ALP அட்சய வாஸ்து ஜோதிட வகுப்பு பற்றி திருமதி. லட்சுமி ஆனந்தன் (USA - சிகாகோ) சொல்வது.....!

 


ALP அட்சய வாஸ்து ஜோதிட வகுப்பில், ஆன்லைன் மூலம் பயின்ற, USA - சிகாகோவில் வசிக்கும் திருமதி. லட்சுமி ஆனந்தன், இந்த வகுப்பு பற்றி சொல்வது: 

ஆதியே துணை.

குருவே சரணம்.

ஆசான். பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கும், அனைத்து ஆசிரியர்களுக்கும் வணக்கம்.

என் பெயர் லட்சுமி ஆனந்தன். நான் சிக்காகோ U.S.A -ல் வசிக்கிறேன். 

கடந்த சில வருடங்களாக எங்களுக்கு பிசினஸில் நிறைய பிரச்சனைகள் இருந்தது. அதனால் ரொம்ப மன உளைச்சல், மனக் குழப்பங்கள் இருந்தது. என் ஹஸ்பண்ட் நிறைய ஜோதிடர்களை பார்ப்பதும், பரிகாரங்கள் செய்வதுமாக, நிறைய நிகழ்வுகள் நடந்தது. 

கடந்த வருடம் என் தோழி பூமா மூலம் ALP ஜோதிடம் ஆன்லைன் வகுப்பு பற்றி தெரிந்தது. ஜோதிடக் கலை கற்றுக் கொள்வதில் ரொம்ப இன்ட்ரஸ்ட் இருந்தது. At the same time, ஒரு hesitation இருந்தது. 

எனக்கு ஜோதிடம் பற்றி எதுவும் தெரியாதே, நாம எப்படி ஜோதிடம் கத்துக்க முடியும்,  அப்படிங்கிற மாதிரி ஒரு எண்ணம் இருந்தது. www.alpastrology.com

And then, ஸ்ரீ குரு. சாந்தகுமார் ஐயா மூலம் ALP ஜோதிடம் பேசிக் ஆன்லைன் கிளாஸ்ல ஜாயின் பண்ணேன். 

இந்த வகுப்பை ALPஆசிரியர்கள் ரொம்ப அருமையாக எடுத்தார்கள். So, ALP ஜோதிடம்  பேசிக் கிளாஸ்ல ரொம்ப இன்ட்ரஸ்டிங்காக கத்துக்கிட்டேன். நல்ல புரிதல் இருந்தது. 

ALP வகுப்பு ஜாயின் பண்ண உடனேயே மனதளவில் ஒரு தெளிவும், மன அமைதியும் கிடைத்தது. And then ALP அட்வான்ஸ், ALP பரிகார வகுப்புகள் முடிச்சிட்டேன். இப்ப ALP அட்சய  வாஸ்து, கத்துக்கிட்டேன். 

ஒரு Anxietyயோட தான் வாஸ்து வகுப்பில்  ஜாயின் பண்ணேன். ஏன்னா,  ALP ஜோதிட வகுப்பு ஜாயின் பண்றதுக்கு முன்னாடி எனக்கு 12 ராசி கட்டம் பேராவது தெரிஞ்சு இருந்தது. But வாஸ்து பத்தி அவ்வளவு தெரியாது. வடக்கு பக்கம் தலை வைத்து படுக்கக் கூடாது அப்படிங்கிறது மட்டும் தான் தெரியும். மத்தபடி, இந்த  கால கட்டத்துக்கு ஏற்ற மாதிரி, வாஸ்துங்கற பெயரே ட்ரெண்டிங்கா தான் இருக்கு. அதனால ALP வாஸ்து ஆன்லைன் வகுப்பு ஜாயின் பண்ணது ரொம்ப எக்சைட்டட்ஆக இருந்தது. 

இந்த ALP வாஸ்து வகுப்பை, ALP ஸ்ரீ குரு. சத்யநாராயணன் ஐயா எடுத்தாங்க. ரொம்ப அருமையாக எடுத்தாங்க. எல்லா வகுப்பையும் ரொம்ப தெளிவா எல்லாருக்கும் புரிகிற மாதிரி நல்ல விளக்கமாக சொல்லிக் கொடுத்தாங்க. ALP வாஸ்து முழுமையாக இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. 

