நம் வாழ்க்கையில் எழும் பல கேள்விகளுக்கு, சரியான பதிலைத் தரும் ALP ஜோதிடம் எனும் அற்புதம் - ALP ஜோதிடம் பயின்ற எனது அனுபவம்:
என் பெயர் வருண் குமார். நான் தஞ்சாவூரில் வசிக்கிறேன்.
நான் ஜோதிடத் துறையில் 2006 -ல் இருந்து இருக்கிறேன். ஜோதிடத்தை, என் குடும்ப நண்பர், நடிகர் தாமு அவர்கள் விளையாட்டுத் தனமாக எனக்குள் புகுத்தி விட்டார். ஆனால் காலப் போக்கில், இது எனக்கு மிகவும் பிடித்த துறையாக மாறியது.
நான் படித்தது B.Tech., MBA. காலத்தின் விளையாட்டு கொடூரமானது. பல இன்னல்கள், பூதாகரமான நிகழ்வுகள் என் வாழ்க்கையில் நிகழ்ந்து வந்ததால், ஜாதகம் பார்ப்பதால் தான் உனக்கு இப்படி நடக்கிறது, என்று சொந்தங்களும், நட்பும் சொல்வதைக் கேட்டு, எனக்கும் ஒரு கட்டத்தில் அப்படிதானோ என தோன்றி விட்டது. ஆனால், இந்த ஜோதிடத் துறை என்னை கை விடவில்லை முழுமையாக ஆட் கொண்டது. ஆரம்பத்தில், இதை நான் Word Of Mouth ஆக, தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் செய்து வந்தேன். பின்பு இதுவே முழு நேரத் தொழிலாக மாறியது. ஜோதிடம், வாஸ்து, நியுமராலஜி, இந்த மூன்றும் என் குடும்ப ஜீவனத்தை பார்த்துக் கொண்டன. www.alpastrology.com
ஜாதகம் என்பது பெரிய கடல். அதன் கரையைப் பார்த்தவர் எவரும் இல்லை. இதை மேலும் தெரிந்து கொள்ள, நான் மேலும் பல ஜோதிட குருக்களை அணுகி கற்றுக் கொண்டேன். எனது கேள்விக்கு சரியான பதில் எங்கும் கிடைக்கவில்லை.
2020-ல் தெரிந்த நபர் ஒருவருக்கு, ஜாதகம் பார்க்கையில் நன்றாக இருந்தது. ஆனால், 2021 கொரோனாவில் அந்த நபரின் உயிர் பிரிந்தது. அந்தத் தருணம், நாம் ஏதோ தவறு செய்கிறோம். சரியான பாதையில் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. புது விதமாக ஜோதிடம் இருக்கிறதா என்று ஆராய ஆரம்பித்தேன். ஆனால் எனக்கு சரியாக பிடிபடவில்லை. எனது காலேஜ் பேராசிரியர் திரு. கோமதி சங்கர் சார், 2022 -ல் எனக்கு போஃன் செய்து ALP -யை பற்றிச் சொன்னார். ஆனால், எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை. 15 நாளில் ஜோதிடமா, அதுவும் அதிகாலையில என்று தவிர்த்தேன். பல நாள் தேடலுக்குப் பின், facebook முலமாக ALP -யைப் பற்றிய ஒரு பதிவு பார்த்தேன். அதில் உமா வெங்கட் மேடம் அவர்களின் தொடர்பு எண் இருந்தது. அவரிடம் பேசினேன். 15 நாள் வகுப்பு என்று சொன்னார். இது சாத்தியமா என்று கேட்டேன். வகுப்பில் சேருங்கள், நல்ல மாற்றம் வரும் என்று சொன்னார்.
அங்கு தொடங்கியது, எனது ALP பயணம். பின்பு நடந்தது, அதிசயம், அற்புதம்.
நமது ALP தந்தை பொதுவுடைமூர்த்தி குருஜி பற்றி:
பொதுவாக எந்தக் கலையாக இருந்தாலும், அது அடுத்த தலைமுறைக்கு சரியாக கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். இந்த கால கட்டத்தில் அதை நாம் எதிர்பார்ப்பது கடினம். இது எப்படி சாத்தியம் என்பது போல், தலை கீழ் நின்று யோசித்தாலும், எவர் அறிவுக்கும் எட்டாத ஓர் அதிசயத்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்த, நவகோள் சித்தர் பொதுவுடைமூர்த்தி குருஜி அவர்களுக்கு, எனது கோடான கோடி நன்றி.
ALP என்ற அதிசயத்தை, அனைவருக்கும், வயது வித்தியாசம் இல்லாமல், கற்றுக் கொடுத்து, ஒளிவு மறைவு இல்லாமல், நமக்கு முழுமையாக கிடைக்கச் செய்வது மிகப் பெரிய சாதனை.
குருஜி அவர்கள் வகுப்பு எடுக்கும் போது, பல நிலைகள் நமக்கு கிடைக்க வேண்டும் என்ற ஆவல், அவர் சிந்தைனையில் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும். அதை என்னால் உணர முடிந்தது. குருஜியைப் பார்க்க கடினமாக நபராக இருந்தாலும், அவரது குணம் கள்ளம் கபடம் அற்ற குழந்தை போன்றது.
வீட்டிற்கு ஒரு மருத்துவர் எந்த அளவுக்கு அவசியம், முக்கியமோ, அதற்கு நிகராக, குருஜி பொதுவுடைமூர்த்தி அவர்களின் வீட்டிற்கு ஒரு ஜோதிடர் அந்த அளவுக்கு முக்கியம். பல பிரச்சைனைகள், சிக்கல்கள், மனக் குழப்பங்கள், நஷ்டங்கள், இவற்றை ஆரம்ப நிலையியேலே தவிர்க்கமுடியும், இந்த ALP அற்புதத்தினால்.www.alpastrology.org
ALP வளர்ச்சிக்கு மிகவும் உறு துணையாக இருக்கும் ஆசிரியர்கள், கோச், டெக்னீக்கல் டீம் உள்ளிட்ட அனைவரும், சிறிதும் கர்வம், சுயநலம் இல்லாமல் பொறுமையாக சிறந்த முறையில், இக் கலையை நமது ஆழ் மனதிற்கு எடுத்துச் செல்வது என்பது சிறப்பு.
ALP ஜோதிடம், எனது வாழ்க்கையில் பல கேள்விகளுக்கு பதில் தந்தது. எந்தக் கோணத்தில் கேள்வி வந்தாலும் பதில் வந்தது. என்னைப் போல் பதில் கிடைக்காமல் அலையும் பல பேருக்கு, இதை வெளிச்சம் போட்டுக் காட்டி, இந்த ALP அற்புதத்தை மேலும், மேலும், சிறப்படையச் செய்வோம்.
ALP ஜோதிடம் என்பது கலையுடன் சேர்ந்த வாழ்க்கை முறை.
ALP ASTROLOGY OFFICE: 9363035656 / 9786556156


Comments
Post a Comment