குலதெய்வ வழிபாடு ஏன் கிடைக்கவில்லை ? ALP ASTROLOGY

 

குலதெய்வ வழிபாடு சரியாக இல்லை - குலதெய்வம் யார் என்று தெரியவில்லை - குலதெய்வ அனுகூலம் இல்லை - ALP ஜோதிட ஆய்வு.

அனைவருக்கும் வணக்கம். 

நான் உங்கள் அட்சய லக்ன பத்ததி ஜோதிடர். ஸ்ரீ குரு சிம்மம் ரங்கநாதன். 

அட்சய லக்ன பத்ததி என்னும் ஜோதிடத்தின் அற்புதத்தை படைத்த எனது அருமை குருநாதர் திரு பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களை வணங்கி, குலதெய்வ வழிபாடு, குலதெய்வமே தெரியல என்ன பண்றது, யாருக்கெல்லாம் குலதெய்வ தோஷம் இருக்கும் என்று பார்ப்போம். 

அட்சய லக்னத்திற்கு, ஐந்தாம் அதிபதியான கிரகம் எட்டில் சம்பந்தப்படும் போது, குலதெய்வ தோஷமும், முன்னோர்கள் வழி தோஷங்களையும் குறிப்பதாக அந்த ஒரு காலகட்டம் இருக்கும். எப்ப பாத்தாலும் இருக்கா, அப்படின்னா இல்லை. www.alpastrology.com

சூரியன், சனி சேர்ந்தால் பித்ரு தோஷம். சூரியன், சனி சேர்ந்தால் புத்திர தோஷத்தையும் கொடுக்கும். தத்து புத்திர யோகத்தையும் கொடுக்கும். 

இந்த ஐந்தாம் அதிபதி தான், ஐந்து, மாறாத தெய்வம் எது என்றால் குலதெய்வம். 

இஷ்ட தெய்வம் அப்படிங்கிறது மாறிக் கிட்டே இருக்கும். ஒரு காலத்துல நமக்கு முருகப் பெருமானோட வழிபாடு ரொம்ப சிறப்பாக இருக்கும். திடீர்னு பார்த்தால் பெருமாளை கும்பிட்டு இருப்போம். திடீர்னு சிவனை கும்பிடுவது எனக்கு பிடிச்சிருக்கு அப்படின்னு சொல்லுவாங்க. ஒரு காலத்துல சாய்பாபா அப்படின்னு சொல்லுவாங்க. அதுக்கு அப்புறம் வேற ஏதாவது நோக்கி போகக் கூடிய அமைப்புகள் ஒரு சிலருக்கு ஏற்படக் கூடியது. அந்த வாழ்க்கை மாற்றத்துல அது மாறிக் கிட்டே இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாடுங்கிறது இஷ்டம், மனதிற்கு இஷ்டப்பட்டதை வழிபடக்கூடியது. குலதெய்வம் வழிபாடு அப்படி இல்ல. என்னுடைய குலத்தை காக்கக் கூடிய தெய்வம், என்னுடைய டி.என்.ஏ, குலதெய்வம் என்றால், நம்முடைய மரபணு தான் நம்முடைய குலதெய்வம். என்னுடைய பாட்டன், பூட்டன், பூட்டன், பூட்டன்னு இருக்கிற எல்லாரும் போய் நின்று வழி பட்ட, என்னுடைய கர்மத்தை சார்ந்த, என்னுடைய இந்த பிறப்பு கர்மத்தை சார்ந்தது, குலதெய்வம். அப்ப குலதெய்வ வழி பாடு அல்லது குலதெய்வம் அனுகூலம் இன்மை அப்படிங்கிறது, பிரசன்ன மார்க்கத்துல ரொம்ப நிறைய சொல்லுது. அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தில, ஜாதகத்திலேயே அதனுடைய அந்த தாக்கத்தை காமிக்கும்.

என்ன உங்களுடைய குலதெய்வமா இருக்கு? ஒரு தெய்வமா, இரு தெய்வமா, காவல் தெய்வமா, பெருமாள் வழிபடா, முருகப் பெருமானுடைய வழிபாடா, பெண் தெய்வ வழிபாடா  என்பதைப் பற்றி எல்லாம் கூட மிகத் துல்லியமாக சொல்லக்கூடிய ஒரு அமைப்பு நம்ம ALP ஜோதிட மெத்தடில் இருக்கிறது. 


அப்போ குலதெய்வ அனுகூலம் எனக்கு கிடைக்கணும் அதுக்கு நான் என்ன பண்ணனும்? குலதெய்வமே தெரியல என்னத்த வழிபடுவது அப்படிங்கிற கேள்வி வரும். பசும் சாணம் அல்லது மஞ்சளில் விநாயகர் மாதிரி பிடித்து வைத்து அதுக்கு தூப, தீப, நெய்வேத்ங்கள் எல்லாம் செஞ்சு,  தேங்காய், பழம், வெத்தலை பாக்கு எல்லாம் வச்சு, படையல் பண்ணிட்டு, மனதார எனக்கு என் குலதெய்வத்தை காண்பித்துக் கொடு அப்படின்னு, மனதார அங்க நாம பிரார்த்தனை செய்யும் போது, நம்மளுடைய குலதெய்வம் நமக்கு யாரோ ஒருத்தர் மூலமாக அது நமக்கு தெரிவிக்கப்படும்.

