வணக்கம்.
அட்சய லக்ன பத்ததியில் மீண்டும் ஒரு ஜாதக ஆய்வு.
என்னுடைய பெயர் உமா வெங்கட். நான் திருவனந்தபுரத்தில் இருக்கிறேன். நான் திருவனந்தபுரத்தில் இருந்து பிரசன்ன முறையில் அதாவது ALP முறையில் பிரசன்னமும் ஜாதகமும் பார்க்கிறேன்.
இந்த ஜாதகருக்கு 22 வயதாகிறது.
இது ஒரு பெண் ஜாதகி.
ஜாதகியின் பிறப்பு லக்னம் ரிஷப லக்னம்.
இப்பொழுது அவர்களுக்கு ALP லக்னம் என்று சொல்வது சிம்ம லக்னம்.
இந்த ஜாதகத்தில், விருச்சிக ராசியில் சந்திரன். தனுர் ராசியில் சுக்கிரன். மகரத்தில் சூரியன், புதன், கேது. கும்பத்தில் செவ்வாய். மேஷத்தில் குரு, சனி. கடகத்தில் ராகு.
ஜாதகருக்கு மகம் நட்சத்திரம், அதாவது ALP லக்ன நட்சத்திரம் மகம் 1 ஆம் பாதம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
அதனுடைய D9 எங்க என்றால் ALP யில் இருந்து ஒன்பதாம் இடத்தில் மேஷத்தில் D9 போய்க் கொண்டிருக்கிறது இந்த ஜாதகருக்கு.
இவர்களுடைய கேள்வி என்னவென்றால், வேலை கிடைக்குமா?
இந்த மக நட்சத்திர அதிபதி கேது எங்கு அமர்ந்து உள்ளார் என்றால், இவர்களுடைய தற்போதைய லக்னத்திற்கு ஆறாம் இடத்தில் கேது அமர்ந்திருக்கிறார்.
இப்பொழுது கோச்சாரக் கேது என்று சொல்லக்கூடியவர் ALP யில் இருந்து மூன்றாம் பாவகத்தில், அப்போ முயற்சி செய்தால் கண்டிப்பாக வேலை இவருக்கு கண்டிப்பாக இருக்கிறது என்று சொல்லலாம்.
அதேபோல ஆறாம் பாவக அதிபதியான சனி பகவான் கோச்சாரத்தில், மகர ராசியில் இருக்கிறார். அவர் யார் கூட சேர்ந்து இருக்கிறார்? இந்த ஜாதகத்திற்கு பிறப்பு கிரகங்களான சூரியன், புதன், கேது கூட கோச்சார சனி பகவான் அமர்ந்திருக்கிறார். கண்டிப்பாக இந்த ஜாதகருக்கு இந்த காலகட்டத்தில் வேலை கிடைக்கும். எப்பொழுது என்றால், இந்த D9 மாற்றத்திற்கு பிறகு. ஆகஸ்ட்டுக்கு பிறகு கண்டிப்பாக இந்த ஜாதகருக்கு வேலை மாற்றத்திற்கு உண்டான ஒரு சமயம். அதாவது ஒரு நேரம் என்று இந்த ஜாதகிக்கு சொன்னோம்.
ஏனென்றால் குரு பகவான் ஐந்திற்கும் எட்டிற்கும் அதிபதி. அவர் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்தை பார்க்கிறார். அதேபோல வருமான ஸ்தானத்தையும் பார்க்கிறார். அதனால் தற்பொழுது இவருக்கு வருமானம் கொஞ்சம் தடை என்று சொல்லலாம். விரைவில் இந்த D9 மாற்றம் இருக்குது. அதற்குப்பின் இவர்களுக்கு கண்டிப்பாக இல்லை என்பது அமையும்.
அதேபோல இவர்களுக்கு, சனி பகவான் ஒன்பதாம் இடத்திலிருந்து தன்னுடைய 10 ஆம் பார்வையான ஆறாம் இடத்தையும் பார்க்கிறார். அதனால் கண்டிப்பாக ஒருவருக்கு கீழே வேலை பார்க்கக்கூடிய வாய்ப்பு நல்லா இருக்கிறது. இந்த ஆறாம் அதிபதி இரண்டாம் அதிபதி ஆன புதன் பகவானையும் பார்க்கிறார்.
2க்கும் 11க்கும் அதிபதி புதன் பகவான். இவர் வேலைக்கு போனால் கண்டிப்பாக லாபம் அப்படிங்கிறது இந்த ஜாதகருக்கு நாங்க பலனாக சொன்னோம்.
அதேபோல இந்த ஜாதகருக்கு விரையம் அப்படிங்கிறது லக்னத்திற்கு நான்காம் இடத்தில் சந்திரன் அவர் யார் என்று பார்த்தால் 12 ஆம் அதிபதி. வீட்டை விட்டு கொஞ்ச தூரம் டிராவல் செய்தால் தான் வேலை கிடைக்கும். தொலைதூரப் பயணங்கள் மூலமாக தான் இவர்களுக்கு வேலை அமையும்.
கண்டிப்பாக இந்த ஜாதகி அதற்கு ரெடியாக இருந்தால் இவர்களுக்கு வேலை உறுதி அப்படிங்கிறத இந்த ஜாதகிக்கு பலனாக கூறினோம்.
இது அட்சய லக்ன பத்ததி முறையில் பார்த்த ஒரு ஜாதகம். பரிகாரம் அவங்க லக்னப் புள்ளியை அனுசரித்து, அவங்களுடைய வேலை தொடர்ந்து பயணிக்கவும், அவங்களுடைய வேலை சீக்கிரமாக கிடைப்பதற்கும் அவர்களுக்கு பலன் கூறப்பட்டது.
நன்றி.
மீண்டும், இது போல் ஒரு ஜாதக ஆய்வில் சந்திப்போம்.
~ திருமதி. உமா வெங்கட், ALP Astrologer.
ALP OFFICE NUMBER: 9786556156 / 9363035656
Comments
Post a Comment