அதாவது வாஸ்துனா என்ன, வாஸ்து எப்படி உருவானது, அப்படிங்கற விஷயத்தை ஆரம்பிச்சு, திக்குகள், கிரகங்கள், கிரக காரகத்துவங்கள், கிரக சேர்க்கை,  இணைவுகள், இப்படி நிறைய விஷயங்கள் விளக்கமாக சொல்லிக் கொடுத்தாங்க. And then வாஸ்து குறைபாடுகள், கிரக சேர்க்கை இணைவுகளால வரக் கூடிய பிரச்சினைகள், அதெல்லாம் எப்படி வந்து நிவர்த்தி பண்ண முடியும்? எளிய முறையில் நிவர்த்தி பண்ண முடியும் அப்படிங்கற மாதிரி பரிகாரங்கள், அதாவது எளிமையான பரிகாரங்கள் நிறைய சொல்லிக் கொடுத்தாங்க. 

அதுக்கப்புறம் வாஸ்து ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் எப்படி பலன் எடுப்பது அப்படிங்கறத பத்தியும் விளக்கமாக சொல்லிக் கொடுத்தார்கள். So என்னை பொருத்தவரைக்கும், ALP வாஸ்துவோட சிறப்பு அம்சமே, எந்த வாஸ்து குறைபாடுகள் இருந்தாலும், காஸ்ட் எஃபக்ட்டிவா, எளிய முறையில் எப்படி எல்லாவற்றையும் நிவர்த்தி செய்கிற மாதிரி பலன் சொல்றதும், பரிகாரங்கள் சொல்றதும், ALP வாஸ்துவோட சிறப்பம்சம், அப்படின்னு சொல்லலாம்.

நான் ALP வாஸ்து கத்துக்கிட்ட அப்புறம் வாஸ்து என்பது ஜாதகத்தோட இணைந்து செயல்படுகிறது அப்படிங்கறதை புரிஞ்சுகிட்டேன். And also ஒருத்தருடைய ஜாதகத்தை வச்சு அவருடைய வாஸ்து அமைப்பு எப்படி இருக்கிறது, என்பதை கணிக்க முடியும்னு தெரிஞ்சுக்கிட்டேன்.

நாங்க இங்க U.S.A -ல வீடு வாங்குன காலகட்டத்தில் எங்களுடைய வாஸ்து அமைப்பு எப்படி இருந்தது, அப்படின்னு சொல்லி, எங்க ஜாதகத்தை போட்டு ALP மூலம் கணிக்கும் போது, அந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகள் அப்படியே பொருந்தி வந்தது. அது இன்ட்ரஸ்டிங்காகவும் இருந்தது,  ஆச்சரியமாகவும் இருந்தது.  

இதுல இருந்து, ஒருத்தருடைய ஜாதகம் தான் வாஸ்துவ இயக்குகிறது, அப்படிங்கறதை உணர முடிஞ்சது. So, அதாவது ALP ஜோதிடமும், ALP வாஸ்துவும் கத்துக்கிட்ட ஒருத்தர், ஜோதிட ரீதியாகவும், காரகத்துவ ரீதியாகவும்,  பலன்களை துல்லியமாகக் கணிக்க முடியும்,  அப்படிங்கிறத, கான்ஃபிடன்ட்டா சொல்லலாம். And also ALP  ஜோதிடமும், ALP வாஸ்துவும் தெரிஞ்ச ஒருத்தரால, ஒரு சிறந்த ALP ஜோதிடர், வாஸ்து நிபுணர் ஆக செயல்பட முடியும் அப்படிங்கிறதையும் தெளிவாக சொல்ல முடியும்.www.alpastrology.org

நான் என்னுடைய தற்போதைய சூழ்நிலையில் ALP வாஸ்து வகுப்பு கத்துக்கிட்டது ஒரு பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். இந்த ALP வாஸ்து வகுப்பில் சேர உதவியாக இருந்த,  ஸ்ரீ குரு. சாந்தகுமார் ஐயா அவர்களுக்கு, இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ALP வாஸ்து வகுப்பு,  சிறந்த முறையில் நடத்திய ஸ்ரீ குரு.  சத்யநாராயணன் ஐயா அவர்களுக்கும், நான் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ALP வாஸ்துவை உருவாக்கிய ஆசான். பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கும் நன்றியைக் கூறி,  இந்த அரிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,  இறைவனுக்கும், இந்த பிரபஞ்சத்துக்கும் நன்றி கூறி,  இந்த ALP ஜோதிடம் எனக்கு  அறிமுகமாக,  மூல காரணமாக இருந்த என் தோழி பூமா அவர்களுக்கும், நன்றி கூறி, இந்த ALP அட்சய வாஸ்து ஜோதிட வகுப்பை  தடையின்றி கற்றுக்கொள்ள முழு சப்போர்ட் கொடுத்த, முழு கோ-ஆபரேட்டிவ்வாக இருந்த என் கணவருக்கும், என் மகள்களுக்கும், நன்றி கூறி,  ALP பயணம் மேலும் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நன்றி.

ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656

Comments