழ்க்கைல வெற்றி பெறணும்.  அடிப்படையான நிகழ்வு என்ன அப்படின்னா, நம்மளுடைய வாழ்க்கைப் பயணம், எவ்வளவு தூரம் பயணிக்க முடியும், எவ்வளவு தூரம் நல்லது, எவ்வளவு தூரம் கெட்டது. அப்படிங்கிற விஷயத்தை, கைல நம்ம Google மேப் எப்படி பயன்படுத்துறோமோ, அதே மாதிரி நம்ம ஒவ்வொரு வீட்டிற்கும், ஒரு ஜோதிடரோ, ஒவ்வொரு வீட்டிற்கும் அந்த அடிப்படையான ஜோதிட நிகழ்வு தெரிஞ்சிருந்தா, நம்மளுடைய வாழ்க்கையோட பயணம் கண்டிப்பாக புலப்படும். கண்டிப்பா வாழ்க்கையோட பயணம் பாதுகாப்பாக இருக்கும். நான் ஒரு நூறு கிலோ மீட்டர் போறேன். அந்த ரோடு க்ளோஸ் ஆயிருக்கு,  அப்படின்னா திருப்பி வர்றதுக்கு 100 கிலோ மீட்டர் ரிட்டன் வர முடியாது. இது தான் வாழ்க்கைப் பயணம். கடன், வம்பு, வழக்கு நோய், அப்புறம் பிரச்சனை எல்லாமே போய் மாட்டிக் கிட்டு, அங்க இருந்து வர முடியல,  அப்படிங்கிறது எல்லாருக்கும் இருக்கு. அதுவே, இவ்வளவு தூரத்துல கடன் பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்சுகிட்டா, நாம் அந்தப் பாதையைத் தவிர்க்கலாம். அல்லது, அந்தப் பாதையை, எப்படிக்  கையாள்வது என்பது நமக்கு தெரிந்திருக்க வேண்டும். 

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஜோதிடர் வரணும். 

வகுப்பு பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, கீழே இருக்கக் கூடிய அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். 

நன்றி. வணக்கம்.

ALP ASTROLOGY OFFICE: 9786556156 /  9363035656 

Comments