சொந்த வீடு யோகம் எப்போது அமையும்? ALP ஜோதிட முறையில் ஒரு ஆய்வு. ALP ஜோதிட ஆசிரியர். ஸ்ரீ குரு. முத்து விஜயகுமார்


சொந்த வீடு யோகம் எப்போது அமையும்? ALP ஜோதிட முறையில் ஒரு ஆய்வு. 

ALP ஆசிரியர். ஸ்ரீ குரு. முத்து விஜயகுமார், ALP ஜோதிடர்.

அனைவருக்கும் வணக்கம். 

ஜாதகங்களை பாரம்பரிய முறையில் பார்த்துக் கொண்டிருந்த என்னை, இப்படி ஒரு அப்டேஷன் மெத்தடில் கற்றுக் கொடுத்த திரு பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களின், பொற் பாதங்களைத் தொட்டு, இந்த ஜாதக ஆய்வை பார்ப்போம். 

பிறந்த நாள் : 12.11.1979.
பிறந்த நேரம் : காலை 11 மணி 10 நிமிடம்.
 
இவருடைய பிறப்பு லக்னம்: மகரம். 

கிரக அமைப்பு: கும்பத்தில் கேது. சிம்மத்தில் சந்திரன், குரு,  செவ்வாய், ராகு பகவான். கன்னியில் சனி பகவான். துலாமில் சூரிய பகவான். விருச்சிகத்தில் புதன் பகவான்,  சுக்கிர பகவான். இதுதான் இவருடைய ஜாதக அமைப்பு. www.alpastrology.com

இன்றைக்கு அவருடைய ALP லக்னம், பிறப்பு லக்னத்தில் இருந்து ஐந்து கட்டம் நகர்ந்து இருக்கிறது. அவருடைய வயது 45 ஆவது வயதில் அடி எடுத்து வைக்கிறார். பத்து வருஷத்துக்கு ஒரு லக்னம் என்பதால், இவருக்கு இப்போது ரிஷப லக்னம், ரோகிணி 3 ஆம் பாதம் நடக்கிறது.

ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிர பகவான். சுக்கிரன் ஏழாம் இடம் விருச்சிகத்தில் இருக்கிறார். ஒன்றுக்கும் ஆறுக்கும் ஆதிபத்தியம் வாங்கிய சுக்கிரன் 7-ல் விருச்சிகத்தில் இருக்கிறார்.


 மனைவி சம்பந்தப்பட்டது, கடன் சம்பந்தப்பட்டது, அது போக வீடு சம்பந்தப்பட்டது. ஏன் வீடு என்று சொன்னேன் என்றால், தற்போது ALP நட்சத்திர புள்ளி ரோகிணி 3 ஆம் பாதம், அதிபதி சந்திரன் 4 ல் சிம்மத்தில் இருக்கிறார். அப்போ மூன்றாம் இடத்துக்குரிய சந்திரன் 4 ல் சிம்மத்தில் இருக்கிறார். மூன்றாம் இடம் முயற்சி, 4 ஆம் இடம் வீடு. அப்போ ஜாதகர், வீடு சம்பந்தப்பட்ட முயற்சியில் இருக்கிறார்.

அப்புறம், ஆறாம் இடமும், ஏழாம் இடமும் எப்படி இவர் ஜாதகத்துல தொடர்பா இருக்கு என்று பார்ப்போம். 

கேள்வி : எனக்கு வீடு எப்ப அமையும், நான் வீடு கட்டலாமா என்று ஜாதகம் கேட்டார். 

ரோகிணி மூன்றாம் பாதம் போய்க்கொண்டிருக்கிறது. அதிபதி சந்திரன் நான்காம் இடம் சிம்மத்தில் இருக்கிறார். D9 கடந்த கால கர்மாவில் இருக்கிறது. இந்த வீட்டுக்கான முயற்சியை போன வருடமே செய்திருந்தால், வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் இப்பொழுது அதற்கான வாய்ப்பு இல்லை. 

