எனது பார்வையில் ALP (அட்சய லக்ன பத்ததி ஜோதிடம்)

எனது பார்வையில் ALP ஜோதிடம்...
வணக்கம். என் பெயர் இரா. பத்மநாதன், மதுரையில் வசிக்கிறேன். எனது வயது 60.

 "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்ற புறநானூற்று வரியை நான் சிறு வயதிலேயே படித்திருந்தாலும் அதன் பொருள் புரிய பல காலம் தேவைப்பட்டது. அனுபவமே மிகச்சிறந்த ஆசான் என்பதால் பல விடயங்கள் புரிய அததற்குரிய காலம் தேவைப்படுகிறது. அந்தக் காலம் தான்  என்னை ALP சோதிடத்தை கற்க வைத்தது.

 நான் வியந்த விடயங்களில் ALP சோதிட முறையும் ஒன்று. எல்லாரையும் போல எனக்கும் கிடைத்த நேரங்களில் வலையொளி, முகநூல் போன்றவைகளைப் பார்ப்பது வழக்கமாகிப் போனது. முகநூலில் அடிக்கடி ALP சோதிடம் என்ற வார்த்தை என் கண்ணில் பட்டுக் கொண்டேயிருந்தது. எனக்கு பாரம்பரிய சோதிடத்தின் அடிப்படை தெரியும் என்றாலும் பலன் எடுப்பதில் சில இடர்பாடுகள் இருந்து கொண்டேயிருந்தது. அதன் காரணம் எனது அனுபவக் குறைபாடுதான் என்று எண்ணியிருந்தேன். ஒரு சிலர், புதன் வலுத்திருந்தால் மட்டுமே சோதிடம் படிக்கவும் பலன் சொல்லவும் இயலும் என்றார்கள். அவர்கள் சொல்வதும் ஒருவகையில் உண்மைதான் என்றாலும், யார் வேண்டுமானாலும் பலன் சொல்ல முடியும் என்று நம்பிக்கை ஊட்டியது ALP சோதிட முறை. www.alpastrology.com

 எனது ஜென்ம லக்னமும் ராசியும் சிம்மம். நன்றாகப் படித்திருந்தும் திறமையிருக்கிறது என்ற என்னுடைய நம்பிக்கையும் எனக்கு அரசு வேலையைப் பெற்றுத் தரவில்லை.  அதற்குக் காரணம் IAS, IPS போன்ற குடிமைப் பணிகளுக்கு மட்டுமே செல்வது என்ற என்னுடைய பிடிவாதம் தான்.  நல்லது கெட்டது எடுத்துச் சொல்ல ஆள் இல்லை, சொன்னாலும் கேட்கும் நிலையில் நான் இல்லை. பயிற்சி மையங்களுக்குச் செல்ல பணம் இல்லாமல் சுயமாகப் படித்துக் கொண்டிருந்தேன். அன்றே, குடிசையில் இருந்த வயதான சோதிடர் என் கட்டத்தைப் பார்த்துவிட்டு உன் சாதகத்தில் அரசு வேலைக்கான வாய்ப்பே இல்லை, எனவே அந்த முயற்சியைக் கைவிட்டு வேறு பிழைப்பைப் பார் என்றார். அன்றைய நிலையில் எனக்கு பாரம்பரிய சோதிடம் கூடத் தெரியாது. ஒரு வேளை எனக்கு ALP சோதிடம் தெரிந்திருந்தால், அன்றே காலத்தை வீணாக்காமல் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். அவரவர் பாதையை சுயமாக அவர்களே அமைத்துக் கொள்ள மாணவப் பருவத்திலேயே இந்தத் துள்ளியமாக பலன் எடுக்கக் கூடிய ALP சோதிடத்தைக் கற்றுக் கொள்வது நல்லது என்பது தெளிவாகிறது. 

முகநூலின் மூலமாக ALP சோதிட முறையைப் பற்றி தெரிந்ததும், ALP அடிப்படை வகுப்பில் சேர்ந்தேன். வகுப்பில் சேர்வதற்கு முன்பே பாரம்பரிய சோதிடத்தின் அடிப்படை தெரியும் என்பதால், இலக்கினம் வளரும் என்பதை என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. பத்தாண்டுகளுக்கு ஒரு முறை இலக்கினம் மாறும் என்பதை என்னைப் போல ஏற்றுக் கொள்ள முடியாதவர்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் தெளிவுபடுத்தினார்கள். 15 நாட்களில் அடிப்படையை புரிய வைத்தார்கள். மிகத்திறமையாக, அதே நேரம் (Slow learners) உடனடியாகப் புரியாமல் சிறிது காலம் எடுத்துப் புரிந்து கொள்ளும் மாணவர்களுக்கும் புரியும் வண்ணம் பொறுமையாகப் பாடம் நடத்தினார்கள். 