இதனை, என்னைக்கு பண்ணனும்? ஞாயிற்று கிழமைகளில் வரக்கூடிய செவ்வாய் ஹோரையில், இந்த வழிபாட்டை செய்யணும். அதே போல செவ்வாய்க் கிழமைகளில் வரக் கூடிய சூரிய ஹோரை. செவ்வாய் கிழமையில் வரக் கூடிய சூரிய ஹோரையில் பண்றப்போ, இதைத் தொடர்ந்து செய்து வர மேக்சிமம் ஐந்து அல்லது ஒன்பது வாரங்கள், இதை பண்ணிட்டு வந்தீங்கன்னா, உங்களுக்கு அந்த குலதெய்வம் கண்ணுக்கு புலப்படும். உங்களுடைய குலதெய்வ வழிபாடு சீராகும். குலதெய்வம் அனுகூலமே இல்லை என்று நினைக்கிறீங்க பாருங்க, அந்த குலதெய்வம் அனுகூலம் இதன் மூலமாக ஏற்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 

இது என்னுடைய வார்த்தையாக நான் இங்கு சொல்லல. என்னுடைய குருநாதர் எங்களுக்கு காண்பித்துக் கொடுத்த வழி. எல்லாமே சுலபமான ஒரு பரிகார பூஜைகளாகவும் சுலபமா நீங்க பண்ணக் கூடிய விஷயமாவும் தான் இருக்கும். 

அப்போ, முதல்ல நம்ம பார்த்தோம். தனம், பணவரவு ஏற்பட,  தொழில் ரீதியான முன்னேற்றங்கள் ஏற்பட, நாம பரிகாரங்கள் எல்லாம் சொல்லி இருந்தோம். நிறைய பேர் அதற்கு உங்களுடைய கருத்துக்களை நேரிலும் எனக்கு போனிலும் சொல்லியிருந்தீங்க. ரொம்ப நன்றி. இவை அனைத்துமே என்னுடைய குருநாதரையே சாரும். 

அதே போலத் தான் இந்த குலதெய்வ வழிபாடு. ஏன்னா குலதெய்வ வழிபாடு விட்டு போச்சுன்னா குடும்பம் பல பிரச்சனைகளை தடைகள் எல்லாம் சந்திக்குது. ஒரு நிம்மதியற்ற நிலையை கொடுக்கும். குழந்தை பிறப்புகளில் பிரச்சனை. குழந்தைகள் பிறந்தாலும் அவர்களுடைய வளர்ச்சிகளில் பிரச்சனை. மூளை வளர்ச்சி குன்றிய, அந்த தன்மையில குலதெய்வ வழிபாடு மாத்திரம் இங்க சம்பந்தப்படல, உங்களுடைய முன்னோர்களும் இங்கு சம்பந்தப்படுறாங்க. அதனால இந்த ஒரு வழிபாடு அப்படிங்கிறது இது மாதிரியான பிரச்சனைகளை தீர்க்கக் கூடியதாக இருக்குங்கிறதுல கேள்வியே இல்லை. கண்டிப்பாக இதெல்லாம் உங்களுக்கு சிறப்பான ஒரு வழிபாடாக இருக்கும். www.alpastrology.org

அதனால குலதெய்வம் அனுகூலம் இல்லை என நினைக்கிறவங்க, ஞாயிற்றுக்கிழமை செவ்வாய் ஹோரையில் அல்லது செவ்வாய் கிழமையில் சூரிய ஹோரையில், பசுஞ் சாணத்தில் விநாயகர் மாதிரி பிடித்து அதையே உங்களுடைய தெய்வமாக, எனக்கு பெயரே தெரியல, பரவாயில்லை, குலதெய்வம் அப்படின்னு சொல்லிக்கலாம் இல்லையா? அது போதும். என் குலதெய்வம் நீ தான். எனக்கு நீ எங்கே இருக்கிறாய் அப்படிங்கிறத காண்பித்துக் கொடுக்கணும், உன்னுடைய அருள் எங்களுக்கு கிடைக்கணும், அப்படின்னு பிரார்த்தனை பண்ணிட்டீங்கன்னா கண்டிப்பாக உங்களை தேடி உங்களுடைய குலதெய்வம் ஓடோடி வந்து, அது, தான் இருக்கக் கூடிய இடத்தை தானாகவே காண்பிக்கும் அப்படிங்கிறதுல கேள்வியே வேண்டாம். இதை நீங்கள் குலதெய்வம் அனுகூலம் இல்லை என்று நினைக்கிறவர்கள் இந்த விஷயத்தை பயன்படுத்துங்க. இது சுலபமான ஒரு முறை. இதை பயன்படுத்தி உங்களுடைய குலதெய்வத்தினுடைய அருளைப் பெற்று, அந்த குலதெய்வத்தின் அருளால வாழ்வில் எல்லா நலன்களையும் வளங்களையும் பெறணும் அப்படின்னு கேட்டுக்குறேன். 

நன்றி. வணக்கம்.

ALP ASTROLOGY OFFICE: 9363035656 / 9786556156

Comments