நாம அவரிடம் கேட்ட கேள்வி:  ஏற்கனவே அந்த வீடு சம்பந்தப்பட்ட நிகழ்வு ஆரம்பித்து விட்டீர்களா, அட்வான்ஸ் கொடுத்து இருக்கீங்களா இல்ல ஏதாவது செஞ்சி இருக்கீங்களா என்று கேட்டோம். அவர் இல்லை என்று சொன்னார். ஆனால் அந்த முயற்சியும் யோசனை மட்டும் வைத்துக் கொண்டிருக்கிறார். இப்போ கடந்த கால கர்மா போவதனால் அவரால் தற்பொழுது வீடு சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் எதுவும் செய்ய முடியாது என்பது சொன்னோம். 

இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின், அவருடைய ஜாதகத்தில் நிகழ்கால கர்மா வரும். ரோகிணி முடிந்து,  மிருகசீரிஷ நட்சத்திரம் வரும். அப்போது, அவருக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக சொன்னோம். இப்போதைக்கு பொதுவான பலனாக பார்க்கும் போது சந்திரன் 4 அம் இடம் சிம்மத்தில் இருக்கிறார். நாலாம் இடத்துக்குரிய சூரியன் ஆறாம் இடமான துலாமில் இருக்கிறார். அப்ப வீடு கடனா போகும் அல்லது வீடு என்பது ஒரு பிரச்சனையை உருவாக்கும் என்று சொன்னோம். இப்பொழுது கடந்த கால கர்மாவாக போவதனால் ஜாதகருக்கு வீடு கட்ட நேரம் இல்லை. ஜாதகரும் முயற்சி செய்து, கடனாக போவார் என்ற  பிரச்சனை இருக்கிறது. www.alpastrology.org

ஜாதகரின் அடுத்த கேள்வி : 

என்னுடைய ஜாதகத்தில் முடியாது என்று சொல்லிவிட்டீர்கள். என் மனைவியினுடைய ஜாதகத்தில் செய்ய முடியுமா என்று கேட்டார். 

அவர் மனைவியின் ஜாதகத்தில், ALP துலாம் லக்னம், ஸ்வாதி நட்சதிரம், அதிபதி ராகு 11-ஆம் இடம் சிம்மத்தில் இருக்கிறார். ராகு, பதினோராம் இடம் என்றால், மிகப் பெரிய பேராசை கொடுக்கக் கூடிய கிரகம். ஏன் என்றால், ராகு என்றால் பிரம்மாண்டம், கற்பனை. கற்பனையில் வாழ்க்கை நடத்தக் கூடிய யோகமாக இருக்கிறது.  

துலாம் லக்னத்திற்கு சந்திர பகவான் 11ஆம் வீட்டில் இருப்பதினால், ஜாதகர் வீட்டினால் தீராத பிரச்சனையை சந்திப்பார் என்று, மனைவியின் ஜாதகத்திலும் அப்படித்தான் இருக்கிறது என்று சொன்னோம். 

இந்த ஜாதகருக்கு நாம் என்னதான் சொன்னாலும், அவர் நோக்கம் எல்லாம், வீடு, வீடு,  என்று இருக்கிறது. இவர் ஜாதகத்துலயும் ஒத்து வரல. மனைவி ஜாதகத்திலும் ஒத்து வரல. அவர் தீராத பிரச்சனைல, வீடு சம்பந்தப்பட்ட விஷயத்தில், பணத்தை முடக்கப் போகிறார் என்று அவருக்கு சொல்லப்பட்டது. ஏனென்றால், கணவரின் ஜாதகத்தில்,  ரெண்டுக்கும் ஐந்துக்கும் உடைய புதன் பகவான், இரண்டாம் இடத்திற்கு ஆறாம் இடத்தில் உட்கார்ந்திருக்கிறார். இரண்டாம் இடம் என்பது வருமானம். ஆறாம் இடம் என்பது கடன். அப்போ ஜாதகர் மனைவி பெயரில் இந்த வீட்டை ஆரம்பிக்கிறது, இல்லை நண்பர்களுடைய துணையால் இதை செய்கிறேன் என்று, ஜாதகர் கடன் பிரச்சனையில் மாட்டப் போகிறார். என்ன சொன்னாலும் கேட்க மாட்டார் என்று இருக்கிறது ஜாதகத்தில். இதுதான் இந்த ஜாதகத்தின் உடைய ஆய்வு. மற்றொரு ஜாதகத்துடன் அடுத்த வீடியோவில் சந்திப்போம்.

ALP ASTROLOGY OFFICE: 9363035656 / 9786556156
 

Comments

Post a Comment