 ஒரு சில மாதங்களில் உயர்நிலை வகுப்பில் சேர்ந்து ஆர்வமாகப் படிக்க ஆரம்பித்தேன். எளிமையான சோதிட விதிகள். அதைவைத்து, மிகச் சரியாக பலன் சொல்ல முடியும் என்பது நம்ப முடியாத உண்மை. அது மட்டுமல்ல, ALP படித்த அத்தனை பேரும் ஒரே மாதிரியான பலன் சொல்ல முடியும் என்பது பெரும் சிறப்பு. ஒரு நிகழ்வு நடக்கும் அல்லது நடக்காது என்று பலன் எடுத்த பிறகு, அந்நிகழ்வு நிகழும் காலம் எது என்பதை மிகத் துல்லியமாக எடுக்க இயலும். நாமும் காலமறிந்து காரியமாற்ற இயலும். நமக்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் நம்முடைய முந்தைய செயலின் விளைவுதான். அதைப் புரிந்து கொண்டு, நாம் செய்யும் ஒவ்வொரு சிந்தனையும் சொல்லும் செயலும் எந்த உயிரையும் புண்படுத்தாமல் பார்த்துக் கொண்டாலே போதும் நாம் நிம்மதியாக வாழலாம்.

ALP பாடம் நடத்தும் குருமார்களின் அர்ப்பணிப்புணர்வு போற்றுதலுக்குரியது. அந்தப் பெருமக்கள் அத்தனை பேரையும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். அவர்களின் வாழ்த்து என்னைப் போன்றவர்களுக்கு மிகப்பெரிய வரம்.

 ALP சோதிட மென்பொருள் நமக்குக் கிடைத்த அரும்பெரும் கொடை. எல்லா சோதிட மென்பொருளிலும் சாதகர் பெயர், பிறந்த தேதி, நேரம் கொடுத்தால் பிறப்பியம் (சாதகம்) கிடைக்கும். அதில் இராசிக் கட்டம், நவாம்சக் கட்டம், இன்னபிற கட்டங்கள், கோள்சாரம், தசாபுத்தி விவரம், பஞ்சாங்கக் குறிப்புகள் ஆகியவை இருக்கும். அதை வைத்து பலன் சொல்லலாம். ஆனால் இந்த மென்பொருளில் மேலே குறிப்பிட்ட விவரங்களுடன் பிறப்பியத்தின் முழு பரிமாணத்தையும் காட்டுகிறது. ALP படித்தவர்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள "முழு பரிமாணம்" என்றால் எவைஎவை என்பது புரியும். அதுமட்டுமல்லாமல் கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் ஏன் நிகழ்ந்தது, நிகழ் காலத்திலும் எதிர் காலத்திலும் என்ன மாதிரியான நிகழ்வுகள் நடக்கும் என முன் பின் நகர்த்தி பார்த்துக் கொள்ளும் வசதி வியப்பில் ஆழ்த்துகிறது.

 என்னுடன் படித்த அத்தனை மாணவ நண்பர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் சிந்தித்துப் பார்க்காத பல கோணங்களில் சிந்தித்து அதைக் கேள்வியாக குருமார்களிடம் கேட்டு அவர்களும் தெளிவாகி, நானும் தெளிவாக உதவியதற்காக அவர்களுக்கு எனது நன்றி.www.alpastrology.org

 சித்தர்களால் உருவாக்கப்பட்டு பன்னெடுங்காலம் பலனளித்து வந்த சோதிடத்தில், தேவையானவற்றைச் சேர்க்கவும் தேவையற்றவைகளை நீக்கவும் செய்து அவரவர் அறிவாற்றலுக்கு ஏற்ற வகையில் பலர் பங்காற்றியிருக்கிறார்கள். பாரம்பரியமாக வந்த சோதிடத்தில் தனித்துவமான அணுகுமுறையோடு, அதே நேரத்தில் அறிவிற்கும் அனுபவத்திற்கும் ஒத்துப் போகின்ற, நடைமுறைக்கு எளிமையான ALP என்னும் சோதிட முறையை உருவாக்கிய  ALP சோதிட முறையின் தந்தை, பேரறிஞர், தக்கார். சி.பொதுவுடைமூர்த்தி அவர்களை வணங்குகிறேன். அவரிடம் நேரடியாகப் படித்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன். எளிமை, தன்னம்பிக்கையூட்டும் வார்த்தைகள் அவரது சிறப்பு. மாணவர்கள் திறமையானவர்களாக வரவேண்டும் என்ற எண்ணத்தில் கண்டிக்கவும் செய்வார், சிறிது நேரத்திலேயே கனிவாகப் பேசி தைரியப்படுத்தவும் செய்வார். பிறப்பியத்தைத் தூக்கிக் கொண்டு வேறொருவரிடம் சென்று பலன் கேட்பதைவிட, அவரவர்களே அவர்கள் சாதகத்தையும், அவர்கள் குடும்ப உறுப்பினர் சாதகத்தையும் பார்த்துக் கொள்வதுதான் நல்லது என்று சொல்வார். வீட்டுக்கொரு சோதிடர் வர வேண்டும் என்பது அவரது எண்ணம். உணர்வதும் உணர்த்துவது அவரது தாரக மந்திரம்.

இறைவன் எழுதிய தலையெழுத்தைப் புரிந்து மொழி பெயர்த்துச் சொல்லும் ஆற்றல் பெற்றவர்கள் சோதிடர்கள். அவர்களுக்கென்று சில பொறுப்புகள் உண்டு. அந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம் என்ற உறுதிப்பாட்டோடு அத்தனை குருமார்களையும் சிரம் தாழ்த்தி வணங்கி வழிபடுகிறேன். நன்றி.

இரா. பத்மநாதன்

2511ALPAZ082

ALP ASTROLOGY OFFICE: 9363035656 / 9786556156

                                                                              

 

Comments